vendredi 12 juin 2015

'ஏமாற்றம்' (சிறுகதை)







ஒவ்வொரு முறையும் அலைபேசியில் அழைக்கும் போதெல்லாம் அம்பியின் கைப்பேசி அணைக்கப்பட்டே இருந்தது!
அடேங்கப்பா! எத்தனை முறைதான் அழைப்பது?
சரி! மாலை வரை பொறுத்துப் பார்ப்போம், லைனில் அவர் வராவிடில் வண்டியை வளசரவாக்கத்திற்கு விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்தபடியே முனங்கினார் கோபிநாத்!

மாலை, வீட்டின் காலிங்பெல் சத்தம் !
கதவு திறக்கப்படுகிறது!
பொங்கிவரும் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அனுசரித்து போவதுதான் நல்லது! என்று முடிவெடுத்தபடியே, பொய் சிரிப்போடு உள்ளே சென்று அமர்கிறார் கோபி!

என்னப்பா? என்ன ஆச்சு?
எப்பத்தான் தரப் போற?

அது வந்து!!

என்னப்பா வந்து போயின்னு இழுக்கறே ?

இதோ பார் ! கோபி!
உனக்கு வேற எங்காவதுதான் பார்த்து தரணும்?

ஏன்? என்ன ஆச்சு?

 ஏன் தெரியுமா? 

என்னோட பையன், அவனோட பக்கத்து ஆபீசில் வேலை பார்க்கிற பெண்ணை, திடீர் திருமணம் பண்ணிக்கிட்டான்!!
 
அதனால்தான் உன்கிட்ட நான் பேசிய படி, என் பையனோட 

"ஜாதகத்தை"  உன்னிடம் கொடுக்க முடியல! மன்னித்துவிடு!
இனி உனக்கு அது தேவைப் படாது என்றார்
தலை கவிழ்ந்த படி!
 

புதுவை வேலு

29 commentaires:

  1. புதுமண தம்பதியினருக்கு ஏதோ அவர்கள் விருப்பப்படி பிராப்தம் அமைந்துள்ளது. மகிழ்ச்சிதான்.

    பெரியவர்களுக்கு மட்டுமே இதில் ஏமாற்றம். தலைப்பு அவர்களுக்காகவோ ?

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் வைகோ அய்யா!
      ஏமாற்றம் நேற்றைய தலைமுறையினருக்கு
      மாற்றம் இன்றைய தலை முறையினருக்கு அல்லவா?
      வருகைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. வணக்கம்
    ஐயா
    படித்து மகிழ்ந்தேன்பகிர்வுக்கு நன்றி. த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி கவிஞர் அவர்களே!
      பாராட்டுக்கும், வாக்கிற்கும் மனதுக்கு இனிய நன்றி

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. மிகச் சுருக்கமான எனினும்
    சிறப்பான சிறுகதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி கவிஞர் அவர்களே!
      பாராட்டுக்கும், வாக்கிற்கும் மனதுக்கு இனிய நன்றி

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. Réponses
    1. இனிய நன்றி

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. ஏமாற்றம் ஒரு பக்கம் மட்டுமே.

    RépondreSupprimer
    Réponses
    1. இனிய நன்றி

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. Réponses
    1. நன்றி வார்த்தைச் சித்தர் அவர்களே
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. விதி இப்படி எழுதி விட்டார் பகவான்(ஜி) வாழ்க வளமுடன்...

    RépondreSupprimer
    Réponses
    1. விதியை மதிகொண்டு எழுதுபவர் ஆயிற்றே பகவான் ஜி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. அருமையான சிறு கதை சகோ. ஏமாற்றம் பெரியவர்களுக்கு மட்டும் தான். திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு மகிழ்ச்சி தான். நாம் அவர்களை வாழ்த்துவோம்.

    RépondreSupprimer
    Réponses
    1. சிறுகதையை சிறப்பித்து கருத்து தந்தமைக்கு நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. சிறுகதை சூப்பர் சகோ, வாழ்த்துக்கள். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. சிறுகதையை சிறப்பித்து கருத்து தந்தமைக்கு நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. சுருக் சிறுகதை... வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன் அய்யா! நன்றி

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. சிறப்பான கதை! பாராட்டுக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. பாராட்டுக்கு நன்றி நண்பர் தளிர் சுரேஷ் அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. அருமையான கதை! எதில்பாரா திருப்பம்!

    RépondreSupprimer
    Réponses
    1. திருப்பம் தரும் வருகை புலவர் அய்யாவே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. கொடுத்த பணத்தை திருப்பித் தரவில்லை போலும் என நினைத்தபோது நினைக்காத ஒன்றை சொல்லி எங்களை ஏமாற்றிவிட்டீர்கள். கதையை இரசித்தென்!

    RépondreSupprimer
    Réponses
    1. கதையின் ட்வீஸ்ட் அதுதானே அய்யா!
      ஜாககமா? பணமா?
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. #விதி இப்படி எழுதி விட்டார் பகவான்(ஜி) #
    ஜாதகம் பார்க்காமல் கல்யாணம் செய்து கொண்டதில் பாதகம் ஏதுமில்லையே :)

    RépondreSupprimer
  15. ஜாதகம் பார்க்காமல் காதல் கல்யாணம் உண்டு!
    பாதகம் இல்லாமல் காதல் கல்யாணம் இல்லை பகவான் ஜி
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  16. இனிய நன்றி

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer