jeudi 30 avril 2015

"புதியதோர் உலகம் செய்வோம்"

'உழைப்பாளர் தினம்' உயர்க!!!





ழைப்பவர் உயர்வார் மேதினமே-ஈன
பிழைப்பு அது வேண்டாம் சொல்மனமே!
தழைக்கும் பயிர்போல் தரணியில்-நம்
'உழைப்பாளர்தினம்' உயர்க "வென்று !



ழைப்பவர் ஊதியம் உயர வேண்டும்
பிழையில்லா நிதியும் வளர வேண்டும்
அக்கிரமம் அநீதி அழிய வேண்டும்
உக்கிரமாய் உறுதி ஓங்க வேண்டும்

போராட்ட போர்அது போதும் தோழா!
தேரோட்ட மகிழ்வுஅது மலர்க தோழா!
கலகம் செய்யாது புதியதோர் உலகம்
காண்போம் வா! தோழா!



புதுவை வேலு 






 

உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம் (மே 1) நல்வாழ்த்துகள்"

நட்புடன்,
புதுவை வேலு

 


mercredi 29 avril 2015

"குறை ஒன்றும் இல்லை" (சிந்தனை கதை)

'ஓட்டை பானையும் ஒளிரும் பூவும்'








ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.
இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.
குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.
இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.
எஜமானே! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்
அதற்கு விவசாயி, “பானையே! நீ ஒன்று கவனித்தாயா
 நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்
இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது.
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது
அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால்,
 நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!
சிந்தனை: "மதி" தான் நமது மனதின் வைப்பு நிதி 
பகிர்வு; 

புதுவை வேலு


நன்றி: தமிழ் அறிவு கதை(todayindia)