dimanche 7 juin 2015

"வாழ்த்து இசை இசைப்பீரே!"


வாழ்த்து இசை இசைப்பீரே!




அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
நல் வணக்கம்!

"குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!

உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.


ஆம்! 
கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.

சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்குஉள்ளன்போடு உங்களது நல்லாசியைத் தாருங்கள்.


வெள்ளை அறிக்கை:

குழலின்னிசை துவக்கம்: 08/06/2014

ஓர் ஆண்டில் (08/06/2014 - 07/06/2015), வெளிவந்த பதிவுகள்: 232 பதிவுகள்.

ஓர் ஆண்டில் (08/06/2014 - 07/06/2015)

வலைத்தளம் (Blog only) பார்வையாளர்களின் எண்ணிக்கை: 40,101

தமிழ் மணம் தர வரிசை (traffic rank):  6

சிறப்பு வாய்ப்பு: " வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பு"

கூகுள்+ பார்வையாளர்கள் எண்ணிக்கை: 1,37,701





நண்பர்களே!

உங்களது பேராதரவு என்னும் அலையே!

எனது வெற்றிக்கான விலை! என்பதை நான் நன்கு அறிவேன்.

உங்கள் அனைவருக்கும் எனது இனிய இதய நன்றி!


முதல் ஆண்டு நிறைவு பெற்று இரண்டாம் ஆண்டில் பாதம் பதிக்கும் "குழலின்னிசை"வலைப்பூவானது! மேலும், மேலும், சிறப்பான தமிழ் பணியினை, தரமுடன் செய்து தரணியில் வலம் வருவதற்கு, உங்களது உயர்ந்த உள்ளார்ந்த அன்பினையும்,ஆதவையும் அள்ளித் தந்து குழலின்னிசைக்கு சிறப்பு சேர்க்க வேண்டுகிறேன்!

நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு






மழலை மனம்










அகவை ஒன்று ஆனது -அகம்
அன்பால் மகிழ்ச்சி காணுது!
குழல் இன்னிசை கீதம் பாடுது,
மழலை மனம் மகிழுது!






அம்மா! என்று அழைத்ததுமே -அவள்
அகிலத்தை உயர்த்தி உயர்வித்தாள்!
அகரத்தை அன்பின் சிகரமாக்கி -அவள்
அருந்தமிழை அழகுற நேசித்தாள்!






படிப் படியாய் உயர எண்ணி
படிக்கட்டு ஏறுகிறேன் நான்!
இடர் தரும் இன்னல்கள் இனி!
இல்லாது போக வேண்டும்!




பாராட்டு வேண்டி நின்றேன் -வாழ்த்து
தேரோட்டம் வேண்டி நின்றேன்!
நீரோட்டம் போல் நிலைபெற்று -தமிழ்
சீரோடு சிறப்போடு வாழிநன்று!

புதுவை வேலு

 

 





 

89 commentaires:

  1. விடிவெள்ளி என்னும் புள்ளியாக தோன்றிய குழல் இன்னிசை இன்று பிரகாசமான ஒளி இழைகளுடன் பன்முக தகவலை சுமந்து, எதிர்நீச்சல் போட்டு, வெற்றிகரமாக முதல் பிறந்தநாள் கொண்டாடும் யாதவன் நம்பிக்கு சீர்மிகு சிறப்புடன் வாழ்த்துக்கள்.
    பலவகை தலைப்புகளை தேர்வு செய்து, அதற்கேற்ப தகவலை கோர்த்து, படங்களை தேர்தெடுத்து, வலைபூவில் பரிமாறி, வலைச்சரத்தில் முத்திரை இட்டு, நல்ல வாசகர்களுடன் வலம் வரும் புதுவை வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    குழல் இன்னிசை சிறக்க, குழல் ஊதுவோம், கூத்தாடி கொண்டாடுவோம்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. முதலாம் ஆண்டு நிறைவினை பாராட்டி முதல் நபராக வருகை புரிந்து
      குழலின்னிசையை வாழ்த்தி வழி மொழிந்தமைக்கு அன்பின் வேலுவின் அன்னைத்தமிழ் நன்றி! நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. நல்வாழ்த்துக்கள்..

    மேலும் பற்பல பதிவுகளின் வழி - சிறப்புகளை எய்துதற்கு மனமார வாழ்த்துகின்றேன்.. வாழ்க நலம்!..

    RépondreSupprimer
    Réponses
    1. நல்லாசி வழங்கிய அருளாளர் அய்யாவே!
      அகம் மகிழ்ந்தேன். வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அதற்குள் ஒரு வருடமா ?உங்களின் வளர்ச்சியைக் கண்டு வியக்கிறேன் ,மேலும் வளர வாழ்த்துகள்:)

    RépondreSupprimer
    Réponses
    1. வியப்பதற்கு ஒன்றும் இல்லை நண்பரே!
      இந்த சிறிய விதை மண்ணூன்றி பின் மலராய் மலர்வதற்கு
      பகவானின் (ஜி)சூரிய ஒளி அவசியம்! என்பதை நானறிவேன்!
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. மென்மேலும் வளர்ந்து பல சிறப்புகளை பெற மனதார வாழ்த்துகிறேன் நண்பரே,,,,
    வாழ்க வளமுடன்
    தமிழ் மணம் 3

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசையை காற்றில் கொண்டு சேர்த்து, அனைவரது செவிகளுக்கும்
      நல்லிசை நல்க நற்கருத்து தந்த தங்களை என்றும் மறவேன் கில்லர்ஜி அவர்களே!
      வாழ்த்தொலி கேட்டேன் மிக்க மகிழ்ச்சி!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. சிறப்புகள் தொடரட்டும்...என வாழ்த்துகிறேன்.

    தம 1

    RépondreSupprimer
    Réponses
    1. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோ!
      நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. வேலு அவர்களே...

    நேற்று ஆரம்பித்தது போலிருக்கிறது....

    தினந்தோறும் பதிவுகளுடனான வலைப்பூ என்பது கடினமான பணி. அதனை அர்ப்பணிப்புடன் ஆத்மார்த்தமாய் செய்யும் நீங்கள் வலைப்பதிவராய், மேன்மேலும் பல உயரங்களை தொட மனப்பூர்வமாய் வாழ்த்துகிறேன்.

    நன்றி
    சாமானியன்

    RépondreSupprimer
    Réponses
    1. "தொட்டணைத் தூறும் மாந்தர்க்கு"
      வள்ளுவனாய் வந்து வாழ்த்தி தொட்டு துவங்கி வைத்த வலைத்தளம் குழலின்னிசை என்பதை இவ்வேளையில் நினைவு கொள்கிறேன் நண்பரே!
      வருகைக்கு நன்றி! வாழ்த்திற்கு சிறப்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூவின் முதலாம் ஆண்டு நிறைவுக்கு மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

    படங்களும் பாடல்களும் பிரார்த்தனை வேண்டுகோள்களும் அருமை.

    ஓராண்டில் 233 பதிவகள் ! :) மென்மேலும் வெற்றிபெற வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசை மென்மேலும் வெற்றிபெற தங்களது அன்பும் ஆதரவும் என்றும் வேண்டும் வலைச்சரம் ஆசிரியர் அய்யா அவர்களே! வாழ்த்தினை வழங்கி சிறப்பித்தமைக்கு அன்பு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. நண்பர் புதுவை வேலு,

    இன்னும் உங்கள் வலைப்பூ வளர வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசையை வாழ்த்த ஒரு இசை பெட்டகம் விரைந்தோடி, நாடி வந்து சிறப்பித்தது வெகு பொருத்தம்! தங்களது அன்பு வாழ்த்திற்கு மிக்க நன்றி காரிகன் அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    ஓராண்டு நிறைவுக் கவிதை மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது மனமார்ந்த நல்வாழ்த்திற்கும், நல்வாக்கிற்கும் நல்கினேன் நன்றியினை! நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. மிகவும் மகிழ்ச்சி... மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்...

