தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை!
வயிறோடு விளையாடும் கருவுடன்,
மனதோடு உறவாடி மகிழ்வாள் அன்னை.
தொப்புள்கொடி பந்தம் பிரிக்க முடியாது தான்.
ஆனால் ?
தந்தையின் பாசம் வாழ்வோடு கலந்தது.
மனைவியின் வயிற்றில் காதை வைத்து, நிறமறியா, முகமறியா பிள்ளையுடன், காதோடு பேசி
மகிழும் தந்தையின் பாசம்... தரணியெல்லாம்
பேசும்.
மழலையின் சிரிப்பில் மனதை தொலைத்து,
வாழ்க்கையை பிள்ளைக்காக அர்ப்பணிக்கும்
நேசம்.
எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், தலைகுனிந்து, உடல்குனிந்து பிள்ளையை முதுகில் உப்புமூட்டையாக
ஏற்றியும், தலைக்கு மேல் தூக்கியும் கூத்தாடும்
பரவசம்.
தந்தையன்றி வேறு யாருக்கு வரும்?
"விடு... விடு...' என்று வாழ்க்கை முழுதும் விட்டுக் கொடுக்கும் அந்த பெரிய உள்ளம், இறைவன் நமக்களித்த இயற்கை
வெள்ளம்.
ஓய்வறியா கால்கள் ஊன்றுகோலைத் தேட... நரை தோன்றி முகச்சுருக்கம்
முற்றுகையிட... பிள்ளையின் அன்பே தஞ்சமென தேடும் அப்பாவி(ன்) நெஞ்சம்... ஆயிரம் தெய்வங்களை மிஞ்சும்.
இன்று தந்தையர் தினம்.
வளர்ந்தாலும் அப்பாவுக்கு நாம்
பிள்ளைகள் தான். மழலையில் கைப்பிடித்து, வாழ்வின் பாதைக்கு நம்மை அழைத்துச் சென்ற அப்பாவின் தியாகத்தை நினைவு
கூர்வோம். முதுமையில் அள்ளி அணைத்து ஆறுதல் செய்வோம்.
அன்புக்கு எப்படி அன்னையோ, அதுபோல குழந்தையின் அறிவுக்கு தந்தையே
முன்னோடியாக திகழ்கிறார்.
பெரும்பாலான வீடுகளில் குடும்ப
நிர்வாகம் தந்தையின் கைகளிலேயே இருக்கிறது. குடும்பத்தில் தந்தையின் உழைப்பே
அதிகமாக இருக்கும். வாழ்நாளில் கடைசிவரை, குழந்தைகளுக்காக
உழைக்கும் தந்தையருக்கு நன்றி செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
இத்தினம்
மேலைநாட்டிலிருந்து வந்திருந்தாலும், இந்தியாவிலும்
இத்தினம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது.
பிரான்ஸ் நாட்டில் இந்த தினம் இன்று
ஜூன்21 ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப் படுகிறது.
ஒவ்வொருவரும் தந்தைக்கு, நேரிலோ, போனிலோ, பரிசுப் பொருள் அல்லது பூங்கொத்து
கொடுத்து வாழ்த்து தெரிவித்து, இத்தினத்தை கொண்டாடி மகிழ்கின்றனர்.
சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு, தந்தையை மதிக்க கற்றுத் தருவதே இதன் நோக்கம்.
தந்தையும் குழந்தைகளுக்கென நேரம்
ஒதுக்கி, அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்
தர வேண்டும்.
எப்படி வந்தது ?
அமெரிக்காவில் 1909ல், சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற இளம்
பெண், தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன் வைத்தார். அன்னையர் தினம் கொண்டாடும் போது,
தந்தையர் தினம் ஏன் கொண்டாடக் கூடாது என வலியுறுத்தினார். இவர், தனது தாயாரின் மறைவுக்கு பிறகு ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை, கடுமையான சிரமங்களுக்கிடையே தந்தை வில்லியம் பராமரிப்பதை கண்டார். இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற
எண்ணத்தை இவருக்கு தூண்டியது. இதன்படி 1910ம் ஆண்டு முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட்
நிக்சன், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக இந்நாளை அறிவித்தார்.
இதயத்தையே நெகிழ வைக்கும் க்யூட் வீடியோ:
உங்கள் அப்பா, தன்னை அப்பாவாக உணர்ந்த முதல் நொடியை உங்களால் கற்பனை செய்து பார்க்க
முடிகிறதா?
உங்கள் அம்மா ”நீங்க அப்பாவாகப் போறீங்க.” என்று சொன்ன நொடியில் உங்கள் அப்பாவின்
கொண்டாட்ட ரியாக்ஷன் என்னவாக இருந்திருக்கும்?
ஏன்.. திடீர்னு இந்த யோசனை
கேக்குறீங்களா?
எல்லாம் இந்த வீடியோவப்
பார்த்தப் பிறகே புரியும்!
நல்லொழுக்கங்களை கற்றுத்
தர வேண்டும்!
இன்று! 21-ம் தேதி உலக தந்தையர் தினம்
கொண்டாடப் படுவதை முன்னிட்டு, ஒரு ஆண் முதன் முதலாக தன்னை அப்பாவாக உணரும் அந்த
அபூர்வ நொடியை, கேமராவுக்குள் சிறைப்படுத்தி, ஒரு நிமிடத்தில் இதயத்தையே நெகிழ வைக்கும் க்யூட் வீடியோவாகக்
கொடுத்துள்ளது ஒரு தனியார் நிறுவனம்.
யூ-டியுபில்
பதிவேற்றப்பட்ட இந்த கிரேட் வீடியோவை இதுவரை 14 லட்சம் பேர் பார்த்து செம ஃபீலிங்ஸாகியிருக்கிறார்கள்.
உங்களுக்காக அந்த க்யூட், கிரேட் வீடியோ:-
https://youtu.be/R0-5HORRXU0
தகவல் பகிர்வு;
புதுவை வேலு
நன்றி: தினமலர்/மாலைமலர்/You
Tube
தந்தையர் தினத்தை யார் கண்டுக்கிறா
RépondreSupprimerதம +
தந்தையர் தின நல்வாழ்த்துகள்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தந்தையர் தினம் போற்றுவோம்
RépondreSupprimerதம +1
தந்தையர் தின நல்வாழ்த்துகள்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தந்தையர் தின வாழ்த்துகள்...
RépondreSupprimerதந்தையர் தின நல்வாழ்த்துகள்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தந்தையர் நாள் வாழ்த்துக்கள்!
RépondreSupprimerதந்தையர் தின நல்வாழ்த்துகள்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
சரியான நாளில் உரிய பதிவு. நன்றி.
RépondreSupprimerதந்தையர் தின நல்வாழ்த்துகள்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
பொருத்தமான பதிவு வாழ்த்துகள்
RépondreSupprimerகாணொளி பிறகு காண்கிறேன்.
தந்தையர் தின நல்வாழ்த்துகள்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
எது தந்தையர் தினம் இம் மாதம் 16,17 (நினைவில்லை ) சொன்னார்களே!
RépondreSupprimerதந்தையர் தின நல்வாழ்த்துகள்
Supprimerபிரான்ஸ் நாட்டில் இந்த தினம் இன்று ஜூன்21 ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப் படுகிறது.
நட்புடன்,
புதுவை வேலு
தாயைப் போல தந்தையை கண்டு கொள்ளப் படவில்லை என்பதுதான் உண்மை. அப்பாக்களின் தியாகம் பெரிதாக பேசப்படுவதில்லை. ஆனாலும், தந்தையர் தினத்திற்கு வாழ்த்துக்கள்.
RépondreSupprimerத ம 7
தந்தையர் தின நல்வாழ்த்துகள்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தந்தையர் தின வரலாறு கேட்டதில்லை. புதியது. தந்தையர் தின வாழ்த்துக்கள். என் தளத்திலும் ஒரு பதிவு. காண அழைக்கிறேன்
RépondreSupprimerதந்தையர் தின நல்வாழ்த்துகள்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தந்தையால் சேர்த்து வைக்கப்பட்ட சொத்தை அனுபவிப்பர்கள் கொண்டாட வேண்டிய தினம் என்று எனக்கு தோன்றுகிறத நண்பரே....
RépondreSupprimerதந்தையர் தின நல்வாழ்த்துகள்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தந்தையர் தினம் உருவான வரலாற்றை இன்று தான் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி! தந்தையர் தின வாழ்த்துக்கள்!
RépondreSupprimerதந்தையர் தின நல்வாழ்த்துகள்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
பொருத்தமான பதிவு சகோ. தந்தையர் தின வாழ்த்துக்கள் !!
RépondreSupprimerதந்தையர் தின நல்வாழ்த்துகள்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துகள்.
RépondreSupprimer//வளர்ந்தாலும் அப்பாவுக்கு நாம் பிள்ளைகள் தான். மழலையில் கைப்பிடித்து, வாழ்வின் பாதைக்கு நம்மை அழைத்துச் சென்ற அப்பாவின் தியாகத்தை நினைவு கூர்வோம். முதுமையில் அள்ளி அணைத்து ஆறுதல் செய்வோம்.//
மிக அருமையான பதிவுக்கு நன்றிகள்.
தந்தையர் தின நல்வாழ்த்துகள்
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தந்தையர் தின நல்வாழ்த்துகள்
RépondreSupprimer"தந்தையர் தின வாழ்த்துகள்"
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தந்தையர் தினம் கொண்டாட தாய்மார்கள் ஆதரவு வேண்டும் போலிருக்கே :)
RépondreSupprimer"தந்தையர் தின வாழ்த்துகள்"
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
பகிர்வுக்கு நன்றி நண்பரே! ஓர் ஆலோசனையாக இதைக் கூறுகின்றேன்! தாங்கள் தமிழ் மணத்தில் இணைந்து இருக்கிறீர்கள் வலைச்சர உதவி ஆசிரியராகவும் இருக்கிறிர்கள். மற்றதளங்களில் வந்த செய்திகளை இப்படி பகிர்வதால் தமிழ் மண இணைப்பில் இருந்து துண்டித்து விடுவார்கள். எனக்கு இதுமாதிரி நடந்துள்ளது. மீண்டும் தமிழ்மணத்தில் இணைய முடியவில்லை. இதனால் பக்க பார்வைகள், வாசகர்கள் குறைந்து போனார்கள். அதை சரி செய்ய இன்னும் என்னால் முடியவில்லை! வளர்ந்துவரும் பதிவரான தாங்கள் கூடிய மட்டும் இப்படி பகிரும் செய்திகளை தவிர்த்தல் தங்களுக்கும் நலமாக இருக்கும். வருத்தம் வேண்டாம். இதை ஓர் ஆலோசனையாக மட்டுமே கூறியுள்ளேன்! மற்றபடி தங்கள் விருப்பம்! நன்றி!
RépondreSupprimerநண்பர் தளிர் சுரேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி! தங்களது அன்பின் வெளிப்பாடு, அறிவுரையாய் திகழ்ந்தது! குழலின்னிசை என்றும் நல்ல இசையை நயம்பட இசைக்கும் வருகைக்கும், வாக்கிற்கும் இனிய நன்றி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
இன்று தான் தகவல்கள் தெரிந்துக்கொண்டேன், வாழ்த்துக்கள். நன்றி.
RépondreSupprimer"தந்தையர் தின வாழ்த்துகள்"
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
தந்தையர் தின வாழ்த்துகள் சகோ !
RépondreSupprimer"தந்தையர் தின வாழ்த்துகள்"
Supprimerநட்புடன்,
புதுவை வேலு