இறைவன் கணக்கு தப்பாது!
பட உதவி: கூகுள்
மனிதர்கள்
என்ன வேண்டுமானாலும் கணக்கு போடலாம்.
ஆனால், இறைவன் நினைப்பது மட்டுமே நடக்கும் !
இதற்கு ! இந்த சம்பவமே ஒரு உதாரணம்.
ஒரு
பணக்காரர் மெக்காவிற்கு ஒரு முறை தனது ஒட்டகத்தில் புனித யாத்திரை புறப்பட்டார்.
பல வேலையாட்களும் உடன் சென்றனர்.
கடும் வெப்பமுள்ள பாலைவனத்தைக் கடந்தே அவர்கள்
மெக்காவை அடைய முடியும். வழியில் ஒரு ஏழை சென்று கொண்டிருந்தார்.
அவரிடம்
பணக்காரர், "தம்பி! எங்கே செல்கிறாய்?'' என்றார். அவர், தான் மெக்காவிற்கு புனிதப் பயணம் செல்வதாக சொன்னார்.
"ஏனப்பா! நாங்கள் ஒட்டகங்களில்
பயணிக்கிறோம்.
எப்படியும்
மெக்காவை அடைந்து விடுவோம். நீயோ செருப்பு கூட போடாமல் பாலைவனத்தைக் கடக்கப்
போவதாகச் சொல்கிறாயே! அங்கிருக்கும் சுடுமணலில் உன் கால் வெந்தல்லவா போகும்! உன்னால்
எப்படி நடக்க முடியும்?''
என்றார் கேலியாக!
"செல்வந்தரே! எனக்கு இன்ப துன்பம்
பற்றிய கவலையில்லை.
என்
கருத்தில் இறைவன் மட்டுமே இருக்கிறார்.
நான்
அரசனாக இல்லாமல் இருக்கலாம்,
அது போல் என்னைக் கட்டுப்படுத்தவும் எந்த
அரசனும் இல்லை !
இறைவனே எல்லாமும்,
எல்லாப்புகழும்
இறைவனுக்கே,
எல்லாச் செயல்களும் இறைவனாலேயே நிகழ்கிறது
என
நம்புபவன், தாங்கள் புறப்படுங்கள்,'' என்று பதிலளித்தான்.
பணக்காரர், அந்த ஏழையை ஒரு அறிவீனன் எனக்கருதி
ஏதும் சொல்லாமல் போய்விட்டார்.
பாலைவனப்பகுதிக்குள்
புகுந்ததும்,
செல்வந்தருக்கு வெப்பத்தைத் தாங்கும் சக்தியில்லை. அவரை வெப்ப நோய் தாக்கியது.
அதற்குமேல் அவரால் பயணத்தைத் தொடர முடியவில்லை.
பாலைவன சோலை ஒன்றில் தங்கிய
அவருக்கு நோய் அதிகமாகி உயிர் பிரிந்து விட்டது.
அப்போது, வழியில் சந்தித்த ஏழை அந்த சோலைக்குள் வந்தார்.
பணக்காரர்
இறந்துவிட்டதை அறிந்தார்.
"என்ன
வசதி இருந்தென்ன! இறைவனே எல்லாவற்றையும் செய்கிறான்".
"எல்லாம்
அவனே!"
அவனது அனுமதியின்றி, எதுவும் நடப்பதில்லை, என்று சொல்லியபடியே மெக்காவை நோக்கி
பயணத்தைத் தொடர்ந்தான்.
புதுவை வேலு
நன்றி: தினமலர்
வணக்கம்
RépondreSupprimerஐயா
படித்தேன் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பூப் போலே உமது கருத்தில்
Supprimerபுன்னகையை நான் கண்டேன்
கவிஞரே!
முன்னுரை எழுதும்...
முதல் கருத்தும், வாக்கும்,
நன்மை பயக்கும்
தொடர் வரும் நல்ல பதிவுகளுக்கு!
மிக்க நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
// அவனது அனுமதியின்றி, எதுவும் நடப்பதில்லை//
RépondreSupprimerஉண்மைதான். பகிர்ந்தமைக்கு நன்றி!
வாருங்கள் நடன சபாபதி அய்யா அவர்களே!
Supprimerஉண்மையை உலகறிய ஏற்கின்றேன்!
நாடி வந்து நற்கருத்து தந்தமைக்கு நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை
RépondreSupprimerதம +1
கரந்தை களஞ்சியம்
Supprimerநண்பர் ஜெயக்குமார் அவர்களே!
மகிழ்வு தரும் கருத்துடன்,
வாக்கும் கலந்து அளித்தமைக்கு
மனமுவந்த நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
ungal padivu padithaudan avan indri oar anvum asiayathu nepagam varuthu. vaalthukal
RépondreSupprimerசகோதரர் விஜயகுமார் அவர்களே!
Supprimerதங்களது முதல் விஜயம் மட்டற்ற மகிழ்வினை
மனதுக்கு அளித்தது.
இயற்கையின் சிரிப்பை ரசிக்கும் உமது கலை உள்ளம்
சிறக்க வாழ்துக்கள்!
குழலின்னிசையை தொடருங்கள் சகோதரரே!
வருகைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை ஐயா...
RépondreSupprimerவார்த்தைச் சித்தரின் வருகை சிறக்கட்டும்
Supprimerசித்திரை இனிதே பிறக்கட்டும்
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
எல்லாம் அவன் செயல். சிறிய கதை . பெரிய கருத்து .
RépondreSupprimerவணக்கம் வாருங்கள்
Supprimerநண்பர் நாகேந்திர பாரதி அவர்களே
குழலின்னிசை தங்களது முதல் வருகையை
முழு மகிழ்ச்சி நிறந்த மனதுடன் வரவேற்கின்றது!
"சிறு துளி பெரு வெள்ளம்"
என்பதை நினைவுக்கூறும் வகையில்,
சிறிய கதை பெரிய கருத்து என்று கருத்தினை வடித்தீர்! வாழி!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தம 6
RépondreSupprimerஆண்டவன் கட்டளையாக
Supprimerஆறு (6) தந்தமைக்கும்
வளம் சேர்க்கும் வருகைக்கும்
இனிய நன்றி சகோதரி இனியாவுக்கு!
நட்புடன்,
புதுவை வேலு
ஒவ்வொரு மனிதனும் நினைவில் கொள்ள வேண்டிய கதை!..
RépondreSupprimerஆனாலும் -
தர்மதேவதை யக்ஷனாக வந்து கேட்ட கேள்விக்கு - பாண்டவர்களுள் மூத்தவரான தர்மபுத்திரர் கூறிய விடை நினைவுக்கு வந்தது!..
நினைவில் நிற்கும் நித்திய கருத்தினை
Supprimerநீவீர் அளித்தீர்! அருமை!
நன்றி அன்பரே! தொடருங்கள்!
நட்புடன்,
புதுவை வேலு
எல்லாம் அவன் செயலே...
RépondreSupprimerசெழிப்புற செயல்களை செம்மொழி தமிழில்
Supprimerவிழிப்புடன் செய்தே வாழி!
எல்லாம் அவன் செயல்!
நன்றி! நண்பா!
நட்புடன்,
புதுவை வேலு
ஆண்டவன் அருளின்றி எதுவும் நடக்காது உண்மைதான்...
RépondreSupprimerஒரு சிறு கதை மூலம் இந்த உண்மையை சொல்லிய விதம் நன்றாக இருந்தது.... நல்ல பதிவு... நன்றி...
வாழ்க வளமுடன்....
வாருங்கள் சகோதரி!
Supprimerவணக்கம்!
ஆண்டவன் அருளின்றி எதுவும் நடக்காது உண்மைதான்.
தங்களது வருகை உட்பட!
பேரானந்தமிகு கருத்தினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
பதிவுகளை தொடருங்கள் சகோதரி!
நட்புடன்,
புதுவை வேலு
அரிய செய்தி அடங்கிய அழகிய கதை. ஆனால் உண்மை. வாழ்த்துக்கள் நன்றி.
RépondreSupprimerஉண்மையை உரைத்தமைக்கு
RépondreSupprimerஉளமார்ந்த நன்றி சகோதரி!
வருகை தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
சில வருடங்களுடன் இசை அமைப்பாளர் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே 'என்றாராம் ,அதை கேள்விப்பட்ட நெட்டை நடிகர் எல்லாப் பணமும் இறைவனுக்கே ' என்று கொடுக்க வேண்டியது தானே ?என்றாராம் ,சரிதானே :)
RépondreSupprimerஉண்மையை உரைத்தமைக்கு
Supprimerஉளமார்ந்த நன்றி !
வருகை தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு
அருமை! எல்லோரும் மனதில் கொள்ள வேண்டிய ஒன்று! எல்லாம் அவன் செயல்தான்..
RépondreSupprimerநினைவில் நிற்கும் நித்திய கருத்தினை
Supprimerநீவீர் அளித்தீர்! அருமை!
நட்புடன்,
புதுவை வேலு
/// அப்போது, வழியில் சந்தித்த ஏழை அந்த சோலைக்குள் வந்தார்.
RépondreSupprimerபணக்காரர் இறந்துவிட்டதை அறிந்தார். ///
' அதாவது செருப்பில்லாமலே பாலைவன மண்லில் நடந்து ' நல்லது அய்யா, கதை அருமை :))
நினைவில் நிற்கும் நித்திய கருத்தினை
Supprimerநீவீர் அளித்தீர்! அருமை!
நட்புடன்,
புதுவை வேலு
மண்லில் என்பதை மணலில் என்று படிக்கவும். தவறுக்கு வருத்தம் தெரிவிக்கிறேன்
RépondreSupprimerநன்றி.
Supprimerஅவனின்றி ஓரணுவும் அசையாது....
RépondreSupprimerகருத்துள்ள பகிர்வு. நன்றி.
நினைவில் நிற்கும் நித்திய கருத்தினை
Supprimerநீவீர் அளித்தீர்! அருமை!
நட்புடன்,
புதுவை வேலு
கருத்துள்ள ஆன்மிக கதை, சிறப்பு புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
ஆன்மிக கதை படித்தேன்...!
RépondreSupprimerஎங்கே வாழ்க்கை தொடங்கும் - அது
எங்கே எவ்விதம் முடியும்
இதுதான் பாதை; இதுதான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது
பாதையெல்லாம் மாறி வரும்
பயணம் முடிந்து விடும்.
நன்றி.
த.ம.12.
வணக்கம் அய்யா!
RépondreSupprimerகதையினை படித்து,
கவின்மிகு பாடலின் வரிகளை சொல்லி,
கருத்தினை பதிவு செய்து வாக்கினையும் வழங்கியமைக்கு
இனிய நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு