இன்று ஒரு தகவல்
நமது தமிழ்நாட்டிலும்/புதுச்சேரியிலும் வரும் ஜூலை முதல் தேதியில் இருந்து "ஹெல்மெட்" அணிவது கட்டாயம் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்திலும், புதுச்சேரியிலும் எங்காவது ஒரு மூலையில் இதைப்போன்ற நிகழ்வுகள் நடைபெறும் வாய்ப்பு உள்ளதா?
யூடியுப் (you tube) காணொளியை கண்டு பதில் சொல்லுங்க! ப்ளீஸ்!
இந்த காணொளியைப் பற்றி "மாலைமலரில்" வெளியான செய்தி!
இதோ உங்களது பார்வைக்கு:-
போலீஸ்காரர்கள் என்றாலே லத்தியால் அடிப்பார்கள். சிறிய தவறை கூட பூதாகரப்படுத்தி மாமூல் வசூலிப்பார்கள் என்ற கருத்து மட்டுமே மக்களிடையே பரவலாக இருந்து வருகின்றது. ஆனால், மனிதர்களில் பல நிறங்கள் இருப்பதுபோல், போலீசாரிடமும் வியக்கத்தக்க பல குணாம்சங்கள் இருப்பது சில தருணங்களில் நிரூபணம் ஆகியுள்ளது.
அவ்வகையில், சமீபத்தில் ஒரு கண்கண்ட உதாரணமாக சிலிர்க்க வைக்கும் ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில் உள்ள கரிம்நகர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.
கரிம்நகர் மாவட்டத்துக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் வழக்கம்போல், சம்பவ தினத்தன்றும் சோதனைச் சாவடி அமைத்து போலீசார் வாகனங்களை சோதனையிட்டு கொண்டுள்ளனர். அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஒரு வாலிபர் வேகமாக வருகிறார். அவரை போலீசார் மடக்கி பிடிக்கின்றனர்.
அந்த வாலிபரின் ஓட்டுனர் உரிமம், வாகனம் சார்ந்த பிற சான்றிதழ்கள் அனைத்தையும் ஆய்வு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் 'விடாகண்டன்' பாணியில் 'ஹெல்மெட் எங்கே..?' என்று கேட்டு அந்த வாலிபரை திணறடித்தார். என்னென்னவோ சமாதானம் கூறி இன்ஸ்பெடரை சரிகட்ட நினைத்த வாலிபரின் முயற்சி பலிக்காமல் போனது. இறுதியில், பம்மியபடி இன்ஸ்பெக்டருக்கு 'அன்பளிப்பாக' பணத்தை தந்து அங்கிருந்து நழுவ முயற்சிக்கிறார்.
பணம் கைமாறியதும், அந்த வாலிபரின் வாகனத்தை பூட்டி, சாவியை அங்கிருக்கும் ஒரு காவலரிடம் ஒப்படைக்கும் இன்ஸ்பெக்டர், தனது பைக்கை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறார். நேரமும் வீணாகி, வேலைகளும் கெட்டு, பணமும் பறிபோன நிலையில் கையை பிசைந்தபடி அந்த வாலிபர் பேந்தப்பேந்த விழித்தபடி தவித்துப் போய் நிற்கிறார்.
சிறிது நேரத்தில் சம்பவ இடத்துக்கு பைக்கில் வரும் அந்த இன்ஸ்பெக்டர் ஒரு அட்டை பெட்டியுடன் இறங்கி அந்த வாலிபரை நெருங்குகிறார். பெட்டிக்குள் இருக்கும் புத்தம்புதிய ஹெல்மெட்டை அந்த வாலிபரின் தலையில் பொருத்துகிறார். ஹெல்மெட் வாங்கிய பில்லை அவரிடம் அளித்து, ஹெல்மெட்டின் விலை இவ்வளவு.., நீ எனக்கு மாமூலாக கொடுத்தது இவ்வளவு.., உன் பணம் போக என் கைப்பணத்தை போட்டு இந்த புதிய ஹெல்மெட்டை வாங்கி வந்திருக்கிறேன்.
இனிமேல் நீ யாரை கண்டும் பயப்பட வேண்டாம். யாருக்கும் மாமூல் கொடுக்கவும் வேண்டாம். உன் உயிரை பாதுகாத்து, உன் குடும்பத்தாரை காப்பாற்ற வேண்டும் என்றால்.., இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டாதே என்று அந்த வாலிபருக்கு அறிவுறை கூறி, தட்டிக்கொடுத்து அந்த இன்ஸ்பெக்டர் வழியனுப்பி வைக்கிறார்.
கரிம்நகர் நெடுஞ்சாலை பகுதியில் வாகன சோதனை நடத்தும் போலீசாரின் செயல்பாடுகள் எப்படி அமைந்துள்ளன? என்பதை கண்காணிக்க ஒருவர் மறைத்து வைத்திருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள இந்த வீடியோ பதிவை 'யூடியூப்' வழியாக இதுவரை சுமார் 2 லட்சம் பேர் பார்த்து வியந்துள்ளனர்.
பகிர்வு:
புதுவைவேலு
நன்றி: You Tube/மாலைமலர்
வித்தியாசமான காவலர்
RépondreSupprimerநிச்சயம் கோடியில் ஒருவர்
பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
"நிச்சயம் கோடியில் ஒருவர்"
Supprimerகோடானு கோடியில் ஒருவர் என்றே சொல்லலாம் அய்யா!
வருகைக்கும், முதல் வாக்கிற்கும் நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
tha.ma 1
RépondreSupprimer"நன்றி அய்யா!"
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அதே வழியில் பலர் ஹெல்மட் அணியாமல் செல்கின்றனரே? அவர்களை போலீஸ் ஏன் கண்டு கொள்ளாமல் விட்டது? இந்த விடியோ ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என்று நினைக்கிறேன்.
RépondreSupprimerவிளம்பரத்திற்காக எடுக்கப் பட்டது என்று நினைக்கும்போது,
Supprimerவிளம்பரபடம் எடுத்த இயக்குநரின் குறைபாடு இது என்று எடுத்துக் கொள்ளுங்களேன் அய்யா!
எனினும் விழிப்புணர்வு விளம்பரத்திற்காக ஒரு முறை பார்க்கலாம் அல்லவா?
தங்களின் பார்வை வெளிச்சம் படு கிளியர் அய்யா!
நட்புடன்,
புதுவை வேலு
பழனி ஐயா அவர்களின் கருத்துடன் ஒத்துப் போகிறேன் நண்பரே
RépondreSupprimerநன்றி
தம +1
பழநி அய்யாவின் பார்வைக்கு திருஷ்டிதான் சுற்றிப் போட வேண்டும்!
Supprimerகரந்தையாரே முனைவர் பழநி அய்யாவின் கருத்தை வழிமொழிந்தமைக்கு நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
ஒரு பீல் குட் பதிவு தோழர்
RépondreSupprimerநல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம்
தம +
"நல்லதை மட்டும் எடுத்துக்கொள்வோம்"
Supprimerதோழரே! அதற்கான முயற்சிதான் இந்த பதிவு!
நட்புடன்,
புதுவை வேலு
இனிமேலாவது ஹெல்மெட் அணிய வேண்டும் என்று அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்... அதுவே இந்த காணொளிக்கு கிடைத்த வரவேற்பில் சிறந்தது...
RépondreSupprimerவார்த்தைச் சித்தரே! தங்களின் உறுதிமொழிக்கு ஆதரவு பெருகட்டும்!
Supprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு
இதுவொரு குறும்படம். உண்மை சம்பவம் அல்ல. இந்த கதை ஜப்பானில் முதன் முதலாக எடுக்கப்பட்டது. அதை பின் பற்றி அதேபோன்று நிறைய படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. எனது நண்பர் ஒருவரும் இந்த கதையை இதேபோல் உண்மைச்சம்பவம் போல் எடுத்துள்ளார். கதையாக இருந்தாலும் காவலர்கள் இப்படி இருந்தால் போற்றப்பட வேண்டியவர்களே!
RépondreSupprimerத ம 7
"கதையாக இருந்தாலும் காவலர்கள் இப்படி இருந்தால் போற்றப்பட வேண்டியவர்களே!"
Supprimerஇதுதான் நிச்சயம் தேவை படத்திற்கான வெற்றி தங்களது கருத்தால் கிடைத்து விட்டது என்றே எண்ணுகிறேன். பிறகு மாலைமலரில் வந்த செய்தி?????
நட்புடன்,
புதுவை வேலு
இது விளம்பரத்துக்காக எடுக்கப் பட்டது என்றாலும் நல்ல விசயம்தான் :)
RépondreSupprimerநல்ல விசயம்தான் என்று பகவான் ஜியே சொல்லி விட்ட பிறகு பக்தர்கள் யாவரும் கொடுத்த வரத்தை சிரம் மேல் வைத்து போற்றுவதே சிறந்த வழி!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
திரு பகவான்ஜி அவர்கள் சொல்வது போல் இது விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டிருந்தாலும் பாராட்டுவோம். காணொளியை பகிர்ந்தமைக்கு நன்றி!
RépondreSupprimerநல்ல விசயம்தான் பாராட்டுவோம் அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
அனைத்துப் பகுதி காவலர்களும் உண்மையாகவே இதுபோல நடந்துகொண்டால் மிகவும் நல்லது. மனதாரப் பாராட்டலாம்.
RépondreSupprimer{ மேலே திருவாளர் முனைவர் பழனி கந்தசாமி ஐயா சொல்லியுள்ளதை நானும் காணொளி காணும்போதே நினைத்துப்பார்த்தேன். }
எனினும் பொதுமக்கள் + காவலர்கள் இடையே இதுபோன்ற பாஸிடிவ் ஆன எண்ணங்களும் மாற்றங்களும் விரைவில்வர இதுபோன்ற பதிவுகளும், காணொளி விளம்பரங்களும் உதவட்டும்.
பகிர்வுக்கு நன்றிகள்.
மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லாதது தங்களின் கருத்து அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
நல்லதொரு காணொளி! உண்மை சம்பவம் அல்ல என்று தோன்றினாலும் நல்ல கருத்துள்ள குறும்படம்! பகிர்வுக்கு நன்றி!
RépondreSupprimerவிழிப்புணர்வு பதிவினை பாராட்டி கருத்திட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
மழை இன்னும் பெய்கிறது என்றால்’ உண்மையில்’ இது போன்ற சில இருப்பதே காரணம்!
RépondreSupprimerஅய்யன் வள்ளுவனின் அருள்மொழியை அருங்கருத்தாய் தந்தமைக்கு நன்றி அய்யா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
Ce commentaire a été supprimé par l'auteur.
RépondreSupprimerதிரு. பழனி கந்தசாமி ஐயா சொன்னதே உண்மை பாராட்டுவோம்.
RépondreSupprimerஉண்மையை பாராட்ட வந்தமைக்கு நன்றி நண்பா!
Supprimerநட்புடன்,
புதுவை வேலு
இது விளம்பரமோ, கற்பனையோ, கதையோ இப்படி இருந்தால் நலமே, தலைக்கவசம் உயிர் கவசம் இருக்கட்டுமே.
RépondreSupprimerதங்கள் பதிவுக்கு நன்றி.
Supprimer"
"தலைக்கவசமே உயிர் கவசமாய் இருக்கட்டும்."
தங்களை போன்றவர்களின்
கருத்துக் கவசம் ஒன்றே குழலின்னிசையின் உயிர்க் கவசம் சகோ!
நட்புடன்,
புதுவை வேலு
மத்திய அரசே இதுதான் மனித நேயம்!
RépondreSupprimer
Supprimer"மத்திய அரசே இதுதான் மனித நேயம்!"
புலவர் அய்யா அவர்களே!
இங்கு எப்போது லலித் மோடிக்கு மனித நேயத்துடன் உதவி செய்ய சுஷ்மா சுவராஜ் (Sushma Swara)j வந்தார்.
நட்புடன்,
புதுவை வேலு
"இனிமேல் நீ யாரை கண்டும் பயப்பட வேண்டாம். யாருக்கும் மாமூல் கொடுக்கவும் வேண்டாம். உன் உயிரை பாதுகாத்து, உன் குடும்பத்தாரை காப்பாற்ற வேண்டும் என்றால்.., இனிமேல் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டாதே என்று அந்த வாலிபருக்கு அறிவுறை கூறி, தட்டிக்கொடுத்து அந்த இன்ஸ்பெக்டர் வழியனுப்பி வைக்கிறார்." இது கண்டிப்பாக கற்பனையாகத்தான் இருக்கும்.
RépondreSupprimerகற்பனையே என்றாலும் நிச்சயம் கடைபிடிக்க வேண்டிய வழிதானே சொல்லி உள்ளார். நல்லதை நாமும் போற்றுவோமே முனைவர் அய்யா அவர்களே!
RépondreSupprimerநன்றி!
நட்புடன்,
புதுவை வேலு