mardi 28 avril 2015

"தமிழுக்கும் அமுதென்று பேர்"....



புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்(1891)








யிருக்கு நேராய் உயர் தமிழை
உயரத்தில் வைத்த உயர் கவியே
அமுத தமிழை அகத்தில் நிறைத்து
குமுதமாய் பூத்த 'புதுவை'கவியே!



ழகின் சிரிப்பை மாலை தொடுத்து
பைந்தமிழ் பாண்டியன் பரிசு படைத்து
குடும்ப விளக்கொளி திக்கெட்டும் பரவ
குன்றாப் புகழொடு தமிழ்-நீ வாழி!


 
செந்தமிழ் சேவை தினம் புரிந்து
சுந்தரத் தமிழ் நல்பாட்டி சைத்து!
மந்திரக் கவியால் பாரதியுள் புகுந்தார்
எந்தை சுப்புரத்தினம் புகழ் வா
ழி!

புதுவை வேலு









                 நன்றி: You Tube


புரட்சிக் கவியின் புகழ் பூக்களில் சில!



பொதுவுடமை
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பர் ஆகிவிட்டால்
ஓர் நொடிக்குள்...
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ!

சமுதாயச் சீர்திருத்தம்
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே


கூண்டுக் கிளி கவிதை
அக்கா அக்கா என்றாய் !
 அக்கா வந்து கொடுக்க
 சுக்கா, மிளகா ?
 சுதந்திரம் கிளியே


சமூக நீதி
சாதி ஒழித்தல் ஒன்று !
நல்ல தமிழ்வளர்த்தல் மற்றொன்று
பாதியைநாடு மறந்தால்- மற்ற
பாதி துலங்குவது இல்லை !



22 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.

    பா வேந்தரின் நினைவு படுத்தியமைக்கு வாழ்த்துக்கள் ஐயா. த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. "புதியதோர் உலகம் செய்வோம் கெட்ட போரிடும்
      உலகத்தை வேரொடு சாய்ப்போம்"
      பாவேந்தரின் கனவு மெய்ப்பட செய்வோம் கவிஞரே!
      வருகைக்கும், வளமான வாக்கிற்கும் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்(1891) பற்றியும் அவர் நினைவும் பாராட்டுக்குரியது.

    RépondreSupprimer
    Réponses
    1. 'அ' என்றால் அணில் என்று இருந்ததை 'அம்மா' என்று பாடப் புத்தகத்தில் மாற்றிய அன்பு ஆசான்
      புரட்சிக் கவி பாரதிதாசன் அவர்களது பிறந்த நாளில் வந்து கருத்திட்டு பெருமை சேர்த்த கவிஞர் அய்யா அவர்களுக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. இன்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள். இந்த நாளில் அவரைப் பற்றிய கவிதை. புதுவை மண்ணுக்கே உரிய உணர்வு.

    அன்று இருந்த தமிழ் உணர்வு, எழுச்சி இன்று இல்லை. இருந்த போதிலும் அந்த தமிழுணர்வு, உங்களைப் போன்றவர்களிடம் இருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள்.
    த.ம.2

    RépondreSupprimer
    Réponses
    1. 'தமிழ் எழுத்தாளனுக்கு இரண்டு தகுதிகள் வேண்டும்.
      முதலில் தமிழை ஒழுங்காகப் படியுங்கள்.
      பிறகு,
      உங்கள் எண்ணத்தைத் துணிச்சலாகச் சொல்லுங்கள்!'
      என்று கட்டளையிட்ட கவிஞர் புதுவையின் புகழ் மகுடம் பாரதி தாசன் அவர்கள்!அவரது, சிறப்பினை சொல்லியவண்ணம் தமிழுணர்வை பாராட்டி கருத்து பதிவு செய்த அன்பு நண்பர் தமிழ் இளங்கோ அவர்களே! தங்களது தாளாத தமிழ் உணர்விற்கு உயர் நன்றி உரித்தாகட்டும்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அருமை ஐயா...

    பாடல் என்றும் சிறப்பு...

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் வார்த்தைச் சித்தரே!
      'வாழ்க்கை என்பது ஆராய்ச்சியும் இல்லை... அறிவாற்றலும் இல்லை. மக்களுக்கு உழைப்பதுதான் வாழ்க்கை
      என்னும் உயரிய தத்துவத்தை தந்து விட்டு சென்ற கவிஞரின் இறுதி யாத்திரையின்போது பாடப்பட்ட பாடல்(அவ்வை டி.கே.சண்முகம் பாடினார்)... 'துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ... இன்பம் சேர்க்க மாட்டாயா!'
      இது அவரது கவிதைக்கு கிடைத்த அங்கிகாரம் அல்லவா நண்பரே?
      வருகையோடு சேர்ந்து வாக்கினையும் அளித்து இன்பம் சேர்த்த்மைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. பாவேந்தரின் நினைவினைப் போற்றுவோம்
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      பிசிராந்தையார் என்னும் நூலின் மூலம் சாகித்ய அகாடமி பெற்ற புதுவைக் கவிஞர்
      பாரதிதாசனார் நினைவினை போற்றியமைக்கு புதுவை வேலுவின் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. பாவேந்தரின் நினைவலைகள் நன்று....தமிழுக்காய் வாழ்வதே அவருக்கு நாம் செய்யும் மரியாதை

    RépondreSupprimer
    Réponses

    1. பாவேந்தரின் நினைவலைகளை அவரது பிறந்த நாளில் கருத்தின் மூலம் நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!
      நற்கருத்தை நாளும் வழங்கி சிறப்பிக்க வருக வருக சகோ!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. ஆரம்பத்தில் பாரதியைப் பின் பற்றியவர் போகப் போக சிந்தனைகளில் மாற்றம் கொண்டாரோ. பரதி பல மொழிகளைப் பயின்றவர். தாசனைப் பற்றி ஏதும் தெரியவில்லை. பாரதிதாசனின் கவிதைகளில் நான் ரசித்தது குரங்கொன்று ஆல் விழுதைத் தொட்டுப் பாம்பாக மயங்கி உச்சிபோய் தன் வாலையும் தொட்டுப் பாம்பென பயப்படுமாம்

    RépondreSupprimer
    Réponses
    1. அறிஞர் அண்ணாவால் புரட்சிக் கவிஞர் என்று பாராட்டப் பட்ட
      பாரதிதாசன் அவர்களது கவிதையினை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
      தொடர்க!*
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. அருமையான தொகுப்பு! நன்றி!

    RépondreSupprimer
  9. புதுவைக் கவிஞருக்கு சிறப்பு செய்தீர்
    நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  10. புரட்சிக் கவிக்கு புகழ் பாமாலை நன்று!

    RépondreSupprimer
    Réponses

    1. வாருங்கள் புலவர் அய்யா!
      உங்களுக்கு எல்லாம் தமிழை நான் வாரிக் கொடுக்கிறேன். எனக்கெல்லாம் தமிழை வாரிக் கொடுப்பவர் பாரதிதாசன்' என்று பாராட்டியவர் கிருபானந்த வாரியார். ஆத்திகர்களையும் தனது கொஞ்சு தமிழால் ஈர்த்த நாத்திகர்! பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுக்கு( புதுவை வேலு எழுதிய) எனது பாமாலையை பாராட்டி கருத்தினை வழங்கி உயர்வித்தமைக்கு நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. பாரதிதாசனுக்கு புகழ் மாலை அருமை நண்பரே அவர் தினம் போற்றுவோம்.
    காணொளி அருமையான பாடல்.
    தமிழ் மணத்தில் நுழைக்க... 7

    RépondreSupprimer
    Réponses
    1. புரட்சிக் கவிக்கு புகழ் மாலை சூடிய தேவக் கோட்டை நாயகரே நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. புதுவை புரட்சி கவிஞர் பாவேந்தர் அவர்களின் படைப்புகளையே கவிதையாக்கி, அவருக்கு பிறந்த நாள் கொண்டாடிய புதுவை வேலு அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    sattia vingadassamy

    RépondreSupprimer

  13. பாவேந்தரின் படைப்பு பாமாலையின்
    வாசம் நுகர்ந்தமைக்கு தமிழ் மணம் வீசும்
    நன்றி நண்பரே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer