jeudi 31 décembre 2015

"சொல் இலக்கணம் கண்டாள்" - ஆண்டாள்


திருப்பாவை :16

தங்களை தமிழர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைக் கொள்பவர்கள்

ஆழ்வார்கள் என்பதை பின்வரும் பாசுர வரிகளால் பறை சாற்றுகிறார்கள்  இவர்கள்.


1) பெரும் தமிழன் நல்லேன் பெரிது
                                      -பூதத்தாழ்வார்-

2)நான் இரும்தமிழ்நூல் புலவன்
                                      -திருமங்கை ஆழ்வார்-

3) ஞானத் தமிழ் புரிந்த நான்
                                     -பூதத்தாழ்வார்

4)வண்தமிழ்நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்பமாரியே
                                   -நம்மாழ்வார்-


5) அம்தமிழின் இன்பப் பாவினை
                              -குலசேகராழ்வார்.


பாடல் 16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.



பொருள்:

எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே!
கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே!

ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக.
மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான்.

அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம்.
அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம்.

"அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே.
மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக!





விளக்கம்:
ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, ""இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. "அப்படியா? என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின், "இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம்.


சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.





பகிர்வு:
புதுவை வேலு


















"பூமியின் புதுக்கணக்கு புத்தாண்டு 2016"

வருக வருக புத்தாண்டு




புவி மக்கள் யாவருக்கும்
புது வசந்தம் வீசட்டும்!
மேவிடும் புகழ் யாழினை
மேன்மை கொண்டு மீட்டட்டும் !

இயற்கை பேரிடர்
இனி எங்கும்!
இல்லாது போகட்டும்

சிறுமை செய்யும்
சிறார் கொடுமை
சீர்திருத்தம் காணட்டும்

வாட்டிடும் வன்கொடுமை
வாலிபத்தை வதைக்க
வாராது, இருக்கட்டும்!

மது பானம் இல்லாத
புது(வை) தமிழகம் திகழட்டும்

ன்னார்வலர் மலர்கள்
நெஞ்சத்தில் பூக்கட்டும்


மாலைச் சூடியவர் மாண்பை
நாளை வரலாறு பேசட்டும்.

எறும்பாய் தேய்ந்த,
உழைப்பவர் வாழ்வு
உலகில் செழிக்கட்டும்!

வலைத் தளம் வல்லவர்கள்
கருத்துக் களம் சென்று
வெற்றி முரசு முழங்கட்டும்

பேரிகை கொட்டட்டும்
பேரின்பம் காணட்டும்
பேதமை நீங்கட்டும்


ன்பு உலவ வேண்டும்
மைதி நிலவ வேண்டும்

னந்தம் பெருக வேண்டும்
ரோக்கியம் வளர வேண்டும்

யற்கை இடர் இனி!
ல்லாத நிலை வேண்டும்

ன்றவள் துயர்துடைக்க வேண்டும்
ரம் மனதில் கசிய வேண்டும்

லகம் வெப்ப மயமாதல்

தடுக்கப் பட வேண்டும்

ருக்கு உழைத்த உள்ளங்களை
(வெள்ளத்தில் உதவிய தன்னார்வலர்)
னுருகி போற்றிட வேண்டும்




ங்கும் இல்லாத நிலைவேண்டும்
ற்றமிகு கல்வி போற்றப்பட வேண்டும்

யமின்றி வாழ வேண்டும்

ற்றுமை ஓங்க வேண்டும்
வ்வாமை நீங்க வேண்டும்

ர் குடையில் தீவீரவாதம்
டுக்கப் பட வேண்டும்

ஆய்த எழுத்தாய் சிறக்க வேண்டும் 
தே துணையாய் உணர வேண்டும்.






பிறக்கட்டும் புத்தாண்டு

வரவேற்று தருவோமே!
மலர்ச் செண்டு!!!

புதுவை வேலு


அன்பு உறவுகளுக்கு
குழலின்னிசையின்
ஆங்கிலப் புத்தாண்டு - 2016
நல்வாழ்த்துகள்


mercredi 30 décembre 2015

"நித்திரையில் நீல நிறக் கண்ணன்" -ஆண்டாள் பாசுரம் :15

திருப்பாவை


பூவில்லா வழிபாடு முழுமையில்லை.
 ஆண்டாளின் பாசுரங்களில் இடம் பெற்ற மலர்கள் பதினான்கு.
முல்லை, பாரிஜாதம், ஞாழல், ஆம்பல், புன்னை, தோன்றி, கொன்றை, செருத்தி, பூவைப்பூ, குருக்கத்தி, முருகம்பூ, சூதகம், கருவிளை, கருங்குவளை ஆகியனவே அவைகள்!
கார்க்கோடப்பூ எனவும் சங்குப்பூ எனவும் அழைக்கப்படும் நீலநிற காக்கண மலர்கள் (கருவிளை) ஆண்டாளின் பல்வேறு பாசுரங்களில் இடம் பெற்றுள்ளன.

வாலைப் பருவம்.

பன்னிரண்டு முதல் பதினைந்து வயது வரையிலான பெண்ணின் பருவத்தை வாலை' என்பர்.
பதினாறுக்கும் முப்பதுக்கும் இடையிலான பருவத்தைதருணி' என்பர்.
வாலைக்குமரியாம் ஆண்டாள் பாடிய 30 பாசுரங்கள் திருப்பாவை' எனவும்,
ஏனைய 143 பாசுரங்கள் நாச்சியார் திருமொழி' எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஆண்டாள் திருமண வினைகள் அனைத்தையும் முறையே கண்டதாக பத்துப் பாடல்களில் பாடியுள்ளார்.
அவற்றுள், ஆண்டாள் அரங்கனோடு மணம் முடிக்கும் நிகழ்வை கனவாகவும் காண்கிறார். அதை பாடலாக்கி அழகுத் தமிழில் அள்ளித் தருகிறார்.



"
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்"


திருப்பாவை பாசுரம் 15


எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக !

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.


பொருள்:
'ஏலே' என் தோழியே! இளமைக் கிளியே!
நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர்.
அப்போது அந்த தோழி, ""கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்!
இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.
உடனே தோழிகள், ""உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர்.
அப்போது அவள், ""சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை.
நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள்.
நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள்.
"அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும்.
உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள்.
அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள்.
"என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள்.தோழிகள் அவளிடம், ""நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.


விளக்கம்:
ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். பெண்களுக்கு பேசக்கற்றுத்தரவா வேண்டும்!

இந்தப் பாடலில் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள். படிக்கப்படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது. இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம் முடிந்து விடுகிறது.


பகிர்வு:
புதுவை வேலு