dimanche 24 mai 2015

"பகிர்ந்துண்டு வாழ்!" (படம் சொல்லும் பாடம்)







ஊட்டிவிட உருண்டை பிடிக்கும் - நல்

உன்னத குணம் உயிராய் துடிக்கும்

எண்ணத்தை தட்டினில் ஏந்தி! - நல்

அன்னத்தை அளிப்பாரா சொல் ?


"பகிர்ந்துண்டு வாழ்!" பாடத்தை - தலை

பள்ளியில் அலகு வாய் திறந்தே!

சொல்லியே நடத்த வந்தார் - கலை

கார்மேகம் "காகம்" இவரென்று!

புதுவை வேலு

பட உதவி: தினமலர்

24 commentaires:

  1. அருமையான சிந்தனை நண்பரே...
    தமிழ் மணம் 1

    RépondreSupprimer
    Réponses
    1. வசிகர சிந்தனையாளரே வருக!
      சிறப்புமிகு முதல் வருகை, முதல் வாக்கு!
      மிக பெருமை! நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. சிறந்த எண்ணங்கள் மின்னுகின்றன
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. சிறந்த எண்ணமுடைய
      சிறப்பான கருத்தினை புனைந்தமைக்கு
      சிறப்பு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. பகிர்ந்துண்டு வாழ், இப் பார் இதைத் உணர்தால் எவ்வளவு மேன்மையடையும். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி சகோதரி!
      தங்களது கருத்தின்படி நாம் உணர்வோம்! உயர்வடைவோம்!
      வருகைக்கு வாழ்த்துகள்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அருமை... எதையும் பகிர்வதே வாழ்க்கை...

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்வின் தத்துவத்தை வார்த்தை சித்தரின் வாய் மொழியால் கேட்டோம்! அருமை!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. வாழ் ,எங்களையும் வாழ விடு என்றும் சொல்கிறதோ காக்கா:)

    RépondreSupprimer
    Réponses
    1. காகம் கரைந்த மொழி
      "வாழ் ,எங்களையும் வாழ விடு!"
      பகவானுக்கும் எட்டி விட்டது!
      பறவையின் பக்திக்கு பலன் உண்டு!
      உண்மையோ பகவான் ஜி!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. "பகிர்ந்துண்டு வாழ்!" பாடத்தை இந்தப்பதிவின் மூலமும் படத்தின் மூலமும் பகிர்ந்துகொண்டு சிறப்பித்துள்ள தங்களுக்கு என் பாராட்டுகள். வாழ்க !

    RépondreSupprimer
    Réponses

    1. பாராட்டை வலைச் சரமாய் தொடுத்த
      கரங்களிலே நான் தருவேன்!
      நன்றி என்னும் கணையாழி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அருமை நண்பரே!

    த ம 4

    RépondreSupprimer
    Réponses

    1. வரலாற்று சிறப்புமிகு பதிவுகளை வார்த்துவரும்
      சிறப்பான நண்பரின் வாக்கிற்கும், கருத்திற்கும்
      விருப்பமிகு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. அருமை நண்பரே
    பகிர்ந்துண்டு வாழ்வதல்லவோ வாழ்க்கை
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. "பகிர்ந்துண்டு வாழ்வதல்லவோ வாழ்க்கை"
      உண்மையான உயர்வான உன்னத கருத்தை தந்தமைக்கு
      நன்றி கரந்தையாரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. படமும் பாடலும் பொருத்தமே!

    RépondreSupprimer
    Réponses

    1. பெருமதிப்புமிகு பெருமகனார் அய்யாவின்
      வருகைக்கும் வாக்கிற்கும் அருந்தமிழ் அருளும்
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. பகிர்ந்துண்டு வாழ் என்பது பாடப் புத்தகத்தில்தான் இருக்கிறது நண்பரே...!! நடைமுறையில் பொது சொத்தை-(அடுத்தவர் சொத்தை) பறித்துண்டு வாழ்” இருக்கிறது.. நண்பரே...

    RépondreSupprimer
  11. காலத்தின் காட்சிகளை!
    உள்ளதை உள்ளபடி சொல்லும்
    உமது உள்ளம்
    என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை!
    தவறாது வருக! நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  12. Réponses
    1. நண்பரே!
      வருகைக்கும் வாக்கிற்கும் அருந்தமிழ் அருளும்
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. படத்துக்கு பொருத்தமான கவிதை.வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. பெருமதிப்புமிகு பெருமகனார் அய்யாவின்
      வருகைக்கும் வாக்கிற்கும் அருந்தமிழ் அருளும்
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer