வாழ்த்துக்கள்
தரணி போற்றும் தமிழர் திருநாளில்
திருவள்ளுவர் தினம்
மாட்டுப் பொங்கல் - தினத்தில்
வலைப் பூ நண்பர்கள் அனைவருக்கும்குழலின்னிசை வாழ்த்து இசை இசைக்கின்றது.
அனைத்து அன்புள்ளங்களுக்கும்
திருவள்ளுவர் தினம்
மற்றும்
மாட்டுப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நன்றியுடன்/நட்புடன்,
புதுவை வேலு
திருவள்ளுவர் தினம்
வாய்மையை போதித்த நம் தெய்வப் புலவன் வள்ளுவனுக்கு
மத்திய அரசு சிறப்பு செய்து இருப்பது அதாவது,
'திருவள்ளுவர் பிறந்த தினம், தேசிய அளவில் கொண்டாடப்படும்'
என, மத்திய அரசு அறிவித்திருப்பது.
வரவேற்று பாராட்டத்தக்க அறிவிப்புகளில் ஒன்றாகும்.
இதை அறிவித்த மத்திய அரசுக்கு தமிழ் வலைதள படைப்பாளர்கள் /பதிவாளர்கள் மற்றும் வாசகர்கள் சார்பில் நமது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்வோமாக! மேலும் « திருவள்ளுவர் தினத்தை » சிறப்பு செய்யும் வகையில்
திருக்குறளை தேசிய நுாலாக அறிவிக்க வேண்டுவோமாக !
குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
குறள் 396:
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.
குறள் 400:
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
குறள் 291:
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
குறள் 183:
புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்குறள் 271:
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
மாட்டுப் பொங்கல்
அனைவரது வாழ்விலும் இரண்டறக் கலந்துவிட்ட கால்நடையான
பசு/காளைகளுக்கு ,
பெருமை சேர்ப்போம்.
"மாட்டுப் பொங்கலை" மகிழ்வுடன் கொண்டாடுவோம்.
I)
தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு
சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசு மாடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு
பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு
பூப்போலே வைத்துன்னை காப்பதென் பாடு
பாடல் :வாலி
II)
இணங்காதோர் மனம் கூட இணங்கும்
நீ எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும்
இணங்காதோர் மனம் கூட இணங்கும்
நீ எதிர் வந்தால் எதிர்காலம் துலங்கும்
வணங்காத...ஆ..... வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும்
வணங்காதோர் சிரம் உன்னை வணங்கும்
உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும்
உன்னை வலம் வந்தால் நலம் எல்லாம் விளங்கும்
வண்ணக் கோமாதா...
கோமாதா எங்கள் குலமாதா
குலமாதர் நலம் காக்கும் குணமாதா
புவி வாழ்வில் அருள் பொங்கும் திருமாதா
வண்ணக் கோமாதா..
பாடல்: கண்ணதாசன்
அனைவரது வாழ்விலும் இரண்டறக் கலந்துவிட்ட கால்நடையான பசு/காளைகளுக்கு ,
பெருமை சேர்ப்போம்.
"மாட்டுப் பொங்கலை" மகிழ்வுடன் கொண்டாடுவோம்.
நன்றியுடன்/நட்புடன்,




