vendredi 6 novembre 2015

"அருள்மொழி அரசு" திருமுருக கிருபானந்த வாரியார் -நினைவு தினம்





ஆழ்ந்த புலமை அழகுற அமையப் பெற்ற அருள்மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் நினைவு தினம் இன்று  நவம்பர் 7 (1993-ஆம் ஆண்டு).

ஆன்மிக மொழி" பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும், சிந்தாந்தக் கருத்துகளையும், இனிய தமிழ் சொற்பொழிவுகளால் கேட்கும் அனைவரையும், மெய்மறந்து ரசிக்க வைக்கும், கலை கைவரப்பெற்ற முருக பக்தர் "திருப்புகழ் ஜோதி" வாரியார் சுவாமிகள்.

நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்லி இறை நெறி வளர்த்தவர் வாரியார்.
சுவாரஸ்யமான, எளிய நடையில் ஆன்மிகக் கருத்துகளை பரப்பிய திருமுருக கிருபானந்த வாரியார் நினைவு தினத்தில் அவரைப் பற்றி
சில துளிகள்:-


வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேய நல்லூரில் (1906) பிறந்தார். இசை,  இலக்கியத்தில் வல்லவரான இவரது தந்தை, 3 வயதில் இருந்தே தன் குழந்தைக்கு இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தந்தார். சிறுவனுக்கு 8 வயதிலேயே கவிபாடும் ஆற்றல் சித்தித்தது.

ஒருமுறை, தான் ஒப்புக்கொண்ட சொற்பொழிவுக்கு செல்ல இயலாததால், மகனை அனுப்பிவைத்தார். மடைதிறந்த வெள்ளமாகப் பெருக்கெடுத்த 18 வயது இளைஞனின் சொல்லாற்றல் அவையோரை மெய்மறக்கச் செய்தது. முதல் சொற்பொழிவே பேரும் புகழும் பெற்றுத் தந்தது.

யானைக்கவுனி, தென்மடம் பிரம்ம வரதாச்சாரியாரிடம் 4 ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். சைவ சித்தாந்தத்தில் ஆழ்ந்த புலமை கொண்டவர். அபரிமிதமான நினைவாற்றல் படைத்தவர் சிறந்த முருக பக்தர்.

திருமுருகாற்றுப்படை, திருவாசகம், தேவாரம், திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், திருவருட்பா உள்ளிட்டவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாக்களை மனப்பாடமாக அறிந்தவர். சொற்பொழிவின்போது, அவற்றை இசையோடு பாடுவார்.

 திருப்புகழ் அமிர்தம்என்ற மாத இதழை 37 ஆண்டுகளாக நடத்தினார். சிவனருட்செல்வர், கந்தவேல் கருணை, ராமகாவியம், மகாபாரதம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட நூல்கள், 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். குழந்தைகளுக்காக தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்என்ற நூலை எழுதியுள்ளார். அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் இவரது நூல்கள் தெளிவாகஎளிய நடையில்இலக்கியத்தரம் வாய்ந்தவையாக இருக்கும்.

சொற்பொழிவுக்கு நடுவே, குழந்தைகளிடம் ஆன்மிக கேள்விகள் கேட்பார். சரியாக பதில் சொல்லும் குழந்தைகளுக்கு விபூதி, சிறிய கந்தசஷ்டி கவசம் புத்தகத்தை அன்புப் பரிசாகத் தருவார். இதற்காகவே முன்வரிசையில் இடம்பிடிக்க சிறுவர்கள் போட்டிபோடுவார்கள்.

படித்தவர், பாமரர், முதியோர், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் ரசிக்கும்படி சுவாரஸ்யமாகப் பேசுவார். பெண்மையைப் போற்றவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுவார். 



குழந்தைகளுக்குத் தாயின் பெயரை முதலெழுத்தாகப் போட வேண்டும் என்பதை முதன்முதலாகக் கூறியவர் இவர்தான்.

தியாகராஜ பாகவதரின் சிவகவிபடத்துக்கு வசனம் எழுதினார்.

துணைவன், திருவருள், தெய்வம் போன்ற திரைப்படங்களிலும் நடித்தார்.

எம்ஜிஆருக்கு பொன்மனச் செம்மல்என்ற பட்டத்தை சூட்டியது இவர்தான்.


ஏராளமான கோயில்களில், திருப்பணி நடைபெற உதவியவர்.
ஆன்மிக, அறப்பணிகளுக்காக ஏராளமான விருதுகள் பெற்றவர்.
சென்னை தமிழிசை மன்றம் இசைப் பேரறிஞர்பட்டம் வழங்கி இவரை சிறப்பித்தது.

வாழ்நாள் முழுவதும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் மூலம் பக்தி, நன்னெறியை மக்களிடையே வளர்த்தார்.

செந்தமிழ்க் கடல்,   
அருள்மொழி அரசு, 
திருப்புகழ் ஜோதி 
-என்றெல்லாம் போற்றப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
87 வயதில் (1993), விமானப் பயணத்தின்போது மறைந்தார்.

1993 அக்டோபர் 19-ஆம் தேதி வாரியார் சுவாமிகள் லண்டன் பயணமானார். 

ஆன்மிகத்துக்காகவே பாடுபட்ட வாரியார் சுவாமிகள்,
1993-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி விமானப் பயணத்திலேயே தம்முடைய வழிபடு தெய்வமாகிய இளம்பூரணன் இணையடிகளில் இரண்டறக் கலந்து, பூதவுடல் நீத்துப் புகழுடம்பெய்தினார்.

ஒவ்வொருவரும் மறக்காமல் மனதில் வைத்துக்கொள்ள வேண்டிய கருத்துக்கள் இரண்டாகும். 

அவை அறவழியில் செலவழித்த பொருளும், பூஜைக்காக செலவழித்த நேரமும் ஆகும்.

இந்த இரண்டோடும் இரண்டறக் கலந்து வாழ்ந்து காட்டிய கருணை வேந்தர் வாரியார் சுவாமிகள்.

வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் வரைந்துள்ளார்.
அவையாவும் இலக்கியத்தரம் வாய்ந்தவை மட்டுமன்றி, தெள்ளத் தெளிந்த நீரோட்டம் போன்ற நடையில் அமைந்தவை.

வாரியார்  இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை.
கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள், 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வெளி வந்துள்ளன.

"தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் படைத்தார்.

20-ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அருணகிரிநாதராக விளங்கியவர் பாம்பன் சுவாமிகள்.

பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார்.

"வாரியார் வாக்கு கங்கை நதியின் பிரவாகம் போலப் பெருக்கெடுத்தோடுகிறது
 மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன'' என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள்.




வாரியார் அமுதம்

வருவதும் போவதும்
- இன்பமும், துன்பமும்

 வந்தால் போகாதது
- புகழும், பழியும்

 போனால் வராதது
- மானமும், உயிரும்

 தானாக வருவது
- இளமையும், மூப்பும்

 நம்முடன் வருவது
- பாவமும், புண்ணியமும்

அடக்கமுடியாதது - ஆசையும், துக்கமும்

 தவிர்க்க முடியாதது - பசியும், தாகமும்

 பிரிக்க முடியாதது - பந்தமும், பாசமும்

 அழிவைத்தருவது - கோபமும்,பொறாமையும்

 அனைவருக்கும் உள்ளது - பிறப்பும், இறப்பும்


பொறுமை கடலினும் பெரிது என்பர். பொறுமை ஒருவனுக்கு புகழைத் தரவல்லதாகும். புண்ணியவான்களிடமே பொறுமை குடிகொண்டிருக்கும்.
உலகம்  கூட அழிந்துவிடும். ஆனால், பொறுமை மிக்கவரின் புகழ் அழிவதில்லை. ஆம் ஆன்மீக அரசர் வாரியார் அவர்களது திருப்புகழ் திருவாய் மலரும், மணம் வீசும்.

தகவல்

புதுவை வேலு

நன்றி: இணையம்

25 commentaires:

  1. வாரியாரின் நினைவினைப் போற்றுவோம்
    தம 1

    RépondreSupprimer
    Réponses
    1. தமிழ் மொழியை தெய்வத் தமிழாக்க உழைத்தவர் வாரியார் சுவாமிகள்
      அவரது பதிவுக்கு வந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. வணக்கம்
    ஐயா

    வாரியர் பற்றி நினைவு படுத்தி சொல்லியமைக்கு நன்றி ஐயா.த.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் கவிஞரே!
      வருகைக்கு மகிழ்ச்சி
      கருத்திற்கும், வாக்கிற்கும் வணக்கத்திற்குரிய நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அய்யா, தமிழ்கூறு நல்லுலகில், வாரியாரைப் பற்றி யாரும் எழுதுவதில்லை, பேசுவதில்லை என்ற வருத்தம் எனக்குள் எப்போதும் உண்டு. அந்த குறைதனைப் போக்கிய தங்களது இந்த பதிவினுக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      திருச்சியில் உறையும் உச்சிப் பிள்ளையாரே
      உங்களது கருத்தாய் வந்து உள்ளதை சொல்லி விட்டு
      போயிருப்பதாகவே உணர்கிறேன்.
      வருகை சிறக்க வேண்டுகிறேன்.
      நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வாரியார் அவர்களின் அமுத மொழிகளோடு அனைத்தும் சிறப்பு ஐயா... நன்றி...

    RépondreSupprimer
    Réponses
    1. அனைத்தும் சிறப்பு என்று அமுத மொழி தந்த
      வாரியார் அவர்களின் பதிவுக்கு மேலும் பெருமைசேர்த்த
      வார்த்தைச் சித்தரே மிக்க நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. 1980களின் நடுவில் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் இவருக்கு சிறப்பு பட்டமளிப்பு வழங்கியபோது நேரில் பார்த்துள்ளேன். அவரைப் பார்க்கும்போதே அவர்மீது பக்தியும் அன்பும் உண்டாவதை உணர்ந்தேன்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் முனைவர் அய்யா,
      வாரியார் சுவாமிகளை பார்க்கும்போதே, அவர் மீது பக்தியும் அன்பும் உண்டாவதை தங்களை போல், நானும் உணர்ந்துள்ளேன் அய்யா!
      உண்மை.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்ந்து சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்! 1971 ஆம் ஆண்டு அவர் எங்களது வங்கி கிளைக்கு வந்து சிறப்புரை ஆற்றியது இன்னும் நெஞ்சில் பசுமரத்தாணி போல் உள்ளது.

    RépondreSupprimer
    Réponses
    1. நெஞ்சில் பசுமரத்தாணி போல் பதிந்த வாரியாரின் நினைவுகள
      குழலின்சையின்பதிவில் வந்து கருத்தாய் நினைவு கூர்ந்தமைக்கு
      சிறப்பு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. வாரியாரின் நினவுநாளில் அவரின் பொன்மொழிகளையும் வரலாற்றினையும் தொகுத்து தந்தமைக்கு பாராட்டுக்கள்! அருமை! நன்ரி!

    RépondreSupprimer
    Réponses
    1. வாரியாரின் புகழ் மாலையில் மணம் வீசும் கருத்தினை தந்தமைக்கு
      மிக்க நன்றி நண்பர் தளிர் சுரேஷ் அவர்களே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. பகிர்வு நன்று நண்பரே தேவகோட்டையில் பலமுறை வாரியாரின் சொற்பொழிவை அருகில் அமர்ந்து அதாவது எனது வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து கேட்டவன் கோயிலின் வாசலும் வீட்டு வாசலும் ஒன்று

    RépondreSupprimer
    Réponses

    1. கோயில் கோபுரத்து புறாவாய் இருந்து புண்ணியம் தரும் வாரியார் அவர்களின் பூந்தமிழ்
      பேச்சை கேட்டு ரசித்த செய்தியை அறிந்தேன் நண்பா!
      நன்றி.

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. மறக்க முடியாத ஆன்மிக பெரும் ஞானி. நினைவு படுத்தியமைக்கு நன்றி நண்பரே!
    த ம 7

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே!
      வருகை சிறக்க வேண்டுகிறேன்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. பலமுறை வாரியார் சுவாமிகளின் அற்புதமான தமிழ்ப் பேருரைகளைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். எங்கள் மாவட்டத்துக்காரர் என்ற சொந்தம் வேறு! (எனக்கு ஊர் இராணிப்பேட்டை.) அவருடைய குட்டிக்கதைகள் என்ற புத்தகம் அமெரிக்கத் தமிழ்க் குழந்தைகளிடையே பிரபலமானது. - இராய செல்லப்பா

    RépondreSupprimer
    Réponses
    1. தமிழ்க் கடவுள் முருகனிடம் முத்தமிழை வேண்டிப் பெற்ற
      அருள் நேசர் அய்யா வாரியார் சுவாமிகள். அமெரிக்கா மட்டுமல்ல
      உலகெங்கும் வாழும் அனைத்து குழந்தைகளுக்கும், அவரைப் பற்றிய செய்திகள் கொண்டு சேர்க்கப் பட வேண்டும். நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. வாரியாரின் நினைவு நாளில் அவரது அமுத மொழிகளோடு சிறப்பான பகிர்வு. நன்றி.

    RépondreSupprimer
  13. பதிவை சிறப்பித்தமைக்கு நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  14. மிக சிறுவயதில் எனக்கு முதன் முதலாக வாசிக்கும் விருப்பத்தை ஏற்படுத்தியவை இவருடைய நூலகள்தான் ... என்வேதான் கிருபானந்த வாரியாரை நான் மானசீக குருவாக ஏற்றுக்கொண்டுள்ளேன். கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer