இதழ்கள்
இடையில் வைத்து - புகை
இழுத்தே
தான்! இன்பம் காண்கின்றார்!
பாழும்
நோயில் பரிதவித்து - முடிவில்
நோயால்
மடிந்தேதான்!
போகின்றார்!
வருவாய்
தருவாய் என்றாலும் - புகை
உருவாய்
உலவும் உனைத் தொட்டால்!
எரிந்தே
போவார் ! அம் மக்கள் !
அறிந்தே
அழிப்போம் அதையின்று!
உயிருக்கு
உலை வைக்கும் " புகையிலை "
உலகில்
பயிரிட தடை சொல்வோம்!
உய்யும்
மக்கள் நோயுறாது - காக்கும்
உயர்
செயலை நாம் செய்வோம்!
அருமை...
RépondreSupprimerபுகையும் பகையும் ஒன்றே... தவிர்ப்போம்...
Supprimerபுகையும் பகையும் ஒன்றே... தவிர்ப்போம்.
உண்மை நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான பகிர்வு. புகை நமக்கு பகை.....
RépondreSupprimerபுகை நமக்கு பகை...
Supprimerஉண்மை நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம். பயன்படுத்துபவர் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. அருகில் இருப்பவரும் தான். காலத்திற்கேற்ற பதிவு. நன்றி.
RépondreSupprimerகாலத்திற்கேற்ற பதிவு.
Supprimerநன்றி! சகோ!
நட்புடன்,
புதுவை வேலு
இதுவும் ஒரு வித சடங்கே! நண்பரே!
RépondreSupprimer
Supprimerசடங்கு என்று அதை கிடங்கில் போடாமல்
அறிவுறுத்தலை நாம் செய்தால்
பலன் இன்று இல்லாவிடினும்
நாளை கிடைக்கலாம் அல்லவா புலவர் அய்யா அவர்களே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
தகவலுக்கு நன்றி! நண்பரே.....
RépondreSupprimer
Supprimerதோழமைமிக்க வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி
நட்புடன்,
புதுவை வேலு
புற்றுநோய்க்கு ஆணிவேர்
RépondreSupprimerபுகையிலை உற்பத்திகளே!
புற்றுநோய்க்கு ஆணிவேர்
Supprimerபுகையிலை உற்பத்திகளே!
மாற்றுக் கருத்துக்கே இடமில்லாத
உண்மை வரிகளை கருத்தாக பதிந்தமைக்கு
பாவாணர் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான விளிப்புணர்வு பதிவு நண்பரே....
RépondreSupprimerநாளும் நல்லதொரு விழிப்புணர்வை
Supprimerஎழுதி வரும் நண்பரின் நற்கருத்து
நலம்!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
மற்ற பழக்கங்கள் கூட பயன்படுத்துபவரை மட்டுமே பாதிக்கும். ஆனால் புகைப் பழக்கம் மட்டும் அருகில் இருக்கும் குழந்தைகள் முதற்கொண்டு பாதிப்பை ஏற்படுத்துவது. அதனால் தான் புகையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பெரும் போராட்டம் நடக்கிறது.
RépondreSupprimerத ம 6
புகையை ஒழிப்போம்!
Supprimerபகையின்றி வாழ்வோம்!
வருகை சிறப்பு!
வாக்கு வளம்!
நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
RépondreSupprimerபுகையினால் கேடு புகைபிடிப்பவருக்கு மட்டுமல்ல அருகில் இருப்பவருக்கும் வரும். எனவே புகையிலை பயிரிடுவதை தடை செய்வதே நல்லது.
உயிருக்கு உலை வைக்கும் " புகையிலை "
Supprimerஉலகில் பயிரிட தடை சொல்வோம்!
கவிதை வரிகளையே கருத்தாக சொன்னமைக்கு
அன்பின் விதையான நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
புகை எதுவுமே பகைதான் ,அது மனுஷன் வாயில் இருந்து வந்தாலும் சரி ,பஸ்,லாரியில் இருந்து வந்தாலும் சரி :)
RépondreSupprimerமிகையில்லாத அருமை வகையான கருத்து
Supprimerஉவகைமிக்க வரிகள் உண்மை! பகவான் ஜி!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இதழ்கள் எழுதும் மரணசாசனம் ..
RépondreSupprimerகவிதை ஜோர்..
தம +
இதழ்கள் எழுதும் மரணசாசனம்
Supprimerகவிதை தோழரே!
அருமை!
நட்புடன்,
புதுவை வேலு
25 வருடங்களாக நான் புகைத்த புகை இல்லை, 10 வருடங்களாக நான் மறந்த புகைதான் வாழ்வின் பொக்கிஷம், புகையை ஒழிப்போம் புனிதம் பெறுவோம் புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
அனுபவக் கருத்து ஆரோக்கியமானது!
Supprimerஉள்ளத்தின் உண்மைகளை அள்ளித் தந்து உலகை நல்வழி படுத்த முயன்றமைக்கு
மிக்க நன்றி நண்பரே!
நட்புடன்,
புதுவை வேலு
இக்காலகட்டத்திற்குத் தேவையான பதிவு. இக்கொடிய பழக்கத்தால் தம்மைத் தொலைத்துக்கொண்டிருக்கும் பலரை பார்க்கும்போது வேதனையாக உள்ளது. அவர்கள் திருந்த ஒரு நல்வாய்ப்பு கிடைக்கட்டும்.
RépondreSupprimerநேரமிருக்கும்போது இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த எனது நேர்காணலை வாசிக்க வருக.
http://www.ponnibuddha.blogspot.com/2015/06/tracing-footprints-of-buddhism-in-chola.html
முனைவர் அய்யாவின் வருகைக்கு மிக்க நன்றி!
Supprimerஇனிய கருத்தை தேனாய் தந்தீர் அய்யா!
இந்தியன் எக்ஸ்பிரசில் வந்த தங்களது நேர்காணலை வாசிக்க வருகிறேன் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
பன்னீர் புகையிலை, பான் பராக்
RépondreSupprimerவாயிலிட்டுச் சுவைக்கலாம்
சுருட்டு, பீடி, வெண்சுருட்டு
புகை விட்டு ரசிக்கலாம்
எத்தனை வழிகள்
எமனை விரைந்தழைக்க!
எமனை விரைந்தழைக்கும் ஏகாந்த வழிகளை
Supprimerஅடைப்பதற்கு வழி சொன்னமைக்கு நன்றி
சென்னை பித்தன் அவர்களே!
தொடர்க!
நட்புடன்,
புதுவை வேலு