jeudi 5 novembre 2015

"ஏழிசை பிறப்பு" - பியானோ


படம் சொல்லும் பாடம்





பொங்கு கடல் பொங்குதமிழ் பேசுகிறது
தங்கும் மனங்களில் தமிழிசை இசைக்கிறது
மங்காத வெளிச்சம் மண்ணில் நிறைகிறது
ஏங்கும் ஏழைக்குள் ஏழிசை பிறக்கிறது


கரையை கடவாது கடலலை தவழ்கிறது
நிறைவு இசை நீரில் நிறைகிறது
இசைப்புயல் திசை எங்கும் வீசுகிறது
எசப்பாட்டு பாட! என்நெஞ்சம் துடிக்கிறது

கரையாது மணல் பியானோ இசைக்கருவி
குறை அறியாது கூவும்!நல் இசைக்குருவி
மறையாது வற்றாது மணல் இசையருவி
நிறை இசையாய் நீ!வாழி!

புதுவை வேலு


10 commentaires:

  1. அருமையான காட்சி நண்பா.... ஆனால் மழைதான் வந்து விடக்கூடாது..

    RépondreSupprimer
    Réponses
    1. ஏதேது! மழைக்காக அபுதாபியில் கூட்டு பிரார்த்தனை நடத்துவீர்கள்
      போலிருக்கிறது.
      மணலை எரிக்கும் வித்தை கைவசம் உள்ளதா நண்பா?
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. ஆமாம்! அழகான படம்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. படமும் கவிதையும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  4. படம் சொல்லும் கவிதையை ரசித்து கருத்தினை வடித்தமைக்கு நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  5. மணலில் வரைந்த அந்த முப்பரிமாண பியானோ படமும், அதை வாசிப்பதுபோல் பாவனை செய்து அந்த இளைஞர் நிற்கின்ற பாங்கும், அதற்கு நீங்கள் யாத்திருக்கும் கவிதையும் அருமையோ அருமை. வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  6. இசைக் கருவியை கண்ணுற்ற கண்களிலே,
    யாத்த கவிதையை மனதில் விதைத்து,
    கருத்துப் பூவாய் மலர்ந்து, மணம் பரப்பியமைக்கு
    நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  7. மணல் ஓவியம் மிக அருமை. கவிதையும்.

    RépondreSupprimer
  8. மணல் ஓவியத்தின் மாண்புடன்கூடிய அழகினை சிறப்பித்து,
    கவிதை சிறப்பையும் சொல்லி கருத்தினை பதிவு செய்த,
    அன்பு உள்ளத்திற்கு நன்றி நண்பரே.

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer