பெரியவங்க சொல் கேளுங்க!
கல்யாண வயதில் இருந்த மகளுக்கு
பெற்றோர் மாப்பிள்ளை தேட ஆரம்பித்தனர். உறவுக்குள்ளேயே நல்ல மாப்பிள்ளை அமைந்தது.
அந்த சம்பந்தத்தைப் பேசி முடிக்கத் தீர்மானித்தனர். ஆனால், பெண்ணுக்கோ இதில் இஷ்டமில்லை. இந்த ஊரிலேயே உயர்ந்தவர் யாரோ அவரைத்
தான் மணப்பேன், என்று தீர்மானமாக பெற்றோரிடம் சொல்லி
விட்டாள். அவள் வழிக்கே விட்டு விட எண்ணி, உன் இஷ்டப்படியே
ஆகட்டும், என்றனர் பெற்றோர்.
அந்தப் பெண்ணோ நாடாளும் ராஜா தான்
ஊரிலேயே உயர்ந்தவர். மணந்தால் அவரையே மணப்பது என உறுதி எடுத்தாள். ஒருநாள்,
பெற்றோருக்கு தெரியாமல், அரண்மனைக்குச் சென்றாள். நகர் வலம் செல்வதற்காக ராஜா பல்லக்கில்
கிளம்புவதைக் கவனித்தாள். பல்லக்கைப் பின் தொடர்ந்தாள். வழியில் துறவிஒருவர்
எதிர்ப்பட்டார். அவரைக் கண்ட ராஜா, பல்லக்கை விட்டுக் கீழிறங்கி அவரிடம்
ஆசி பெற்றான். மீண்டும் பல்லக்கில் ஏறினான். அப்போது அந்தப் பெண்ணின் மனம்
மாறியது.
அடடா! ஏமாந்து விட்டேனே. இது நாள்
வரையில் ஊரிலேயே உயர்ந்தவர் ராஜா என தவறாக நினைத்துக் கொண்டிருந்தேனே! ராஜாவே
ஒருவரை வணங்குகிறார் என்றால், துறவி தானே உயர்ந்தவர்! இனி இவரே என்
மணாளன், என்றபடி துறவியைத் தொடர்ந்தாள்.
துறவி
ஒரு ஆலமரத்தடியில் நின்றார். அங்கிருந்த பிள்ளையார் முன் நின்று நெற்றியில்
குட்டிக் கொண்டு தோப்புக்கரணம் இட்டார். அவரை வலம் வந்த துறவி நமஸ்காரம் செய்து
விட்டு நடக்கத் தொடங்கினார்.
அடடே! நான் எவ்வளவு ஏமாளியாக
இருக்கிறேன். துறவியைக் காட்டிலும் இந்த அரசமரத்துப் பிள்ளையார் அல்லவா
உயர்ந்தவர்! என்ற முடிவுக்கு வந்தாள்.பிள்ளையாரே கதி என அவரின் அருகில்
அமர்ந்தாள்.
பிள்ளையாரை நோக்கி நாய் ஒன்று வந்தது. அவரை சட்டையே செய்யாமல் இஷ்டம்
போல, பக்கத்தில் படுத்துக் கொண்டு உருண்டது. தன்னை
அலட்சியம் செய்த நாயைப் பிள்ளையார் கண்டிக்கவே இல்லை. அடடா! பிள்ளையாரையே இந்த
நாய் அலட்சியப்படுத்துகிறதே! இதுவல்லவோ
ஊரில் உயர்ந்தது என்று மனதை மாற்றிக்
கொண்டாள். அங்கிருந்து நாய் நடக்க ஆரம்பித்தது. இளம்பெண்ணும் நாயைப் பின் தொடர
முயன்றாள்.வழியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன், நாய் மீது கல்லை எறிந்தான். லொள் என்று குரைத்த படியே தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடியது.
அப்போது, ஏண்டா! வாயில்லா ஜீவனைக் கல்லால்
அடிக்கிறாய்? என்று அவனைக் கண்டித்தான் வாலிபன்
ஒருவன்.
அண்ணா! தப்பு தான்! என்னை மன்னித்து
விடுங்கள், என்று சொல்லி விட்டு சிறுவன்
ஓடினான்.உயிர்களை நேசிக்கும் இந்த வாலிபனே உயர்ந்தவன். இவனைக் கல்யாணம் செய்து
கொண்டால் வாழ்வு சிறக்கும் என முடிவெடுத்தாள்.
அவன் யாரென்றால்,
ஏற்கனவே அவளது பெற்றோரால் முடிவு
செய்யப்பட்ட அதே மாப்பிள்ளை தான்.
உலகில் ஒன்றை விட ஒன்று உயர்ந்ததாகத் தான்
நமது பார்வைக்குத்
தெரியும்.
எனவே,
நம் ஆசை என்பது ஒரு வட்டத்துக்குள்
ஒடுங்காது.
அது விரிந்து கொண்டே தான் செல்லும்.
அதனால், பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு
நடப்பதும்,
மனதைக் கட்டுக்குள் வைப்பதுமே நம்மை உயர்த்தும்.
புதுவை வேலு
(நன்றி: தினமலர்)
வணக்கம்
RépondreSupprimerஐயா
உண்மைதான் பெரியோர் சொல் கேட்டு நடப்பது சாலச் சிறந்தது... அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி. த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி.வாழ்த்துக்கள்.
Supprimerநண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
Very good episode.
RépondreSupprimerநன்றி.வாழ்த்துக்கள்.
Supprimer/ அய்யா! வாழ்த்துக்கள்.
நட்புடன்,
புதுவை வேலு
கடைசியில் சுற்றி ஆரம்பித்த இடத்திற்கே வந்தது அதிசயமாக இருந்தது. யதார்த்தம் இவ்வாறெனில் ஏற்கத்தான்வேண்டும்.
RépondreSupprimerநன்றி.வாழ்த்துக்கள்.
Supprimerஅய்யா! .
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான கதை. கிடைத்ததை விட்டு பறப்பதற்கு ஆசைப்படக்கூடாது என்பதற்கு சரியான எடுத்துக்காட்டு. பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்!
RépondreSupprimerநன்றி.வாழ்த்துக்கள்.
Supprimerஅய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
அதிக ஆசை என்ன வேண்டுமானாலும் செய்யும்... கதை அருமை...
RépondreSupprimerநன்றி.வாழ்த்துக்கள்.
Supprimerநண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
ஆசைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கும் அழகான பதிவு. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே இல்லையா... தொடர வாழ்த்துக்கள் ....!
RépondreSupprimerநன்றி.வாழ்த்துக்கள்.
Supprimerசகோதரி/
நட்புடன்,
புதுவை வேலு
கதை நகைச்சுவையாக நகர்ந்தாலும் வாழ்வின் படிப்பினையை கொடுத்தது அருமை வாழ்த்துகள்.
RépondreSupprimerஇதைப்படித்ததும் எனக்கும் புத்தி வந்தது இந்நாட்டு மன்னரின் மகளையே நினைத்திருந்தேன் இப்போதுதான் அது தவறென்று உணர்ந்து கொண்டேன் நன்றி.
நன்றி.வாழ்த்துக்கள்.
Supprimerநண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
சிந்திக்க வைக்கும் + சிரிப்பூட்டும் சிறுகதை :)
RépondreSupprimerநன்றி.வாழ்த்துக்கள்.
Supprimerஅய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான கதை. இப்போ தேவையானதும் கூட. நன்றி.வாழ்த்துக்கள்.
RépondreSupprimerநன்றி.வாழ்த்துக்கள்.
Supprimerசகோதரி/
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான கதை நண்பரே
RépondreSupprimerநன்றி
தம +1
நன்றி.வாழ்த்துக்கள்.
Supprimerநண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான நீதிக்கதை! பகிர்வுக்கு நன்றி!
RépondreSupprimerநன்றி.வாழ்த்துக்கள்.
Supprimerநண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான அறிவுரை சொல்லும் கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
RépondreSupprimerநன்றி.வாழ்த்துக்கள்.
Supprimerநண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
மனித மனம் ஓர் குரங்குன்னு சும்மாவா சொன்றார்கள் ?
RépondreSupprimerநல்ல கருத்துள்ள கதை, பாராட்டுகள் புதுவை வேலு அவர்களே.
sattia vingadassamy
நன்றி.வாழ்த்துக்கள்.
Supprimerநண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நல்லதொரு நீதிக் கதை! பகிர்வுக்கு மிக்க நன்றி!
RépondreSupprimerநன்றி.
Supprimer/ அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
அன்புடையீர்,
RépondreSupprimerவணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள்.
இணைப்பு: http://blogintamil.blogspot.in/2015/06/5.html
நன்றி.
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு