jeudi 23 avril 2015

"அருந்தொண்டு அருளாளார் ஜி.யு.போப் பிறந்த நாள்"( ஏப்.24- 1820)



 நெஞ்சம் மறப்பதில்லை


                                    ஜி.யு.போப்

ஜி.யு.போப் கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர்.

கனடாவின் பிரின்ஸ் எட்வெர்ட் தீவில் (இளவரசர் எட்வர்ட் தீவு) என்னுமிடத்தில் ஜான் போப், காதரீன் யூக்ளோ போப் ஆகியோருக்கு பிறந்தார். 

குழந்தைப் பருவத்திலேயே இங்கிலாந்துக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். 19 வயது வரை ஹாக்ஸ்டன் கல்லூரியில் கல்வி பயின்றார்.

இங்கிலாந்து பல்கலைக்கழகம் ஒன்றில் 1885 முதல் 1908 வரை தமிழ் மற்றும் தெலுங்கு கற்பிக்கும் பேராசிரியராக பணியாற்றினார்.

1886-ம் ஆண்டு திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தார்.

புறப்பொருள் வெண்பா மாலை,

புறநானூறு,

போன்ற நூல்களை பதிப்பித்தார்.

தமிழ் மீது பெரும் பற்று பெற்ற அவர்,
நாலடியார்,
திருவாசகம் 
ஆகியவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.

விவிலிய நூற்கழகத்தைச் சேர்ந்து சமயப்பணி புரிவதற்காக 1839-ல் தமிழ் நாட்டிற்கு வந்தார். கப்பலில் பயணம் செய்த எட்டு மாதங்களிலேயே தமிழை நன்கு கற்றார்.

தூத்துக்குடிக்கு அருகே உள்ள சாயர்புரத்தில் தங்கியிருந்த அவர் ஆரியங்காவுப் பிள்ளை, இராமானுசக் கவிராயரிடத்திலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றார். அருகில் உள்ள செந்தியம்பலம் கிராமத்தை சேர்ந்த நம்மாழ்வார் என்பவர் போப் உடன் நட்பாகி ஞான சிகாமணி என்று தன் பெயரை மாற்றிக் கொண்டார். அதனால் ஒரு துவக்க பள்ளிக்கு அவர் பெயரை சூடினார் போப். தமிழ் தவிர தெலுங்கு, மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளையும் கற்றுத் தேர்ந்தார்.

1850-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற போப் அங்கு என்ற பெண்ணை திருமணம் செய்தார். தம் மனைவியுடன் தமிழகம் திரும்பினார். எட்டு ஆண்டுகள் தஞ்சாவூரில் சமயப்பணியை தொடர்ந்தார். இந்த கால கட்டத்தில் புறநானுறு, நன்னூல், திருவாசகம், நாலடியார் போன்ற நூல்களை கற்றார். சில ஆங்கில மொழி இதழ்களில் தமிழ் குறித்த ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதினார்.

தமிழ் மொழியின் பெருமையையும், தமிழ் இலக்கியங்களையும் உலகத்திற்கு எடுத்துரைத்த ஜி.யு.போப் தனது கல்லறையில்.....

"தான் ஒரு தமிழ் மாணவர்" ("A Student of Tamil") என்று பொறிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இத்தகைய சிறப்புமிக்க அய்யா ஜி.யு.போப் அவர்கள் தனது 88-ம் வயதில் இயற்கை எய்தினார்.




அன்பர்களே! 
இந்த காணொளியின் இறுதி பகுதியில் ஜி.யு.போப் குறித்த சிறப்பு செய்தி
இடம் பெற்று உள்ளது,
திருமதி. தேவிலட்சுமி குணசேகரன் அவர்களது குரல் வடிவில், அதனை கண்டு,
தமிழின் மீது ஜி.யு.போப்  கொண்ட பற்றினை உணருங்களேன்.
 





பகிர்வு:

புதுவை வேலு

நன்றி: மாலைமலர்/ You Tube

23 commentaires:

  1. போப் நினைவினைப்போற்றுவோம்
    தம 1

    RépondreSupprimer
    Réponses
    1. "ஜார்ஜ் உக்லோ போப் " நினைவினை போற்றும்
      கரந்தையாரின் வருகையை போற்றுவோம்!
      நல்வாக்கிற்கும், நல்வருகைக்கும், நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. போப்பின் தமிழ்ப்பணியை நினைவுகூர்ந்தமைக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. அருந்தொண்டு அருளாளார் ஜி.யு.போப் பிறந்த நாள் பதிவில்,
      அவரை பற்றி சிறப்பித்து நினைவுகூர்ந்து, கருத்து பதிந்தமைக்கு
      தமிழ் நல்லுலகத்தின் சார்பில் நன்றி முனைவர் அய்யா!
      வருகை சிறக்கட்டும்!
      வாக்கும் பெருகட்டும்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. தமிழ் மாணவராகவே வாழ்ந்த அருந்தோண்டு அருளாளர் திரு ஜி,யு.போப் அவர்கள் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி! அருமையான காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. கவின்மிகு காணொளிக் காட்சி அருந்தொண்டு அருளாளார் ஜி.யு.போப்பின்
      தமிழ் மொழி ஆற்றலை மிகச் சிறப்பாக அம்மையார் அவர்கள் எடுத்து சொல்லும் அழகோ அழகு அய்யா!
      வருகைக்கு இனிய நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. ஜி.யு.போப் அவர்களைப் பற்றிய சிறப்புகளை அறிய வைத்தமைக்கு நன்றி ஐயா...

