mercredi 29 avril 2015

"குறை ஒன்றும் இல்லை" (சிந்தனை கதை)

'ஓட்டை பானையும் ஒளிரும் பூவும்'








ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.
இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.
குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.
இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.
எஜமானே! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்
அதற்கு விவசாயி, “பானையே! நீ ஒன்று கவனித்தாயா
 நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்
இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது.
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால்,
 நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!
சிந்தனை: "மதி" தான் நமது மனதின் வைப்பு நிதி 
பகிர்வு; 

புதுவை வேலு


நன்றி: தமிழ் அறிவு கதை(todayindia) 

20 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    உண்மைதான் அடுத்தவர் பேச்சு கேட்காமல் சுயபுத்தியின் படி நடந்தால் வாழ்க்கை இனிது.. அருமையன கதை அருமையாக சொல்லியுள்ளீர்கள். த.ம 1

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. "குறை ஒன்றும் இல்லை" (சிந்தனை கதை)
      கதையை படித்து பாராட்டியமைக்கு,
      நன்றி கவிஞரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. இது தமிழக பள்ளிகளில் ஆங்கிலப் புத்தகத்தில் முதல் பாடமாக வைக்கப் பட்டிருக்கிறது
    தகவல் உங்களுக்கு மகிழ்வளிக்கலாம் எனவே சொன்னேன்

    RépondreSupprimer
    Réponses
    1. "குறை ஒன்றும் இல்லை" (சிந்தனை கதை)
      கதையை படித்து பாராட்டியமைக்கு
      நன்றி தோழரே!,

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. "குறை ஒன்றும் இல்லை" (சிந்தனை கதை)
      கதையை படித்து பாராட்டியமைக்கு,
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அருமை
    அருமை நண்பரே
    நன்றி
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. "குறை ஒன்றும் இல்லை" (சிந்தனை கதை)
      கதையை படித்து பாராட்டியமைக்கு,
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. உண்மை தான் சகோ நமக்கு எது சரி என்று படுகிறதோ அதன் படி நடந்தால் வாழ்க்கை இனிமையாக செல்லும். அருமையான கதை.

    RépondreSupprimer
    Réponses
    1. "குறை ஒன்றும் இல்லை" (சிந்தனை கதை)
      கதையை படித்து பாராட்டியமைக்கு,
      நன்றி சகோதரி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. இந்த கதையை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்! சிறப்பான பகிர்வு! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. "குறை ஒன்றும் இல்லை" (சிந்தனை கதை)
      கதையை படித்து பாராட்டியமைக்கு,
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. அருமை நண்பரே சுயநிலையுடன் வாழ்ந்தால் வாழ்வு சுமையாய் இருக்காது அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. "குறை ஒன்றும் இல்லை" (சிந்தனை கதை)
      கதையை படித்து பாராட்டியமைக்கு,
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. விவசாயி, ஓட்டை பானை, தண்ணீர், பாதை ஓர பூக்கள் அனைத்துமே பிரெமிப்பை ஏற்படுத்துகிறது. இதில் நாம் எதுவாக இருந்தாலும் சுகமே. சுய முன்னேற்றம் மற்றும் சுய சிந்தனை போதிக்கும் கதை அருமை புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. "குறை ஒன்றும் இல்லை" (சிந்தனை கதை)
      கதையை படித்து பாராட்டியமைக்கு,
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. இந்த கதையை ஏற்கனவே படித்திருக்கிறேன். எத்தனை முறை கேட்டாலும்/படித்தாலும் அலுக்காத ஒன்று இது. பகிர்ந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. "குறை ஒன்றும் இல்லை" (சிந்தனை கதை)
      கதையை படித்து பாராட்டியமைக்கு,
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. ஏற்கனவே படித்த கதை என்றாலும் மீண்டும் படித்து ரசித்தேன். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    RépondreSupprimer
  11. "குறை ஒன்றும் இல்லை" (சிந்தனை கதை)
    கதையை படித்து பாராட்டியமைக்கு,
    நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer