jeudi 4 juin 2015

"பயணம்"




விமானம் தாமதமானால் பயணிகள் இழப்பீட்டை எவ்வாறு பெறுவது?







மனிதர்கள் சயனம்(உறக்கம்) கொள்கிறார்களோ! இல்லையோ? இப்பொழுது தவிர்க்க முடியாத தண்ணீர் போலவே  வாழ்வில் பயணத்தை கருத துவங்கி விட்டனர் என்றே சொல்லலாம்.
அது திருமணம் முடித்த புது மணத் தம்பதியினரின் உல்லாசப் பயணமாக இருக்கலாம்!
வேலை நிமித்தமான பயணமாக இருக்கலாம், சுற்றுலாப் பயணமாக இருக்கலாம்.
ஏன்?
நமது பாரத பிரதமர் மோடி போன்றோரின் அரசியல் பயணமாகவும் இருக்கலாம்.
அந்த வகை பயணங்களில் தற்போது "விமானப் பயணம்" குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.
இது குறித்த ஒரு விழிப்புணர்வு  கட்டுரையினை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே வந்துள்ளேன்.


குறிப்பிட்ட இடத்திற்கு ஒரு விமானம் தாமதமாக சென்றால், அந்த விமான நிறுவனத்திடமிருந்து பயணிகள் இழப்பீட்டு தொகையை எவ்வாறு பெறுவது என நுகர்வோர் உரிமைகள் அதிகாரி ஒருவர் விளக்கியுள்ளார்.

Consumer champion என்ற அமைப்பை சேர்ந்த அதிகாரியான Dean Dunham என்பவர் கூறுகையில், விமானம் தாமதமாக சென்றதற்காக இழப்பீடு கேட்டும் பல விமான நிறுவனங்கள் அதை நிராகரித்து விட்டன என்ற குற்றச்சாட்டுகளுடன் எண்ணற்ற கடிதங்களும் மின்னஞ்சல்களும் தனக்கு வருகிறது என்றார்.

விமானங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லவில்லை என்றால் அதற்கான இழப்பீட்டை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என்று பிரித்தானிய உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் வலியுறுத்தியிருந்தது.

உச்ச நீதிமன்றம் கொண்டுவந்த சட்டத்திற்கு பிறகும் பல நிறுவனங்கள் பயணிகளுக்கு இழப்பீடு வழங்க மறுத்துவருகிறது.
நீதிமன்ற உத்தரவு படி, ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த விமானங்களில் பயணம் செய்பவர்களுக்கும் அல்லது ஐரோப்பிய நாடுகளில் உள்ள விமான நிலையத்திலிருந்து பிற நாட்டு விமானங்களில் பயணிப்பவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தும்.
அதாவது, பயணி ஒருவர் செல்ல வேண்டிய இடத்திற்கு குறிப்பிட்ட நேரத்தை விட கூடுதலாக 3 மணி நேரங்களுக்கு மேல் அவர் பயணிக்கும் விமானம் தாமதமாக சென்றால், அந்த விமான நிறுவனம் அவருக்கு 448 பவுண்டுகள் இழப்பீடு வழங்குவதுடன், அவருக்கும் அவருடன் சென்ற ஒவ்வொருவரின் பயணச்செலவையும் விமான நிறுவனம் திருப்பி அளிக்க வேண்டும்.
ஆனால், பல விமான நிறுவனங்கள் ‘தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில்’ பயணிகளுக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி இழப்பீட்டை தர மறுத்து வருகின்றனர்.

இங்கு ‘தவிர்க்க முடியாத சூழ்நிலை’ என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது மோசமான காலநிலையை தான். அதுபோன்ற காலத்தில் விமானங்கள் தாமதமாக சென்றால் இழப்பீடு பெற முடியாது.
ஆனால், விமானத்தில் ஏற்படும் தொழில்நுட்ப காரணங்கள் மற்றும் இதர காரணங்களுக்காக விமானம் தாமதமாக சென்றால், அதற்கான இழப்பீட்டை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தற்போதும், தொழில்நுட்ப குறைபாடுகளை ‘தவிர்க்க முடியாத சூழ்நிலையால் பயணிகளுக்கு இழப்பீடு தர மறுத்து வருவது சட்ட விரோதமான செயலாகும்.
இவ்வாறு, பிரச்சனைகள் எழும்போது சில சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும்.

இதுபோன்று சட்டவிரோதமாக இழப்பீட்டை தரமறுக்கும் விமான நிறுவனத்திற்கு எதிராக உள்நாட்டு விமான போக்குவரத்து ஆணையத்திற்கு உடனடியாக புகார் கொடுக்க வேண்டும்.
இந்த ஆணையமானது விமான நிறுவனத்தை கட்டாயப்படுத்தி இழப்பீட்டை பெற்று தர முடியாவிட்டாலும், விமான தாமதத்திற்கான காரணம் முழுமையாக கண்டறியப்பட்டால், பயணியின் 80 சதவிகித பிரச்சனையை ஆணையமே தீர்த்து வைத்து விடும்.
இதற்கு பின்னரும் சம்பந்தப்பட்ட விமான நிறுவனம் இழப்பீடு வழங்க மறுத்தால், இந்த வழக்கை சிறிய நுகர்வோர் நீதிமன்றங்களுக்கு கொண்டு சென்றால், பயணிகளின் இழப்பீடு நிச்சயம் கிடைக்கும் என Dean Dunham தெரிவித்துள்ளார்.

பகிர்வு

புதுவை வேலு

நன்றி: (todayindia.info)



20 commentaires:

  1. அருமையான தகவல் பதிவுக்கு நன்றி நண்பரே...

    மோசமான காலநிலையை தான். அதுபோன்ற காலத்தில் விமானங்கள் தாமதமாக சென்றால் இழப்பீடு பெற முடியாது.

    ஆனால், விமானத்தில் ஏற்படும் தொழில்நுட்ப காரணங்கள் மற்றும் இதர காரணங்களுக்காக விமானம் தாமதமாக சென்றால், அதற்கான இழப்பீட்டை பயணிகளுக்கு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதில் நியாயம் இருக்கிறது.

    RépondreSupprimer
    Réponses
    1. நியாயமான கருத்தை மொழிந்தமைக்கு
      நன்றி கில்லர்ஜி அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. நல்ல தகவல் ,விமானப் பயணிகளின் உரிமைகள் காற்றில் பறக்காமல் போனால் சரி :)

    RépondreSupprimer
    Réponses
    1. விமானப் பயணிகளின் உரிமைகள் காற்றில் பறக்காது சிறக்க வேண்டும்! சிறகடித்து பறக்க வேண்டும். நன்றி ஜி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. வார்த்தைச் சித்தரின் வருகை வரப்பிரசாதம்
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. ஆஹா விமானத்தில் போறவங்க நல்லா படிங்கப்பா,,,,,,,,,,,,,,
    புதுவையாரே அருமையான பதிவு.
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. ஒருமுறை இங்கு வாருங்களேன் தங்கள் குடும்பத்துடன் சகோதரி!
      விமானப் பயணம் குறித்து பாலமகி பக்கங்களில் பயணக் கட்டுரையே எழுதலாம்.
      வாருங்கள் ஒருபயணம்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. இது விமானத்தில் போறவுகளுக்கு... இருந்தாலும் விமானத்தில் போற நண்பர்களுக்கு உதவும் நன்றி! த.ம.3

    RépondreSupprimer
    Réponses
    1. தோழரே! தங்களுக்கும் இது போன்ற பயணம் அமைய அழைக்கின்றேன்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. நல்ல தகவல் அய்யா!
    த ம 4

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி நண்பரே!
      தங்களது தொடர் வருகை தொல்காப்பியம் போல் சிறப்பானது.
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. Réponses
    1. நற்கருத்து! நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. Réponses
    1. செல்வாக்கை அள்ளித்தரும் நல்வாக்கு!
      நன்றி அய்யா!நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. வணக்கம்
    ஐயா
    அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்! வாருங்கள் கவிஞரே!
      பாராட்டும் பண்பை தங்களிடமே அதிகம் கற்றேன்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. பயனுள்ள தகவல்கள் பலவற்றை விமான வேகத்தில் பதிவாகத் தந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. பாராட்டுகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் வலைச்சரம் ஆசிரியர் அவர்களே!
      வலைச் சரத்தில் சிறப்பு செய்தது போதாது என்று,
      இங்கும் வந்து பாராட்டி; வாழ்த்து சொல்லி இருப்பது
      இரட்டிப்பு மகிழ்ச்சியை அள்ளித் தருகிறது!
      என்றும் தங்களது அன்பையும், ஆசியும் பெற்று வாழ வேண்டும்!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer