jeudi 23 avril 2015

உலக புத்தக தினம் .. ஏப்ரல் 23 ( 'இன்று ஒரு தகவல்')





"உலக புத்தக தினம்" - "ஏப்ரல் 23" 

 

புத்தகங்கள் இல்லாமல் புரட்சிகள் சாத்தியமில்லை"
புத்கப்புழுக்களால்! பூவும் பூப்பதில்லை
என்பதை இன்றைய இளைய சமூகம் உணர வேண்டும் .

வாசிப்பை நேசிப்போம்!
வாசிக்கத் தூண்டுவோம்!

ஏப்ரல் 23-ஆம் நாள் உலகப் புத்தக தினமாகக் கொண்டாடப்படுகிறது. அறிவைப் பரப்புவதற்கும்,  உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கும்புரிதல்சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும் புத்தகம் ஒரு சிறந்தக் கருவியாக உள்ளதால்,
"ஏப்ரல் 23-ஆம்" நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுவது என்று 1995-ஆம் ஆண்டு நடைபெற்ற யுனெஸ்கோவின் 28-ஆவது மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

வாசித்தல்பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமை மூலமாக அறிவுசார் சொத்துகளைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் இந்நாள் உலகப் புத்தக மற்றும் பதிப்புரிமை நாளாகக் கொண்டாடப்படுகிறது.

உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
 
1616-ஆம் ஆண்டு இந்நாளில்தான் வில்லியம் ஷேக்ஸ்பியர்இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோர் காலமானார்கள். மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ், ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களின் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ இதே நாள் அமைந்துள்ளது.

உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேசப் பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷியப் படைப்பாளர்கள் கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தக மற்றும் புத்தக உரிமை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

அனைவருக்கும் வாசிக்கும் உரிமை,  அனைத்து மக்கள் வாழ்விடங்களிலும் நூலக உரிமை,  உலகில் உள்ள அனைத்து அறிவுச் செல்வங்களையும் பாதுகாத்து ஆவணப்படுத்துதல்புத்ததங்களுக்கும் வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதல் என்பன உள்ளிட்ட 10 கட்டளைகளை அனைத்து நாடுகளிலும் நிறைவேற்றுவதன் மூலம் புத்தகம் படிக்கும் பழக்கத்தை விரிவுபடுத்த முடியும் என்று உறுதி ஏற்கும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
கதை சொல்லிகள் இல்லாமல் போயிருந்தால்கடந்த காலங்கள் தெரியாமல் போயிருக்கும். புத்தகங்கள் இல்லையென்றால் நிகழ்காலம்கூட இறந்த காலமாக மாறிவிடும்.

'வால்கா முதல் கங்கை வரை வாசித்தேன்' அது என் வாழ்வின் பாதையையே மாற்றிவிட்டது என்றார்!
பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்.

நல்ல புத்தகங்களைத் தேடிப் படிக்காத ஒருவன்,  படிக்கவே தெரியாத ஒருவனைவிட உயர்ந்தவனல்ல என்றார் ஜவாஹர்லால் நேரு.

ஆயுதத்தின் வலிமையைவிட சக்தி வாய்ந்த புத்தகங்கள் சமூக மாற்றத்துக்கான திறவுகோல்.  கல்வி மற்றும் அறிவை வளர்க்கவும், உலகிலுள்ள பல்வேறு கலாசாரம், தகவல்களைத் தெரிந்து கொள்வதற்கும் புத்தகங்கள் உறுதுணையாக உள்ளன.

புத்தகம் படிக்கும் பழக்கம் நமது அறிவை விசாலமாக்குகிறது. மனிதனை அறிவுலகத்துக்கு இழுத்துச் செல்வது புத்தகங்களே. அவை மனிதனைப் புனிதனாக்கிப் பண்படுத்துகிறது. புத்தகங்களே மனிதனின் நல்ல நண்பர்கள்.
சிறந்த புத்தகங்கள் பல்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் அது அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும்.

கடந்த 10 ஆண்டுகளில் புத்தகம் படிக்கும் ஆர்வம் அதிகரித்து வருகிறது என்பதற்கு புத்தகக் கண்காட்சிகளுக்கு வரும் மக்களின் ஆர்வமும், விற்பனையாகும் புத்தகங்களின் எண்ணிக்கையுமே சான்று.
தற்போது புத்தகங்கள் மட்டுமல்லாதுஇணையதளம்

சமூக வலைதளங்கள் வழியாகவும் வாசிப்புத் திறன் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

புத்தகங்களை வீட்டில் உள்ள பெண்களிடம் கொண்டு சேர்ப்பதில் வாடகை நூலகங்களின் பங்கு முக்கியமானது. ஆனால்தற்போது மின்னணு தகவல் தொடர்பு சாதனங்களின் ஆதிக்கத்தால் வாடகை நூலகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன.

கடவுள் குடிகொள்ளும் இடங்கள் தெய்வக் கோயில்கள் என்றால், புத்தகங்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ள இடமான நூலகம்
"அறிவுத் திருக்கோயில்கள்" என்று நமது முன்னோர் கூறியுள்ளனர்.


பல்வேறு தரப்பு வாசகர்களுக்கும் ஏற்ற நூல்களைச் சேகரித்து வைத்துள்ள இந்த அறிவாலயங்களில், நூல்களை இரவலாகப் பெற்று வாசிக்கும் வாய்ப்பு இருக்கிறது. பணம் கொடுத்து வாங்கிப் படிக்க முடியாதவர்களுக்கு அறிவு தானம் வழங்குவது இந்த அரசு நூலகங்கள்.

ஒரு கோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று காந்தியடிகளிடம் கேட்டபோது ஒரு நூலகம் கட்டுவேன் என்று பதிலளித்தார்.
 
இன்று பொதுவாக மக்கள் மத்தியிலும்மாணவர்கள் மத்தியிலும் நூலகப் பயன்பாடு குறைந்து வருகிறது. இது ஆரோக்கியமானதல்ல.
தங்கள் குழந்தைகள் பாடப் புத்தகத்தை மட்டும் படித்தால் போதும் என்று பெற்றோர்கள் நினைக்கின்றனர். கதைப் புத்தகங்களையோ செய்தித்தாள்களையோ படித்தால் அதைச் சில பெற்றோர் கண்டிக்கின்றனர்.

மாணவர்களிடம் வாசிக்கும் பழக்கம் வளர்ச்சி பெறும்போதுதான் அறிவு விசாலமாகிறது. அவர்தம் கல்வியும் செழுமை அடைகிறது.
பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்குப் பிறந்த நாள் பரிசாகப் பொருள்களை வாங்கித் தருவதைத் தவிர்த்து, நல்ல புத்தகங்களையோ அல்லது சிறுவர் பத்திரிகைகளையோ வாங்கித் தர முன்வர வேண்டும்.

குழந்தைகளின் பிறந்த நாளன்றுசாக்லெட்,   கேக் போன்றவற்றைத் தருவது பிற குழந்தைகளின் உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கிறது என்பதால்பல பள்ளிகளில் அந்தப் பள்ளியின் நூலகத்துக்குப் புத்தகங்கள் பரிசளிக்கும் நல்லதொரு நடைமுறையைத் தொடக்கி உள்ளனர்.
பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகில் உள்ள நூலகங்களுக்கு அழைத்துச்சென்று நூலக உறுப்பினர்களாக்கி நூல்களை எடுத்து படிக்கப் பழக வேண்டும். 
 
தற்போது எல்லாப் பள்ளிகளிலும் நூலகங்கள் உள்ளன. நூலகத்தில் உள்ள புத்தகங்களை மாணவர்கள் எடுத்துப் படிக்க ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும்.
நாளைய நவீன உலகைக் கட்டமைக்கப்போகும் சிறுவர்சிறுமியர்களுக்கு உலகப் புத்தக தினத்தன்று புத்தகங்களைப் பரிசாக அளிப்போம்.
விழாக் காலங்களில் உறவினர்களுக்கும்நண்பர்களுக்கும் புத்தகங்களைப் பரிசாக அளிப்போம் என்றும்,   திருமண விழாக்களில் தாம்பூலத்துக்குப் பதிலாக புத்தகங்களை வழங்குவோம் என்றும் இந்த புத்தக தினத்தில் உறுதி ஏற்போமாக!!!.




"புத்தக பூக்களின் பூவிதழ் கருத்துக்கள்"

அண்ணாதுரை:
புத்தகம் படித்து முடித்தபிறகு தான் இருதய அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார்.
                         ---
நேரு:
தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் ?
'புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன்
                                                        ---
பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்:
'என் கல்லறையில் எழுதுங்கள். இங்கே ஒரு புத்தகப்புழு உறங்குகிறது'
                                                         ---
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்:
மனிதனின் பெரிய கண்டுபிடிப்பு எது ?                                                
'புத்தகம்'

                                                         ---
சார்லி சாப்ளின்.
ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும் போதுஅதில் வரும் பணத்தில் முந்நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவார்.
                        ---
வின்ஸ்டன் சர்ச்சில்.

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் சிறந்த பரிசு 
"புத்தகம்"
                        --- 
நெல்சன் மண்டேலா.

சிறையில் வேறு எந்த சுதந்திரமும் எனக்கு வேண்டாம் . புத்தக வாசிப்பை மட்டும் அனுமதியுங்கள்.
                         ---
மார்ட்டின் லூதர்கிங்.

'பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை?
புத்தகங்கள் 
                       ---
பகத்சிங்.
தூக்கில் இடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரையிலும் வாசித்துக் கொண்டே இருந்தார்
                       ---

நூல்களின் ஆக்கத்தை அகத்தில் விதைத்து,
"புத்தக வாசிப்பு" என்னும்,
ஊக்கத்தை உழைப்பாய் தருவோம்!
"வாழ்வில் உயர்வோம்!"
நாளைய தலைமுறை நல்லுலகம் காணட்டும்
அறிவின் ஆற்றலை அறிவியலும் காணட்டும்.

தகவல்: 

புதுவை வேலு

நன்றி: தினமணி

25 commentaires:

  1. thagavaluku nandri ayaa. ungaluku piditha 10 puthagam patiyal itaal payan ulathaga irukum. nandri ayaa: g

    RépondreSupprimer
    Réponses

    1. "உலக புத்தக தினம்" - "ஏப்ரல் 23"
      இன்று

      "புத்தக வாசிப்பு" என்னும், ஊக்கத்தைத் உயர்த்துவோம்.
      வருகைக்கு நன்றி நண்பரே / அய்யா/ சகோ!

      Supprimer
  2. // விழாக் காலங்களில் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் புத்தகங்களைப் பரிசாக அளிப்போம் என்றும், திருமண விழாக்களில் தாம்பூலத்துக்குப் பதிலாக புத்தகங்களை வழங்குவோம் என்றும் இந்த புத்தக தினத்தில் உறுதி ஏற்போமாக!!!.//

    50-60 களில் திருமணங்களில் மணமக்களுக்கு புத்தகங்கள் (பெரும்பாலும் மு.வ அவர்கள் எழுதிய புத்தகங்கள்) தருவது வழக்கமாயிருந்தது. ஏனோ தெரியவில்லை.அது வழக்கொழிந்து போய்விட்டது. திரும்பவும் அந்த பழக்கத்தை தொடர இந்நாளில் உறுதி ஏற்போம்.

    RépondreSupprimer
    Réponses

    1. "உலக புத்தக தினம்" - "ஏப்ரல் 23"
      இன்று

      "புத்தக வாசிப்பு" என்னும், ஊக்கத்தைத் உயர்த்துவோம்.
      வருகைக்கு நன்றி நண்பரே / அய்யா/

      Supprimer
  3. புத்தக தினமான இன்று நல்ல பல தகவல்கள் தந்தமைக்கு நன்றி நண்பரே....
    தமிழ் மணம் 1

    RépondreSupprimer
    Réponses
    1. "உலக புத்தக தினம்" - "ஏப்ரல் 23"
      இன்று

      "புத்தக வாசிப்பு" என்னும், ஊக்கத்தைத் உயர்த்துவோம்.
      வருகைக்கு நன்றி நண்பரே /

      Supprimer
  4. உலக புத்தக தினத்தில் நல்ல பதிவு. புத்தகம் இல்லாமல் புரட்சி இல்லை, அருமை. பல அறிஞர்களின் கருத்துக்கள்,இன்று புத்தக வாசிப்பு என்பது மிக குறைந்து விட்டது. இளையதலைமுறை வாசிப்பதே இல்லை, எங்கே பாடமே சுமையகிவிட்டது அவர்களுக்கு. அருமையான காலம் சார்ந்த பதிவு.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. மிகவும் பயனுள்ள பல செய்திகள், இன்றைய நாளுக்கு மிகவும் பொருத்தமாக! பகிர்வுக்கு நன்றிகள்.

    "புத்தக வாசிப்பு" என்னும், ஊக்கத்தைத் தருவோம்!

    RépondreSupprimer
    Réponses
    1. "உலக புத்தக தினம்" - "ஏப்ரல் 23"
      இன்று

      "புத்தக வாசிப்பு" என்னும், ஊக்கத்தைத் உயர்த்துவோம்.
      வருகைக்கு நன்றி அய்யா/

      Supprimer
  6. மிகவும் நல்ல செய்தி....

    RépondreSupprimer
    Réponses
    1. "உலக புத்தக தினம்" - "ஏப்ரல் 23"
      இன்று

      "புத்தக வாசிப்பு" என்னும், ஊக்கத்தைத் உயர்த்துவோம்.
      வருகைக்கு நன்றி

      Supprimer
  7. நூல் வாசிப்பு நான் நேசிப்பதில் முதன்மை இடத்தில் எப்போதும் உண்டு. நூல் வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. வணக்கம்
    ஐயா
    வாசிப்புஎன்பது சுவாசிப்பது போல என்பார்கள் காலம் உணர்ந்து பதிவு மலர்ந்த விதம் நன்று அத்தோடு அறிய முடியாத தகவலையும் அறிந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி கவிஞரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. பயனுள்ள தொகுப்பு ஐயா... தொகுத்த விதம் மிகவும் சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி வார்த்தைச் சித்தரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. தகவலுக்கு நன்றி! பொன்மொழிகள் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. புத்தகம் நம்மை வளபடுத்தும் ( dr . உதயகுமார்), தன்நம்பிக்கையை ஊக்குவிக்கும், சிந்திக்க செய்யும். புத்தகம் வாசிக்கும் அனைவருக்கும் மரியாதை. புத்தக தினத்தை அடையாளம் காட்டிய புதுவை வேலு அவர்களுக்கு நன்றி.

    sattia vingadassamy

    RépondreSupprimer
  12. ஒரு புத்தகப் புழு, தனது அறிவின் ஆற்றலை திறந்து, மெல்ல ஊர்ந்து வந்து,
    அருமை பெறும் நற்கருத்தை நல்கி விட்டு சென்றமைக்கு
    மிக்க நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  13. புத்தக தினம் அன்று சிறப்பான தகவல்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    RépondreSupprimer
  14. "உலக புத்தக தினம்" - "ஏப்ரல் 23"
    இன்று

    "புத்தக வாசிப்பு" என்னும், ஊக்கத்தைத் உயர்த்துவோம்.
    வருகைக்கு நன்றி

    RépondreSupprimer
  15. வாசிப்பதே நம் சுவாசிப்பாக இருக்கவேண்டும். கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer