jeudi 4 juin 2015

"தடை சொல்லி விடை காண்போம்!"

படம் சொல்லும் பாடம்



                                                                பட உதவி: விகடன்(நன்றி)


பாம்பு என்றால் படையும் நடுங்குமய்யா!
இந்த!
பாம்பை தின்றால் உடலும் ஒடுங்குமய்யா!

இந்த!
சிக்குண்ட நூலால் சிறுகுடலை தைக்காதீர்!
சீரழிந்து போகுமே பெருங்குடலும் சேர்ந்தே!


இந்த!
பாம்புக்கு பால் வார்க்காதீர் இன்று!
வார்த்தால்
நமக்கும் பால் வார்க்கப் படும் நாளை!


நாம் நலம் பெற்று வாழ!
தடை சொல்லி விடை காண்போம்!


புதுவை வேலு

30 commentaires:

  1. நாம் நலம் பெற்று வாழ!
    தடை சொல்லி விடை காண்போம்!/

    ஆம் புறக்கணிப்போம்.....அடியோடு வேர் களைய வேண்டியது. அபோது தான் இது போல் மற்றவைகள் புதிதாக முளைக்காது.

    தமிழ் மணம் இணைப்போடு 1

    RépondreSupprimer
    Réponses
    1. முதல் வருகை முன்னெடுத்து வந்து முதல் வாக்கை பதிவு செய்து
      முதல் தரமான கருத்தினை வைத்தமைக்கு மிக்க நன்றி சகோ!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. குறிப்பிட்ட பெயர் கொண்ட பாக்கெட் மட்டும் தான், மற்றவை நல்லவை என விளம்பரம் படுத்தப்படுகிறது.அனைத்தையும் நாம் தவிர்க்க வேண்டும்.
    பகிர்ந்தமைக்கு நன்றி.

    RépondreSupprimer
    Réponses
    1. விளம்பரங்களுக்கும் கெடுபிடி அவசியம் என்பதை தங்களது கருத்தால் அறிந்து கொண்டேன் சகோ! நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. ஆம் நண்பரே புறக்கணிக்க வேண்டிய விடயமே...
    தமிழ் மணம் 2

    RépondreSupprimer
    Réponses
    1. தீமையை சுட்டெரிப்பதில் சூரியன் நீங்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. தடை சொல்லி விடை காண்போம்.....

    RépondreSupprimer
    Réponses
    1. விடை கிடைத்தது தோழரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. தடை சொல்லி விடை காண்போம்.....

    RépondreSupprimer
    Réponses
    1. தடையை விதிக்க போரடி வெற்றியும் கிடைத்து விட்டது! தமிழகத்திலும், புதுவையிலும் தோழரே!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. Réponses
    1. "உண்மை"யை பாடம் நடத்தி சொல்ல வந்த ஆசிரியைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. காலத்துக்கேற்ற கவிதை. நூடுல்சை பொறுத்தவரை சீனாவில் கையால் உருவாக்கப்படும் நுடுல்ஸ் மட்டுமே உடலுக்கு ஆரோக்கியமானது. நமக்கு கிடைக்கும் எல்லா நுடுல்சுமே கெடுதிதான்.
    த ம 4

    RépondreSupprimer
    Réponses
    1. உடலுக்கு ஆரோக்கியமான நூடுல்ஸை அடையாளம் காட்டியமைக்கு
      நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. எந்தப் பாம்பு என்று தெரிந்துகொண்டேன். என்ன செய்வது அனைவருமே அந்தப் பாம்பைத்தானே சுற்றிவருகிறார்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. காலை சுற்றிய பாம்பு
      கடிக்காமல் விடாது
      வருகைக்கு நன்றி முனைவர் அய்யா!

      Supprimer
  9. தகுந்த நேரத்தில் வெளியிட்டுள்ள தங்கமான பயனுள்ள விழிப்புணர்வுப் பதிவு. பகிர்வுக்குப் பாராட்டுகள். நன்றிகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களது பாராட்டினை பணிவன்போடு ஏற்கின்றேன்!
      அய்யா!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. அன்புள்ள சகோதரர் ’யாதவன் நம்பி’ - புதுவை வேலு அவர்களுக்கு வணக்கம்! இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால், தங்களின் வலைத்தளம், இன்றைய (05.06.15) வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் இனிய நல் வாழ்த்துக்கள்.

    வலைச்சர இணைப்பு இதோ:
    வலைச்சர ஆசிரியராக கோபு - 5ம் திருநாள்
    http://blogintamil.blogspot.in/2015/06/5.html

    RépondreSupprimer
    Réponses
    1. வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அய்யா அவர்களின்
      கொள்கை பரப்பு செயலாளராக, உற்ற உறுதுணை புரிந்து வரும் தங்களுக்கு எனது
      மனமார்ந்த நன்றியை முதலில் சொல்லி விடுகிறேன்.
      இந்த தகவலை அறிய தந்த தங்களுக்கு குழலின்னிசையின் குடும்பத்தின் சார்பில் நன்றி!பதிவுகள் பக்கம் தங்களது பார்வை பட்டால் இன்னும் மகிழ்வேன் நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. ஐயோ...! வேண்டவே வேண்டாம்...

    RépondreSupprimer
    Réponses
    1. வார்த்தைச் சித்தரின் வருகை
      நிச்சயம் வேண்டும்! வேண்டும்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. ஒரு வழியாக இந்த ஆட்கொல்லி இடியாப்பத்திற்கு தடை செய்துவிட்டார்கள். இதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. ஒரு வழியாக இந்த ஆட்கொல்லி இடியாப்பத்திற்கு தடை செய்துவிட்டார்கள்".
      ஆமாம் அய்யா! பேராபத்திலிருந்து காப்பாற்றப் பட்டு உள்ளோம்.
      தங்களுக்கும் மிக்க நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. உரிய காலத்திற்கு ஏற்ற கவிதை!

    RépondreSupprimer
    Réponses
    1. புலவர் அய்யாவின் பாராட்டுக்கு ஏற்புடையவனாக என்னை தயார் படுத்திக் கொள்ள முயல்கிறேன். நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. பசங்க ரொம்ப விரும்பிச் சாப்பிட்டாங்க.நமக்குத் தெரியாமலே நஞ்சைக் கொடுத்திருக்கிறோம்!

    RépondreSupprimer
    Réponses
    1. உண்மைதான் அய்யா!
      வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!

      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. வசூலிக்க வேண்டியதை வாங்கிக்கொண்டு தடையை நீக்கிக் விட்டாலும் மக்கள் விழிப்புடன் இருப்பதே நல்லது :)

    RépondreSupprimer
  16. மக்கள் விழிப்புணர்ச்சி சிறக்க வித்திட்ட தங்களது கருத்து விருட்சமாகட்டும்!
    நன்றி பகவான் ஜி!

    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer