dimanche 31 décembre 2017

'மணிக்கதவம் தாழ் திறவாய்'

'வருகவே  ஆங்கிலப் புத்தாண்டு 2018'



அன்பு உள்ளங்கள் அனைவருக்கும்
அன்பின் இனிய....
"ஆங்கிலப் புத்தாண்டு 2018"
நல்வாழ்த்துகள்


நட்புடன்,
புதுவை வேலு





உள்ளத்தை தூர் வாரி
உயர்வினை காணும்
உன்னத தினமே...
உலகப் புத்தாண்டு!


வாழ்த்துப் பூக்களின்
வசந்தத்தை...
வழங்க  வருகவே
இனிய புத்தாண்டு!


பூவும் வலி அறியாது
பூவின் காம்பும் வலியறியாது
நற்சொல்லின் நறுமணமாய்
நாவில் மலர்கவே புத்தாண்டு!


அகிலத்தில் அறவே!
சோம்பலை நீக்கி...
ஆம்பலாய் பூக்கட்டும்
ஆங்கிலப் புத்தாண்டு!


உழைப்பை,  உயர்வை
அழைக்கும் ஆண்டாய்!
அன்பாய் அரும்பும்
அழகு புத்தாண்டு!


 ஒழுக்கமிகு கல்வியோடு
ஓழுகு! நலம் வாழ்வோடு
ஒளிர வருகவே!
ஒப்புயர்வோடு புத்தாண்டு!


அனுபவ வறுமை அறவே நீங்க
அறிவுடையோர் சொல்
செறிவுடன் கேட்க...
வருகவே புத்தாண்டு!


சிறுமை தவிர்த்து
பெருமை குவித்து
உருகும் அன்பாய்
வருகவே புத்தாண்டு!

-புதுவை வேலு