    RépondreSupprimer
    Réponses

    1. வார்த்தைச் சித்தரின் பாராட்டும் வாக்கும் பெருமை!
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. ஓராண்டு நிறைவு செய்யும் தங்களது வலைப்பூ மென்மேலும் வளர மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தொடர்ந்து தங்களது பதிவுகளை வாசிப்போம், எழுதுங்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. முனைவர் அய்யாவின் குழலின்னிசை வாசிப்பை மிகவும் நேசிக்கிறேன் அய்யா!
      பாராட்டி சிறப்பித்தமைக்கு சிறப்பு நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. வாழ்த்துக்கள் நண்பரே
    வாழ்த்துக்கள்
    உங்களின் எழுத்துலகப் பயணம்
    தொடரட்டும்
    சாதனைகள் பல படைக்கட்டும்
    நன்றி நண்பரே
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. "உங்களின் எழுத்துலகப் பயணம்
      தொடரட்டும்
      சாதனைகள் பல படைக்கட்டும்"
      தங்களது அன்பு வாழ்த்தினை அகம் மகிழ்ந்து ஏற்கின்றேன் நண்பரே! நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. வெற்றிகரமாக 232 பதிவுகளை வெளியிட்டு தமிழ்மணத்தில் 6 ஆம் இடத்தைப் பிடித்து முதலாண்டைக் கடந்து இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் உங்களுக்கு மனமுவந்த பாராட்டுக்கள்! வரும் ஆண்டில் முதலிடத்தை அடைய வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது வாழ்த்து பலிக்க துவங்கி விட்டது அய்யா!
      தமிழ்மணம் ஆறாவது இடத்திலிருந்து ஐந்தாவது இடம் இன்று கிடைத்துள்ளது. குழலின்னிசையை ஆசிகூறி வாழ்த்தியமைக்கு நன்றி அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. என்றும் என் ஆதரவும் வருகையும் உண்டு நண்பரே...மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!! த.ம 10

    RépondreSupprimer
    Réponses
    1. தோள் கொடுத்து உதவும் வலையுலகம் தோழரே!
      வாழ்த்தினை வரவேற்று மகிழ்கின்றேன்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. இனிய நல்வாழ்த்து(க்)கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. இனிய வாழ்த்துகளை இனிதுவந்து அளித்த ஆஸ்திரேலியா அன்பரே
      அன்பு பாராட்டினை பணிவன்போடு ஏற்கின்றேன். நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. முதலாம் ஆண்டு நிறைவுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் !! இன்னும் நிறைய பதிவுகள் எழுத வாழ்த்துக்கள் !!

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களை போன்றோரின் அன்பும் ஆதரவும் இருக்கும்வரை படைப்புகள் தொடரும் தொய்வில்லாமல் சகோதரி!
      குழலின்னிசையின் நலம் விரும்பி தாங்கள் என்பதை நான் நன்கறிவேன்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. ஆண்டு ஒன்று ஓடியதாம் -வலைப்பூ
    ஆதரவு நாளும் கூடியதாம்
    வேண்டி மேலும் தேடியதாம்-அதனை
    விளம்பிட அறிக்கையை நாடியதாம்

    குழலின் இசையை ஐயன்தன்-ஓதிய
    குறளின் ஒப்பிட ஐயன்முன்
    மழலை இனிதென சொன்னாரே-அக்
    மழலும் குழலும் இந்நாளே
    யாதவன் நம்பி ஆனாரே--பலரும்
    இசைத்திட விரும்பும் தேனாறே
    ஆதவன் போன்றே நாள்தோறும் -வந்து
    அளித்திட பதிவு வாழ்துகிறேன்

    RépondreSupprimer
    Réponses
    1. "ஆதவன் போன்றே நாள்தோறும் -வந்து
      அளித்திட பதிவு வாழ்துகிறேன்"
      இந்த கவிதை வரிகளை காண்பதற்கு ஆதவனுக்கும் அருள் வேண்டும் புலவர் அய்யா அவர்களே!
      நினைவில் நிற்கும் கவிதையை பாராட்டாய் வடித்தமைக்கு
      புலவர் அய்யா அவர்களே உம்மை சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் என்றும் உம் வாழ்த்தினை வேண்டி!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  18. இத்தனை பதிவுகளை அயராமல் கொடுத்திருக்கும் தங்களின் சுறுசுறுப்பும் உற்சாகமும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது! சென்ற வருடம் பிறந்த குழந்தை கம்பீரமாகவே நடக்க ஆரம்பித்து விட்டது! மேன்மேலும் வளர மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. "சென்ற வருடம் பிறந்த குழந்தை கம்பீரமாகவே நடக்க ஆரம்பித்து விட்டது! மேன்மேலும் வளர மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துக்கள்!"

      நன்றி சகோதரியே!
      இந்த குழலின்னிசை குழந்தையை "வலைச்சரம் "வாசலில்
      நடை பயில செய்தது தாங்கள் அல்லவா?
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  19. தளிர் நடைபோட்டு, இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கும் குழலின்னிசை மென்மேலும் வளர்ந்து நூறாண்டை எட்டிப்பிடிக்க எங்களின் இனிய வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. "தளிர் நடைபோட்டு, இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கும் குழலின்னிசை மென்மேலும் வளர்ந்து நூறாண்டை எட்டிப்பிடிக்க எங்களின் இனிய வாழ்த்துகள்"
      .
      தளிரை எட்டியபடி குழலின்னிசை குழந்தையின் படம் பதிவில் இருப்பதை நினைவூட்டியமக்கு நன்றி நண்பரே!
      வாழ்த்து வசந்தம்! வருகை சிறப்பு!

      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  20. தளிர் நடைபோட்டு, இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கும் குழலின்னிசை மென்மேலும் வளர்ந்து நூறாண்டை எட்டிப்பிடிக்க எங்களின் இனிய வாழ்த்துகள்.

    RépondreSupprimer
  21. தளிர் நடைபோட்டு, இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கும் குழலின்னிசை மென்மேலும் வளர்ந்து நூறாண்டை எட்டிப்பிடிக்க எங்களின் இனிய வாழ்த்துகள்.

    RépondreSupprimer
  22. வணக்கம்
    ஐயா

    தத்தி தத்தி நடந்து இப்போது எழுந்து நிமிர்ந்துநிக்கும் வயது கண்ட தங்களின் வலைப்பூ மிக்க மகிழ்ச்சியான தகவல் ஐயா... இன்னும் பல 100 பதிவுகள் மலர எனது வாழ்த்துக்கள்.த.ம 12


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசையின் வளர்ச்சியில் பங்கேற்கும் கவிஞர் ரூபன் அவர்களே!
      தங்களது வாழ்த்தும் பாராட்டும் பலம் சேர்க்கட்டும் நாளும் நலமோடு!
      நன்றி நண்பரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  23. தொடர்ந்து ஒலித்து எங்கள் மனம் மயக்கட்டும் இன்னிசை!

    RépondreSupprimer
    Réponses
    1. மனம் மயக்கும் மங்கல இசையை நாளும் இசைக்கும் குழலின்னிசை!
      கேட்டு இன்புற வேண்டுகிறேன் சென்னை பித்தரே!
      வாழ்த்தும் பாராட்டும் அழகு ஏற்கின்றேன்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  24. படங்கள் மிகப் பொருத்தம். ஓராண்டு முடித்து இரண்டாமாண்டில் தடம் பதிக்கும் உங்கள் தளம் வாழ்க, வாழ்க, வாழ்கவே.

    RépondreSupprimer
    Réponses

    1. "சாமியின் மன அலைகள்" வாழ்த்தி சிறப்பித்ததை பெரும்பேறாய் கொள்கிறது குழலின்னிசை!
      நன்றி முனைவர் அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  25. வாழ்த்துக்கள் நண்பரே. ஐந்தாண்டு காலமாகப்பதிவுலகில் உலவும் நான் ஒன்று சொன்னால் தவறாக இருக்காது என்றே எண்ணுகிறேன். என் பதிவில் உங்கள் அழைப்பு கண்டேன். என்பதிவினைப்படித்துக் கருத்திட்டு விட்டு அழைப்பு விடுத்திருந்தால் மகிழ்ந்திருப்பேன்

    RépondreSupprimer
    Réponses


    1. மனசாட்சிப்படி கருத்தினை தரும் பெருந்தகை தாங்கள் என்பதை நான் நன்கறிவேன் அய்யா!
      தங்களது கருத்து 100/100 சதம் உண்மை! மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. இனி அதுபோல் நிகழாது இருக்க முற்படுகிறேன். தவறு செய்தால் தட்டி திருத்தும் பண்புக்கு நான் அடிமை அய்யா!
      இனி தங்கள் பதிவுகளில் கட்டாயம் கருத்து இடம் பெறும். வாழ்த்தி வழிமொழிந்தமைக்கு நன்றி அய்யா!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  26. வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசையை வாழ்த்தியமக்கு மிக்க நன்றி நண்பரே!
      வருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  27. ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ’குழல் இன்னிசை” வலைத்தளத்திற்கு என்னுடைய உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள்.

    வலைத்தளத்தினை வெற்றிகரமாக நடத்தி வரும் புதுவை வேலு அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    த.ம.16

    RépondreSupprimer
  28. மனமார்ந்த வாழ்த்துகள் சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசையை வாழ்த்தியமக்கு மிக்க நன்றி நண்பரே!
      வருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  29. முதல் பிறந்த நாள் கொண்டாடும் குழலின்னிசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து! இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்கள் வலைப்பூ மென் மேலும் வளர்ந்து இன்னிசையை நாடு முழுக்கப் பரப்ப வாழ்த்துகிறேன்! பாராட்டுக்கள்! முதலாண்டு நிறைவு கவிதை அருமை!

    RépondreSupprimer
    Réponses
    1. மண்ணின் மைந்தருக்கு வாழ்த்து மழை பொழிந்தமைக்கும், கவிதையை ரசித்தமைக்கும் மிக்க நன்றி! சகோதரி அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  30. வாழ்த்துக்கள் நண்பரே! குழலின்னிசை உலகெங்கும் ஒலிக்கட்டும்! உங்கள் படைப்புக்கள் மக்களின் மனதை கவரட்டும்! ஓராண்டு நூறாண்டாக மனமார்ந்த வாழ்த்துக்கள்! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசையை வாழ்த்தியமக்கு மிக்க நன்றி நண்பரே!
      வருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  31. வாழ்த்துக்கள் நண்பரே! குழலின்னிசை உலகெங்கும் ஒலிக்கட்டும்! உங்கள் படைப்புக்கள் மக்களின் மனதை கவரட்டும்! ஓராண்டு நூறாண்டாக மனமார்ந்த வாழ்த்துக்கள்! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசையை வாழ்த்தியமக்கு மிக்க நன்றி நண்பரே!
      வருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  32. குழல் இன்னிசைக்கு மயங்காதவர் இலர்.
    பதிவுகள் பெருகட்டும். சிறக்கட்டும்.
    வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசையை வாழ்த்தியமக்கு மிக்க நன்றி நண்பரே!
      வருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  33. மேலும் பல்லாண்டுகளை தங்கள் வலைத்தளம் காண வாழ்த்துக்கள்!
    த ம 18

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசைக்கு கூட்டாஞ்சோறு சமைத்து வாழ்த்து படையலிட்ட நண்பர் செந்தில் குமார் அவர்களுக்கு இனிய நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  34. ஓராண்டு, ஆனால் ஆயிரம் களம் கண்ட வீரனைப்போல், ஆஹா, தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. இன்னும் பல பதிவுகள் படைக்க வாழ்த்துக்கள். ஓசை ஓங்கி ஒலிக்கட்டும். மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. ஆயிரம் களம் கண்ட வீரனைப் போல் வெற்றி பெறுவதற்கு ஆயிரம் ஆயிரம் கருத்து பாயிரம் தங்களிடமிர்ந்து கிடைக்க வேண்டுமே சகோ! வழங்குவீர்கள்தானே? குழலின்னிசையை...
      ஆரம்பகாலங்களில் ஊக்கப்படுத்தியவர்கள் இன்று தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது வேதனை தருகிறது. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி சகோ!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  35. தமிழை விரும்பும் ஒவ்வொருவரையும்
    தமிழைப் பரப்பும் ஒவ்வொருவரையும்
    தமிழே அடையாளப்படுத்தும் - என்னையும்
    குழல் இன்னிசை! ஈர்த்தது என்றால் - அந்த
    தமிழை தாங்கள் வெளிப்படுத்தும் அழகு தான்!
    தொடருங்கள் உங்கள் பணி - நம்
    ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு!
    வலை வழி தமிழ் பேணும்
    தங்களுக்கு எனது வாழ்த்துகள்!

    RépondreSupprimer
    Réponses
    1. தமிழின் அழகை ரசித்து அகம் மகிழ்ந்து ஆதர்வு கரத்தினை நாள்தோறும் நலமுடன் அளித்து வரும் பாவலர் அய்யாவை வணங்குகிறேன்.
      வாழ்த்தி சிறப்பு செய்தீர். வாழ்க தமிழ்! நன்றி பாவாணரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  36. இனிதாய் துவங்கும் இரண்டாம் ஆண்டிலும் இனி வரும் ஆண்டுகளிலும் இன்பதிவுகள் பல படைத்து குழலின்னிசையை குவலயம் முழுதும் பரப்ப இனிய வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசை குவலயம் முழுதும் பரப்ப இனிய வாழ்த்து மொழி பொழிந்தமைக்கு
      உளமாரந்த உயர் தமிழ் நன்றி சகோ! தொடருங்கள்.

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  37. அழகெனும் தமிழில் ஆக்கங்கள் பல படைத்து... ஆண்டுகள் தொடர வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. ஆக்கங்கள் பல படைக்க ஆதரவு வேண்டுகிறேன். சகோ!
      தொடருங்கள்...
      பதிவுகள் சிறப்புற அமைவதற்கு கருத்தினை அழகு தமிழில் மொழியுங்கள்.
      நன்றி

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer

  38. நல்வாக்கை நான் பெற்றேன் மகிழ்வுடனே. நன்றி அய்யா!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  39. நன்றி நண்பரே! தங்களது தகுதிமிகு பாராட்டிற்கும், வருகையோடு இணைந்த வாக்கிற்கும் குழலின்னிசை நன்றி பாராட்டி சிறப்பிக்கின்றது!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  40. மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.

    RépondreSupprimer
  41. "மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்"
    குழலின்னிசையை வாழ்த்தி சிறப்பித்தீர் சகோ!
    குழலூதும் கண்ணனுக்கே பெருமை யாவும் சேரட்டும்.
    மிக்க நன்றி! தொடர்க!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  42. உளங்கனிந்த வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசையை வாழ்த்தியமக்கு மிக்க நன்றி நண்பரே!
      வருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  43. உளங்கனிந்த வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசையை வாழ்த்தியமக்கு மிக்க நன்றி நண்பரே!
      வருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  44. உளங்கனிந்த வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசையை வாழ்த்தியமக்கு மிக்க நன்றி நண்பரே!
      வருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  45. எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! மேலும் மேலும் தாங்கள் இனிய படைப்புகள் படைத்து தங்கள் குழல் இன்னிசையைப் பரப்ப வேண்டும் என இறைவனை ப்ரார்த்திப்பதுடன், எங்கள் வாழ்த்துகளும்!

    RépondreSupprimer
    Réponses
    1. குழலின்னிசையை வாழ்த்தியமக்கு மிக்க நன்றி நண்பரே!
      வருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  46. ஓராண்டு நிறைவினை கொண்டாடி இன்னும்பல்
    நூறாண்டை வென்று கட !
    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோ !
    தாமதத்திற்கு மன்னிக்கவும்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      நல்வருகை
      வாருங்கள் சகோதரி,
      "குழலின்னிசை"யை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!
      மீண்டும்வருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  47. வணக்கம் சகோதரரே.

    முதலில் என் தாமத வருகைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    பதிவும், பொருத்தமான படங்களுமாய், தங்கள் வலைப்பூ குழந்தை ஓராண்டு நிறைவை கொண்டாடியதை அறிந்து பெரு மகிழ்ச்சியடைந்தேன்.
    இன்று போல் வரும் ஆண்டுகளில், மகிழ்வுக்கு குறைவின்றி, வளமுடன் வளர்ந்து நூறாண்டையும் இனிதே கொண்டாடி மகிழ இறைவனை மனதாறப் பிரார்த்திக்கிறேன். வளமுடன் வாழ்க! வளர்க! வாழ்த்துக்கள்!

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்!
      நல்வருகை
      வாருங்கள் சகோதரி,
      "குழலின்னிசை"யை வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!
      மீண்டும்வருக!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer