vendredi 26 décembre 2014

படம் சொல்லும் பாடம் (குற்றம்)

படம் சொல்லும் பாடம்











 

குற்றம்

 





குண்டூசி அளவிலாவது 
 

குற்றம் இழைக்காத

குமரனும் இல்லை!

குமரியும் இல்லை!

குடுகுடு கிழவனும் இல்லை!

குடுகுடு கிழவியும் இல்லை!






குழந்தையைத் தவிர!


 

 

 

 

 


(விதி விலக்கானோர் விலகி நிற்க!)


புதுவை வேலு

mercredi 24 décembre 2014

கிறிஸ்துமஸ் திருநாள்




கிறிஸ்துமஸ் திருநாள்

 

 

அன்பு தாழ்மை தூய்மை ஈகை

நான்கு வகை நற்குணங்களை

நமக்கு உணர்த்தும் உன்னத நாள்

கிறிஸ்துமஸ் திருநாள்






இடையருக்கு இறை தூதர் அறிவித்தார்

இறை இயேசு இவ்வுலகில் அவதரித்தார்

வானத்தில் விண்மீன்  சாட்சியாய் தோன்றியதே

ஆடிடைக் கூட்டத்தில் மேய்ப்பர் தோன்றினாரே!





மாட்டுத் தொழுவத்தில் மரி அன்னை

இறைவன் இயேசுவை பெற்றெடுத்தார்

அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க!

ஆண்டவர் உம்மோடு இருக்கிறார் வாழ்க!






குழந்தை இயேசுவின் சொரூபத்தை

குடிலில் வைத்து புனிதம் செய்வோம்

மனிதம் பேணும் நல்மனிதர் ஆவோம்!

 

நத்தார் நாளில் மெழுகாய் மனமுருகி

திருப்பலி செய்து பரிசுத்தம் ஆவோமாக!

ஆமென்!!!


 

புதுவை வேலு