jeudi 19 novembre 2015

"மழை" சிரிப்பு




சிரிப்பு மழை


மன்னர்: மாதம் மும்மாரி மொழிகிறதா?


மந்திரி: மூன்று மாதம் பொழிய வேண்டிய மழை
       மூன்றே நாளில் பொழிந்து விட்டது மன்னா!



மந்திரி: அரண்மனையைச் சுற்றி மழை வளைத்து விட்டது மன்னா!

மன்னர்: அப்படியா!!!!
        சீக்கிரமாய் நமது கப்பல் படையை வரச் சொல்லுங்கள்    
        நாம் தப்பித்து விடலாம்!



மந்திரி: மழையால் அரசுக்கு அவப் பெயர் வந்து விட்டது மன்னா!!!

ன்னர்:  அப்படியா!
        வருண பகவானை வணங்கியவர்கள் எல்லோரையும் வரிக் கட்டச்
        சொல்லுங்கள்.
                 "வருணன் வரி"க்கு பயந்து,


        வருணனும் வர மாட்டான்.



மன்னர்:  மந்திரி! மழை நீரை சேமிக்க!
         ஏரிக் குளங்களை எல்லாம் தூர் வாரச் சொல்லுங்கள்.
         சரி! இந்த பணிக்கு யாரை அனுப்பலாம்?

மந்திரி: 'மாரி'யை அனுப்பலாம் மன்னா!
                    அவர் "செஞ்சிடுவார்"




புதுவை வேலு

24 commentaires:

  1. மழைக்கால தூறல் நகைச்சுவை நன்று நண்பா..

    RépondreSupprimer
    Réponses
    1. மழைக்கால தூறலில் நனைந்தமைக்கு நன்றி நண்பா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. சிரிப்பு மழை தங்களது வரவால் சிறப்பு மழையானது நன்றி அய்யா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. மழைச்சிரிப்பு, சிரிப்பு மழையை வரவழைத்தது. நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. இன்புறும் கருத்து! இனிமை!
      நன்றி முனைவர் அய்யா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
    2. தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

      முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...

      Supprimer
    3. வார்த்தைச் சித்தரின் வார்த்தையை அப்படியே ஏற்கிறேன்.
      நன்றி!

      Supprimer
  4. ஹா! ஹா! ஹா!
    சிரிப்பு இடி
    வெகு சிறப்பு
    நன்றி வார்த்தைச் சித்தரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  5. அடாது மழையிலும் விடாது போல் இருக்கிறதே இந்த சிரிப்பு மழை ! இரசித்தேன்!

    RépondreSupprimer
    Réponses
    1. சிரமம் தராத மழை
      சிரிப்பு மழை
      வரமாய் கருத்தினை தந்தமைக்கு
      நன்றி அய்யா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. சிரிப்பு மழை சிறப்பு! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. "சிரிப்பு மழை சிறப்பு!"
      சிரிப்பின் சிகரம்
      எனது சிரிப்பின் அகரத்தை
      வாழ்த்தியமைக்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. சுவாரசியமான நகைச்சுவை, நேரத்துக்கு ஏற்ற சிரிப்பு, அருமை புதுவை வேலு அவர்களே.

    RépondreSupprimer
    Réponses
    1. இடம், பொருள், ஏவல்!
      நேரத்திற்கு ஏற்புடைய பதிவாக அமைந்ததை
      சொல்லியமைக்கு நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. அடாது மழையிலும் விடாது நனைந்த சிரிப்பு சிறப்பு! சூப்பர் நண்பரே!

    RépondreSupprimer
    Réponses
    1. அடாது மழையிலும் விடாது நனைந்து!
      பதிவினை நினைந்து, கருத்தினை புனைந்தமைக்கு,
      நன்றி நண்பரே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. துன்பம் வரும் வேளையிலும் சிரிங்க....ஓ அதனால்தான் சிரிப்பு மழையோ....ஹஹஹ்

    RépondreSupprimer
    Réponses
    1. துன்பம் வரும் வேளையிலே சிரிங்க -என்று
      சொல்லி வைத்தார் வள்ளுவரும் சரிங்க!
      வள்ளுவம் சொல்லி வாழ்த்தியமைக்கு நன்றி அய்யா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. வணக்கம்
    ஐயா
    அற்புதமான நகைச்சுவை கலந்த பதிவு... வித்தியாசமான சிந்தனை
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தொடர்பதிவில் நானும் சிக்கிவிட்டேன்...:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. சிரிப்பு மழை தங்களது வரவால் சிறப்பு மழையானது நன்றி அய்யா
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. மழைக்கால நகைச்சுவை..... அனைத்தும் ரசித்தேன்.

    RépondreSupprimer
  12. அனைத்தையும் ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி நண்பரே!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer