மனதில் ....
ஆசை என்னும் குப்பைகள் சேர்ந்தால்?
பணம் என்னும்...
எட்டுக்கால் பூச்சி - எளிதில்
எட்டு அடுக்கு மாடி கட்டும்!!!
மடி சுரந்து பால் தரும்
பசுவின் காம்பினை....- கன்று!
மறப்பது அரிது.
குடியிருந்தக் கோயிலை
கும்பிட்டு தொழுவதற்கு....
இரு கைகளை- நமக்கு
இறைவன் தருவது இயல்பு
மனிதருள் சிலரோ-அதை
செய்வது அரிது!.....!
அரிதினும் அரிது!.
புதுவை வேலு