vendredi 17 octobre 2014

பிழைக்கு பிராயச்சித்தம்/ இன்று ஒரு தகவல் (ஆன்மீகம்)

இன்று ஒரு தகவல் (ஆன்மீகம்)

பிழைக்கு பிராயச்சித்தம்

 



அறிந்தும் அறியாமலும் சில நேரங்களில், பிறர் மீது வீண் பழி சுமத்துவதற்கு நாம் காரணமாகி விடுகிறோம். பின்பு அதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யலாம் என்ற வருத்தம் அனைவருக்கும் இருக்கும். இதற்கு மகான் ஒருவர் எளிய வழி ஒன்றைக் கூறுகிறார்.
 
தலைசிறந்த மகான் ஒருவரிடம் வந்த ஒருவன், சுவாமி! நான் ஒருவர் மீது வீணாக பழி சுமத்திவிட்டேன். என் மனசாட்சி இப்போது உறுத்துகிறது. நான் செய்த தவறுக்கு ஏதாவது பிராயச்சித்தம் இருந்தால் கூறுங்கள் சுவாமி என்று கூறினான்.

 


அவனையே சிறிது நிமிடங்கள் உற்றுப் பார்த்த சுவாமி, ஒரு காகிதத்தை எடுத்து பல துண்டுகளாக கிழித்தார். அதை அவனிடம் கொடுத்து, நாளை காலை இது ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரது வீட்டு வாசலிலும் வைத்து விட்டு வா! என்று கூறினார். அவ்வாறே செய்து விட்டு வந்தவன், இப்போது என் பாவம் தொலைந்திருக்கும் அல்லவாஎன்று வினவினான்.

சிறிது நேரம் கழித்து, நீ இன்னொரு வேலை செய்! ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நீ! வைத்த காகித துண்டுகளை மீண்டும் எடுத்து வா! என்று கூறினார்.  இதைக் கேட்டு திகைத்த அவன், என்ன சுவாமி கூறுகிறீர்கள்? காற்றில் அவையெல்லாம் பறந்து போயிருக்குமே! என்றான்.
மகனே! இப்படித்தான் ஒருவர் மீது சுமத்திய பழியும்காகிதத்துண்டு போல் உன் வாயிலிருந்து வந்த வார்த்தையும் திரும்ப வராது. அதற்காக கவலைப்படாதே! நீ மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேள். அவர் எல்லையற்ற கருணை கொண்டவர். நீ செய்த பாவத்தையும் அவர் பறந்தோடச் செய்வார். எனவே செய்த தவறுக்கு மனப்பூர்வமாக வருந்தி கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.
மேலும், தவறுக்கு பிராயச்சித்தமாக அவருக்கு எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல் உதவிகளை  உள்ளன்போடு  செய்ய வேண்டும் என்றுக் கூறி அவனை நல்வழிப் படுத்தினார்.



இதுகுறித்து காஞ்சிப் பெரியவர் அருளிய சில அருளுரைகளுள் சில:

 
 உள்ளத்தால், மனதால் பிறருக்கு உதவி செய்வதை விட உடலால் மற்றவர்களுக்கு உதவி செய்வது வாழ்க்கையில் கிடைக்கும் பெரிய புண்ணியம்.
 
உடல், வாய், மனம், பணம் என்ற நான்கு வகைகளிலும், பாவம் செய்கிறோம், இதற்கு பிராயச்சித்தமாக உடலால் உதவியும், வாயால் பகவான் நாமமும், மனதால் தியானமும், பணத்தால் தர்மமும் செய்ய வேண்டும்.
 
கஷ்டம், பயம், காமம், குரோதம் போன்றவை நம்மை கட்டிப்போடுகின்றன. இதுவே குடும்ப பந்தமாகும்.

பரந்து விரிந்த இப்பூவுலகில், பாவம் செய்து வாழாமல், பண்புடன் அன்பு கலந்து, இனிய வாழ்வை மேற்க்கொண்டு இன்புற்று வாழ்வோமாக!  

 

புதுவை வேலு

நன்றி: தினமலர்
(ஆன்மீகம்)

12 commentaires:

  1. " முன்னாளில் செய்த காரியம் தவறென பின்னாளில் வருந்தாத நிலை வரும்வரை செய்யும் எதுவுமே நல்லதுதான் " என்ற ஒஷோவின் தத்த்துவத்தை நினைவு படுத்தும் பதிவு.

    அறியாமல் செய்த தவறுக்கு சுயகழிவிரக்கத்துடனான பிரார்த்தனையும் தன்னலமற்ற உடல் உதவியும் மட்டுமே நிவாரணம் என்பதை அழாகான கதையுடன் அருமையாக விளக்கியுள்ளீர்கள்.

    நன்றி
    சாமானியன்

    RépondreSupprimer
    Réponses
    1. ஒஷோவின் தத்த்துவத்தை போதிக்கும் தனித்துவம் கொண்ட நண்பர் சாமானியர் என்பதை அறிந்து கொண்டேன். கருத்திட்டமைக்கு மிக்க நன்றி
      புதுவை வேலு

      Supprimer
  2. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. சுருங்கச் சொல்லி விளங்கிட வைக்கும் வைரம் போன்றதொரு வைபோக சுகம் தரும் கருத்து. நன்றி! மீண்டும் வருக!
      புதுவை வேலு

      Supprimer
  3. நல்லதே நடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இக்கதையை வெளியிட்டிருக்கிறீர்கள்.

    தங்களின் நல்ல மனம் வாழ்க.

    RépondreSupprimer
  4. நல்லதை நினைந்து நடைபோடும் நண்பரின் நற்றுணை நமக்கும் வேண்டும் என்கிற வேண்டுதலே காரணம் நண்பா. வாழ்த்துக்கள்!
    வருகைக்கு மிக்க நன்றி!
    புதுவை வேலு

    RépondreSupprimer
  5. நேர்மறை சிந்தனை கதையை தார்மீக விருப்பத்திற்கு மையமாக வழிவகுக்கிறது
    அருமை புதுவை வேலு அவர்களே

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. நேர்மறை சிந்தனையை நேர்பட உரைத்த நண்பரே!
      நவில்கின்றேன் நன்றியினை நயம்படவே!
      புதுவை வேலு

      Supprimer
  6. தெம்பு இருக்கும்போது செய்யக் கூடாத சேட்டையெல்லாம் செய்துவிட்டு, பழும் கட்டை பாடையில் போகையிலே.... அதை நிணைப்பதால் ஒரு பலனுமில்லை.. என்பதே எனது கருத்து........

    RépondreSupprimer
  7. வலிப் போக்கரே!
    உமது கருத்து பொதுக் கருத்து. ஆம்! அதுதான் பொதுவுடமைக் கருத்து.
    தெம்பு இருக்கும்போது செய்யக் கூடாத சேட்டையால் ஏற்படும் ஓட்டைகளை
    இனங்கண்டு நல்வழியில் நாம் நடைபோடுவோமாக!
    புதுவை வேலு

    RépondreSupprimer
  8. காஞ்சிப் பெரியவர் அருளிய அருளுரைகளை எங்களுக்கு வழங்கி பிழைக்கு பிராயச்சித்தம் செய்து அனைவரும் இன்புற்று வாழ வேண்டும் என நினைத்து பொது நலத்தோடு தாங்கள் தந்த தகவல்கள் அருமை. நன்றி!

    RépondreSupprimer
  9. காஞ்சி பெரியவரின் அருமையின் பெருமையை அழகுற உரைத்தீர் சகோதரி!
    தங்களின் கருத்தை, கருத்துக் களஞ்சியத்துள் சேமித்து வைத்துக் கொண்டேன். நன்றி!
    புதுவை வேலு

    RépondreSupprimer