jeudi 30 juillet 2015

"களிப்பூட்டும் கனகாபிஷேகம்"


அன்பு வலைஞர்களே!

(நன்றி! 
திருநடன சபாபதி அய்யா வலைஞர்கள் என்னும் சிறப்பு பெயரினை பெற்றுத் தந்தமைக்கு)

இன்று 31/07/2015  'கனகாபிஷேகம் சுபமுஹூர்த்தம்' காணும், எனது மனைவியின் பெற்றோரும், எனது மாமனார், மாமியாரும் ஆகிய
திரு. கோபாலகிருஷ்ணன்,  திருமதி. ருக்மணி கோபால கிருஷ்ணன்  இவர்களது திருமண விழா இனிதே சிறப்புறவும், இவர்களின் வாழ்த்து வேண்டியும், குழலின்னிசை வணங்குகிறது.

நட்புடன்,
புதுவை வேலு


(கனகாபிஷேக சுபமுஹூர்த்தம் என்பது 90வது வயதில் நடைபெறும் திருமணம்)



அன்பு வலைஞர்களே!
வயதில் மூத்த தம்பதியினரின்,
வாழ்த்தினை பெற வாருங்கள்!
நன்றி!

"கதையல்ல... மிருக வதை!"

படம் சொல்லுப் பாடம்


உதைக்கு பயந்து வதைப்பதோ ?
பதைக்குது நெஞ்சம்!


அடிமைச் சங்கிலியை அறுத்தெறிய
நொடிப்பொழுதில்?


எவர் வருவார்?  எங்கிருந்து?'

ஏர்வாடியில்'  இருந்தா?

புதுவை வேலு


mercredi 29 juillet 2015

"சுப முஹூர்த்தம்" (சிறு கதை)





கோபு வீட்டுத் திருமண வேலைகளெல்லாம் கோலாகலமகவே நடை பெற்றுக் கொண்டிருந்தது.

மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா!
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!

சுப மந்திரம் சொல்பவருக்கு முன் பணம் கொடுத்தாகி விட்டது. அவரது வருகையை உறுதி செய்து கொண்ட மகிழ்ச்சியில், அவர் கூறியதை நினைவுபடுத்திப் பார்த்தான் கோபு.

ஆக வேண்டிய அடுத்த வேலையை போய் பாருங்கோ....
பேஷா! ஜமாய்ச்சுடலாம். முஹூர்த்தத்திற்கு முன்னமே வந்து நல்லபடியா சந்தோஷத்தோடு நடத்தித் தரேன்! ஷேமம்!

அவரது நினைவோடு திருமணப் பணிக்கான ஒவ்வொரு அலுவலையும், அசைபோட்டபடியே வந்தான்.  கல்யாண மண்டபம்விருந்து,  ஜவுளி, அழைப்பிதழ்பொற்கொல்லர்தாலிமாலை, போன்ற அனைத்து வேலைகளையும், தனது சொந்த பந்தங்களிடம் பகிர்ந்து கொடுத்தாகி விட்டது. அவர்களிடமிருந்தும் எல்லாம் நல்லபடியே நடந்து வருகிறது என்ற தகவல் வரவும் அவனுக்கு மகிழ்ச்சி !
 
அப்போது அவனது அலைபேசி அழைக்கவே....
ஹலோ! கோபு எப்படி இருக்கே?
ஹாய் சத்தியா !
எப்ப வந்த இந்தியாவுக்கு?
ஏதாவது விசேஷமா?
ஆமாம்.
"ஆதார் அட்டை " வாங்க வந்தேன். போட்டோ எடுக்கனுமாம். அதான் குடும்பதோட வர வேண்டியதாயிற்று என்றதும்,
கோபுவுக்கு, திருமணத்திற்கு நினைவின் ஆதாரம் போட்டோ மற்றும் வீடியோ ஆயிற்றே ? 
இது எப்படி மறந்து போயிற்று?  விடுபட்டதை நினைவுக்கு கொண்டு வந்த தனது நண்பனுக்கு, நன்றி சொல்லிவிட்டு, அப்படியே…. திருமணத்திற்கு அவரது வருகையையும், உறுதி செய்து கொண்டான்.

முஹூர்த்தநாளன்று!
மகிழ்ச்சியோடு  குட்டீஸ்லிருந்து குடு குடு தாத்தா பாட்டி வரை அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். வருபவர்களை வரவேற்க  வரவேற்பு வாசலில் நின்று வணக்கம் சொல்லி வரவேற்றபடி நின்றிருந்தான் கோபு!
அப்போது அங்கிள் உங்கள அய்யர் மாமா கூப்பிடுறார்! வாங்க.... என்று குட்டீஸ் ஒன்று வந்து அழைக்கவே... மண மேடையை நோக்கி ஓடி..  வருபவரை பார்த்ததும்....
என்ன கோபு சார் முஹூர்த்த நேரம் நெருங்கிடுத்து, ஆரம்பிச்சிடலாமா? சீக்கீரமாய்...போய்....
ஜோடியை அழைச்சிட்டு வரச் சொல்லுங்கோ! என்றதும், 

இதோ சாமி! என்று சொல்லியபடியே தனது மகளை அழைத்தான்.


சந்தோஷி இங்கே வாம்மா....
நீ போய் தாத்தா-பாட்டியை பத்திரமாய் அழைத்து வாம்மா! என்றான் கோபு.

சற்று நிமிடத்தில்...

மணமாலையோடு தம்பதியராய் 'தாத்தா - பாட்டி' இருவரும்  மணமேடையில் வந்து அமர்ந்தனர். 


(கனகாபிஷேக சுபமுஹூர்த்தம் என்பது 90வது வயதில் நடைபெறும் திருமணம்)

சொந்த பந்தங்கள்  புடை சூழ, நட்பு வட்டங்கள் நலம் பாட... 'தாத்தா - பாட்டி' இருவருக்கும் அன்றுதான்...."கனகாபிஷேக சுபமுஹூர்த்த- திருமணம்" 
 
புதுவை வேலு

 


mardi 28 juillet 2015

"சொல் மழை"




இந்திய தேசம் முழுவதும் நேற்றைய தினம் பெய்த கண்ணீர் மழை  இன்னமும் நிற்க வில்லை. ஆம் அது புண்ணிய மழை அல்லவா?
கலாம் அவர்களது கனவை மெய்ப்பிக்க மக்கள் ஜனாதிபதிக்கு மக்களின் கண்களிலிருந்து வழியும்/பொழியும் அன்பு மழை அல்லவா?

அது சரி, மழை என்பதில்தான் எத்தனை வகை?
தமிழ்கூறும் நல்லுலகம் இந்த மழையை எப்படி பொழிகிறது.... என்பதையும்தான் சற்று பார்ப்போமே!

அடைமழை  
இடிமழை
கல்மழை (ஆலங்கட்டி)
கனமழை 

காத்து மழை
கால மழை
கோடை மழை
சுழி மழை 
 
துணைமழை
பருவட்டு மழை
பருவமழை
தை மழை 

நச்சு மழை
பஞ்சட்டைத் தூறல்
பட்டத்து மழை
பரவலான மழை

பருமழை
மழை முறுகல்
மாசி மழை
வெக்கை மழை

பெருமழை
பே மழை
சாரல்
சிணுங்கல்

தூவானம்
தூறல்
பூந்தூறல்
பொசும்பல் 
.
பொடித்தூறல்
ஊசித்தூறல்
மழை முறுகல்
ரவைத் தூறல்


எல்லைக் கட்டிப் பெய்யும் மழை
எறசல் மழை: (தடுப்பையும் மீறி மேலே படுவது).

அப்பப்பா! மழை என்பதில்தான் எத்தனை வகை.
இத்தனை வகையான மழையும், ஒரு சேர பொழிந்த இடம் எது ? என்று சொல்லுங்கள் பார்ப்போம்?

"நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்"
                                         - கி.ரா



கி.ராஜநாராயணன் தொகுத்த, வட்டார வழக்கு அகராதியில், மழை பற்றி அவர் கொடுத்திருந்த சொற்கள்தான் இவைகள்.

கரிசல் இலக்கியத்தின் தந்தையாகவும்,  கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடியாகவும் திகழ்ந்த இவர் வாழுமிடம் புதுச்சேரி என்னும்போது மகிழ்ச்சி மழை மனதில் பொழிகிறது.

சுப மழை!

நன்றி மழை!

நட்புமழை

புதுவை வேலு

"இயற்கை செலுத்திய இறுதி அஞ்சலி"

படம் சொல்லும் பாடம்





வானம் இருண்டது

நிலவும் சுருண்டது

குறையில்லா நாயகருக்கு
அவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம்

இறைவனடி சேர்ந்தவருக்கு


பிறை அஞ்சலியை,

உறையில்லாமல்...

உலகுக்கு அனுப்புகிறதோ?

புதுவை வேலு


( அப்துல்கலாம் மறைவுக்கு அவர் பயின்ற திருச்சி செயின்ட் ஜோசப்    கல்லூரியில் 3000 மாணவர்கள் மௌன அஞ்சலி  செலுத்தியக் காட்சி )

( பட உதவி: இணையம்)