சங்க இலக்கிய மலர்கள் (குறிஞ்சிப் பாட்டு மலர்கள் 99).
‘குறிஞ்சிப்பாட்டு’.
‘செறுத்த செய்யுள் செய்செந்நாவின்
வெறுத்த கேள்வி
விளங்குபுகழ்க் கபிலன்’
என்று புலவர்
பெருமக்களால் போற்றிப் பாராட்டப்படும் கபிலர் எழுதிய நூல் ‘குறிஞ்சிப்பாட்டு’.
"திருமுருகாற்றுப்படை,
பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு,
மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப் பாலை, மலைபடுகடாம்"
- பத்துப்பாட்டில், எட்டாவதாக வைத்து
எண்ணப்படுவது ‘குறிஞ்சிப்பாட்டு’.
இதை
"பெருங்குறிஞ்சி' எனவும் வழங்குவர்.
குறிஞ்சி நிலத்தைப் புனைந்து
பாடுவதில் வல்லவர் கபிலர். இதனால் "கருதும் குறிஞ்சி கபிலன்' என்றும் பாராட்டப்
பெற்றவர்.
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன் "கபிலர்" எழுதிய குறிஞ்சிப் பாட்டு
"99" வகை மலர்களை பற்றி குறிப்பிடுகிறது. புகைப்படங்களின்
மூலம்,
அந்த அரிய
ஆராய்ச்சிக்குரிய மலர்களின் எழிலினை கண்டு ரசிப்போம் வாருங்கள்.
அந்த மலர்களின் புகைப்படங்களின் தொகுப்பு.
’ஒண்செங்காந்தள் முதல் பரேரம் புழகு’
ஈறாகத் தொண்ணூற்றொன்பது (99)" வகையான
மலர்களின் பெயர்களையும்,
"குறிஞ்சிக் கபிலர்" பட்டியலிட்டு நம்மை வியப்பிலாழ்த்தும்
பாங்கைப் பாராட்ட வார்த்தைகளுக்கு வல்லமை ஏது?
பகிர்வு: