mercredi 8 octobre 2014

பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவாஞ்சலி





பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் நினைவாஞ்சலி

 நினைவு தினம்(அக்டோபர் 8)














 பட்டுக்கோட்டை மணிமண்டப மன்னவனே
பாட்டுக்கோட்டை துணிவுமிக்கத் தூயவனே
பாட்டாளி வர்க்கத்தின் திராவிட தீக்கதிரே
ஏடெடுத்து பயிலாத பாமரனே நின்புகழ் வாழி!



மக்கள் தமிழ் படைத்திட்ட பாட்டாளியிவன்
மக்கள்திலகம் அரியணையின் நாற்காலியிவன்
நாட்டிலுள்ள நல்லவர்களின் கூட்டாளியிவன்
வாட்டிடும் வறுமையின் போராளியிவன்-வாழி!



பாசவலையில் பாடல் படைத்திட்ட கவிஞன்
பாடுபட்டு செய்த தொழில் பதினேழு
ஓடாக தேய்ந்ததுவே அவன் தேகம்
முப்பதுக்குள் முடிந்ததுதான் நம் சோகம்!



புரட்சிக்கவி பாரதிதாசனார் அருஞ்சீடன்
அகல்யா வடிவெடுத்த அருங் கவிஞன்
அரசுடமை பெற்ற அவனரும் பாடலை
பரமசுகம் பெற்றே பாடுவோம் வாரீர்!

புதுவை வேலு

 

 

 

 

6 commentaires:

  1. ஆஹா அருமை அருமைகவி வரிகள் ரசித்தேன் சகோ !
    அவர் புகழ் ஓங்கட்டும் ஆத்மா சாந்தி அடையட்டும்.

    RépondreSupprimer
  2. வணக்கம். தங்களது பதிவுகளைப் படித்துவருகிறேன். எனது வலைப்பூவில் கனவில் வந்த காந்தி என்ற பதிவில் தங்கள் பெயரை இணைத்துள்ளேன். பார்க்கவும் இணைப்பைத் தொடரவும் அழைக்கிறேன். நன்றி.

    RépondreSupprimer
  3. அற்புதக் கவிஞனுக்கு பாராட்டுக் கவிதை நன்று

    RépondreSupprimer
  4. ஏடெடுத்து பயிலாத பாமரனே கோட்டையாக வாழ்ந்திட்ட காவியமே நின்புகழ் ஓங்குக கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer