உலகப் பாரம்பரிய தினமான ஏப்ரல் 18ந்தேதி பிரான்சு தலைநகர் பாரிசில் நடைபெற்ற
தமிழ் சித்திரைத்
திருநாள் விழாவிற்கு அழைப்பின் பேரில் சென்றிருந்தேன். ஆனால் அங்கு நடைபெற்ற சில
நிகழ்வுகள் வருகை தந்தவர்கள் மனதில் வருத்தத்தை
சித்திரை வெயில் வெப்பத்தைக்
காட்டிலும் கொடுமையாக வாட்டி வதைத்தது என்றே சொல்ல வேண்டும்.
"பட்டி மன்றம்" என்னும் பெயரில் நடைபெற்ற
நிகழ்வில்
சில தவறான தகவல்கள்
அந்த தமிழ் மன்றத்தில் பதிவு செய்யப்
பட்டது.
அன்னிய தேசத்தில் அங்குள்ள நாணயங்களில்
தமிழ் மொழி இடம் பெற்று உள்ளது!
நமது நாட்டில் (ரூபாய் நோட்டில்) அது (தமிழ் மொழி) இல்லை. என்று பேசினார் புகழின் உச்சியில் உஞ்சலாடும் மனிதராக தன்னை நினைத்துக் கொள்ளும் ஒருஉயர்ந்த மனிதர் (நடுவர்).
அதை ஒருவர்
திருத்தியபோதும், அதற்காக வருத்தம் தெரிவிக்காமல் பூசி
மெழுகினார்.
பகுத்தறிவு
பகலவன் பெரியார் கொள்கைகளில் உடன்பாடு உண்டு என்கிறார். ஆனால்,
இறை நம்பிக்கை மிக்கவன் என்கிறார். ஏன்
இரட்டை வேடம்?
கோயிலில் இறைவனுக்கு ஏன் பாலாபிஷேகம்
செய்கிறீர்கள்? 108 குடம் பாலாபிஷேகம் ஏன் செய்கிறீர்கள்
என்று பட்டாச்சாரியாரை பார்த்து கேட்டவன் நான் என்கிறார்! இவரது ஒரு நிலைப் பாடு
எங்கே போனது?
கால வரையற்ற ஒரு பட்டிமன்றம் இன்னும்
எவ்வளவோ உள்ளது!
இதற்கு மேலும் உங்களுக்கு இந்த
நிகழ்வைக் காணா வேண்டுமாயின் அந்த கானொளியை நமது கரந்தையார் விருப்பத்திற்கிணங்க
அதனை எடிட் செய்யாமல் அதை வெளியீடு செய்யட்டும் ! காண்போம் பட்டி மன்றங்கள் இங்கு
எப்படி நடை பெறுகிறது என்பதை!
டாக்டர் அப்துல்கலாம், கலைஞர் இவர்களது
ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழி செம்மொழி ஆனதற்கு, காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையை
உதாரணம் கூறிவிட்டு மோடியை வாழ்த்த துடிப்பது எப்படி ஏற்க இயலும்?
பட்டி மன்றம் என்பது அது மாலைநேரத்து மகிழ்வு தரும்
பல்கலைக் கழகம் என்று சொல்லுவார்கள்!
நல்ல கருத்துக்களை நயம்பட சொல்லி
மகிழ்வை ஊட்டும் நிகழ்வே பட்டி மன்றம்.
இனி வரும் காலங்களிலாவது இங்கு அது நிகழுமா? பதில் காலத்தின்
கைகளில்?
உலக பாரம்பரிய தினத்தில் தமிழ்
கலாச்சாரத்தை பறை சாற்றும் "பரத நாட்டியத்தோடு"
அரை குறை ஆடை யோடு இளம் நங்கையர் ஆடிய
பிரேசில் நாட்டு நடனம் இடம் பெற்றது. நமது கலாச்சாரத்தை
சிறுமை படுத்தியது போல் இருந்தது. தமிழ் கலாச்சாரத்தை பறை சாற்றும் சித்திரைத் திருநாள் விழாவில் இதுபோன்ற நடனம் தேவைதானா? என்பதை
நிர்வாகத்தினர் சற்று யோசித்து பார்க்க வேண்டும். தவறுகள் திருத்தப் பட வேண்டும். திருத்தப் படும் என் நம்புவோமாக!!!
நிர்வாகத்தினர் சற்று யோசித்து பார்க்க வேண்டும். தவறுகள் திருத்தப் பட வேண்டும். திருத்தப் படும் என் நம்புவோமாக!!!
அருமை நண்பரே நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று சூழுரைத்த தங்களது பதிவுக்கு எமது சல்யூட்.
RépondreSupprimerமுகத்தாட்சிண்யத்துக்காக எழுதாமல் உண்மையை உண்மையாக சொன்ன புதுவை வேந்தனே வருக... வருக....
தமிழ் மணம் இணைப்புடன் ஒன்று.
வணக்கம் நண்பா!
Supprimerமுதல் வருகைக்கு முத்தமிழ் நன்றி!
"தவறு என்பது தவறி செய்வது"
தப்பு என்பது தெரிந்து செய்வது!
நடுவர் செய்தது தவறா? அல்லது தப்பா?
பட்டி மன்றம் செய்ய விருப்பம் இல்லை!!!
தீர்ப்பு சொல்ல ?நடுவர் மன்றம் அமைக்க ,
சில முக்கியஸ்தர்களுக்கு துணிவு இல்லை!
நடுவர் பெருந்தன்மையுடன் தவறை திருத்திக் கொள்வார் என நம்புகிறேன்!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்,
Supprimerஊரில் மாட்டு வண்டிக்கு ரிவிட் அடித்தவரும், சினிமா கொட்டகையில் ப்ளாக் -இல் டிக்கெட் வித்தவரும், இங்கு பிரான்ஸ் வந்த பிறகு தாங்கள் ஒரு மா(மா) மேதகைகள் என்ற நினைப்பில் சங்கங்கள் அமைத்து ஆடுகின்ற கூத்துதான் இது. இவர்கள் தன் சுய விளம்பரத்திற்காக என்ன செய்கிறோம் என்று இவர்களுக்கே தெரியாது. இதுதான் உண்மை. இன்னும் பல கசப்பான உண்மைகள் உள்ளன. நாகரீகம் கருதி வெளியிட முடியவில்லை.
நன்றி,
பாரிஸ் நக்கீரன்
வணக்கம் அய்யா!
Supprimer"பாரிஸ் நக்கீரன் "என்கிற பெயர் விலாசத்துடன் கருத்தினை பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி !
தனிப்பட்ட விருப்பு வெறுப்பு நமக்கு எதற்கு?
தவறான செய்தியை தந்தமைக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு!
நன்றி!
புதுவை வேலு
வணக்கம்,
Supprimerஊரில் இவர் 8-ஆம் வகுப்புவரைதான் தமிழ் படித்தவர். ஆனால் இவரது facebook -இல் தாகூர் கலைக்கல்லூரி -இல் படித்தவர் என்று பொய்யான தகவலை பதிவு செய்துள்ளார் ?!!! ....
இப்படி பல தவறான கருத்துகளையும், செய்திகளையும் வெளியுடுவதில் இவருக்கு நிகர் இவரே.
இவர் எதற்காகவும் வருத்தம் தெரிவிக்கமாட்டார் என்பது உறுதி.
நன்றி,
பாரிஸ் நக்கீரன்
அரசியலுக்காகவும் பணத்திற்காகவும் இவர்கள் எப்படி வேண்டுமானாலும் பேசுவர்! நாவிற்கு நரம்பில்லை!
RépondreSupprimerநண்பர் தளீர் சுரேஷ் அவர்களே!
Supprimerஅரசியலுக்காகவும்,பணத்திற்காகவும் மட்டுமல்ல !
"புகழுக்காகவும்,"
"தான்" என்ற நாட்டமைக்காகவுமே இதுபோன்ற செயல்கள்
முன்னிற்கின்றன!
திருந்த வேண்டும், இல்லையாயின் உண்மைக்கு பின்நிற்கும்
உம்மை போன்ற நல்ல நண்பர்கள் துணையோடு திருத்துவோம்.
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான பதிவு
RépondreSupprimerதம +
நன்றி தோழர் மது அவர்களே!
Supprimerஅருமையான பதிவு என்று முத்திரை பதித்துள்ளீர்கள்
பிரான்சு சித்திரை விழா பதிவிற்கு, மிக்க நன்றி!
ஆனால்?
சிலர் தமிழ் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் மட்டும் போதுமா?
தமிழை குறித்து இதுபோன்று நிகழ்வுகள் பதிவுகளாக வரும்போது கருத்து சொல்லமுன்வராமல் கருத்து சுதந்திரத்தை இழந்து விட்டு நிற்பது ஏன்?
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா.
சரியாக சொன்னீர்கள்.. தமிழர்களின் பாரம்பரிய திருநாளில் இப்படி ஆடுவது தப்பு..எமது கலாச்சாரத்தை இப்போது வளர்ந்து வரும் சினிமா சீர்அழிக்கிறது..ஐயா. த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் கவிஞர் ரூபன் அவர்களே!
Supprimerதமிழர் கலாச்சார சீரழிவினை கண்டித்து
கருத்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி!
ஆதரவை அள்ளித் தந்தமைக்கு நன்றி கவிஞரே!
நட்புடன்,
புதுவை வேலு
பிரான்சில் இருந்து -
RépondreSupprimerஇறுக்கமான இதயத்துடன் என் பதிவை எழுதுகிறேன் நண்பரே.
சித்திரை வெயிலை நேரடியாக உணர்ந்தாயா , நான் தப்பித்தேன்.
அழைப்பிதழில் பட்டி மன்ற நடுவர் கம்பன் கழக தலைவர் ஆய்ற்றே ?
பட்டி மன்ற நிகழ்ச்சி சுய பெருமையை கூறும் மேடையா ?
அப்படி இருந்தாலும் எதையாவது பேசும் இடம் இது இல்லை என்பதை தலைவர் உணராதவரா ? புரியவில்லை.
உதாரணம் 1. ருபாய் நோட்டில் தமிழ்.
2. முரண்பாடான பெரியாரிசம் கருத்து.
3. முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் எண்ணம் நமக்காக விதைக்க பட்டது. அப்படி இருக்க பனம்பழம் பழ மொழி எதற்கு ? இப்படிப்பட்ட கேவல படுத்தும் சுழ்நிலை தமிழை வைத்து தேவையா ?
4. பட்டிமன்றம் என்னும் நிகழ்ச்சி மன திருப்தியுடன் பகிரும் நிகழ்வே, அதை கம்பன் கழக தலைவரின் பேச்சில் இப்படிப்பட்ட கிழ்த்தரமான நிகழ்வை நான் துளியும் எதிர்பார்கவில்லை.
5. அரசியல் இல்லா மேடையில் (இலக்கியம்) தற்பெருமை குறுவது தலைவருக்கு அழகல்ல.
இந்திய கலாசார நடனமாகிய பரதம் முடிந்ததும், பிரேசில் நடனம் முரண்பாடான நிகழ்வே. வந்த பெண்களும், பெண் குழந்தைகளும் பட்ட வேதனைகள் சொல்லில் அடங்காதவையே என்பதை உணர்கிறேன். இதை மறுபடியும் மற்ற தமிழ் சங்கங்கள் பின்பற்றாமல் இருந்தால் பெருமை புதுவை வேலு அவர்களே.
நாம் சந்தித்தபோது பேசிய விருந்தோம்பல் நிகழ்வை ஏன் பதியவில்லை? அந்த அசிங்கத்தை வெட்கத்துடன் மறைக்கப்பட்டதா ?
இது உங்களை போல் ஒரு தமிழ் கலாசார வெறியனின் வேதனையாக கருதுகிறேன், நன்றி.
sattia vingadassamy
Supprimerபிரான்சில், தமிழர் கலாச்சாரம் படும் பாட்டையும், பட்டிமன்றங்களின் பண்பாட்டையும் பாகுபாடுயின்றி வசைபாடி உள்ளீர்கள் நண்பரே!
சித்திரை வெய்யில் தங்களையும் வாட்டி வதைத்து விட்டது போலும்!
திருத்தமும்; வருத்தமும் தெரிவிக்காத வரையில் இது போன்ற பதிவுகள் அவசியந்தானோ? என்றே தோன்றுகிறது நண்பரே!
நற்கருத்து நல்கியமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
வெளிநாடுகளில் நம்மவர்கள் நடந்து கொள்வதை பார்க்கும் போது ஆச்சர்யமாக இருக்கிறது.
RépondreSupprimerத ம 4
நல்ல பதிவுகளை நாளும் தந்து வரும் நண்பர்
Supprimerசெந்தில் குமார் அவர்களே!
நம்மவர்கள் நடந்து கொள்வதை பார்த்தால் ஆச்சரியம் மட்டுமல்ல
ஆத்திரமும் வருகிறது நண்பரே!
விதிவிலக்கானவர்கள் சிலர் இருப்பதனால் சற்றே மனம் சிறிது
தணிகிறது.
தங்களது வாக்கு எனது பதிவை நிலை நிறுத்தியது என்பது உண்மை!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பட்டி மன்ற நிகழ்வுகள் மக்களைக் குதூகலப்படுத்தும் இடமாக தற்போது மாறிவிட்டது. அறிவுபூர்வமாக விவாதிக்கப்படவேண்டியவை குறையஆரம்பித்துவிட்டது. மக்கள் ரசிக்கவேண்டுமென்பதற்காக நகைச்சுவைகளையும், தவறான செய்திகளையும் முன்வைத்து, மக்களுக்குச் சொல்லவேண்டியதைப் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றார்கள்.
RépondreSupprimer
Supprimerமுனைவர் அய்யா அவர்களே! வணக்கம்!
"மக்கள் ரசிக்கவேண்டுமென்பதற்காக நகைச்சுவைகளையும், தவறான செய்திகளையும் முன்வைத்து, மக்களுக்குச் சொல்லவேண்டியதைப் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றார்கள்".
முற்றிலும் உண்மை அய்யா!
ஆனால், இங்கு வேதனையை வேரோடு கொண்டு வந்து மனங்களில் நட்டு விடுகிறார்கள் அய்யா!
நன்றி நல் வாக்கோடு அமைந்த கருத்தினை தந்தமைக்கு!
நட்புடன்,
புதுவை வேலு
விபரம் சரிவர புரியவில்லை. ஆனால் பட்டிமன்றங்கள் இங்கேயே வலுவிழந்து போய்விட்டனவே சகோ.
RépondreSupprimerவாருங்கள் சகோ!
Supprimerவலுவிழந்த பட்டிமன்றங்களுக்கு(France)
முட்டுக் கொடுத்து நிலை நிறுத்தவே
பிரேசில் நடனம் வைத்ததாகவே சிலர் இங்கு
பேசிக் கொள்ளுகிறார்கள் சகோதரி!
வருகைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பட்டிமன்றம் என்ற பெயரில் தன் புகழ், தான் சார்ந்து இருப்போரின் புகழ் அது தான் பேசப்படுகிறது,
RépondreSupprimerஇதைவிடவும் கேவலமான நிகழ்வுகள் உண்டு,
கருத்து என்பது பின்பலமாக கொண்டு நகைச்சுவையுடன் சொல்ல வந்த கருத்துக்களை முன் வைப்பது,,,,,,,,,,,,
ஆனால் இன்று கேவலம் நகைச்சுவை என்ற பெயரில் அடிக்கும் கூத்து,
இதற்காகத் தான் நான் என் மாணவர்களிடம் தலைப்பு எல்லாம்
இட்லிக்கு தேவை சட்னியா? சாம்பாரா? இப்படி,,,,,,,,,,,,,,,,
வேதனை,
அடுத்து நடனம் நம் பாரம்பரியம் என்பது எங்க இருக்கிறது,
எல்லாம் அழிவை நோக்கி,
மிகவும் வேதனையான நிகழ்வு, சம்பந்த பட்டவர்கள் நினைப்பார்களா?
சகோதரி! வணக்கம்!
Supprimerஇன்றைய பட்டிமன்ற செயல்பாடுகளை செம்மையாகவே
விமர்சனம் செய்துள்ளீர்கள்! ஏற்புடைய கருத்துக்கள்தான் அவைகள்!
ஆனால் இங்கு பட்டிமன்ற மேடையில் இருப்பவர்கள் என்னமோ?
மந்திரிகள் மாதிரியும், பார்வையாளர்கள் அனைவருமே மந்தைகளாக அல்லவா? அவர்களது கண்களுக்கு தெரிகிறார்கள்.
இல்லாததை இருப்பதாக சொன்னால், நம்புவதற்கு மன்றம் ஒன்றும் அவர்களது இல்லம் அல்ல என்பதை இனியாவது நடுவர் உணர்வார் என்றே நம்புகிறேன்.
நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம் சகோதரரே.1
RépondreSupprimerபடித்தேன். வேதனையாக இருக்கிறது. மனதின் வேதனையோடு தாங்கள் பகிர்ந்தமை கண்டு வருந்துகிறேன். வேறு என்ன சொல்ல.?
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
வணக்கம் சகோதரி!
Supprimerவருகைக்கு முதலில் நன்றியை சொல்லி விடுகிறேன்.
வேதனைக்கு வடிகாலாக வந்து கருத்தினை வடித்தமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வேதனைதான் மிஞ்சுகிறது நண்பரே
RépondreSupprimerபட்டிமன்றம் என்பதே சிரித்துவிட்டு கலைந்து செல்வதற்குத்தான்
என்றாகிவிட்டது,
த +1
Supprimerவாருங்கள் கரந்தையாரே!
நடுவரின் பட்டிமன்ற காணொளியை காண்பதற்கு ஆவலாய்
இருந்தது போல், அந்த நடுவரின் பதிவில் கருத்து பதிவு செய்து இருந்தீர்கள்!
எனவே! அந்த நிகழ்ச்சிக்கு நானும் சென்றேன்!
நடுவரின் தவறான செய்தி மேலும்
பலருக்கு சென்றடையாமல் இருக்கவே பதிவினில் வடித்தேன்!
மற்றபடி வேதனை படுத்துவது என்ற எண்ணமும், நோக்கமும்
குழலின்னிசைக்கு துளியும் இல்லை!
அவர் திருந்த வேண்டும்!
இந்த நிகழ்விற்கு வருந்த வேண்டும்!
அவ்வளவே!
நன்றி நண்பரே!
இப்போதெல்லாம் நாடகம் போன்றே ஒத்திகைப் பார்த்து ,பட்டிமன்றம் நடத்தப் படுகிறது ,கருத்தெல்லாம் எதுக்கு ,சிரிக்க வைத்தால் போதாதா :)
RépondreSupprimerவணக்கம் பகவான் ஜி
Supprimerகருத்தெல்லாம் எதற்கு?
சிரிக்க வைத்தால் போதாதா?
ஆமாம்! போதுமே!
சிரிப்பு என்.எஸ்.கே சொல்வது போல் இருந்தால் நன்று
எஸ்.எஸ். சந்திரன் ஜோக் மாதிரி அல்லவா இருக்குது
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
வேதனையாக உள்ளது . நல்ல பதிவு வாழ்த்துக்கள் ...!
RépondreSupprimer
Supprimerநல்ல பதிவு என்று வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
அன்புள்ள அய்யா,
RépondreSupprimer"பாரிசில் பட்டி மன்ற தர்பார்" உலகப் பாரம்பரிய தினமான ஏப்ரல் 18ந்தேதி பிரான்சு தலைநகர் பாரிசில் நடைபெற்ற
தமிழ் சித்திரைத் திருநாள் விழாவின் பொழுது நடைபெற்றவற்றை...உள்ளக் குமுரலை விளக்கியது கண்டோம்.
உள்ளத்தில் உள்ளதை எழுத்தில் கண்டோம். வேதனையாகத்தான் உள்ளது.
-நன்றி.
த.ம. 10.
உள்ளத்தில் உள்ளதை எழுத்தில் கண்டு
Supprimer"தோள் கொடுப்பான் தோழன்" என்கின்ற
உன்னதத்தை உணர்த்தியமைக்கு உண்மையின் நன்றி!
வருகை வளம் பெறட்டும்!
நட்புடன்,
புதுவை வேலு
பெரும்பாலான தமிழகப் பட்டிமன்றங்களும் இந்த வகையில்தான் இருக்கின்றன என்பதால்தான் நான் என் கருத்தைச் சுதந்திரமாகச் சொல்ல இயலாத நிகழ்வுகளை ஏற்பதில்லை. அது சரி.. யார் அந்த நடுவர் என்பதை தெரிவித்திருக்கலாமே? சரியான விமர்சனத்தை வைப்பதில் தவறில்லை
RépondreSupprimerசரியான விமர்சனத்தை வைப்பதில் தவறில்லை என்ற தங்களது நெஞ்சார்ந்த நெறிமிகு கருத்தினை கருத்தின் கருவாக பதிந்தமைக்கு நன்றி அய்யா!
Supprimerமேலும் யார் அந்த நடுவர் என்றீர்கள்? அல்லவா? அவரை அறியாதவரா தாங்கள்?
நிச்சயம் அறிந்திருப்பீர்கள் அய்யா! இந்த பதிவின் பின்னூட்டடத்தில் நண்பர் வெங்கடசாமி அவர்களே வெளிப் படுத்தியுள்ளாரே அய்யா!
வருகை சிறப்புறட்டும் அய்யா! நான் தவறு செய்தாலும் திருத்தம் சொல்லுங்கள்!
அது ஏற்புடைதாயின் திருத்திக் கொள்கிறேன். நல்லது என்றால் நாணுவதில் தவறில்லை அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வேதனை தரும் செய்தி ஐயா...
RépondreSupprimerவார்த்தைச் சித்தரின்
Supprimerவிந்தையான வார்த்தைகளை வலையில் கண்ட பின்பாவது
சிந்தை தெளிவு பெற வேண்டும்!
பெறுவார் என்றே நம்புவோம்!
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
இப்போது நடக்கும் பட்டிமன்றங்களைப் பற்றி சொன்னால் அவை பாட்டு மன்றங்களாகவோ அல்லது வெட்டி (பேச்சு ) மன்றங்களாகவோ இருக்கின்றன என்பதுதான் உண்மை.(பட்டி மன்ற பேச்சாளர்கள் மன்னிக்க!)
RépondreSupprimerதிருவாளர்கள் அ.ச.ஞானசம்பந்தம், பேராசிரியர் இராதாகிருட்டினன், பேராசிரியர் சத்தியசீலன், பேராசிரியர் சாலமன் பாப்பையா போன்றோர் பங்கு பெற்ற பட்டிமன்றங்களும் நீதிபதி இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேல்முறையீட்டு மன்றங்களும் உண்மையில் அறிவுக்கு விருந்தாக இருந்தன என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வர். அவைகளில் நடந்த விவாதம் எல்லாம் முன்னேற்பாடின்றி (Extempore) ஆற்றப்படுகின்றதாய் இருக்கும். இப்போது நடப்பதோ சில குறிப்பிட்ட குழுவினரால் முன்பே தயாரிக்கப்பட்டு ஒத்திகை பார்க்கப்பட்டு சிரிப்புத் தோரணங்களை கோர்த்து நடத்தப்படும் நாடகம் என்றே சொல்வேன்.
திருவாளர்கள் அ.ச.ஞானசம்பந்தம், பேராசிரியர் இராதாகிருட்டினன், பேராசிரியர் சத்தியசீலன், பேராசிரியர் சாலமன் பாப்பையா போன்றோர் பங்கு பெற்ற பட்டிமன்றங்களும் நீதிபதி இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மேல்முறையீட்டு மன்றங்களும் உண்மையில் அறிவுக்கு விருந்தாக இருந்தன என்பதை எல்லோரும் ஒப்புக்கொள்வர்.
Supprimerஉண்மை அய்யா ஏற்கின்றேன்!
அதே வேளையில் இவர்களில் சிலர், திரைப் படவுலகில் சென்ற பின்பு சில நடுவர்கள் நடுநிலையில்லாத புகழ் பாடும் பூங்குயிலாய் கூவுவது ஏன்?
நட்புடன்,
புதுவை வேலு
அந்த ஆள் ஒரு புகழ் விரும்பி. தன்னை சுற்றி ஒரு அய்ந்து ஆறு பெண்கள் எப்போதும் இருப்பது போல சூழ் நிலையை அமைத்துக் கொள்வார். பிரெஞ்சு நாட்டு அரசின் நிதி உதவியை பெறுவதற்கு ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டு அதற்கு அலுவலகமாக தன் வீட்டையே வைத்திருப்பார். இன்னும் என்னென்னமோ சொல்லலாம் ......
RépondreSupprimerவணக்கம்!
Supprimerதங்களது கருத்து உண்மையாக இருக்கும்பட்சத்தில் அதை வெளிபடையாகவே, பெயர், இருப்பிடம் தந்து வெளியிட்டால், கருத்திற்கு வலிமை சேர்க்கும் என்பதே நிஜம்!
கருத்துக்கள் வரவேற்கப் படும்!
சரியான விலாசாத்துடன் வரும் போது!
நன்றி!
புதுவை வேலு
ஐயா! வேதனைதான்...ஆனால் நீங்கள் இன்னும் சற்று விளக்கமாக, பெயருடன் உண்மையை எடுத்துரைந்திருக்கலாம்....
RépondreSupprimerஇங்கு மட்டும் என்ன வாழ்கின்றதாம்.....பெரும்பான்மையான பட்டிமன்றங்கள் தங்கள் பெருமையை பறை சாற்றும் "பட்டி" மன்றங்கள்தான்
வாருங்கள் ஆசானே!
Supprimerபெரும்பான்மையான பட்டிமன்றங்கள் தங்கள் பெருமையை பறை சாற்றும் பள்ளிக் கூடங்களாகாவே நினைக்கட்டும் தவறில்லை!
தவறான செய்தியை சொல்லும் இடம் அது அல்லவே?
"வித்தை கர்வம்" என்பது அவர்களது மெத்தையாக மட்டுமெ இருக்க வேண்டும்.
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
RépondreSupprimer"பட்டி மன்றம்" என்னும் பெயரில்
இப்படியெல்லாம் நடப்பதாகச் சொன்ன
தங்களின் துணிச்சலைப் பாராட்டுகிறேன்.
சிலர்
தங்களைப் பற்றிய விரிப்பை
முன்வைத்த பின்னரே
முன்னேயுள்ள பார்வையாளர்/கேட்போர்
எதிர்பார்ப்பு என்னவென்று
சிந்திக்கின்றனர்!
"பட்டிமன்றம் என்பது - அது
மாலை நேரத்து மகிழ்வு தரும்
பல்கலைக் கழகம் என்று சொல்லுவார்கள்!
நல்ல கருத்துகளை
நயம்படச் சொல்லி மகிழ்வை ஊட்டும்
நிகழ்வே பட்டிமன்றம்." என்ற
தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
வாருங்கள் கவிஞரே!
Supprimerதுணிச்சலாக வந்து கருத்தினை பதிவு செய்யும்
மனப் பாங்கு இங்கு வளர வேண்டும்!
உங்களை போன்றோரின் வழிகாட்டுதலை அவர்களும்
பெற வேண்டும்
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்-இங்கு
இல்லாமை இல்லாத நிலை வேண்டும்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பட்டி மன்றங்கள் இப்போதெல்லாம் ரசிக்க முடிவதில்லை......
RépondreSupprimerஇப்போதைய பட்டிமன்றங்கள் பார்த்தால் கஷ்டம் தான் மிஞ்சுகிறது.
உண்மை நண்பரே!
Supprimerதலை நகரத்தார் தரும் கருத்து
தலை சிறந்து நிற்கட்டும்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பட்டி மன்ற பார்வையாளர்களிடம் தாங்கள். பட்டிமன்றத்தின் நிலையை பறை சாட்டியிருக்க வேண்டும் நண்பரே....
RépondreSupprimer"பட்டி மன்ற பார்வையாளர்களிடம் தாங்கள். பட்டிமன்றத்தின் நிலையை பறை சாட்டியிருக்க வேண்டும் நண்பரே."...
Supprimerதோழரே!
அவர்களை போலவே!
என்னையும் கண்டும் காணாமல் இருக்க சொல்கிறார்கள்!
பேசினால் பின்பு "மைக்" கிடைக்காதாம்!
"மைக் ஆசை இல்லாத மைனா"
விரைவில் பதிவாக வெளி வரும் தோழரே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்,
RépondreSupprimerஊரில் மாட்டு வண்டிக்கு ரிவிட் அடித்தவரும், சினிமா கொட்டகையில் ப்ளாக் -இல் டிக்கெட் வித்தவரும், இங்கு பிரான்ஸ் வந்த பிறகு தாங்கள் ஒரு மா(மா) மேதகைகள் என்ற நினைப்பில் சங்கங்கள் அமைத்து ஆடுகின்ற கூத்துதான் இது. இவர்கள் தன் சுய விளம்பரத்திற்காக என்ன செய்கிறோம் என்று இவர்களுக்கே தெரியாது. இதுதான் உண்மை. இன்னும் பல கசப்பான உண்மைகள் உள்ளன. நாகரீகம் கருதி வெளியிட முடியவில்லை.
நன்றி,
பாரிஸ் நக்கீரன்
Supprimerவணக்கம் அய்யா!
"பாரிஸ் நக்கீரன் "என்கிற பெயர் விலாசத்துடன் கருத்தினை பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி !
தனிப்பட்ட விருப்பு வெறுப்பு நமக்கு எதற்கு?
தவறான செய்தியை தந்தமைக்கு அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு!
நன்றி!
புதுவை வேலு
யாரையும் தரக்குறைவாக எண்ணவேண்டாம், தவறை சுட்டிக்காட்டுவோம், அடையாளத்துடன் வாரீர் நண்பரே.
Supprimerஅனைவரும் மனிதர்களே, தர்க்கம் எதற்கு, நட்புடன் விவாதம் செய்வோம் புதுவை வேலு அவர்களை போல். கீழ்தரமான ஒருவரையும் விமர்சிப்பது குழல் இன்னிசைக்கு அழகாக இருக்காது என்பதே உண்மை, நெற்றிக்கண் தரப்பின் குற்றம் குற்றமே, பிரான்ஸ் நக்கீரன் அவர்களே. நண்பர் வேலு அவர்கள் மரியாதையுடன் பதில்கள் சிறப்பு.
sattia vingadassamy
வாருங்கள் நண்பரே!
Supprimerவணக்கம்,
குழலின்னிசையின் மீது தாங்கள் வைத்திருக்கும் உண்மையான அன்பும், ஆதரவும்,
அதன் ஆனிவேராய் அமைந்துள்ள பதிவுகளையும், படைப்புகளையுமே சாரும்.
பாரிஸ் நக்கீரன் கருத்துக்கு நீங்கள் வெளியிட்ட பதில்?
நிச்சயம் திருந்தாத உள்ளத்தையும் (பட்டிமன்ற நடுவர்)
திருப் பணி செய்யும் என்பதே உண்மை.
வலைப் பூவுலகில் நிலவி வரும் பெரும் அரசியலிலும், சிக்காமல் சிந்தித்து செயல் படும் பண்புதான் குழலின்னிசையின் பலம்.
அந்த பலத்திற்கு நலம் பயக்கும் நண்பர்கள் அனைவரையும் நெஞ்சத்தில் வைத்து பூஜிக்கின்றேன்! நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்,
Supprimerயாரையும் குறை சொல்வது எனது நோக்கமல்ல. நமது "பட்டி" மன்ற தலைவர் , ஒருசில ஆண்டுகளுக்கு முன் அவரது பொங்கல் விழாவில் அவர் சொன்ன சிறிய நகைச்சுவை என்னவென்றால், காளையை அடக்கிய தமிழ் வீரனை இளவரசி திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டால், இதற்கு இவர் கொடுத்த விளக்கம் என்னவென்றால் இந்த மாட்டையே இந்த பாடு படுத்தினான் என்றால் திருமணத்திற்கு பிறகு தன்னை எந்த பாடு படுத்துவான் என்று இளவரசி பயந்து திருமணம் செய்துகொள்ள மறுத்துவிட்டாலாம். என்று கூறி ஹி ....ஹி .... ஹி....
இந்த செய்தி காணொளி காட்சியாக இணைய தலத்தில் உள்ளது. இதே சாயலில் இன்னும் நிறைய உள்ளன. நல்ல மனிதர் ஆனால் பேச்சு சரியில்லை. முற்றிலும் சுய புராணம். வேறொன்றுமில்லை.
இது போன்ற பேச்சுகளால் புதுவை தமிழன் என்று சொல்வதற்கே வெட்கமாக உள்ளது.
இனியாவது திருந்துவார் என்ற நம்பிக்கையோடு........
நன்றி,
பாரிஸ் நக்கீரன்
மனிதன் தவறு செய்வது இயல்பு, தவறை சுட்டி காட்டியப்பின் மறப்பதே மனிதனின் பெரிய குணம்.
RépondreSupprimerதிருந்த கடமைப்பட்ட மனிதனே உண்மையான மனிதன்.
மறுபடியும் ஏன் இந்த தேவையில்லாத குழப்பம் (வன்மையான எண்ணம்).
குழல் இன்னிசையில் இந்த மாதிரியான கருத்து பரிமாற்றம் தொடர்வது வேதனையாக உள்ளது புதுவை வேலு அவர்களே.
sattia vingadassamy
தமிழே!
RépondreSupprimerதரக்குறைவான தர்க்கங்களை தகர்த்தெறிவாய் தரணியிலே!
நட்புடன்,
புதுவை வேலு