mardi 3 novembre 2015

"பேச்சு வார்த்தை"





தொடர்பை தொட்டு விடு
இடரிருள் தானே விலகும்
படரும் பண்பின் நட்பு
பாயாய் விரியும்!

உள்ளத்தின் உண்மை -நட்பு
வெள்ளத்தின் மேலாண்மை

வசிப்பிடம் தேடி அலையும்
வார்த்தைக்கு உனது
செவிக்  கதவின் தாழ்ப்பாளை
சற்றே திறந்துவிடு!

பேச்சு வார்த்தை!
 பேரின்பம் காணும்.


 


புதுவை வேலு

24 commentaires:

  1. அருமை நண்பரே இதோ என் காதை தீட்டி விட்டேன்.....

    RépondreSupprimer
    Réponses
    1. தீயிடும் வேலை,
      தீட்டும் வேலை
      அப்பப்பா,
      "தீ"யின் மீது தீராத மோகமோ?
      நன்றி நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. கேட்டல் இனிமை என்றது கவிதை!
    த ம 2

    RépondreSupprimer
    Réponses
    1. செவியுறும் சிறப்பினை
      புவிக்கும் சொல்வாய்
      செந்தில் குமாரனே,
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வார்த்தையை வலிமையாய் வார்த்தெடுத்து,
      வளமிகு பதிவுகளை வழங்கி வரும்,
      நண்பருக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. உண்மையில் பேரின்பமே. நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. பனித்துளி படர்ந்த பசும்புல் பாயாய்
      நினைவில் நிற்கும் கருத்தினை தந்த
      முனைவர் அய்யாவுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. கருத்தான வார்த்தை
      'பேச்சு வார்த்தை'க்கு
      பெருமை சேர்த்தது
      நன்றி நண்பர் நாகேந்திர பாரதி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. கேட்டல் இனிமைதான்...நட்புடன் கூடியவை...

    RépondreSupprimer
  7. வாருங்கள் அய்யா,
    கேட்டல் இனிமைதான்
    தங்களது வருகையைப் போன்று! நன்றி
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  8. படரும் பண்பின் நட்பு
    பாயாய் விரியும்!# ரசிக்கும் வரிகள்

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே
      தங்களது முதல் வருகையை
      குழலின்னிசை வரவேற்கிறது
      ஆக்கம் சிறக்க தொடர்ந்து ஊக்கம்
      தாக்கமின்றி தர வேண்டுகிறேன்.
      தொடரவும்....
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. படரும் பண்பின் நட்பு
    பாயாய் விரியும்!# ரசிக்கும் வரிகள்

    RépondreSupprimer
    Réponses

    1. நான் ஒன்று சொல்வேன்.....
      நலம் பட வெல்வேன்
      பலமிகு வரிகளை பாராட்டியமைக்கு
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. என்னது....பேச்சு வார்த்தை!
    பேரின்பம் காணும்மா....?????

    RépondreSupprimer
    Réponses
    1. தோழரே
      பேச்சு வார்த்தை
      அரசியலில் பெருந்தொல்லை காணும்
      என்பதை சொலாமல் சொல்லியமைக்கு நன்றி !
      பதிவு நட்பின் பேச்சு வார்த்தை!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. கற்றலின் கேட்டலே நன்று என்பார்கள். கேட்கும் பழக்கமும் நட்பை விரிக்கும் என்பதை அழாய் சொல்லிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. கேட்டல் இனிமைதான் தங்களது வருகையைப் போன்று!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. அழாய் என்பதை அழகாய் எனக் கொள்ளவும். தட்டச்சு பிழை ஏற்பட்டுவிட்டது.

    RépondreSupprimer
  13. வார்த்தையை நேர் பட நெறிப் படுத்தியமைக்கு,
    மிக்க நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  14. கருத்தான வார்த்தை
    'பேச்சு வார்த்தை'க்கு
    பெருமை சேர்த்தது
    நன்றி நண்பர் வெங்கட் நாகராஜ்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer