mardi 30 juin 2015

"இடைத்தேர்தல்"




கடைக்கோடி மாந்தர் காணும்-வாழ்க்கை
கனவுலகம் நனவாகி வருமோ?
இடைத்தேர்தல் மக்கள் வாக்கு! -நல்
விடைத் தேடி விடியலைப் பெறுமோ?

படையே சென்று தேர்தலில் வென்று-வெற்றி!
குடையின்கீழ் குடிபுகுதே! இந்த அரசு!
"உடை உணவு உறை"யுள் யாவும் - வாழ்வில்
தடையின்றி கிடைக்கும் நாளே!

மடைதிறந்து காவிரி குடிபுகும் தமிழகம்
நடை பயிலும் நன்னாள் என்போம்!
வெற்றி வெளிச்சமாய் தெரியும் -அன்று
அகராதியில் நன்று! நன்மக்களே!


புதுவை வேலு

 

18 commentaires:

  1. வெற்றி பெற்றோருக்கு நல்வாழ்த்துகள். வாக்களித்து வெற்றிகிட்டச் செய்த பொதுமக்களுக்கும் வாழ்த்துகள். மெட்ரோ ரெயில் ஓட்டம் போல இனி தொடர்ந்து நல்லதே நடக்கட்டும்.

    RépondreSupprimer
    Réponses
    1. மெட்ரோ ரெயில் ஓட்டம் போல இனி தொடர்ந்து
      மக்கள் வாழ்வின் வளர்ச்சிப் பணிகளும் வேகம் எடுத்தால்தான்
      வாழ்த்துக்கு தகுதியுடைய வெற்றியாக இது இவ்வெற்றி அமையும்! அல்லவா?
      அய்யா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
      வருகைக்கு நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. பலவற்றில் விடியலைப் பெற வேண்டும்...

    RépondreSupprimer
    Réponses
    1. வார்த்தைச்சித்தரே!
      விடியலைக் காணும்
      தமிழகம் இனிமேலாவது நன்கு மலர வேண்டும்!
      கனவு மெய்ப்பட வேண்டுவோம்!!!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. நாம் இன்னும் விடியலை நோக்கி நர்ந்துகொண்டுதான் இருக்கின்றோம் இல்லையா ஐயா? முழுவதும் அடையவில்லை.....நலல்து நடக்கட்டும்...நடந்தால் சரி...

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. குடிமக்களுக்கு விடியட்டும்......த.ம 3

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. நமக்கென்று ஒருத்தி வாய்த்துவிட்டபின் “ பிற இடைகளைத் “ தேடல் சரியா. எனக்குத் தோன்றிய இடைத்தேர்தல் பற்றிய நினைப்பு,,,,,!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. வாழ்த்துக்கள்! நல்லது நடக்குமென்று நம்புவோம்!

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. சிறந்த பகிர்வு
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses
    1. நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer