பாய் போட்டுப்
படு: நோய் விட்டுப் போகும்
மனிதர்கள் உணவிற்கு கொடுக்கும்
முக்கியத்துவத்தை தூங்குவதற்கும் அளிக்கின்றனர். தூக்கமே மனிதர்களின்
புத்துணர்ச்சியை தூண்டி அவர்களை செயலாற்ற வைக்கும் ஆற்றல் கொண்டது.
நாள்தோறும்
இச்செயல் நடந்தால்தான் அவர்களது களைப்பு நீங்கி மீண்டும் வேலையை செய்ய முடியும்.
மிருகங்கள், பறவைகள் என அனைத்து உயிரினங்களும் மனிதர்களைப் போன்றே
தூங்கியே விழிக்கின்றன. அதுவே அடுத்தநாளின் செயல்பாட்டை தீர்மானிக்கும் ஆற்றலாகவும்
விளங்குகிறது. தொடக்கத்தில் பாறைகளிலும், மணல்
மேடுகளிலும், கட்டாந்தரையிலும் படுத்து உறங்கிய
மனிதன், நாளடைவில் விலங்குகளின் தோல்கள் கொண்ட
படுக்கை விரிப்புகளை உருவாக்கி தூங்கும் படுக்கையை உருவாக்கினான்.
பின்னர் தாவரங்களை கொண்டு படுக்கைகளை
உருவாக்கி கொண்டான். இன்று தூக்கத்திற்காக நாம் பயன்படுத்தும் படுக்கைகள்
தற்காலத்தில் மனதிற்கு பிடித்த வண்ணங்களில், வடிவமைப்பில் விற்கப்படுகிறது. இந்த படுக்கைகளிலும் தங்களின்
அந்தஸ்து பார்த்து வாங்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆனால் விலையுயர்ந்த
படுக்கைகள் வாங்கினாலும் முழுமையான தூக்கம் இல்லாமல் அல்லல்படுவோரும், அதற்காக மருத்துவரை தேடுவோர் எண்ணிக்கையும் தற்காலத்தில் அதிகரித்துள்ளது.
இந்த பிரச்னைக்கு மனிதர்கள் பயன்படுத்தும் நவீன படுக்கைகளும் முக்கிய காரணமாக
விளங்குவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
உலகில் முதல் நாகரிக மனிதன் தனக்கென்று
ஒரு படுக்கையை உருவாக்கும் போது, அவன் வாழ்ந்த நிலத்தின் தட்பவெப்ப
தன்மையை கருத்தில் கொண்டு படுக்கையை தயார்படுத்தினான்.
பூமியின் நிலப்பரப்பில்
ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு பருவகாலம் இருப்பதை உணர்ந்தே நமது நாட்டிலும் படுக்கை
விரிப்புகள் உருவாக்கப்பட்டன. இதில் முதன்மையானதாக இன்றைக்கும் விளங்குவது
கோரைப்பாயாகும்.
பண்டைய காலம் முதல் இன்றைய நவீன
காலம்வரை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் பொருள்தான் கோரைப்பாய்.
சாமானியர்கள் முதல் சாதாரண மக்கள் வரை எளிதாக வாங்கும் அளவிற்கு கோரைப்பாயின் விலை குறைவாக உள்ளதால் அனைவரும் இதனை விரும்பி வாங்குகின்றனர். கோரைப்பாயின்
சிறப்பு என்னவென்றால் கோடை,
மழை, குளீர் என எந்த ஒரு பருவ காலத்திலும்
இதனை பயன்படுத்தலாம்.
கோரைப்பாய் இயற்கையில் கோரைப்புற்களை
கொண்டு தயாரிக்கப் படுகின்றது இது எளிதாக மடக்ககூடிய படுக்கை விரிப்பாகவும்உள்ளது.
தண்ணீர் உள்ள இடங்களில் தழைத்து வளர்ந்து அனைத்திற்கும் வளைந்து
கொடுத்து முறியாமல் நீண்ட நாட்கள் உறுதியுடன் இருப்பதை கண்ட முன்னோர்கள் அதை
ஆராய்ந்துதான் இத்தகைய படுக்கைகளை உருவாக்கினார்கள்.
தொடர்ந்து பனை ஓலைப்பாய், பிரப்பம்பாய்,
ஈச்சம்பாய், கம்பளி விரிப்பு, இலவம் பஞ்சுபடுக்கை ஆகியவற்றை
உருவாக்கினார்கள். இந்த பாய்களையும் இலவம் பஞ்சு படுக்கை தயாரிப்புகளையும்
செய்வதற்கென்றே பல குடும்பங்கள் வாழ்ந்தன. நாம்படுத்து தூங்கும் ஒவ்வொரு
படுக்கைக்கும் ஒவ்வொரு குணம் உண்டு.
கோரைப்பாய்
கோரைப்பாய்
கோரைப்பாயில் தூங்கினால் உடல்சூடு, மந்தம், விஷசுரத்தை போக்கி, உடலுக்கு குளிர்ச்சியும் உறக்கமும் தரும்.
கம்பளி விரிப்பு
கம்பளி விரிப்பை
பயன்படுத்தினால் கடும் குளிருக்கு, சூட்டை தந்து குளிர் சுரத்தை போக்கும்.
பிரப்பம்பாய்
பிரம்பம்பாயில் படுத்தால் சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் ஆகியவை நீங்கி
நலம் கொடுக்கும்.
ஈச்சம்பாய்
ஈச்சம்பாயில் படுத்து தூங்கினால் வாதநோய் குணமாகும்.
ஆனால் உடலில் சூட்டை ஏற்படுத்தி,
கபத்தை அதிகரிக்கும் தன்மை இதற்கு உண்டு.
மூங்கில்பாய்
மூங்கில்பாய் என்பது மூங்கில் கழிகளை மெல்லிய குச்சிகளாக உருவாக்கி அதன் மூலம்
தடுக்கை போன்ற பாயை தயார் செய்வது ஆகும். இதில் படுத்தால், உடல் சூடும் பித்தமும் அதிகாரிக்கும். அதனால் பெரும்பாலும் மறைப்பாக
தொங்கவிடும் இடத்திற்கு இதை பயன்படுத்துவார்கள்.
தாழம்பாய்
தாழம்பாயில் படுத்துறங்கினால் வாந்தி, தலை சுற்றல், அனைத்து வகை பித்தமும் படிப்படியாக
போகும்.
பனையோலை பாய்
பனையோலை பாய்
பனையோலை பாயில் படுப்பது, பித்தத்தை போக்கி உடல் சூட்டை நீக்கி
சுகத்தை தரும்.
தென்னம் ஓலையால் செய்யப்படும் கீற்றில் படுத்துறங்குவது உடலின்
சூட்டை சமன்படுத்தி அறிவுத் தெளிவை தரும்.
மலர்களால் உருவாக்கப்படும் படுக்கை
பெரும்பாலும் மன்னர்கள் பயன்படுத்துவது ஆகும். இதில் தூங்குவதால் ஆண்மை
அதிகரிக்கும், நன்றாக பசியெடுக்கும். இதனால்தான்
இன்றைக்கும் முதலிரவில் படுக்கையின் மீது மலர்களை தூவி படுக்கை உருவாக்குவார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு படுக்கை உண்டு. அது அரசர்கள், செல்வந்தர்கள் படுத்துறங்கும் படுக்கையாகும். இலவம் மரத்தில் பஞ்சுகளை
மெத்தைகளாக உருவாக்கி அதை மரகட்டிலில் போட்டு தூங்கினால் உடலில் ரத்தம், தாது பலம் பெறும். உடலில் தோன்றும் அனைத்து நோய்களும் நீங்குமாம்.
ஆனால்?
இன்றைக்கு நவீனத்தை விரும்பி?
எங்கோ ஒரு நாட்டில், அந்த நாட்டு மக்களுக்காக
உருவாக்கப்பட்ட படுக்கையை, பல ஆயிரங்கள் கொடுத்து வாங்கி, தூக்கத்தையும் தொலைத்து, நோயையும் நாம் ஏற்படுத்திக் கொள்கிறோம் அல்லவா?
நமது
முன்னோர்கள் பல ஆண்டுகள் ஆய்வு செய்து நமக்காக உருவாக்கி கொடுத்த படுக்கை
விரிப்புகளை பயன்படுத்தினால்
எந்த நாளும் நல்ல தூக்கமும், நலமும் ஏற்படும் என்பது உறுதி.
பொதுவாக,
ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பொழுதும் விடியும்போது,
மலச்சிக்கல் இல்லாமலும்,
படுக்கும்போது மனச்சிக்கல் இல்லாமலும், இருப்பதுவே!
நல்ல ஆரோக்கியத்தின் அருமருந்தாய் அமையும்
நல்வாழ்க்கையாகும்.
தகவல் பகிர்வு:
பொதுவாக,
ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு பொழுதும் விடியும்போது,
மலச்சிக்கல் இல்லாமலும்,
படுக்கும்போது மனச்சிக்கல் இல்லாமலும், இருப்பதுவே!
நல்ல ஆரோக்கியத்தின் அருமருந்தாய் அமையும்
நல்வாழ்க்கையாகும்.
தகவல் பகிர்வு:
இத்தனை பாய்களா....?
RépondreSupprimerவிளக்கங்களுக்கு நன்றி...
அறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
Supprimerஉரிய உயரிய நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி!
RépondreSupprimerஅறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
Supprimerஉரிய உயரிய நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல தகவல் நன்றி,,,,இது போலான எளிமையான ஆரோக்கியங்களை விடுத்து விலை கொடுத்து நாமே கேடுகளை வாங்கிக்கொள்கிறோம்.
RépondreSupprimerஅறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
Supprimerஉரிய உயரிய நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான தகவல்கள் நண்பரே
RépondreSupprimerமெத்தை வாங்கினேன் தூக்கத்தை வாங்கலை என்ற பாடல் வரிகள் ஞாபகத்திற்க்கு வந்தது.
தமிழ் மணம் 2
அறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
Supprimerஉரிய உயரிய நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
பாய்களில் இத்தனை வகைகள் உண்டா
RépondreSupprimerநன்றி நண்பரே
தம +1
அறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
Supprimerஉரிய உயரிய நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
பாய்களைப் பற்றி அதிகமான செய்திகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி. பல செய்திகள் புதியனவாக உள்ளன.
RépondreSupprimerஅறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
Supprimerஉரிய உயரிய நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா.
அறியாத தகவல் தங்களின் பதிவு வழி அறிந்தேன் த.ம4
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
Supprimerஉரிய உயரிய நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
பாய் பற்றிய ஆய்வு! பல செய்திகள் அறிய வாய்ப்பு! நன்றி!
RépondreSupprimerஅறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
Supprimerஉரிய உயரிய நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
பாயின் பெருமை நோயில் தெரியுமோ :)
RépondreSupprimerஅறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
Supprimerஉரிய உயரிய நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
பாய் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம். அத்துனையும் அருமை.சரியான பதிவு, பாய் என்பது இன்று அரிகி வரும் ஒன்று. நன்றி.
RépondreSupprimerஅறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
Supprimerஉரிய உயரிய நன்றி சகோ!.
நட்புடன்,
புதுவை வேலு
நிறைய குடும்பங்களில் கட்டில் பயன்படுத்தப் படுவதால் பாய்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. அதன் பலன்களை விளக்கியமைக்கு நன்றி
RépondreSupprimerஅறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
Supprimerஉரிய உயரிய நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
நைலான் பாயில் படுப்பதால்தான் சரியாக தூக்கம் வரவில்லையென நினைக்கிறேன். சீக்கிரம் கோரைப் பாய்க்கு மாறுகிறேன்.
RépondreSupprimerஅறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
Supprimerஉரிய உயரிய நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
எத்தனை பாய் வகைகள்... ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன்.
RépondreSupprimerபகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
Supprimerஉரிய உயரிய நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நோய்களின் நிலையறிந்து
RépondreSupprimerபாய்களின் வகையறிந்து
படுக்கவைத்துக் குணமாக்க
எடுப்பான வழிகாட்டல்
இவை!
அறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
Supprimerஉரிய உயரிய நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
பாயில் படுத்து நோயில் விழாதிருக்க தகவல்களைத் தந்தமைக்கு நன்றி!
RépondreSupprimerஅறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
Supprimerஉரிய உயரிய நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான தகவல் ..
RépondreSupprimerதம +
வாட்சப்பில் போடுகிறேன்
அறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
Supprimerஉரிய உயரிய நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு பொருளும் நம்மை இயற்கையாகவே பாதுகாத்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டதாகவே கருதுகிறேன். (உதாரணம், பானை, பாய் etc)
RépondreSupprimerபாய் வகைகள், பலன்கள், சிறு குறிப்புகள் அனைத்துமே அருமை புதுவை வேலு அவர்களே.
பாய் பற்றிய தகவல் படிப்பது இதுவே முதல் முறை.
sattia vingadassamy
அறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
RépondreSupprimerஉரிய உயரிய நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
எந்த சிக்கலும் இல்லாமல் தூங்கத்தான் ஆசை.... ஆனால் இரவில் கொசுப்படையும் பகலில் ஈ....படையும் துாங்கவிடுவதில்லையே நண்ரே....ஒரு அனுபவம்.
RépondreSupprimerஅறிய கருத்தை பகிர்ந்தமைக்கு
RépondreSupprimerஉரிய உயரிய நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு