'இன்று ஒரு தகவல்'
இன்று உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
சக குழந்தைகள் புத்தக பையுடன் பள்ளி செல்லும் போது,
சில குழந்தைகள் மட்டும் வேலைக்கு செல்கின்றனர். உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
சில குழந்தைகள் மட்டும் வேலைக்கு செல்கின்றனர். உலகில் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் ஜூன் 12ம் தேதி உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
உலகில் 21 கோடி பேர் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர். இதில் 11 கோடி பேர்
பாதுகாப்பற்ற கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச தொழிலாளர் அமைப்பின்
அறிக்கை நன்கு தெரிவிக்கிறது.
2016ம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர் முறையை அறவே ஒழிக்க வேண்டும் என்றும்
இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது குற்றமாக
உள்ளது. சில குழந்தைகள் பள்ளி முடிந்தவுடனும் பகுதி நேரமாகவும் வேலைக்குச்
செல்கின்றனர். சிலர் பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கின்றனர். இவர்கள் குழந்தை
தொழிலாளர்களாக கருதப்படமாட்டார்கள். ஆனால் கல்வி, சுகாதாரம், அடிப்படை உரிமை, உடல், மனம்,
சமூகம் ஆகியவை பாதிக்கும் வகையில் குழந்தைகளை வேலையில்
ஈடுபடுத்துவது குற்றம் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ளது.
இந்திய அரசும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது குற்றம் என தெரிவித்துள்ளது.
இந்திய அரசும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பணியில் அமர்த்துவது குற்றம் என தெரிவித்துள்ளது.
உலக குழந்தை தொழிலாளர் எண்ணிக்கையில் 12 சதவீதம் பேர் இந்தியாவில் உள்ளனர்.
இது இந்தியாவில் இப்பிரச்னை எந்தளவு மோசமாக உள்ளது என்பதையே காட்டுகிறது.
விவசாயம், தீப்பெட்டி,
செங்கல் சூளை, டெக்ஸ்டைல், ஹோட்டல்கள் உள்ளிட்ட,
தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் ஆகியவற்றில் குழந்தைகளை
வேலைக்கு வைக்கின்றனர். இவர்கள் குறைந்த ஊதியத்தில், விடுமுறை
இன்றி ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் மேல் வேலை பார்க்கின்றனர். பெரும்பாலான
குழந்தைகள் குடும்ப சூழ்நிலை காரணமாகவும், சிலர்
வற்புறுத்தல் காரணமாகவும் இந்த வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பட உதவி: கூகுள்
கல்வி அவசியம்: அனைத்து குழந்தைகளும் கல்வியறிவு பெறுவதை ஒவ்வொரு அரசும் உறுதி செய்ய வேண்டும். சில குழந்தைகள் குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்கின்றனர். முதலில் இக்குழந்தைகளின் பெற்றோர்களின் வருமானத்துக்கு அரசு சிறப்பு திட்டங்களை வகுக்க வேண்டும். வறுமை ஒழிந்து, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வசதி கிடைத்தால் குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்து விடலாம்.

அரசு அரசியலாய் பார்க்காமல், அவசியமாய் பார்த்தால், நிச்சயம் பலன் கிடைக்கும்.
பார்ப்பார்களா? பார்க்க வேண்டும் என்பதே நமது வேண்டுதல் பார்வை!!!
தகவல் பகிர்வு:
புதுவை வேலு
நன்றி: (oneindia/DMR)
வேதனை மிகுந்த விடயங்கள் நண்பரே... நினைவு கூர்ந்தமைக்கு நன்றி
RépondreSupprimerமயிலிறகால் வருடிவிடும் மனதைத் தொடும் கருத்து தந்தமைக்கு நன்றி! நண்பரே!
Supprimerவாக்கின் சிறப்பை சொல்லவும் வேண்டுமோ?
நட்புடன்,
புதுவை வேலு
//அனைத்து குழந்தைகளும் கல்வியறிவு பெறுவதை ஒவ்வொரு அரசும் உறுதி செய்ய வேண்டும்//
RépondreSupprimerநல்ல கருத்துதான். ஆனால் அரசுக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லையே!
அரசின் நேரத்தை அரசியல் அல்லவா?
Supprimerபங்கு போட்டுக் கொள்கிறது.
சிந்தித்து செயல்படும் அரசு என்று அமையும் என்பதை? எவர்தான் அறிவார் அய்யா?
நட்புடன்,
புதுவை வேலு
"உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் என்று சொல்லி கொண்டு குழந்தையை ஒழிப்பார்கள் ஆட்சியாளர்கள்..த.ம3
RépondreSupprimerதோழரே!
Supprimerதங்களது சவுக்கடி சத்தம் இங்கும் கேட்கிறதே?
ஊமைக்காயமாய் இருக்குமோ?
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நியாயமான ஆதங்கம். சினிமாவில் நடிக்கும் குழந்தைகள் கூட, என்னதான் காசு கூட வந்தாலும், குழந்தைத் தொழிலாளர்தானே? குழந்தைமை, இளமையைத் தொலைக்கிறார்களே...
RépondreSupprimerஇளமையைத் தொலைக்கிறார்களே... தங்களது வேதனை வேரின் வாசத்தை நுகர்ந்தேன் நண்பரே!
Supprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
நியாயமான ஆதங்கம். சினிமாவில் நடிக்கும் குழந்தைகள் கூட, என்னதான் காசு கூட வந்தாலும், குழந்தைத் தொழிலாளர்தானே? குழந்தைமை, இளமையைத் தொலைக்கிறார்களே...
RépondreSupprimerநன்றி! நண்பரே!
Supprimerநட்புடன்,

வறுமை ஒழிந்தால்தான் இது ஒழியும்!
RépondreSupprimerகல்லாமை இல்லாமை இல்லாத நிலையே வறுமையை வறட்சி ஆக்கும் வழி அய்யா!
Supprimerவருகைக்கும் வாக்கிற்கும் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பார்க்க வேண்டும் என்பதே... அதுவும் உடனடியாக...
RépondreSupprimerஉடனடித் தீர்வை முன்மொழிந்தீரே வார்த்தைச் சித்தரே!
Supprimerசிறப்பு!
நட்புடன்,
புதுவை வேலு
கொடுமையிலும் கொடுமை வறுமை. அதுவும் குழந்தைகளின் நிலையினை நினைத்துப் பார்க்கும்போது மிகவும் வேதனையாக உள்ளது. கல்வி நிலை மாற்றம், பணியாற்றும் இடங்களிலிருந்து முற்றிலும் விடுவிப்பு போன்றவை செயல்படுத்தப்பட்டால்தான் வெற்றி கிடைக்கும்.
RépondreSupprimerமாற்றுக்கருத்திற்கு இடமில்லாத கருத்தினை, அழகுற பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி முனைவர் அய்யா அவர்களே!
RépondreSupprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
படிக்கும் வயதில்
RépondreSupprimerவயிற்றுக்கு உழைப்பதா
கொடுமை நண்பரே
இந்நிலை மாறவேண்டும்
தம +1
நன்றி! நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
வறுமையை நினைத்து பயந்து விடாதே திறமை இருக்கு மறந்து விடாதே ..இது குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள் உணர வேண்டிய பாடல் :)
RépondreSupprimerநன்றி! நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
இப்போதெல்லாம், தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் குழந்தைகள் அதிகமாக வருகின்றனர். இதுவும் கூட ஒரு வகையான குழந்தைகளைத் துன்புறுத்தலே. பிஞ்சுமனத்தின் அந்த இன்னொசன்ஸ் தொலைந்து விடுகின்றது. வேதனையாக இருக்கிறது கட்டுரையை வாசிக்கும் போது....மும்பையில் சேரியில் குழந்தைகள் பெட்றோல் பங்கில் வேலை செய்து படிக்காமல் வயிற்றை நிரப்ப வெண்டி....பசியை மறக்க அந்தப் பெட்றோலை சுவாசித்து ஒருவித மான மயக்கத்திற்குத் தங்களை உட்படுத்தியும் கொள்கின்றார்கள் போதை போன்று....என்ன செய்ய அரசு??ஹஹஹ் வெத்து வேட்டு....
RépondreSupprimerநன்றி! நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு