படம் சொல்லும் பாடம்
பனிக் கரடி
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்!
உரைப்பார் உரைக்காமல்! உறைபனியும் உருகும்!
மெழுகாய் உருகாமல் அழகாய் காக்கின்றேன்
பகலவன் கண்பட்டு ஆவியாய் போகாது!
பனியொடு படர்ந்தே பனிக்கரடி ஆனேன்!
அணிகலன் அணியாது தனியே போனேன்!
துணிமணி வேண்டாம் துணிவே போதும்
பனிபோல் உருகும் உள்ளமே வேதம்!
புதுவை வேலு
பட உதவி: கூகுள்
மனிதத் தலையின் பனிக்கரடியா ,எதுவோ ? உங்களின் கவிதை என் தலையில் ஏறியது :)
RépondreSupprimerவாருங்கள் பகவான் ஜி!
Supprimerகவிதை தலைக்கு ஏறலாம்!
ஆனால்?
கர்வம்தான் தலைக்கு ஏறக்கூடாது!
என்று, எனக்கு பக்தி பாடம் எடுத்தவரே
பகவான்(ஜி)தானே?
நன்றி ஜி!
நட்புடன்,
புதுவை வேலு
படம் சொல்லிய கவிதை அருமை
RépondreSupprimerதம +1
பனிச்சாரலில் நனைந்த மகிழ்ச்சி!
Supprimerவருகையும், வாக்கும் அளித்து சிறப்பு செய்தது!
நன்றி சகோ!
நட்புடன்,
புதுவை வேலு
கவிதை அருமை நண்பரே
RépondreSupprimer(உடனே படகை அனுப்பி காப்பாற்றாமல் கவிதை எழுதிக்கொண்டு இருப்பது முறையற்றது)
பனிக் கரடியின் தலை மேலே
Supprimerவிமானம் பறந்ததை கில்லர் ஜி காண வில்லையா?
அது உதவும் விமானம் நண்பரே!
வாக்கு தேக்கு போல் மணம் கமழ்கிறது நண்பரே!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
வணக்கம்
RépondreSupprimerஐயா.
படத்துக்குஅமைவாக வரிகள் அரமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி த.ம4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
"படத்துக்குஅமைவாக வரிகள் அரமையாக உள்ளது"
Supprimerகவிஞரே உமது கருத்து பட கவிதைக்கு அரணாகவே உள்ளது அய்யா!
வருகை சிறக்க வேண்டுகிறேன்.
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பனிக்கரடியின் படமும் ஆக்கமும் மனதைக் குளிர்வித்தன. மகிழ்ச்சி.
RépondreSupprimerவருக வருக வலைச்சரம் ஆசிரியரே!
Supprimerதங்களது வருகை மார்கழி குளிரை மனதுக்குள்
கொண்டு வந்தது. மிக்க மகிழ்ச்சி! அய்யா!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
பனியின் குளுமை கவிதையில் கண்டேன்
RépondreSupprimerஇனிமை தந்திட எடுத்ததை விண்டேன்
படத்தோடு கவிதையையும் இரசித்தேன்!
RépondreSupprimerகவிதை அருமை...
RépondreSupprimer//பனிபோல் உருகும் உள்ளமே வேதம்!//
RépondreSupprimerஉன்மை