கூத்தாண்டவர் கோவில் திருவிழா விழா!
விழுப்புரம் அருகே உள்ள கூவாகத்தில் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கூத்தாண்டவர் கோயில் திருநங்கைகள் வழிபடும் கோயிலாக இருப்பது குறிப்பிடத்தக்கது இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த மாதம் 21-ந் தேதி தொடங்கிய இந்த திருவிழாவானது (மே 5-ந் தேதி) தாலி கட்டும் நிகழ்ச்சியும், மே 6-ந் தேதி அரவாண் களப்பலி நிகழ்ச்சியும் நடைபெற்று விழாவானது நிறைவு பெறவுள்ளது.
சமூகத்தில் 3–ம் பாலினமாக அடையாளப்படுத்தப்பட்ட திருநங்கைகளுக்கு எந்தவொரு அங்கீகாரமும் இல்லாமல் இருந்த வேளையில், பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் மூலம் தற்போது சமூக அடையாளத்தை இவர்கள் பெற்றுள்ளார்கள்.
மகாபாரதத்தில் அரவாண் களப்பலி கொடுக்கப்படுவார். பலி கொடுப்பதற்கு முன்பு திருமணம் செய்து கொள்ள விரும்புவார். ஆனால் எந்த பெண்ணும் அவரை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க மாட்டார்கள். இதனால் கிருஷ்ணர் பெண் வேடம் அணிந்து அரவாணை திருமணம் செய்து கொள்வார்.
இதை நினைவு கூறும் வகையில் திருநங்கைகள் இந்த விழாவில் கலந்து கொண்டு அரவாணுக்கு மனைவியாக பாவித்து தாலி கட்டிக்கொள்வது வழக்கம்.
இதற்காக நாடு முழுவதில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் விழாவுக்கு வருவார்கள்.இங்கு திருநங்கைகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சி நடைபெறும் மிஸ் கூவாகம் அழகிப் போட்டியும் நடைபெறும். இதில் நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள்.
இதற்காக நாடு முழுவதில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் விழாவுக்கு வருவார்கள்.இங்கு திருநங்கைகள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சி நடைபெறும் மிஸ் கூவாகம் அழகிப் போட்டியும் நடைபெறும். இதில் நூற்றுக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொள்வார்கள்.
பல்வேறு விதமான நாகரக உடை அணிந்து போட்டியில் அணிவகுத்து வருவார்கள். அவர்களில் சிறந்த 3 அழகிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
6–ந் தேதி காலை அரவாண் தேரோட்டம் மற்றும் களப்பலி நிகழ்ச்சி நடைபெறும். களப்பலி முடிந்ததும் திருநங்கைகள் வெள்ளை சேலை அணிந்து விதவை கோலம் பூண்டு, அழுது புலம்புவார்கள். அத்துடன் தங்கள் ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள். 8–ந் தேதி தர்மர் பட்டாபிஷேகம் நடைபெறும். அத்துடன் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நிறைவு பெறும்.
"திருநங்கையர் திருவிழா" ஒவ்வொரு வருடமும் ஓளிர்ந்து ஒளி விசுகிறது மக்களின் ஏகோபித்த வரவேற்போடு என்பது கதையல்ல நிஜம்.
தகவல் பகிர்வு:
புதுவை வேலு
நன்றி: oneindiatamil /மாலைமலர்
திருநங்கையர்களை சட்டத்தின் மூலம் அங்கீகாரம் செய்தது போற்றத் தகுந்ததே. இனி திருநங்கையர்கள் எல்லோரையும் போல் மெய்ன் ஸ்ட்ரீமுக்கு வரவேண்டும்.
RépondreSupprimerவாருங்கள் அய்யா!
Supprimerநல்ல நெறியுள்ள கருத்தினை தந்தமைக்கு நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
Ce commentaire a été supprimé par l'auteur.
RépondreSupprimerவணக்கம்
RépondreSupprimerஐயா
திருநங்கையர்கள் பற்றி சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்..த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் கவிஞரே!
Supprimerநல்ல நெறியுள்ள கருத்தினை தந்தமைக்கு நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
திருநங்கைகள் நிலைமை மேலும் சிறக்கட்டும்...
RépondreSupprimerவாருங்கள் வார்த்தைச் சித்தரே!
Supprimerநல்ல நெறியுள்ள கருத்தினை தந்தமைக்கு நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
திருநங்கையர்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் மட்டும் கொடுத்தால் போதாது. அவர்கள் எல்லோரையும் போல் கல்வி கற்று வேலைவாய்ப்பு பெற உதவி மற்றவர்கள் போல் சமமாக நடத்தினால் மட்டுமே அவர்கள் வாழ்க்கை ஒளிரும்.
RépondreSupprimerவாருங்கள் அய்யா!
Supprimerநல்ல நெறியுள்ள கருத்தினை தந்தமைக்கு நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
வே.நடனசபாபதி ஐயா வின் கருத்தே நான் எண்ணியதும்,நன்றி சகோ
RépondreSupprimerவணக்கம் சகோதரி
Supprimerநல்ல நெறியுள்ள கருத்தினை தந்தமைக்கு நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
தம 4
RépondreSupprimerநன்றி
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நடநசபாபதி ஐயா அவர்களின் கருத்தே என் கருத்தும் நண்பரே
RépondreSupprimerநன்றி
தம +1
வாருங்கள் கரந்தையாரே!
Supprimerநல்ல நெறியுள்ள கருத்தினை தந்தமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
திருநங்கைகள் மனிதர்களே, அவர்களை நாம் மதிக்க வேண்டும். தங்கள் பதிவு அருமை. அவர்களை மனிதர்களாக பார்த்தாலே போதும்.நன்றி.
RépondreSupprimerவணக்கம் சகோதரி
Supprimerநல்ல நெறியுள்ள கருத்தினை தந்தமைக்கு நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
திருநங்கைகளைப் பற்றி அருமையான பதிவு. அவர்களும் சமமாக மதிக்கப்படும் நிலை முழுமையாகும்போதே சமுதாயம் மேம்படும். அந்த நல்ல நாளை எதிர்பார்ப்போம்.
RépondreSupprimerவாருங்கள் முனைவர் அய்யா!
Supprimerநல்ல நெறியுள்ள கருத்தினை தந்தமைக்கு நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
திருநங்கையும் ஒரு தாயின் மடியில் பிறந்தவரே, அவர்களுக்கு ஒருவகை ஊனம் அவ்வளவே, அவர்கள் நம்பளை போல் அனைத்து உரிமைகளும் பெற்று சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் புதுவை வேலு அவர்களே. இந்த மாதிரி வித்தியாசமான பதிவு (சமுக அக்கறை) அவசியம் தேவையே.
RépondreSupprimersattia vingadassamy
நல்ல நெறியுள்ள கருத்தினை தந்தமைக்கு நன்றி நண்பரே!
RépondreSupprimerநட்புடன்,
புதுவை வேலு