dimanche 31 décembre 2017

'மணிக்கதவம் தாழ் திறவாய்'

'வருகவே  ஆங்கிலப் புத்தாண்டு 2018'



அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்
அன்பின் இனிய....
"ஆங்கிலப் புத்தாண்டு 2018"
நல்வாழ்த்துகள்


நட்புடன்,
புதுவை வேலு





உள்ளத்தை தூர் வாரி
உயர்வினை காணும்
உன்னத தினமே...
உலகப் புத்தாண்டு!


வாழ்த்துப் பூக்களின்
வசந்தத்தை...
வழங்க  வருகவே
இனிய புத்தாண்டு!


பூவும் வலி அறியாது
பூவின் காம்பும் வலியறியாது
நற்சொல்லின் நறுமணமாய்
நாவில் மலர்கவே புத்தாண்டு!


அகிலத்தில் அறவே!
சோம்பலை நீக்கி...
ஆம்பலாய் பூக்கட்டும்
ஆங்கிலப் புத்தாண்டு!


உழைப்பை,  உயர்வை
அழைக்கும் ஆண்டாய்!
அன்பாய் அரும்பும்
அழகு புத்தாண்டு!


 ஒழுக்கமிகு கல்வியோடு
ஓழுகு! நலம் வாழ்வோடு
ஒளிர வருகவே!
ஒப்புயர்வோடு புத்தாண்டு!


அனுபவ வறுமை அறவே நீங்க
அறிவுடையோர் சொல்
செறிவுடன் கேட்க...
வருகவே புத்தாண்டு!


சிறுமை தவிர்த்து
பெருமை குவித்து
உருகும் அன்பாய்
வருகவே புத்தாண்டு!

-புதுவை வேலு









jeudi 12 octobre 2017

ACLI - கலை விழா- 2017

ACLI - Association pour le Continuum des Langues Indienne. (FRANCE)

இந்திய கலாச்சாரம்,
இடம்பெயர்ந்து வாழும் தேசத்தில்,
வாழ வேண்டும், வளர வேண்டும் என்னும் துடிப்போடு,
நடிப்புக்கு இடமின்றி,
தமிழ் மொழி படிப்பித்து, மாணவ மாணவியருக்கு,
கல்வி - சான்றிதழ் வழங்கி, 
நகர மேயர், மற்றும், முன்னணி நிர்வாகிகள்,  இந்திய தூதரக அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்த......
கலை விழா- 2017 நிகழ்ச்சியின் காட்சிகள், பேராட்சி செய்யும்
வலைத் தளம் உறவுகளின் மேலான பார்வைக்கும், கருத்துக்கும்  உள்ளன்போடு உரித்தாக்குகின்றேன்.

நன்றி!

புதுவை வேலு
பொருளாளர்,
Le trésorier
ACLI - Association pour le Continuum des Langues Indienne.
92390 - Villenuevue la Garenne, FRANCE




















 ----------------------------------------------------------------------------------------------------------------------------
 -------------------------------------------------------------------------------------------------------------------------
 ----------------------------------------------------------------------------------------------------------------------


 --------------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------