காந்தியடிகள்
சொன்ன மூன்று குரங்கு பொம்மைகளின் கதை பெரும்பாலானோருக்குத்
தெரியும்.
"தீயனவற்றை பார்க்காதே,
"தீயனவற்றை கேட்காதே,
"தீயனவற்றை பேசாதே!"
- என்பதுதான்.
ஆனால், இந்தக்
குறும்படத்தின் கதை யாருக்காவது தெரியுமா?
இளம்பெண்
ஒருவர் அலுவலகம் செல்ல, பேருந்துக்காகக் காத்து நிற்கிறார்.
நீண்ட நேரமாக அதே இடத்தில் நிற்கும் அவரிடம் ஓர் ஆண், விரும்பத்தகாத முறையில்
நடந்துகொள்கிறான்.
சில நிமிடங்களில் அங்கிருந்து சென்றவனைப் பார்த்து எதுவும்
செய்ய முடியாமல் கலங்கி நிற்கிறார் அந்தப் பெண்.
அருகில் இருந்த சாமியார் ஒருவர், அவரைச் சமாதானப்படுத்தி, மூன்று குரங்கு பொம்மைகள் உள்ள
மரச்சட்டத்தைக் கையில் கொடுத்துக் காதிலும் ஏதோ ரகசியம் சொல்கிறார்.
அதன் பின்னர், தவறான நோக்கத்துடன் தன்னை நெருங்கும்
ஆண்களை அந்தப் பெண் எவ்வாறு தன் குரங்கு பொம்மைகளைக் கொண்டு எதிர்கொள்கிறாள்
என்பதுதான் மீதிக்கதை.
குறும்படத்தின் முடிவு நிச்சயம் நீங்கள் எதிர்பார்க்காத
விதத்தில்தான் இருக்கும்.
எந்தவித
உரையாடல்களும் இல்லாமலே ஒரு விஷயத்தைத் தெளிவாகக் காட்சிப்படுத்திப் புரியவைக்க
முடியும் என்பதற்கு இக்குறும்படம் சிறந்த எடுத்துக்காட்டு.
பொது இடங்களில்
பெண்களின் மீது நடத்தப்படும் வன்முறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும்
இப்படம் முழுவதுமே நகைச்சுவை இழையோடி இருக்கிறது.
படத்தின் நாயகிக்கு உதவும்
சாமியாரைப் புகைபிடித்தவாறு காண்பிக்கும் காட்சியே அதற்கு சிறந்த சான்று.
அப்பெண்ணிடம் வாலாட்டும் இளைஞர்களுக்கு என்னவாகிறது என்பதை மறைமுகமான
"குறியீடு"களுடன் காண்பித்தது அருமை.
”சவிதா சினி ஆர்ட்ஸ்” என்னும் படத்தயாரிப்பு நிறுவனம் மூலம்
எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், டெக் மகேந்திரா
குறும்படப் போட்டியின் சிறந்த குறும்படம் உள்ளிட்ட விருதுகளை வென்றிருக்கிறது.
தனியாய்
இருக்கும் பெண்களிடம் எல்லை மீற நினைக்கும் ஆண்களுக்கு இக்குறும்படம் ஒரு
சாட்டையடிப் பதிவு.
(யூ டியூப் பகிர்வான இந்த காணொளியைக் கண்டு கருத்தினை பகிர வாருங்கள் நன்றி!)
பகிர்வு:
புதுவை வேலு
நன்றி: தி இந்து / You Tube
அருமை நண்பரே வசனமே இல்லாமலும் நல்லதொரு படம் மட்டுமல்ல பாடமும் கூட காமெடியாகவும் இருந்தது.
RépondreSupprimerதமிழ் மணம் 1
வணக்கம் நண்பரே!
Supprimerபேசாத படத்திற்கு உமது வசனம் பேசும்படி இருந்த்தது.
சிறப்பு!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பல்ப் பியூஸ் போனாலே போதுமே ,வெடிக்கணுமா:)
RépondreSupprimerபகவான் ஜி! அவர்களே!
Supprimerஇது பேசாத படம் அல்லவா?
வெடித்தது ஊமை வெடிதானே என்று விட்டு விடுங்களேன்!
வருகைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ரசனையான குறும்படம்சாமியார் சொல்லிக் கொடுத்தது என்ன ?ஈவ் டீசிங் செய்பவர்கள் எப்படி மாறுகிறார்கள் என்பதைக் கற்பனை செய்ய வேண்டுமோ.?
RépondreSupprimerமர பொம்மைகள் சொல்லும் மர்மத்தை
Supprimerமரியாதைக்குரிய அய்யா அவர்கள் வந்து
கருத்தினை தந்தது! வெகு சிறப்பு!
நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
சொல்ல வந்ததை மெளனமாக நகைச்சுவையோடு சொல்லி இருக்கிறார்...
RépondreSupprimerமௌன நகைச்சுவையை கண்டு ரசித்தமைக்கு
Supprimerமிக்க நன்றி சகோ!
நட்புடன்,
புதுவை வேலு
"ஓர் இளம்பெண்ணும் மூன்று குரங்குகளும்!" காமெடிக் காணொளி அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.
RépondreSupprimerபகிர்வினை விரைந்தோடி வந்து பாராட்டி
Supprimerவாழ்த்தியமைக்கு வளமான நன்றி அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா.
இந்த காலத்தில் நடக்கும் சம்பவங்கள் நல்ல கருத்தை சொல்லி இரசிக்கவைக்கும் வீடியோ பகிர்வுக்கு நன்றி த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
காணொளியின் கருப்பொருள் கண்டு கருத்தினை வடித்த கவிஞர் அய்யாவிற்கு
Supprimerகவின்மிகு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
காணொளியை ரசித்தேன். நல்ல பாடம், நல்ல படம். பகிர்வுக்கு நன்றி.
RépondreSupprimerகாணொளியின் கருப்பொருள் கண்டு
Supprimerகருத்தினை வடித்த,
முனைவர் அய்யாவிற்கு
கவின்மிகு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல படம்
RépondreSupprimerநல்லதொரு பாடம்
நன்றி நண்பரே
தம +1
காணொளியின் கருப்பொருள் கண்டு கருத்தினை வடித்த
Supprimerநண்பருக்கு நற்றமிழ் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
காணொளி அருமை (சாட்டையடி)...
RépondreSupprimerகாணொளியின் கருப்பொருள் கண்டு கருத்தினை வடித்த
Supprimerநண்பருக்கு நற்றமிழ் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நல்லதொரு படம். பொம்மைகளை ஒருமுறைதான் பயன்படுத்த முடியும் என்பது அடுத்து வரும் பிரச்சனைகளை எப்படி சமாளிப்பார் என்று தெரியவில்லை.
RépondreSupprimerத ம 6
காணொளியின் கருப்பொருள் கண்டு கருத்தினை வடித்த
Supprimerநண்பருக்கு நற்றமிழ் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
காமெடிக் காணொளி அருமை. !
RépondreSupprimerகாணொளியின் கருப்பொருள் கண்டு கருத்தினை வடித்த புலவர் அய்யா அவர்கட்கு
Supprimerஅன்புமிகு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நல்ல பாடம் படம். வாழ்த்துக்கள்.
RépondreSupprimerகாணொளியின் கருப்பொருள் கண்டு கருத்தினை வடித்த
Supprimerஅன்பு சகோதரிக்கு
நற்றமிழ் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
காணொளிப்பகிர்வுக்கு நன்றி
RépondreSupprimerகாணொளியின் கருப்பொருள் கண்டு கருத்தினை வடித்த
Supprimerநண்பருக்கு நற்றமிழ் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அருமையான குறும்படம்
RépondreSupprimerதங்கள் பதிவு
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள்
காணொளியின் கருப்பொருள் கண்டு கருத்தினை வடித்த கவிஞர் அய்யாவிற்கு
Supprimerகவின்மிகு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
அம்மா பிஸ்கோத்து பல்பு அவுட்டு, அருமை புதுவை வேலு அவர்களே.
RépondreSupprimersattia vingadassamy
வாருங்கள் நண்பர் சத்யா அவர்களே!
RépondreSupprimerபல்பு பீஸ்ஸான மாத்திக்கலாம்!
ஆனால்? அவுட் ஆனால் நோ ரீ என்ட்ரி!
கருத்துக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு