mardi 30 juin 2015

"இடைத்தேர்தல்"




கடைக்கோடி மாந்தர் காணும்-வாழ்க்கை
கனவுலகம் நனவாகி வருமோ?
இடைத்தேர்தல் மக்கள் வாக்கு! -நல்
விடைத் தேடி விடியலைப் பெறுமோ?

படையே சென்று தேர்தலில் வென்று-வெற்றி!
குடையின்கீழ் குடிபுகுதே! இந்த அரசு!
"உடை உணவு உறை"யுள் யாவும் - வாழ்வில்
தடையின்றி கிடைக்கும் நாளே!

மடைதிறந்து காவிரி குடிபுகும் தமிழகம்
நடை பயிலும் நன்னாள் என்போம்!
வெற்றி வெளிச்சமாய் தெரியும் -அன்று
அகராதியில் நன்று! நன்மக்களே!


புதுவை வேலு

 

dimanche 28 juin 2015

"புகழ் போதை"




ளவோடு வந்தால்
னந்த தேவதை!
னங்கண்டு கொண்டால்
ருலகம் உன்கையில்!


ன்னை அறிந்தால்
டகம் உன் கையில்
ன்றும் எப்போதும்
ற்றம் நிலையில்லை!


யத்தை அழித்தொழித்தால்
அகிலமும் உன்கையில்!
வ்வாத புகழ்போதை
துவது மதுவாகும்!

வை தமிழ் வாக்கு!
வையகத்து அமுதாகும்!


புகழ் போதையை வெல்வோம்!
அன்பு பாதையில் செல்வோம்!


நட்புடன்,

புதுவை வேலு

vendredi 26 juin 2015

" சிரிக்க பழகலாம் வாங்க!"









ஒரு நிறுவனத்தில் உயரதிகாரியாக இருப்பவர் ஒருவர், ஒரு நாள் நோய்வாய் பட்டார்.
பெரிய பெரிய மருத்துவர்களிடம் காண்பித்தும் பயனில்லை, குணமாகவில்லை என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தவரிடம் ஒரு நாள், அவர் மனைவி!
நீங்கள் ஏன் ஒரு,  கால் நடை மருத்துவரை பார்க்கக் கூடாது?  என்றார்.
அதிர்ச்சி அடைந்த கணவன்; உனக்கு என்ன மூளை கெட்டுப் போச்சா? என்றார். அதற்கு அவரது மனைவியானவள்,  எனக்கொன்றும் இல்லை!
உங்களுக்கு தான் எல்லாம் கெட்டுப்போச்சு  என்றார்.   
எப்படித் தெரியுமா? 
 அவர் தனது கணவரைப் பார்த்து........?  
நீங்கள்தான், ஒவ்வொரு நாளும்,

காலங்காத்தால சேவல் மாதிரி எந்திரிச்சு

 அப்புறம் காக்கா மாதிரி குளிச்சிட்டு,

 குரங்கு மாதிரி லபக் லபக் தின்னுட்டு,

 பந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஆபிசுக்கு ஓடி,

 அங்க மாடு மாதிரிஉழைச்சிக்கீறிங்க.

அப்புறம் உங்களுக்கு கீழே உள்ளவங்ககிட்ட கரடி மாதிரி கத்திறீங்க,

சயந்திரம் வீட்டுக்கு வந்ததும் எங்கிட்ட நாய் மாதிரி கத்திறீங்க

அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை சரக் சரக்னு முழுங்கிட்டு,
 எருமை மாடு மாதிரி தூங்கிறீங்க.
அதனால தான் சொல்றேன்! இப்படி இருக்கிற உங்களை கால்நடை டாக்டர்தான் குணப்படுத்த முடியும் என்றார்.  
என்ன சொல்வதென்று கணவன் முழிக்க....., 

 என்ன கோட்டான் மாதிரி முழிக்கிறீங்க” 
 என்று முத்தாய்ப்புடன் முடித்தாள்.
"ரசித்தது"

புதுவை வேலு

(பட உதவி; கூகுள்)