dimanche 9 octobre 2016

இனிய "சரஸ்வதி பூஜை/ விஜய தசமி" நல்வாழ்த்துகள்


வலைப் பூக்கள் வடிக்கும்- தேன்
கலை பாக்கள் தொடுக்கும்
விலை மதிப்பில்லாத -புகழ்
மலைபோல் உயர்ந்து நிற்கும்
நிலை தாழாத  - தமிழ் ஓலை
தமிழுக்கு சாற்றும்
அன்பு நட்புறவுகளுக்கு,


இனிய "சரஸ்வதி பூஜை/ விஜய தசமி"
நல்வாழ்த்துகள்நட்புடன்,
புதுவை வேலு

http://kuzhalinnisai.blogspot.fr/

http://kuzhalinnisai.blogspot.fr/2015/10/blog-post_20.html
கலைவாணி அருள்வாய் நீ!
கலைவாணி அருள்வாய் நீ!!!

வீணை மடி யேந்தி கல்வி
யானை பிடி யேறி வருவாள்
தேனமு தாய் தமிழை  தருவாள்
உனை  பணிவோம் கலை வாணி!வானை வசப் படுத்தும் அறிவு
வினை தீர்க்கும் வித்தக பரிவு!
திணை ஐந்தும் போற்றும் தேவி
நினைவோம் நா மகளை வேண்டி!கீழ்  கூத்தானூர் கோயில் நாயகி
வீழா! தாழா! நிலை கல்விதேவி
வெள்ளைத் தாமரை மலரின் மகளே
கொள்ளையின்பம் செழிக்க நீ! வருக!எல்லை யில்லா ஏட்டறிவுப்  பெட்டகம்
கல்லும் கசிந்துருகும் காவியத்  தடாகம்
வெல்லும் வெள்ளையாடை  வெற்றி தேவி
துள்ளும் மானாய் விரைந்தே வருக!அல்லும் பகலும் அருந்தும் அருந்தமிழே!
அகிலத்தின் அமுதே  கலை மகளே!


ஆயக் கலை அரசி கலைவாணி
தேயாத நிலவாய் அருள்வாய் நீ!


 புதுவை வேலு

vendredi 7 octobre 2016

"மீண்ட சொர்க்கம்" (ஒரு நிமிடக் கதை) என்ன ஆச்சு! ஏன் வேலையை விட்டுட்டு இங்கே வந்துட்டீங்க!
இந்த கேள்விக்கான பதிலை தேடி தேடி தேய்பிறை நிலவாய் வாடியபடி வாசலில் வட்டமிட்டுக் கொண்டிருந்தான் வசந்த்.

வேலையில் இருக்கும் வரை மதிப்போடு மார்க் போட்டு மரியாதை செய்த சமூகம்
கை விட்டுப் போய் கைம்பெண்ணாய்
வந்தவளை பார்ப்பது போல்  ஏளனப் பார்வையால்....
பார்ப்பவர்களை காணும்போது,

 "அக்னிக்கு அரஸ்ட் வாரண்ட்" வாங்கி வந்தவர்களாகவே
வசந்த் கண்களுக்கு பட்டது.

ஒவ்வொரு நிலைப்பாட்டிற்கும் ஒருவிதமான காரண காரியங்கள் இருக்கத்தான் செய்யும்.

அடுத்து என்ன செய்வது என்று யோசித்தபடியே....
வலை தளம் சென்று,
பதிவுகளை படித்தபடியே இருந்தான்.
அப்போது அவனது கண்களில் பட்டது ஒரு தலைப்பு

அது!

பூமாலை வாங்கி வந்தான்! பூக்கள் இல்லையே"

ஆமாம்,

அருமை! என்று பின்னூட்டம் இட்டுவிட்டு பெருமையோடு பார்த்தான்
சுவரில் மாட்டி இருந்த அந்த வாசகத்தை.....

" இதுவும் கடந்து போகும்"


நம்பிக்கை நாதம் நறுமலராய் பூத்தது.

வசந்த்க்கு வசந்த கால வேலை மீண்டும் வராமலா போகும்?

வாழ்த்துகள் சொல்ல வருங்காலம் வரும்!

விரைவில்......

புதுவை வேலு

jeudi 6 octobre 2016

"நம்பிக்கை நாதம்"துயர் துடைக்கத் துணை எதற்கு?
தும்பிக்கைத்  துணை இருக்க எனக்கு!
பிளிறும் சக்தி எனக்குள்  இருந்து
களிறு என்ற பெயர் பெற்றேன்.

ஆண்மகன் அழுவது தகுமோ பிடியே!
அழுகை அல்ல இது! ஆனந்தக் கண்ணீர்
தொழுகை செய்தேன் இறைவனை வேண்டி
பழுதின்றி காவிரியை  பகிர்ந்து தருக!


நம்பிக்கை நாதம் நலம்  பெறவே
தும்பிக்கை இறைவா துணைசெய்!
 

புதுவை வேலு

mardi 4 octobre 2016

அருட்பெருஞ்சோதி வள்ளலார் 

ஒளிரும் ஒளிக்குள் ஒன்றான ஓங்காரம்
ஒலிக்கும்  திசையெட்டும் திரு அருட்பா
உளியோடு உறவாடும் கற் சிலையும்
களிப்பில் கரையாதோ ஓதுதலாலே!

துயர் நீக்கும் அருமருந்தே அருட்பா
பயிர் செழிக்க வரும்   நன்மழையே!
வயிறு பசித்திருக்க, விழி விழித்திருக்க,
மெய் தனித்திருக்க,  வாழியவே!  

வடலூர் வள்ளலார் தாள் வாழி
மடல் சிறக்க வரும் பா வாழி!
அணையா ஜோதி அருள் வடிவே
உனையே போற்றினோம் வாழியவே


புதுவை வேலு

lundi 3 octobre 2016

"வெண்மைப் புரட்சி வெட்கத்தில் சிவக்கட்டும்"

நீருக்கு நிழலாடை
உடுத்தியதோ?
நீல வண்ணம்.


வெள்ளி நிலவின்
வெளிச்சம் பட்டு
வெளிர்ந்ததோ?


இரு பறவைகள்...

தேகத்தின் ஆடை!
வெண்ணிறாடையாக!!!


இனி...

வெண்மைப் புரட்சி
வெட்கத்திலாவது
சிவக்கட்டும்.


புதுவை வேலு