குளிர் ஓடை குடையின்கீழ் கண்ணா!
தளிர் போல் நீ! தவழ்கின்றாய்!
பளிச்சிடும் புன் சிரிப்பை - உன்
பூவிதழுக்குள் ஏன் மறைக்கின்றாய்?
உன்னை நினைக்கையிலே நீ!உண்ணும்
வெண்ணெய் மட்டும் அன்றி! மாதவா!
மண்ணில் உயிர் வாழும் யாவரும்
தன்னில் உருகும்நிலை காண்பாயோ?
புதுவை வேலு
பட உதவி: கூகுள்
வணக்கம்
RépondreSupprimerஐயா
படத்துக்கு கவி புனைந்த விதம் வெகு சிறப்பு பகிர்வுக்கு நன்றி த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மாலே மணிவண்ணன் கண்ணனுக்கு
Supprimerகருத்தின் மாலைதனை விரைந்தோடி தேடி வந்து
வாக்கின் விருந்தோடு படைத்தமைக்கு பகர்கின்றேன்.
நிகரில்லா நித்திய நன்றியினை கவிஞருக்கு!
நன்றி கவிஞர் ரூபன் அவர்களே!
நட்புடன்,
புதுவை வேலு
படத்துக்கு ஏற்ற கவிதை மிக அருமை சகோ.
RépondreSupprimerநள பாகத்தின் நளினத்தை நயம்படவே!
RépondreSupprimerநாவின் சுவை அறிந்து பதிவாக படைத்து வரும்
நற்குண சகோதரி நலமுடன் தந்த கருத்தை
நன்றியுடன் ஏற்கின்றேன்! நாளும் வருகவே!
நட்புடன்,
புதுவை வேலு
படமும் கவியும் அருமை நண்பரே
RépondreSupprimerதம 2
பூந்தளிர் பூங்கண்ணனுக்கு
RépondreSupprimerபூந்தமிழால் சிறப்பு செய்தீர் நண்பரே!
நன்றி! நல்வாக்கிற்கு!
நட்புடன்,
புதுவை வேலு
படத்தேர்வு அழகோ அழகு. அதற்கேற்ற பாடலும் அருமை. பாராட்டுகள்.
RépondreSupprimerதேனோடையில் தோன்றி நிற்கும்
Supprimerதேந்தமிழ் கண்ணனுக்கு பெருமை
சேர்க்கும் வண்ணம் அருமை கருத்துரைத்தீர்! அய்யா!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
படமும், கவியும் அழகே...
RépondreSupprimerஅதுசரி கண்ணனை யார் கொண்டு போய் விட்டது அங்கே...
தமிழ் மணம் 333
ஒரு வாக்குதான் ஒருவருக்கு என்பது தான் நடைமுறை நீதி
Supprimerநண்பா 333 வாக்கினை அளிக்கும் நீயோ!
வெண்ணெய் திருடுபவனைக் காட்டிலும்,
மகா (கள்ள )வோட்டு அரசரானது எப்போது?
அன்பை அளவில்லாமல் அளித்தால் இப்படித்தான்!
என்ன புரிகிறதா நண்பா!
நட்புடன்,
புதுவை வேலு
இறைக்கவி அருமை!
RépondreSupprimerத ம 4
வரையறை இல்லாத அன்பின் வெளிப்பாடு
Supprimerஇறைக்கவி அருமை! பாராட்டுக் கருத்து!
ஏற்கின்றேன்! அகந்தையை அழித்து!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ரொம்பவும் ரசித்தேன்...
RépondreSupprimer
Supprimerவார்த்தைச் சித்தரின் வாசமிகு கருத்தும்,
ரசனை பெருக்கெடுக்கும் பெருமித கருத்தும்,
அழகுகோ அழகு!
நன்றி! நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
ரசனை அருமை..
RépondreSupprimerதம +
ரசனை பெருக்கெடுக்கும் பெருமித கருத்து
Supprimerநன்றி! தோழரே!
நட்புடன்,
புதுவை வேலு
இது 3d படம்போல் உள்ளதே ,வெண்ணைத் திருடியின் படம் என்பதாலா :)
RépondreSupprimer"அவனின்றி ஒர் அணுவும் அகிலத்தில் இல்லை"
Supprimerஎன்பது,
பகவான் ஜிக்கு தெரியாதா என்ன?
3 D - திருடி (வெண்ணைத் திருடியின் படம் )ரசித்தேன்!
கவிதையோடு சேர்ந்து தங்களது கருத்தும் அழகு!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
என் வருகைச் சற்று தாமதமாகிவிட்டது. அழகிய கவிதை, அழகிய புகைப்படத் தேர்வு. அருமை அருமை. நன்றி.
RépondreSupprimerவாருங்கள் சகோதரி!
Supprimerஅழகிய கவிதை என்றே!
அருங்கருத்தை அளித்தீர்!
நல்ல தேர்வு என்றே!
நண்மதிப்பெண் அளித்தீர்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
சிறந்த பக்திப் பா வரிகள்
RépondreSupprimerதொடருங்கள்
சிறந்த பக்தி பா வரிகளை பாராட்டி
Supprimerவாழ்த்திய பாவாணருக்கு பண்பான நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வெண்ணெய் திருடன் படம் நன்றாகத்தான் இருக்கிறது
RépondreSupprimerவெண்ணெய் திருடிய கண்ணன் படம் அருமை! என்று பாராட்டிய தோழருக்கு
Supprimerதோரணம் கட்டி வாரணம் ஆயிரம் பாடி நன்றி சொல்கிறேன்!
நட்புடன்,
புதுவை வேலு
கண்ணன் நிழலில் இல்லை, இதுவே படத்தின் சிறப்பு.
RépondreSupprimerகவிதை அழகு புதுவை வேலு அவர்களே.
sattia vingadassamy
கண்ணனின் பூந்தளிர் மேனியின் சிறப்பை
RépondreSupprimerபெருமை படுத்தியமைக்கு நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
கவிதை அருமை போட்டிக்கவி எழுதும் ஆசையைத் தூண்டுகின்றது காட்சிப்படம்!சின்னவன் அடியேன்!
RépondreSupprimerகண்ணனை பாறையில் ஏற்றி கவிதையை மனதில் ஏற்றிவிட்டீர்கள். அருமை. வாழ்த்துக்கள்!
RépondreSupprimer