jeudi 29 septembre 2016

"திருமலை தனிலே தவ சுப்ரபாதம்"


 மயக்கத்தை தந்த மாயக் கண்ணனின்  பாடல் இது!
கண்ணனின் லீலைகளை...
கண்ணனின் தாசன்   அழகு தமிழில் அள்ளித் தந்த பாடல் இது!
எழுத்து வடிவில் படிப்போம்
எழுதியவரின் தமிழை நாம் சுவைப்போம்.


கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்
காலங்கள் தோறும் நினைத்தது நடக்கும்
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா


பொன்மணி வண்ணன் சொன்னது கீதை
பூமகன் மார்பினில் தவழ்ந்தவள் ராதை


நல்லவர் செல்வது அவனது பாதை
நாடிய மனிதன் உலகத்தில் மேதை


கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா


  
                                                               
ஆற்றினில் பெண்கள் சேலையை எடுத்தான்
அதையே திரெளபதி கேட்டதும் கொடுத்தான்


காற்றிலும் இசையிலும் கண்ணனின் குரலே
பாட்டினில் வருவது புல்லாங் குழலே


கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா
கண்ணா கோபாலா ராதா-கிருஷ்ணா ஸ்ரீதேவா


கோபியர் நடுவே கண்ணனின் நாதம்
குருவாயூரில் குழந்தையின் கீதம்


குருவாயூரில் குழந்தையின் கீதம்
தேவர்கள் சபையில் ஸ்ரீகிருஷ்ண வேதம்


திருமலை தனிலே தவ சுப்ரபாதம்
தவ சுப்ரபாதம் தவ சுப்ரபாதம்



படம்: சுப்ரபாதம்
வரிகள்: கவியரசர் கண்ணதாசன்

lundi 26 septembre 2016

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்"



அழகின் சிரிப்பே!
உழவின் சிறப்பை....
பொன் விளையும் பூமிக்குள்
விதைத்தவன்

விவசாயி!


புதுவை வேலு

dimanche 25 septembre 2016

"உலகுக்கு உரக்க சொல்லி விடு!"


 


மண்ணின் மடி தேடி!
மண்ணுக்குள் வைரமாக...
எண்ணிய இடியரசன்

இவன் தானோ?

விண்ணின் வியாசா!
வான்மழையை நிறுத்தும்
உன் மந்திரத்தை...
 
உலகுக்கு உரக்க சொல்கிறாயோ?


புதுவை வேலு
 

நன்றி:புகைப்பட வித்தகர் புலிவலம் ரவி

jeudi 15 septembre 2016

"புரட்சித்தலைவருக்கு புதுவை வேலுவின் புகழ்மாலை"






'பிரான்சு எம் ஜி ஆர் பேரவையில்'

எம்ஜிஆர் விழா- 2016



மனிதப் புனிதர் எம்ஜிஆர்
இவர்
புவி போற்றும் பூவிதழ் கண்ணன்
திரைப் பூக்களின்...
மன்னாதி மன்னன்

புகழ் மணக்கும்
புதுமைப் பித்தரை
சுரும்பாற் கோதையின்
கரும்பாய் இனிக்கும்
நறுந்தமிழால் - "ராமரின்"
எம்ஜி ராமச்சந்திரரின்
திருப் புகழை,
'பிரான்சு எம் ஜி ஆர் பேரவையில்'
புதுவை வேலு
போற்றுகிறேன்!
பனிவன்புடன் பாமாலை
சாற்றுகிறேன்.





அன்னைத் தமிழே!
அன்னமிட்டவரின் முகமோ
'ஆசைமுகம்'
அவர்!
மண்ணைவிட்டு விண்ணை அடைந்தாலும்,
உன்னை,
என்னை,
தமிழ் மண்ணை மறவாத...
உலகத் தமிழ் ரசிகர்கள் உதிரத்தில்
இரண்டறக் கலந்துவிட்ட
உயிரினும் மேலான...
இரத்தத்தின் இரத்தம்.


"உழைக்கும் தோழர்களே ஒன்றுக் கூடுங்கள்!
 உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்" - என்று

உலகத்தை தமிழர்களின்
திலகமாக்கி மகிழந்தவர்
இறவாப் புகழ் 'இதயக்கனி'
எம்ஜிஆர்!


மகிழ்ச்சி!!!
மக்கள்...
'திலகம் இடுகையிலே'
மகிழ்ச்சி.


மகிழ்ச்சி!
மக்கள் திலகம் -புகழ்
கவி பாடுகையிலே!
மட்டற்ற மகிழ்ச்சி!


தமிழ் உறவுகளே!
தரணியில்...
சிறகுகள் இல்லாமல்
பறவைகள் இல்லை!

திறமைகள் இல்லாமல்
திரை உலகில்
எவர் தொடுவார் வெற்றியின் எல்லை?


"ஆண்டவன் உலகத்தின் முதலாளி
அவனுக்கு நான் ஒரு தொழிலாளி"

தமது கடுமையான உழைப்பால்
வெற்றியின் எல்லையை எட்டியவர்
எழுச்சி ஏந்தல் எம்ஜிஆர்.


பாட்டால் புத்தி சொன்ன
பாட்டுடைத் தலைவருக்கு,
தமிழ் நாட்டை ஆண்ட,
தங்கத் தலைவருக்கு,
மிகவும் பிடித்த பாடலின் வரிகள்
எவை தெரியுமா?


"பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் 
"பாசவலை" படத்தில் எழுதிய....

"குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ள நரிக்கு சொந்தம்

குள்ள நரி தப்பி வந்தால் குறவனுக்கு சொந்தம்

தட்டுக் கெட்ட மனிதருக்கு கண்ணில் பட்டதெல்லாம் சொந்தம்

சட்டப்படி பார்க்கப் போனால் எட்டடிதான் சொந்தம்"

உனக்கெது சொந்தம்?
எனக்கெது சொந்தம்?
உலகத்துக்கு எதுதான் சொந்தமடா? 

-இந்த பளிங்கு வரிகளும்,
பவழ வார்த்தைகளும்தான்,
எம்ஜிஆர் மனதில்,
குடியிருந்த கோயிலில் பதிந்த கல்வெட்டு எனலாம்.







கருணைமிகு கதிரவா!
காஞ்சித் தலைவா!
உமது
சுடரொளி பட்டு
சுபிட்சம் அடந்தவர்கள்
அகிலத்தில் ஆயிரம் ஆயிரம்!


அந்த!
ஆயிரத்தில் ஒருவர் - இன்றும்
உதய சூரியனோடு உலா வருகிறார்.


நல்லாண்மை நாயகர்,
இலக்கியக் காவலர்,
கலக்கம் காணாத காவிய நடிகர் எம்ஜிஆர்!


இவர்
கண்டியில் பிறந்தார்
கேரளத்தில் வளர்ந்தார்
தமிழகத்தில் வாழ்ந்தார்/ ஆண்டார்.


தன்னை வாழ வைத்த தமிழகத்தை,
தமிழக மக்களை...
வாழ வைத்தும் மகிழ்ந்தார்!


"இருந்தாலும் மறைந்தாலும்,
 பேர் சொல்ல வேண்டும்!
 இவர் போல யாரென்று

 ஊர் சொல்ல வேண்டும்"

போர்!!! 

போற்றிப் பாடும்,
புறநானூற்று வீரர் / 'மதுரை வீரர்' எம்ஜிஆர்.


எப்பொழுதும் என்ன கொடுப்பார்?
ஏது கொடுப்பார்?
எதிர் பார்ப்பார் எங்கும் இருப்பார்!
ஆனால்?
எதையும் கொடுப்பார்! - தனது
இதயமும் கொடுப்பார்!
என்பதை ஏழை  எளிய மக்களின்
உள்ளம் மட்டுமே   சொல்லும்,
வாழையின் குணம் உடைய
வள்ளலின் அருமையை/ பெருமையை!


ஆரம்ப நாட்களில்...
திரைவானில் மின்னிய
எம்ஜி ராம் சந்தர் - என்னும் நட்சத்திரத்தை
எம்ஜி ராமச்சந்திரன் -என்று
பெயர் மாற்றம் செய்தவர் யார் தெரியுமா?


அறிஞர் அண்ணாவின்,
ஓர் இரவு/ வேலைக்காரி கதைகளை,
நாடகமாக்கிய "நடிப்பிசைப் புலவர்"
கே.ஆர். ராமசாமி அவர்கள்.


அதனால்தன்,
சென்னையில் உள்ள பதினொரு மாடி
அரசுக் கட்டிடத்துக்கு,
கே.ஆர். ராமசாமி மாளிகை என்று பெயர் சூட்டினார் எம்ஜிஆர்!


தனது பெயரை மாற்றியமைத்தவருக்கு,
பெயரை சூட்டி மகிழ்ந்த

சுந்தர புருஷர் எம்ஜிஆர்!


பிறர் துன்பம் கண்டால்
தூணாக துணை நிற்பார்
தூமணி மாடத்து மணிபுறா
'மாடப் புறா'  எம்ஜிஆர்.


நாகர்கோயிலில் கலவாணர் என் எஸ் கே,
சென்னையில் நடிகை கண்ணாம்பா / நாகேஷ்
சுருளிராஜன், எஸ்.வி.சுப்பையா, கவியரசு கண்ணதாசன்,
டி.ஆர். ராமண்ணா, ஐசரி வேலன் போன்ற

சக நட்சத்திரங்களின் வீடுகள்
ஏலம் போனபோது அவைகளை மீட்டுத் தந்த
'மதுரையை மீட்ட சுந்தர பாண்டியர்'

எம்ஜிஆர்.


இவர்!
கேட்டு கொடுப்பதைவிட,
கேளாது கொடுக்கும் கொடை மகன்.


மடை திறந்து ராஜ நடை போடும் மகாநதி!

கடைக் கண்ணால் காரியம் ஆற்றும்
காவிய த் தலைவர்.


நட்டாற்றில் நிற்கும் நலிந்தவரை கரை சேர்க்கும்
'படகோட்டி'



செம்மொழியாம்....
செந்தமிழை செதுக்கி

கவி புனைந்த  "பாரதிக்கு"
சிலை எடுத்த கலை சாரதி,
கலவாணியின் அருள் பெற்ற சாரதி
எம்ஜிஆர்.


வறுமையின் பிடியில் வளர்ந்து,
படிப்படியே  உழைப்பால் உயரந்த,
'தொழிலாளி'.


அயல்நாட்டில் இருந்தபடியே
தனது,
வெற்றி மயிலை
தமிழகத் தேர்தலின்போது
தோகை விரித்தாடச் செய்த மாயவர்.

துப்பாக்கிக் குண்டுகள் துளைத்தாலும்
மீண்டும்
துளிர்விட்டு பூத்த முல்லைப் பூ!
மறு அவதாரப் புருஷர்
'மர்மயோகி' எம்ஜிஆர்.


பரங்கிமலையை...
வெற்றி கிரிவலம் வந்த
பௌர்ணமி நிலவு எம்ஜிஆர்.


பருவங்கள்  பல வந்தாலும் -வாழ்வு
பயனற்றே போகும்,
வள்ளல் குணம் போற்றாவிடில்!!!


சருகான பயிரும் தழைக்கும்
உருகாத பொன்மேனியார் சதிராடும்
எம்ஜிஆர் விழிபட்ட ஒருபோதிலே!!


முயற்சிக்கு வெற்றி
முப்பொழுதும் உண்டு - அதை
அயற்சி அடையாது...
பயிற்சியாக பருகுவோர் -தம்
'உழைக்கும் கரங்களில்' தழைக்கும்
வெற்றி என்னும் மலர்ச் செண்டு!

எடுத்துக் காட்டி வாழ்ந்த
வீழாத வித்தகர் எம்ஜி ஆர்!





ஆட்சிப்பீடம் என்பது,
எப்படி இருக்க வேண்டும்
-என்பதை....
அன்றே!
"குலே பகாவலியில்"
படம் பிடித்துக் காட்டிய
'ஒளி விளக்கு' எம்ஜிஆர்.

இதோ!
மக்களின் உதவி என்னும் நூலைக் கொண்டுதான்

பதவி என்னும் பட்டம் வானாளவப் பறக்க வேண்டும்

நிலையான செங்கோல்!


நேர்மையான ஆட்சி!


இவைதான் முழுமையான ஆட்சிப்பீடம் என்றும்,


ஆண்/பெண் வித்தியாசம் ஆட்சிப் பீடத்துக்கு இல்லை
(புரட்சித் தலைவியின் ஆட்சிக்கு அன்றே  ஆருடம் சொல்லி விட்டார்
எம்ஜிஆர் போலும்)

அர்த்தமுள்ள ஆட்சிக்கும் மாட்சிமை பொருந்திய விளக்கம் காட்டிய...
'கலங்கரை விளக்கம்' எம்ஜி ஆர்.

அதியமான் ஔவைக்கு தந்ததோ
அரிய சிறப்புடைய நெல்லிக்கனி
அதுபோல்!
தன்னிடமிருந்த 'இதயக்கனி'யான
தமிழ் கலைக் களஞ்சியத்தை
தஞ்சை 'ராமையா தாஸ்'க்கு வழங்கிய
எட்டாவது வள்ளல் எம்ஜிஆர்!


கல்விக் கூடங்களில்
பசி பட்டினியோடு
இனி!
கல்லாமை இல்லை என்று நல்லாண்மையோடு,
நாட்டுக்கு சத்துணவுத் திட்டம் போன்றவற்றை
பாடத் திட்டங்களாக்கித் தந்தவர்,
சென்னைப் பல்கலைக் கழகத்தின்

சிறப்பு
டாக்டர் பட்டம் பெற்ற எம்ஜி ஆர்.


வாத்தியார் எம்ஜிஆர்

கவியரசர் கண்ணதாசன் பாடல்களில்
சில வார்த்தைகளை...
மாற்றம்  செய்ய வேண்டி  எம்ஜிஆர்  கேட்பதுண்டு
அப்பொழுது கண்ணதாசன் அவர்களோ!
வாத்தியார் ஆயிற்றே  அவர் திருத்தம் செய்யத் தான் செய்வார் என்றும்,
வாத்தியார் என்று மக்கள் எம்ஜிஆரை அழைப்பதற்கான காரணத்தையும்  அவர் வேடிக்கையாக சொன்னதுண்டு.



இதய தெய்வம் எம்ஜிஆர் - இவர்
தாய்மையின் சிறப்பை பொய்மை கலவாது....
மெய்யுரைத்த...
பொதிகை மலைத் தென்றல்
அதியமான் வழித் தோன்றல்.


பாரத ரத்னா எம்ஜிஆர் குறித்து
பிரபல  எழுத்தாளர்,
பட்டுக்கோட்டை பிரபாகர்
பகிர்ந்தளித்த செய்தி!


"ஒருமுறை திருப்பத்தூரில் மாபெரும்
பொதுக் கூட்டம் திரும்பிய பக்கமெல்லாம்
மக்கள் வெள்ளம்.


ஆண்களும், பெண்களும் அலை கடலென திரண்டு வந்திருந்தனர்.

அப்போது தன்னை தரிசனம் காண வந்த மக்கள் மீது எம்ஜிஆர் கரிசனம் கொண்ட காட்சி
அப்பப்பா!

அது கண்கொள்ளா கவின்மிகு காட்சி என்கிறார்.

அதாவது கூட்டம் முடியும் நேரத்தில், பொதுமக்களை பார்த்து, எம்ஜிஆர் அவர்கள்,
ஆண்களுக்கு மட்டும் நான் ஒரு செய்தி சொல்ல போகிறேன். ஆகையால் ஆண்கள் மட்டும் நில்லுங்கள். தயவுசெய்து பெண்கள்

(தாய்க் குலங்கள்) கூட்டத்திலிருந்து வெளியேறி விடுங்கள் என்றார்.

பிறகு ஆண்கள்  மட்டும் அங்கேயே இருப்பதை பார்த்த எம்ஜிஆர்.
காத்திருந்தமைக்கு மிக்க நன்றி!
இப்போது நீங்களும் இங்கிருந்து செல்லலாம். கூட்டம் முடிந்து விட்டது என்றார்.


பெண்கள் மிகவும் மென்மையானவர்கள்,

அவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அல்லல்
படக் கூடாது என்பதை எண்ணிப் பார்த்து
எம்ஜிஆர் அவ்வாறு சொல்லியதை
பார்க்கும்போது, தாய்மைக்கு அவர் தரும் முக்கியத்துவம் தெரிகிறது. 

எம்ஜிஆரின் தொலை நோக்குப் பார்வை:-

வருங்காலம் வாழ்வாதாரம் நதி தானய்யா
(காவிரி)
வரும் காலம் தமிழகத்துக்கு எப்போதய்யா?
கர்நாடகம்!
தரும் காலம் வருமோ? இனி சொல்லுமய்யா!
அரும்பாட்டில் அன்றே அமரர் அருளினாராய்யா!


"காற்றும் நீரும் வானும் நெருப்பும்
பொதுவில் இருக்குது!
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும்
பிரிந்து கிடக்குது!
பிரித்து வைத்து பார்ப்பதெல்லாம்
மனிதன் இதயமே!
பிரிவு மாறி உலகில் ஒருமை வந்தால்
அமைதி நிலவுமே"


"நதிநீர் இணைப்பு"க்கு

'உரிமைக் குரல்' தந்தவர்
குறள் போற்றும் குணமுடைய,

எம்ஜிஆர் அவர்கள்.

அழகின் சிரிப்பே!
உழவின் சிறப்பை....
பொன் விளையும் பூமிக்கு
விதைத்த விவசாயி!


மக்காளின் பசிப் பட்டினியை
போக்கியதாலோ?
மாற்றுக் கிட்னி - உமக்கு
மருந்தாய் கிடைத்தது.



தர்மம் தலைக் காக்கும் என்பதை,
தாய் சொல்லை தட்டாது சொன்ன,
தாயைக் காத்த தனையனே!

நீங்கள்!
இராமாவரம் தோட்டத்தின் ...

இறவாப் புகழ் மலர்.

தற்போது "புனிதராக" மாண்பினை அடைந்த அன்னை தெரேசா அவர்களுக்கு,
அவர்கள் பெயரில் "பல்கலைக் கழகம்" உருவாக்கிய உன்னத உள்ளம் கொண்டவர் எம்ஜிஆர்.


தஞ்சையில் தமிழ் பல்கலைக் கழகம்

தஞ்சை பெரிய கோவிலை சீரமைத்த சீராளர்!

உலகத் தமிழ் மாநாட்டை மதுரையில்   அரங்கேற்றிய அறங்காவலர்.

ஒருவர் மட்டுமே ஓட்டிச் செல்வதாய் இருந்த
மிதி வண்டியை...
(டபுள்ஸ்)
இருவர் செல்ல அனுமதி அளித்து
அதனை
'காதல் வாகனம்' ஆக்கிய கருணை வேந்தர்.


வாடிய உள்ளங்களுக்கு,
தான் தேடிய செல்வத்தை,
அவர்களை நாடி அளித்த 'நாடோடி மன்னன்'.


இலவச சீருடை/இலவசக் காலணி
இரண்டையும் மாணவ/மாணவியருக்கு
"பரிசு" அளித்த மக்கள் முதல்வர்.


 கர்மவீரர் காமராஜர்  பெயரில்,
அவரது பிறந்த நாளில்,
விருது நகரை தலை நகராக கொண்டு ,
"காமராஜர் மாவட்டம்"

என்று புதியதாய்,
ஒரு மாவட்டத்தை உருவாக்கியவர் எம்ஜிஆர்.



வெள்ளிதிரையில் புரட்சி நடிகருக்கு,
உதட்டின் கீழ் குருதி கண்ட பின்புதான்
கூண்டுக்கிளியாய் அடைப் பட்டிருந்த
அவரது குரோதம் கூண்டை விட்டு வெளியேறி
பறக்கும்/ சிறக்கும்.



நெல்லுக்கு இறைத்த நீர்
புல்லுக்கும் உதவக் காணீர்!
புழுவுக்கும் உதவக் காணீர்!
புகழ் வேந்தர் எம்ஜிஆர் புகழ்
"புதிய பூமி"யில் ஒளிரக் காணீர்!



யாதும் ஊரே யாவரும் கேளீர்!

"மதுவும் புகையும் மறத்தல்  நன்று!

சூது கவ்வாத வாழ்வே சான்று!



இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல் (517)


உலகில் பிறந்தோம், இறந்தோம் என்றிராது,
இறந்தும் இறவாப் புகழுடன்,

இறவாத இலையில்...
இரட்டை இலையில்,
இறைவனாய் வாழ்கிறார்
புரட்சித் தலைவர் எம்ஜிஆர்!





"பற்றுக பற்றற்றார் பற்றினை"

பற்றுவோம் பரமனை வேண்டியே!!!


நூற்றாண்டு நாயகர் எம்ஜிஆர்
புகழினை போற்றுவோம்!


"இன்று போல் என்றும் வாழ்க"

மனிதப் புனிதரின் மங்காத புகழ்!

பல்லாண்டு வாழ்க!!! வளர்க!!!



புதுவை வேலு