mercredi 15 avril 2015

"அறிவோமே ஆரோக்கிய அறிகுறிகளை!"





இன்று நமக்கு ஏற்படும் ஒவ்வொரு உடல் பிரச்சனைக்கும்,
நம் உடலில் ஏதோ ஒரு சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். 
ஆனால் நம்மில் பலர் பிரச்சனை தீவிரமான பின்னர்தான் மருத்துவரை நாடுவோம். மருத்துவரிடம் சென்று செலவழித்து பரிசோதனைகள் செய்து பிரச்சனைகளைத் தெரிந்துக்கொள்வோம். ஆனால்பல பிரச்சனைகளும் சின்ன சின்ன அறிகுறிகள் மூலம் நமக்கு எச்சரிக்கை விடுக்கின்றன. நம் உடல் நமக்கு விடுக்கும் எச்சரிக்கை தடயங்கள் தான் இவை...



                                                                               உட்டம் தரும் காய்கறிகள்
 
கண்கள்

 கருவளையங்கள்இமைவீக்கம் - அலர்ஜி, உணவு ஒவ்வமைநீர்ச்சத்து பற்றாக்குறை இரவுக் குருடு- வைட்டமின் ஏ ரத்த நாளங்கள் கண்களில் தெரிய ஆரம்பிப்பது - வைட்டமின் சி கிட்டப்பார்வை - வைட்ட  மின் டி கீழ் இமைப்பகுதி வெள்ளையாக தெரிவது - இரும்புச்சத்து குறைபாடு.

பற்கள் மற்றும் ஈறுகள்

ஈறுகளில் ரத்தம் கசிதல் - வைட்டமின் சி மற்றும் போலிக் அமிலம் குறைதல், கூட்டமாக பற்கள் முளைத்தல் - கால்சியம் மற்றும் வைட்டமின் கே குறைபாடு.
 
கூந்தல்

முடி உதிர்தல் - வைட்டமின் பி2, பி5, பயோடின், துத்தநாகம் முடி உலர்ந்து காணப்படுவது - வைட்டமின் ஏ, ஒமேகா 3, புரதம், அயோடின், செலினியம், பயோடின் பொடுகுத் தொல்லை - செலினியம், ஒமேகா 3, வைட்டமின் ஏ.

நகங்கள் 

ஸ்பூன் போன்று குழி விழுந்து காணப்படுவது - வைட்டமின் பி12, இரும்புச்சத்து
வெள்ளையாக வரிகள் காணப்படுவது - கால்சியம், துத்தநாகம் உடைந்து நகங்கள் காணப்படுவது - கால்சியம், மக்னீசியம், அயோடின்
நகத்தின் க்யூட்டிக்கிள் பகுதி அடிக்கடி உரிவது - புரதச்சத்து குறைவு.

தசைகள் மற்றும் மூட்டுகள்

தசைப்பிடிப்பு - மக்னீசியம், வைட்டமின் பி1, பி2, பி3, பி6
தசைச்சுளுக்கு - வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி9, வைட்டமின் டி, மக்னீசியம், கால்சியம்
கால் வீக்கம் - வைட்டமின் பி1, பி6, பொட்டாசியம்
உணர்ச்சியின்மை - வைட்டமின் பி12, பி5
மூட்டுகளில் சத்தம் கேட்பது - மக்னீசியம் குறைபாடு.

வாய்

வாய்ப்புண் - வைட்டமின் பி3, பி12, போலிக்
அமிலம், கால்சியம்
உதடு வெடிப்பு - வைட்டமின் பி2 
பற்களின் எனாமல் பலவீனமடைதல் - வைட்டமின் ஏ, டி, கே, கால்சியம்
நாக்கில் வலி, புண்கள் ஏற்படுதல் - வைட்டமின் பி2, பி3, போலிக் அமிலம்
நுகர்வுத் திறனும், சுவைத் திறனும் குறைதல் - துத்தநாகம்.

சருமம்

கைகளுக்கு பின்னால் சொறி, படைகள் வருவது - வைட்டமின் ஏ
உலர் சருமம் அல்லது படைகள் வருவது - வைட்டமின் ஏ,
மூக்கில் ரத்தம் வருதல் - வைட்டமின் சி
சருமத்தில் கருமை நிற படை வருவது - வைட்டமின் சி 
மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களுக்கு பருக்கள் வருவது - வைட்டமின் பி6

தலையில் பொடுகு ஏற்படுதல்:
- பி2, பி5, பி10, பயோடின்
சிவப்பு நிறக் கீறல்கள் - துத்தநாக குறைபாடு 

மனநலப் பிரச்னைகள்

மன அழுத்தம் - வைட்டமின் பி1, பி5, பயோடின், பாரா அமினோ பென்சாயிக் அமிலக் குறைபாடு
டிமென்சியா - வைட்டமின் பி1, பி3, பி12, போலிக் அமிலம்

நரம்புத்தளர்ச்சி - வைட்டமின் பி1, பி6, பி5

தூக்கமின்மை - வைட்டமின் பி3, பி5, பி6, டி3

தலைசுற்றல், படபடப்பு - இரும்புச்சத்து,வைட்டமின் பி2, பி12. 


 நெல்லிக்கனி

 


ஆரோக்கியத்தை அள்ளித் தரும் வகையில்,
அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி  எது என்று என்று கூறினாள்  அது "நெல்லிக்கனி"யே என்று நெத்தியடியாகச் சொல்லலாம்.


நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.


இளமையை விரும்பாதவர்கள் எவரும் இருக்க முடியாது. இளமையின் வேகம், செயல்பாடு, புத்துணர்வு போன்றவை முதுமையில் கிடைப்பதில்லை. ஆனால், முதுமையை வென்று என்றும் இளமையுடனும் துடிப்புடனும் அதே உத்வேகத்துடன், அனுபவமிக்க இளைஞனாக சிலர் வலம் வருவதை நாம் இன்றும் காணலாம்.

முதுமை நெருங்காமல் என்றும் இளமையுடன் வாழ்கிறார்கள் என்று பார்த்தோமானால் அவர்களின் உணவுக் கட்டுப் பாடும், உடற்பயிற்சியும்தான்.முதுமை என்பது இயற்கை தரும் அனுபவ மருந்து. அந்த முமுமையையும் இளமையாக கொண்டு வர பல அற்புதங்களை இயற்கையே படைத்துள்ளது. ஆனால், இதைப் பயன்படுத்தாமல் அலட்சியம் செய்த சிலர் 30 வயதிலே 60 வயது முதியவர்போல் தோற்றமளிக்கின்றனர். அதற்கு காரணம் முறையற்ற உணவு, உடற்பயிற்சியின்மையே.

இப்படி இளமையை முதுமையாக்கி உடலை நோய்களின் கூடாரமாக மாற்றியிருக்கும் இக்கால சமுதாயத்தை அன்றே உணர்ந்து என்றும் இளமையுடன் தோற்றமளிக்க தேரையர் என்ற சித்தர் தான் எழுதிய தேரன் கண்ட உண்மை என்னும் நூலில்

முதுமையை தொட்டவர்கள் இளமை நிறைந்த மாப்பிள்ளைகள் போல் அழகுடன் இருக்க நெல்லிக் கனியை பாகம் செய்து சாப்பிடச் சொல்கின்றனர். அரசன் அதியமான் தனக்குக் கிடைத்த அற்புத நெல்லிக்கனியை தான் உண்ணாமல் சங்கத்தமிழ் கண்ட மூதாட்டி அவ்வைக்கு கொடுத்ததாக வரலாற்று நூல் மூலம் அறிகிறோம். இதிலிருந்து நெல்லிக்கனியின் அற்புதங்கள் அனைவருக்கும் புரியவரும்.

முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவர்.  ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். நெல்லிக்கனி அதிக சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதுமுதுமையை விரட்டும் தன்மை கெண்டது.

ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை அகற்றி நோய் நொடிகளிலிருந்து உடலைக் காத்து முதுமையை துரத்தி என்றும் இளமையுடன் உடலை நன்னிலையில் இருக்கச் செய்யும் சக்தி இதற்குண்டுநெல்லிக்கனியை சிறு துண்டுகளாக வெட்டி உப்பு, காரம் தொட்டு அதை சப்பி சாப்பிடும் சுவை சொல்லிமாளாது.

நெல்லிக்கனி சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் குடித்தால் அதன் சுவையும் நன்றாக இருக்கும்அதிக தூர பயணத்தின் போது நெல்லிக்கனி சாப்பிட்டுச் சென்றால் பேருந்து பயணத்தில் வாந்தி வருபவர்களுக்கும் வராது. தண்ணீர் தாகமும் எடுக்காது இவை எல்லாம் நிச்சயம் நாம் அனுபவித்து இருப்போம்.

மற்றைய எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்குஅதிகளவான வைட்டமின் 'சி' உள்ளதுஒரு நெல்லியில் முப்பது தோடம்பழங்களில் உள்ள வைட்டமின் ´சி` உள்ளது. 100 கிராம் நெல்லிக்காயில் 600 மில்லிகிராம் உள்ளது. நெல்லிக்காயில் இயற்கையாய் உள்ள 8.75 மில்லிகிராம் வைட்டமின் 'சி', செயற்கை முறையில் தயாரிக்கப்படும் 100 மில்லிகிராமிற்குச் சமம்மேலும் இதில் தாதுப்புக்களும்இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.

நெல்லிக்கனியின் மருத்துவ குணங்கள்:

ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.
எச்..வி, இன்புளுன்சா வைரஸ்கள் தாக்காமல் தடுக்கிறது. 

இதய வால்வுகளில், இரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை நீக்கி சீராக செயல்பட வைக்கிறது. இருதய அடைப்பை தடுக்கிறதுமேலும் கார்போஹைட்ரேட்நார்ச்சத்துஇரும்புச்சத்துகரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ்வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் நிறைந்துள்ளது.

வாய்ப்புண் தீர
நெல்லி இலையை 25 கிராம் எடுத்து நீரில் இட்டு கொதிக்கவைத்து ஆறவைத்து வாய்க்கொப்பளித்து வந்தால் வாய்ப்புண் தீரும்.

பித்தம் குறைய
15 கிராம் நெல்லிக்காயை இடித்து 1/2 லிட்டர் நீர்விட்டு 100 மி.லி ஆக காய்ச்சி 20 மி.லி. தேன் கலந்து 40 மி.லி. ஆக 3 வேளை என நான்கு நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.



இரத்த கொதிப்பு நீங்க:
நெல்லி வற்றல், பச்சை பயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.யாக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக் கொதிப்பு நீங்கும்.


கண் நோய்கள் தீர

நெல்லி இலைகளை நீரில் ஊறவைத்து கஷாயம் செய்து கண்களை கழுவினால் கண்நோய்கள் தீரும். நெல்லிக்காயை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் கண்கள் குளிர்ச்சிபெறும். நெல்லிச்சாற்றை தேனுடன் கலந்து தினமும் காலை, மாலை அருந்திவந்தால் கண்புரை நோய், கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் திரிபாலா சூரணம் செய்து காலை மாலை வெந்நீரிலோ தேனிலோ கலந்து சாப்பிட்டு வந்தால் நோயின்றி என்றும் இளமையுடன் வாழலாம்.



ஆரோக்கியத் தொண்டு செய்யும்  பூண்டு 

 

 

நம்மில் பெரும்பாலோர் உணவில் பூண்டு இருப்பதைப் பார்த்தாலே உணவில் அதனைச் சேர்த்துக்கொள்ளாமல் ஒதுக்கிவிடுகின்றனர். ஆனால், பூண்டு நம் உடலுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே மிகவும் நல்லது.

பூச்சிக்கடி உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம். பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் உ‌ண்டான ‌விஷ‌ம் பல‌வீனமடையு‌ம்.

பூண்டு சாறும்எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் தே‌ய்‌த்து வ‌ந்தா‌ல் தேமல் காணாமல் போய் விடும்.

பூ‌ண்டை சா‌ப்‌பிட‌ப் ‌பிடி‌க்காதவ‌ர்களு‌க்கு‌பூ‌ண்டுத‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம் போ‌ன்றவ‌ற்றை நசு‌க்‌கி‌ப் போ‌ட்டு சூ‌ப் வை‌த்து‌க் கொடு‌க்கலா‌ம். இ‌ந்த சூ‌ப் ‌குடி‌த்தா‌ல் ச‌ளி ‌பிடி‌ப்பது குறையு‌ம்.


வசர உலகில் ஆயிரமாயிரம் வகை உணவுகள் அறுசுவையை

மக்கு அள்ளித் தந்தாலும்,

ரோக்கியம் என்பது நமது கைகளில்தான் உள்ளது!



உலக சுகாதார  மையத்தின்
(World Health Organization (WHO)
அறிவுரையை (clean food),  நாம் போற்றுவோம்.

மனித வாழ்விற்கு மகத்தான ஆரோக்கியத்தை அள்ளித் தரும் 

இத்தகைய உணவு வகைகளை வரவேற்போம்!  

நோய் நொடியின்றி வாழ்வோம்!!!


அறிந்ததை அறியத் தந்துள்ளேன் ! எனது பார்வையில்,
இந்த மருத்துவ பதிவின் மூலம்! 
 நன்றி!

புதுவை வேலு

(நன்றி: V.M.நியூஸ்/ பட உதவி: கூகுள்)


 





31 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    யாவரும்அறிய வேண்டிய ஆரோக்கிய குறிப்பு... அறிந்து கொண்டேன் தங்களின் பதிவு வழி பகிர்வுக்கு நன்றி த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் ரூபன் அவர்களே
      உடலுக்குத் தேவை ஆரோக்கியம்!
      பதிவுக்கும் / படைப்புக்கும் தேவை
      பண்படுத்தும் கருத்தும், நல்வாக்கும்!
      இவ்விரண்டையும் இனிதே அளித்த அன்புள்ளத்திற்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே
    நன்றி
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      உடலுக்குத் தேவை ஆரோக்கியம்!
      பதிவுக்கும் / படைப்புக்கும் தேவை
      பண்படுத்தும் கருத்தும், நல்வாக்கும்!
      இவ்விரண்டையும் இனிதே அளித்த அன்புள்ளத்திற்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. பயனுள்ள தகவல் குறிப்புகள் நண்பரே...த.ம.3

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் தோழரே!
      உடலுக்குத் தேவை ஆரோக்கியம்!
      பதிவுக்கும் / படைப்புக்கும் தேவை
      பண்படுத்தும் கருத்தும், நல்வாக்கும்!
      இவ்விரண்டையும் இனிதே அளித்த அன்புள்ளத்திற்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. பகிர்வை சேமித்துக் கொண்டேன்... மிக்க நன்றி...

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் வார்த்தைச் சித்தரே!
      உடலுக்குத் தேவை ஆரோக்கியம்!
      பதிவுக்கும் / படைப்புக்கும் தேவை
      பண்படுத்தும் கருத்தும், நல்வாக்கும்!
      இவ்விரண்டையும் இனிதே அளித்த அன்புள்ளத்திற்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அருமையான உடல்நலப் பதிவு வாழ்த்துக்கள்
    தம +

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் தோழரே!
      உடலுக்குத் தேவை ஆரோக்கியம்!
      பதிவுக்கும் / படைப்புக்கும் தேவை
      பண்படுத்தும் கருத்தும், நல்வாக்கும்!
      இவ்விரண்டையும் இனிதே அளித்த அன்புள்ளத்திற்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஆரோக்கிய பதிவு.
    த ம 6

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      உடலுக்குத் தேவை ஆரோக்கியம்!
      பதிவுக்கும் / படைப்புக்கும் தேவை
      பண்படுத்தும் கருத்தும், நல்வாக்கும்!
      இவ்விரண்டையும் இனிதே அளித்த அன்புள்ளத்திற்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. தேவையான பதிவு. அருமை அருமை !

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் சகோதரி!
      உடலுக்குத் தேவை ஆரோக்கியம்!
      பதிவுக்கும் / படைப்புக்கும் தேவை
      பண்படுத்தும் கருத்தும், நல்வாக்கும்!
      இவ்விரண்டையும் இனிதே அளித்த அன்புள்ளத்திற்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      உடலுக்குத் தேவை ஆரோக்கியம்!
      பதிவுக்கும் / படைப்புக்கும் தேவை
      பண்படுத்தும் கருத்து நல்வாக்கும்!
      அளித்த அன்புள்ளத்திற்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. சிறப்பான பகிர்வு! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      உடலுக்குத் தேவை ஆரோக்கியம்!
      பதிவுக்கும் / படைப்புக்கும் தேவை
      பண்படுத்தும் கருத்து நல்வாக்கும்!
      அளித்த அன்புள்ளத்திற்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. பயனுள்ள தகவலை பகிர்ந்த மருத்துவர் ஐயா அவர்களுக்கு நன்றிகள் வாழ்க வளமுடன்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      உடலுக்குத் தேவை ஆரோக்கியம்!
      பதிவுக்கும் / படைப்புக்கும் தேவை
      பண்படுத்தும் கருத்து நல்வாக்கும்!
      அளித்த அன்புள்ளத்திற்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. தகவல்கள் அத்துனையும் பயனுள்ளவை. அருமையாக பகுத்துக் கொடுத்துள்ளீர்,நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்
      உடலுக்குத் தேவை ஆரோக்கியம்!
      பதிவுக்கும் / படைப்புக்கும் தேவை
      பண்படுத்தும் கருத்து நல்வாக்கும்!
      அளித்த அன்புள்ளத்திற்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. உடம்பு சரியில்லை (ஏதேனும் அறிக்குறி தெரிந்தவுடன்) என்றவுடன் கூகுளில் போய் தேடுவதும், தேவையே இல்லாமல் அழுத்தத்தை சம்பாதிப்படும், நம்மிடம் வேகமாக வளர்வதாக எங்கேயோ படித்ததாக ஞாபகம்.
    இதுபோல், மருத்துவ குறிப்புகளை படிப்பதும், தெரிந்துகொண்டு நம் சமையலில் நடைமுறை படுத்துவதும் இன்றியமையா கடமை. நல்ல உபயோகம் மிகு கட்டுரையை பதிவு செய்த புதுவை வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      உடலுக்குத் தேவை ஆரோக்கியம்!
      பதிவுக்கும் / படைப்புக்கும் தேவை
      பண்படுத்தும் கருத்து நல்வாக்கும்!
      அளித்த அன்புள்ளத்திற்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. மீண்டும்பதிவைப்படித்து நிணைவு படுத்திக்கொண்டேன் நண்பரே.....

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      உடலுக்குத் தேவை ஆரோக்கியம்!
      பதிவுக்கும் / படைப்புக்கும் தேவை
      பண்படுத்தும் கருத்து நல்வாக்கும்!
      அளித்த அன்புள்ளத்திற்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. நல்ல பயனுள்ள குறிப்பு சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்
      உடலுக்குத் தேவை ஆரோக்கியம்!
      பதிவுக்கும் / படைப்புக்கும் தேவை
      பண்படுத்தும் கருத்து நல்வாக்கும்!
      அளித்த அன்புள்ளத்திற்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. பயனுள்ள தகவல்....தந்தமைக்கு மிக்க நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      உடலுக்குத் தேவை ஆரோக்கியம்!
      பதிவுக்கும் / படைப்புக்கும் தேவை
      பண்படுத்தும் கருத்து நல்வாக்கும்!
      அளித்த அன்புள்ளத்திற்கு
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஆரோக்கிய பதிவு. மிக்க நன்றி.!!! கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer