dimanche 3 mai 2015

"தீ அணைப்பு வீரர்கள் திருச் செயல் போற்றுவோம்"




பாரில்,
பரவும் தீயை...
பறந்தே அணைத்து
மக்களை காக்கும்
'பரந்தாமன்' இவர்கள்!
'காக்கும் நாயகர்'களை
கருத்தில் கொள்வோம்!
இந்நாளில்-அவர்தம்
தியாகச் சிறப்பை
திருவுலகிற்கு சொல்வோம்!


இன்று மே மாதம் 04ம் தேதி
ஆண்டுதோறும் மே 4ம் தேதியன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள்  " International Firefighters' Day" (IFFD),  நினைவுகூறப்பட்டு வருகிறது.


தீயணைக்கும் படையினர் எனும்போது ஒரு நாட்டில் இவர்களின் பணி மிக விசாலமானது.


இயற்கை சீற்றங்களினாலோ  அல்லது விபத்துக்களினாலோ அல்லது கலவரங்களினாலோ தீ பற்றும்போது, அத்தீயினை அணைப்பதற்காக வேண்டி இவர்களின் சேவை அளப்பரியது.
பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து இவர்கள் ஆற்றும் பணி  தன்னலமற்றது.   குறிப்பாக,
மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய கலவர நிலைகளிலும்,
மேற்கத்திய நாடுகளின் காட்டுத் தீ போன்ற இயற்கை அனர்த்தங்களின்போதும், அதே போல சகல தீ அனர்த்தங்களின் போதும் இவர்களின் செயற்பாடானது மெச்சத்தக்கதே.
 
இந்த அடிப்படையில் தீயணைப்புப் படையினர் சேவைகளின் பெருமானத்தை மக்களுக்கு உணர்த்துவதுடன், இவர்களின் பங்களிப்புகளுக்கும், அர்ப்பணிப்புகளுக்கும் மக்கள் மத்தியிலும், தேசிய மட்டத்திலும் அங்கீகாரத் தன்மையை வழங்கி,  இவர்கள் பற்றி நினைவுகூர்வது இத்தினத்தின் சிறப்பு செய்தியாக காணப்படுகின்றது. அதாவது, சமூகத்தையும், சூழலையும் பாதுகாக்க முற்படும் இவர்களது சேவைப் பரிமாணங்கள் உணர்த்தப்படுவதும் இவர்கள் கௌரவிக்கப்படுவதும் சமூகத்துக்காகவும், சூழலுக்காகவும் தன்னுயிரைத் தியாகம் செய்த தீயணைப்புப் பிடையினரை நினைவுகூறுவதும் இத்தினத்தின் குறிக்கோளாகும்.
வழக்கமாக,  இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாளாக கொண்டாடப்பட்டு வந்தது.
இந்நிலையில்,
1999 ஆண்டு ஜனவரி 4ஆம் திகதி அஸ்திரேலியாவில் இடம்பெற்ற  காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் ஐந்து தீயணைப்புப் படையினர் உயிரிழந்தனர்.

இந்நிகழ்வையடுத்து, மின்னஞ்சல் மூலமாக மேற்கொள்ளப்பட்ட பரப்புரையினைத் தொடர்ந்து, உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவு கூறுவதற்கு ஆதரவாக தீயணைப்புப் படையினர் தினத்தினை சர்வதேச ரீதியில் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.




இதன் விளைவாகவே!

"மே 4ஆம்"தேதி அனைத்துலக 'தீயணைக்கும் படையினர்' நாளாக பிரகடனப்படுத்தப்பட்டு நினைவுகூறப்பட்டு வருகிறது.

 தகவல் பகிர்வு:

 புதுவை வேலு


 நன்றி:Oneindia Tamil


28 commentaires:

  1. தீயணைக்கும் படை வீரர்களைப் பற்றியும் அந்நாளின் முக்கியத்துவம் பற்றியும் பகிர்ந்தமைக்கு நன்றி. இச்செய்திகளை முதன்முதலாக தங்களின் பதிவு மூலமாகவே அறிந்தேன்.
    மிக மிக அழகான பதிவு. அழகின் சிரிப்பை ரசித்தோம், நல்ல கவிதை வரிகளில்.
    ஆய்வு தொடர்பான எனது அண்மைப்பதிவைக் காண வருக http://ponnibuddha.blogspot.com/2015/05/blog-post_3.html

    RépondreSupprimer
    Réponses
    1. பாரில் பரவும் "தீ"யை
      பறந்தே அணைத்து
      மக்களை காக்கும்
      'பரந்தாமன்' இவர்கள்!

      'காக்கும் நாயகர்'களை
      கருத்தில் கொள்வோம்!
      இந்நாளில்-அவர்தம்
      தியாகச் சிறப்பை
      திருவுலகிற்கு சொல்வோம்!

      வருகைக்கும், வாழ்த்தி போற்றுதலுக்கும் நன்றி
      அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. தீயணைக்கும் படையினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
    Réponses
    1. பாரில் பரவும் "தீ"யை
      பறந்தே அணைத்து
      மக்களை காக்கும்
      'பரந்தாமன்' இவர்கள்!

      'காக்கும் நாயகர்'களை
      கருத்தில் கொள்வோம்!
      இந்நாளில்-அவர்தம்
      தியாகச் சிறப்பை
      திருவுலகிற்கு சொல்வோம்!

      வருகைக்கும், வாழ்த்தி போற்றுதலுக்கும் நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. தீயணைக்கும் படையினர் அனைவரையும் போற்றுவோம்
    நன்றி நண்பரே
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. பாரில் பரவும் "தீ"யை
      பறந்தே அணைத்து
      மக்களை காக்கும்
      'பரந்தாமன்' இவர்கள்!

      'காக்கும் நாயகர்'களை
      கருத்தில் கொள்வோம்!
      இந்நாளில்-அவர்தம்
      தியாகச் சிறப்பை
      திருவுலகிற்கு சொல்வோம்!

      வருகைக்கும், வாழ்த்தி போற்றுதலுக்கும் நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. பன்னாட்டு தீயணைக்கும் படையினரின் நாளான இன்று அவர்களது தீர செயலைப் போற்றி வாழ்த்துவோம். தகவலுக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. பாரில் பரவும் "தீ"யை
      பறந்தே அணைத்து
      மக்களை காக்கும்
      'பரந்தாமன்' இவர்கள்!

      'காக்கும் நாயகர்'களை
      கருத்தில் கொள்வோம்!
      இந்நாளில்-அவர்தம்
      தியாகச் சிறப்பை
      திருவுலகிற்கு சொல்வோம்!

      வருகைக்கும், வாழ்த்தி போற்றுதலுக்கும் நன்றி
      அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. சாகசமும் தியாகமும் நிறைந்த உன்னதமான வீரர்கள். அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    த ம 4

    RépondreSupprimer
    Réponses
    1. பாரில் பரவும் "தீ"யை
      பறந்தே அணைத்து
      மக்களை காக்கும்
      'பரந்தாமன்' இவர்கள்!

      'காக்கும் நாயகர்'களை
      கருத்தில் கொள்வோம்!
      இந்நாளில்-அவர்தம்
      தியாகச் சிறப்பை
      திருவுலகிற்கு சொல்வோம்!

      வருகைக்கும், வாழ்த்தி போற்றுதலுக்கும் நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. சேவை மனப்பாங்கு கொண்ட நெஞ்சங்களை வாழ்த்துவோம். பகிர்வுக்கு நன்றிங்க.

    RépondreSupprimer
    Réponses
    1. பாரில் பரவும் "தீ"யை
      பறந்தே அணைத்து
      மக்களை காக்கும்
      'பரந்தாமன்' இவர்கள்!

      'காக்கும் நாயகர்'களை
      கருத்தில் கொள்வோம்!
      இந்நாளில்-அவர்தம்
      தியாகச் சிறப்பை
      திருவுலகிற்கு சொல்வோம்!

      வருகைக்கும், வாழ்த்தி போற்றுதலுக்கும் நன்றி

      சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. வாழ்த்த வேண்டிய வீரர்கள்! ஐயமில்லை!

    RépondreSupprimer
    Réponses
    1. பாரில் பரவும் "தீ"யை
      பறந்தே அணைத்து
      மக்களை காக்கும்
      'பரந்தாமன்' இவர்கள்!

      'காக்கும் நாயகர்'களை
      கருத்தில் கொள்வோம்!
      இந்நாளில்-அவர்தம்
      தியாகச் சிறப்பை
      திருவுலகிற்கு சொல்வோம்!

      வருகைக்கும், வாழ்த்தி போற்றுதலுக்கும் நன்றி
      அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. உண்மையில் இவர்களின் பங்கு அளப்பெரியதே...
    தமிழ் மணத்தில் நுழைக்க 7

    RépondreSupprimer
    Réponses
    1. பாரில் பரவும் "தீ"யை
      பறந்தே அணைத்து
      மக்களை காக்கும்
      'பரந்தாமன்' இவர்கள்!

      'காக்கும் நாயகர்'களை
      கருத்தில் கொள்வோம்!
      இந்நாளில்-அவர்தம்
      தியாகச் சிறப்பை
      திருவுலகிற்கு சொல்வோம்!

      வருகைக்கும், வாழ்த்தி போற்றுதலுக்கும் நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வணக்கம்
    ஐயா
    தீயணைப்பு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் த.ம 8
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. பாரில் பரவும் "தீ"யை
      பறந்தே அணைத்து
      மக்களை காக்கும்
      'பரந்தாமன்' இவர்கள்!

      'காக்கும் நாயகர்'களை
      கருத்தில் கொள்வோம்!
      இந்நாளில்-அவர்தம்
      தியாகச் சிறப்பை
      திருவுலகிற்கு சொல்வோம்!

      வருகைக்கும், வாழ்த்தி போற்றுதலுக்கும் நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. வைகையில் வெள்ளம் வருவதே அதிசயம் ,முப்பது ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தில் மாட்டிக் கொண்ட பெண்மணியை ஹெலிகாப்டரில் பறந்து கொண்டே தீயணைப்பு வீரர் காப்பாற்ற முயன்றார் .உடம்பில் ஒட்டுத் துணி இல்லாத நிலையில் அந்த பெண்மணி ஒத்துழைக்க வில்லை ,மீண்டும் தாழப் பறந்து முயற்சி செய்ய ,ஹெலிகாப்டரின் இறக்கை நீரில் பட்டு ,கட்டுப் பாட்டை இழந்து வெள்ளத்தில் அடைத்து செல்லப் பட்டது ,அந்த வீரரும் உயிர் நீத்தார் .அவரது கடமை உணர்வை யாராலும் மறக்க முடியாது !

    RépondreSupprimer
    Réponses
    1. பாரில் பரவும் "தீ"யை
      பறந்தே அணைத்து
      மக்களை காக்கும்
      'பரந்தாமன்' இவர்கள்!

      'காக்கும் நாயகர்'களை
      கருத்தில் கொள்வோம்!
      இந்நாளில்-அவர்தம்
      தியாகச் சிறப்பை
      திருவுலகிற்கு சொல்வோம்!

      வருகைக்கும், வாழ்த்தி போற்றுதலுக்கும் நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. சிறந்த பதிவு
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. பாரில் பரவும் "தீ"யை
      பறந்தே அணைத்து
      மக்களை காக்கும்
      'பரந்தாமன்' இவர்கள்!

      'காக்கும் நாயகர்'களை
      கருத்தில் கொள்வோம்!
      இந்நாளில்-அவர்தம்
      தியாகச் சிறப்பை
      திருவுலகிற்கு சொல்வோம்!

      வருகைக்கும், வாழ்த்தி போற்றுதலுக்கும் நன்றி
      அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. ஆகா நல்ல ஒரு தகவலை அறியத்தந்தமைக்கு நன்றி.வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. பாரில் பரவும் "தீ"யை
      பறந்தே அணைத்து
      மக்களை காக்கும்
      'பரந்தாமன்' இவர்கள்!

      'காக்கும் நாயகர்'களை
      கருத்தில் கொள்வோம்!
      இந்நாளில்-அவர்தம்
      தியாகச் சிறப்பை
      திருவுலகிற்கு சொல்வோம்!

      வருகைக்கும், வாழ்த்தி போற்றுதலுக்கும் நன்றி
      சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. அன்புள்ள அய்யா,

    "தீ அணைப்பு வீரர்கள் திருச் செயல் போற்றுவோம்"
    தன் உயிரையும் துச்சமாக எண்ணி போராடிக் காக்கின்ற வீரர்களுக்கு... சில நேரங்களில் தன் உயிரையும் கொடுத்து பாதிக்கப்பட்டவர்களைக் காக்கின்ற தியாகத்தை செய்யும் அந்த தன்னலமற்ற சேவையை பாராட்டி மகிழ்வோம்.

    நன்றி.
    த.ம.11.

    RépondreSupprimer
    Réponses
    1. பாரில் பரவும் "தீ"யை
      பறந்தே அணைத்து
      மக்களை காக்கும்
      'பரந்தாமன்' இவர்கள்!

      'காக்கும் நாயகர்'களை
      கருத்தில் கொள்வோம்!
      இந்நாளில்-அவர்தம்
      தியாகச் சிறப்பை
      திருவுலகிற்கு சொல்வோம்!

      வருகைக்கும், வாழ்த்தி போற்றுதலுக்கும் நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. மக்களை காக்கும் பரந்தாமன் அவர்களை மரியாதையுடன் பாராட்டுவோம் புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. 'காக்கும் நாயகர்'களை
      பரந்தாமன் அவர்களை
      கருத்தில் கொள்வோம்!
      இந்நாளில்-அவர்தம்
      தியாகச் சிறப்பை
      திருவுலகிற்கு சொல்வோம்!

      வருகைக்கும், வாழ்த்தி போற்றுதலுக்கும் நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer