mercredi 17 juin 2015

"தூங்கா நகரத்து நாயகர்கள்"

(கூத்துப் பட்டறைக் கலைஞர்கள்)




ர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்


இது பழமொழியே அல்ல.

இது ஒரு விடுகதை.

ஒரு கோட்டைக்குள் முப்பத்திரண்டு சிப்பாய்கள் என்று சொன்னால் எப்படி பல் என்று பதில் சொல்வோமோ அதுபோலத்தான் இதுவும்.


விடுகதைகளுக்கு வார்த்தைகளுக்கான பொருள் தேடத்தேவையில்லை. ஒரு செய்தியை பூடகமாக சுற்றிவளைத்து சொல்வது,  நையாண்டியும் நக்கலும் கலந்து வெளிப்படுத்துவது , சில நேரம் விளையாட்டுத்தனம் கலந்து இருப்பதுதான் விடுகதைகள்.

சின்ன மச்சான் குனிய வச்சான்
என்றால் காலில் முள் குத்திக்கொண்டால் நாம் அதை குனிந்து பிடுங்குதை குறிப்பிடுவார்கள்.
முள் வந்து நமக்கு மச்சான் முறையா? என்றால் சிரிப்புத் தானே! வருகிறது.

அது! போலத்தான் இந்த விடுகதையும், இதை பெரும்பாலானவர்கள் பழமொழி என்றே நினைத்துக்கொண்டுடிருக்கிறார்கள். இந்த எண்ணம் தவறு.


இதற்கான நேரடி பொருள் ஊர் இரண்டாகப் பிரிந்து விட்டால் கூத்துக்கட்டும் கலைஞர்களுக்கு கொண்டாட்டம் என்று பொருள் வருகிறது. 

ஆனால்? கூத்து கட்டுபவர்களுக்கு ஊர் ஒன்றுப்பட்டு இருந்தால்தான் மகிழ்ச்சியாக இருக்கும்.





 அப்போதுதான் நிறைய பார்வையாளர்கள் அவர்களின் கூத்தை ரசிப்பார்கள். அவர்கள் பிற ஊரைச் சேர்ந்தவர்களிடம் இவர்களின் திறமையை காட்டும்போதும், சொல்லும்போதும்,  அவர்களும் தங்கள் ஊருக்கு கூத்தாடிகளை அழைத்துச் சென்று மேடை அமைத்துக் கொடுப்பார்கள். அதன் மூலம் கூத்துக்கட்டும் கலைஞர்களுக்கு வருமானம் வரும். அங்கீகாரமும் கிடைக்கும். நன்றாக நடிக்கும் கலைஞர்களுக்கு சிலர் மேடையிலேயே வாழ்த்தி பணமும் தருவார்கள். இப்படி வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரத்துடன், பேரும் புகழும் வந்து சேரும்.


உண்மை! இப்படி இருக்க,

ஊர் இரண்டுப் பட்டு நின்றால் கூத்தாடி எப்படி மகிழ்வான்?”

முதலில் ஊருக்குள் சண்டை இருந்தால் எந்த விழாவும் ஒழுங்காக நடக்காது என்பதே உண்மை.


இதற்கு உண்மையான பொருள்!!!

 "வாய்நாக்கு". 





வாய் திறக்காமல் இருக்கும் வரை நாக்கு மௌன சாமியாராக அமைதியாக படுத்திருக்கும்.

வாய் திறந்து உதடு இரண்டு பட்டால் நரம்பில்லாத நாக்கு கண்டதையும் பேசும்.

அதற்கு கட்டுப்பாடே கிடையாது கொண்டாட்டமாகி விடும் என்பதைத்தான் இப்படிச் சொன்னார்கள்.

இனி இவ்விடுகதையை பழமொழியாக்கி,
மிகவும் அரிதாகிப் போய்!, அபூர்வமாக காணக்கூடிய வகையில், அரித்தாரம் பூசியே! நமக்கெல்லாம், அகமகிழ்வை அள்ளித்  தரும், கூத்துப்பட்டறைக் கலைஞர்களை சிறுமைபடுத்தி பேசி யாரும்  சிற்றின்பம் காணாதீர்!!!

பகிர்வு:

புதுவை வேலு

நன்றி: (Tamil Wire)

28 commentaires:



  1. “ஊர் இரண்டு பட்டால்
    கூத்தாடிக்கு கொண்டாட்டம்” என்ற
    கருத்தை வைத்தே
    சிறப்பாக அலசி உள்ளீர்கள்

    தங்கள் தளத்தை
    http://tamilsites.doomby.com/ இல்
    இணைக்காது இருப்பின்
    இணைத்துக்கொள்ளுங்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வருகைக்கும், நல்ல வழிகாட்டலுக்கும் நன்றி யாழ்பாவாணரே!
      தளத்தை இணைக்க ஏற்பாடு செய்கிறேன்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. பண்பாட்டின் பெருமையை முன்னுக்கு வைத்துவிட்டு, பிற தேவையற்ற நிகழ்வுகளைப் பின்னுக்குத் தள்ளக் கூறும் தங்களது பதிவு கலைஞர்களுக்குத் தாங்கள் செலுத்தும் காணிக்கை.

    RépondreSupprimer
    Réponses
    1. "பதிவு காணிக்கை!"
      நன்றி முனைவர் அய்யா அவர்களே

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. நல்ல விளக்கம்... நன்றி ஐயா...

    RépondreSupprimer
    Réponses
    1. விளக்கத்தை சிறப்பித்து வாழ்த்தி பாராட்டியமைக்கு இனிய நன்றி! DD அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. இதுவரை அறியாத இந்த பழமொழிக்கான விளக்கத்தை தந்தமைக்கு நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. பாராட்டுக்கு நன்றி அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. பல்லாண்டுகளாகப் பேசப்பட்டு வரும் இந்த மிகப் பழமை வாய்ந்ததொரு பழமொழிக்கான தங்களின் விளக்கம் மிக அருமை. பாராட்டுகள். :)

    RépondreSupprimer
    Réponses
    1. பாராட்டுக்கு நன்றி அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. இதுவே வலைச்சரம் ரெண்டு பட்டு பதிவர்களுக்குள் பிரிவு வராமல் இருந்தால் நல்லது.
    தமிழ் மணம் 4

    RépondreSupprimer
    Réponses
    1. ஒற்றுமை ஓங்கட்டும்!
      பிளவு என்பது பிழையானது !
      இதை பதிவர்கள் அறியாதவர்களா என்ன?
      பதிவர்களுக்குள் பிரிவு வராது நண்பா?
      கருத்து வேற்றுமை வரும்! பிறகு போகும்!
      கில்லர்ஜி அவர்களே!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. தங்களின் விளக்கம் அருமை, வாழ்த்துக்கள், நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. விளக்கத்தை சிறப்பித்து வாழ்த்தி பாராட்டியமைக்கு இனிய நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. இந்த வகையில் தவறாகப் பொருள் பேசப்படும் சொல்வழக்குகள் நிறையவே உண்டு.

    RépondreSupprimer
    Réponses
    1. உண்மைத் தகவலை உள்ளன்போடு உரைத்தீர் அய்யா! நன்றி!
      வருகை சிறக்கட்டும்.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. விளக்கம் மிக அருமை சகோ.

    RépondreSupprimer
    Réponses
    1. விளக்கத்தை சிறப்பித்து வாழ்த்தி பாராட்டியமைக்கு இனிய நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. அருமையான விளக்கம்..நன்றி சகோ தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. விளக்கத்தை சிறப்பித்து வாழ்த்தி பாராட்டியமைக்கு இனிய நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. சிறப்பான பகிர்வு! நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. நண்பர் தளிர் சுரேஷ் அவர்களின் வருகைக்கும்,சிறப்பு பாராட்டுக்கும் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. புதிய விளக்கம்! பொருத்தமாகவே உள்ளது!

    RépondreSupprimer
    Réponses
    1. புலவர் அய்யாவின் புலமைக் கருத்தால்
      பூரித்தேன் புவியில் சிறந்து!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. விடுகதைக்கும், பழமொழிக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கருத்தினை பதிவிட்டமைக்கு நன்றி அய்யா

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  14. விளக்கம் அருமை சகோ !

    RépondreSupprimer
    Réponses

    1. நல்லதை பாராட்டும் சகோதரிக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer