jeudi 26 février 2015

"தையலை வதைக்க காத்திருக்கும் "தைராய்டு"


 இன்று ஒரு தகவல்

தைராய்டு குறைபாட்டைப் பொருத்தவரை இந்தியாவில் "பெண்கள்" தைராய்டு பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் நடைபெற்ற ஆய்வின் முடிவில் 10 இல் ஒருவருக்கு தைராய்டு தொடர்பான பிரச்னைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.மேலும் 2640 பச்சிளங்குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு தைராய்டு பிரச்னை உள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே 'தைராய்டு' குறித்த விழிப்புணர்வும், பரிசோதனையும் மிகவும் அவசியமாகும்.இது குறித்த ஒரு விழிப்புணர்வு பதிவாக  மட்டுமே  இந்த 'மருத்துவ பதிவினை' பகிர்ந்து அளிக்கின்றேன். 
'தைராய்டுஎன்பது என்ன?


நமது உடம்பில்பலவகையான நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவை, ஹார்மோன்களை உற்பத்தி செய்துஉடலில் உள்ள செல்களுக்கு அவற்றை செலுத்திஅந்த செல்களை வேலை செய்ய வைக்கும். அவற்றில் ஒன்றுதான்தொண்டையில் இருக்கும்,  'தைராய்டு' சுரப்பி.
இது சுரக்கும் ஹார்மோனின் பெயர், 'தைராக்சின்'.


2.  'தைராய்டு' சுரப்பியின் பயன் என்ன?


இதயத்தை, சீராக வைக்க உதவுகிறது. உடல் வளர்ச்சிக்கும்உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கும் 'தைராக்சின்' ஹார்மோன்கள் பெரிதும் உதவுகின்றன. அதோடு, மத்திய நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இனப்பெருக்க உறுப்புகளின் வேலைகள், சரியாக நடைபெற மறைமுகமாக உதவுகிறது.


3.  'தைராய்டு' குறைபாட்டில் இருவகை உள்ளதா?
ஆம்! ஒன்று தைராய்டு அதிகமாக சுரப்பது,
  
மற்றொன்று, தைராய்டு குறைவாக சுரப்பது.4.  'தைராய்டு' இருப்பதற்கான அறிகுறிகள்?


முடி உதிர்தல், மூட்டுகளில் வலிஉடல் சோர்வு ஆகியவை. உடல் சோர்வு வழக்கமானதை விட வித்தியாசமாக இருக்கும். மாதவிடாயில் பிரச்னை, கழுத்து வீக்கம்மன அழுத்தம் ஏற்படுவதோடு எந்த நேரமும், ஒருவித மன கஷ்டத்துடன்எதையும் சரியாக செய்ய முடியாத நிலை உருவாகும்.
 


5.   'தைராய்டின்' பாதிப்புகள் என்னென்ன

அதிகமாக, 'தைராக்சின்' சுரந்தால் எடை குறையும்இதயத்துடிப்பு அதிகமாகும்கோபம்தூக்கமின்மைமாதவிடாய் கோளாறுகள், குழந்தையின்மைவயிற்றுப்போக்கு என பல சிக்கல்கள் ஏற்படும். 

'தைராக்சின்' குறைவாக சுரந்தால், மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்குமுறையற்ற மாதவிடாய்தோலின் மிருதுத் தன்மை குறைவதுஅதிகமான முடி உதிர்தல்மலச்சிக்கல், உடல் வலிமன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
6.  'தைராய்டு' பிரச்னை உள்ளோர் தவிர்க்க வேண்டிய உணவுகள்?


'தைராய்டு' குறைவாக சுரக்கும் பிரச்னை இருந்தால், முள்ளங்கி, முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது. 


7.   'தைராய்டு' காரணத்தால்தான்,  "கழுத்துப் பகுதி" வீக்கமடைகிறதா?


    'தைராய்டு' சுரப்பியின் செயல்பாடு முறையாக இல்லாதபோது, கழுத்துப்

  பகுதியில் அமைந்துள்ள 'தைராய்டு' சுரப்பி வீக்கமடைந்துகழுத்தில்

  வீக்கத்தை உண்டாக்கும். சில நேரங்களில்அயோடின் குறைபாட்டாலும்

    கழுத்து வீக்கம் ஏற்படலாம்.8.  'தைராய்டு' பிரச்னை இருந்தால்மூட்டுகள் வலிக்குமா?
மூட்டு வலி மற்றும் கடுமையான உடல் வலி போன்றவை 'தைராய்டு' பிரச்னைக்கான அறிகுறிகள்தான்! அதோடு 'தைராய்டு' ஹார்மோன்கள் உடலில் அதிகமாக இருந்தால், அவை தசை பிடிப்புகளை ஏற்படுத்துவதோடுஉடலில் அங்கங்கே வலியையும் உண்டாக்கும். இத்தகைய வலி கடுமையாக இருக்கும்.


9. 'தைராய்டு' சுரப்பியில் கட்டிகள் வருமாமே?


ஆம்! தைராய்டு சுரப்பியில் முதலில் சிறு கட்டிகள் வர வாய்ப்புண்டு.

அந்த கட்டிகள் நாளடைவில் புற்றுநோயாகவும் மாறலாம்.

இதுமட்டுமல்லாமல்தைராய்டு சுரப்பியில் நேரடியாக கூட புற்றுநோய்

கட்டிகள் வரும்.

 


10. தைராய்டு குறைபாட்டை முற்றிலுமாக குணப்படுத்த முடியுமா?


பொதுவாகமக்களுக்கு வரக்கூடிய குறைபாடு தைராக்சின் குறைவாக

சுரப்பது. இக்குறைபாடு ஒரு முறை வந்துவிட்டால் தைராக்சின்

மருந்துகளை வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும்.

ஆனால், தைராக்சின் அதிகமாக சுரந்தால் மாத்திரை மற்றும் அறுவை

சிகிச்சையின் மூலம் முற்றிலுமாக குணப்படுத்தலாம்.


எனவே, பாதிப்புக்குஉள்ளானவர்கள் உரியநேரத்தில் உரிய சிகிச்சைமேற்க்கொண்டு பிணி நீக்கமற நீங்கி நீடூழி வாழ்வீராக!


தகவல்: புதுவை வேலு


நன்றி: 'தினமலர்'
 
எஸ்.ஜாகிர் உசைன்
(நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை நிபுணர்.)