    RépondreSupprimer
    Réponses
    1. ஜி.யு.போப் அவர்களை பற்றி வார்த்தைச் சித்தர் புகழுரை செய்திருப்பது வரவேற்பிக்குரியது நண்பரே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அருமை நண்பரே நானு ஒரு பதிவில் இவரைப்பற்றி குறிப்பிட்டு இருக்கிறேன்.
    பல தமிழ் வார்த்தைகளை உருவாக்கியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

    RépondreSupprimer
    Réponses
    1. அன்னிய தேசத்து அருளாளர் ஜி.யு.போப்
      அவர்களது தமிழ் ஆற்றலை தேவக் கோட்டையாரே
      தாங்களும் பதிவில் வடித்து இருப்பது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி நண்பா!
      சிறக்கட்டும் வருகையும், வாக்கும்!!!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. Why say "Salt" when you know the word "உப்பு"? என்று வினவியர் அவர். உலகெலாம் கன்னித் தமிழ் ஒலிக்க முயன்று வெற்றி கண்டவர். தமிழர் நெஞ்சங்களில் அவர் என்றும் வாழ்வார். தங்களின் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று. நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      வாருங்கள் தர்மலிங்கம் ராஜகோபால் அவர்களே!
      தங்களது முதல் வருகையும், முக்கனி சுவைமிகு
      நற்கருத்தும் குழலின்னிசைக்கு பெருமை சேர்க்கிறது.
      ஆம் அன்பரே! தமிழர் நெஞ்சங்களில் அவர் ஜி.யு.போப் அவர்கள் என்றும் வாழ்வார்
      தொடர்க!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. நம் இலக்கியங்கள் பல இவரால் உலகறியப்பட்டது. நன்றிக்கடன் உண்டு. போற்றுவோம்.
    தங்கள் பதிவு சிறப்பான ஒன்று.
    வாழ்த்துக்கள். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. தமிழ் மொழி உயர்வடைய உழைத்தவரின்
      மாற்று தேசத்து அறிஞரின் ஆற்றலை
      போற்றுவோமே!
      வருகைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. சிறந்த தமிழறிஞரை அறிமுகம் செய்தமைக்குப் பாராட்டுகள்.

    RépondreSupprimer
  9. தமிழ் மொழி உயர்வடைய உழைத்தவரின்
    மாற்று தேசத்து அறிஞரின் ஆற்றலை
    போற்றுவோமே!
    வருகைக்கு நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. ஜி.யு.போப் அவர்களின் தமிழ் தொண்டு சிறப்பு, மதம் என்று வரும் பொழுது சிந்திக்க வேண்டும். புதுவை வேலு அவர்களுக்கு நன்றி.


    sattia vingadassamy

    RépondreSupprimer
  11. நண்பர் சத்தியா அவர்களே!
    வணக்கம்
    மதத்தை பரப்புரை செய்ய அவர்கள் வந்தாலும்,
    வளர்ந்தது மதமா?
    தமிழ் மொழியா?
    என்று பார்க்கும்போது விழுக்காடு வெற்றி மொழிக்கு அல்லவா?
    அந்த வகையில் அவர்கள் பாராட்டுக்குரியவர்களே?
    (சிலர் மொழியை வைத்து பிழைப்பு நடத்துகிறார்களே?)
    நன்றி
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  12. தமிழுக்கு அவர் செய்த தொண்டுகளை இன்றைக்கு நினைவூட்டியமைக்கு நன்றி.

    RépondreSupprimer
  13. தமிழ் மொழி உயர்வடைய உழைத்தவரின்
    மாற்று தேசத்து அறிஞரின் ஆற்றலை
    போற்றுவோமே!
    வருகைக்கு நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  14. அவர் தமிழன் உள்ளத்தில் என்றும் வாழ்வார்

    RépondreSupprimer
  15. தமிழ் நல்லுலகத்தின் சார்பில் நன்றி அய்யா!
    வருகை சிறக்கட்டும்!
    வாக்கும் பெருகட்டும்!
    நன்றி அய்யா
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  16. போப் அவர்கள் செய்த தொண்டு சால சிறந்தது. தமிழகத்தில் கல்வி கண்களை திறந்தவர். நானும் இன்று நல்ல நிலையில் இருக்கிறேன் என்றால் அவருடைய அன்றைய உழைப்பு.
    எங்கள் ஊரில் கல்வி சமயங்களை வளர்த்த டாக்டர்.ஜி.யூ.போப் அவர்களுக்கு நன்றியை காணிக்கையாக்குகிறேன்

    RépondreSupprimer