இன்று! அக்டோபர் 1-ம் தேதி நடிப்புக்கு
இலக்கணம் வகுத்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பிறந்தநாள்.
இன்றைக்கும் வரலாற்று
சிறப்புமிக்க கதாபாத்திரங்களான,
கர்ணன்,
கட்டபொம்மன்,
பாரதி,
வ.உ.சி
போன்றவர்களை
நினைக்கும்போது,
நமது விழித் திரை
விலகியதும், வீர வசனம் பேசியபடி காட்சித் தருபவர் யார் தெரியுமா?
செவாலியே சிவாஜிதான் நமக்கு
காட்சி தருவார்! ஞாபகத்தும் வருவார். அந்தந்த கதாபாத்திரமாகவே
மாறி நடிக்கும் வாழ்வியல் கலைஞர் நடிகர் திலகம் அவர்கள்.
கால அகராதியில் ‘கி.மு., கி.பி’ என்று சொல்வதைப் போல், திரை உலக அகராதியில், நடிப்பை பொறுத்தவரை ‘சிவாஜிக்கு முன், சிவாஜிக்குப் பின்’ என்றுதான் சொல்ல
வேண்டும்.
எல்லோரும் நலம் வாழ
நான் பாடுவேன்
நான் வாழ யார் பாடுவார்’
என்று பியானோ
வாசித்துக்கொண்டே வாயசைத்து பாடிய நடிகர்
திலகம் அவர்களுக்கு, "தமிழக அரசு"
‘மணி மண்டபம்’ கட்ட முயற்சி எடுத்து அறிவித்திருப்பது அவரது பிறந்த
நாள் பரிசாகவே நாம் கருதி மகிழ்வோம். மணிமண்டப நாயகன் புகழ் என்றும் நிலைத்து
நிற்கும்.
சிவாஜி நடித்த மொத்தப் படங்கள் 301. இதில் தமிழ்ப் படங்கள் 270. தெலுங்கில் 9, ஹிந்தி 2, மலையாளம் 1, கௌரவத் தோற்றம் 19 படங்கள்!
சிவாஜி
நடிப்புக்கு படிப்பு
சொல்லி தந்த
"படிக்காத மேதை"
‘நாம் பிறந்த மண்’ணில்
நடிகர் திலகம்
பிறந்த நாள்
அக்டோபர் ‘முதல் தேதி’
"திருவிளையாடல்"
சிவன் அருளாலும்,
"திருமால் பெருமை"
நாராயணன் அருளாலும்,
‘படையப்பா’
பிரம்மா! அருளாலும்,
இவரது "கௌரவம்"
ஓங்கி நிற்கும்!
மண்ணில் மறையாது
புகழ் குறையாது !
அன்றும்! இன்றும்!
என்றும்!
"தெய்வ மகன்"
படத்தின்மூலம்,
ஆஸ்கார் விருதையே!
ஆச்சரியப் பட வைக்கத்
தெரிந்த
இவருக்கு! அரசியலில் மட்டும்,
நடிக்கத் தெரியாதது!
ஏனோ? தெரியவில்லை பராபரமே!!!
உணர்வுமிக்க நடிப்பின்
மூலம் நடிப்பின் இமயத்தை தொட்டவர்
சிவாஜி கணேசன் அவர்கள் என்பதில் மாற்றுக்
கருத்துக்கு இடமேது?
புதுவை வேலு
நன்றி:இணையம்/you tube