lundi 15 juin 2015

"சுப்பு தாத்தாவின் சுக ராகம் "

 (கருப்பை வெள்ளையாக மாற்றும்)

 

வெண்மேகம்
வெங்கலக்குரலில்
மங்களம் இசைத்து
வலைவானில்...
வலம் வருகிறது

புதுவை வேலு அவர்களின்
புதுக்கவிதை.
சுப்பு தாத்தா இசைப்பது
தேஷ் ராகத்தில்.
பாட்டின் வரிகள்







கருப்பை...
வெள்ளையாக மாற்றும்!
வெண்மேகத்தை...
வெளிச்சம் போட்டு
காட்டுகிறதோ?
இந்த வெண்ணிலவு?

இதற்கு
யார் சாட்சி?

அன்னாந்து பார்க்கும்
அந்த மனிதனா?
அந்த பட்ட மரமா?  

புதுவை வேலு
நன்றி: திரு சுப்புத்தாத்தா / (YOUTUBE)

31 commentaires:

  1. வணக்கம்
    ஐயா
    அருமையாக உள்ளதுஇரசித்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் கவிஞரே!
      இசையாய் புறப்பட்டு
      புயலின் வேகமெடுத்து
      பூங்காற்றாய் முதலில் வந்து
      வாசமிகு கருத்தை வழங்கியமைக்கு நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  2. Réponses
    1. சிறப்புமிகு தமிழ் மணம் வாக்கிற்கு நன்றி கவிஞரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. அருமையாக இருந்தது சுப்பு தாத்தாவின் பாடல்

    RépondreSupprimer
    Réponses
    1. இன்பம் சேர்க்க வந்த பாடலை
      செவிமடுத்து ரசித்தமைக்கு நன்றி நண்பா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. அருமையாக இருக்கு சுப்புத்தாத்தாவின் பாடல் குரல்!

    RépondreSupprimer
    Réponses
    1. சுப்பு தாத்தாவின் குரல் இசையை
      குழல் இன்னிசையாய் கேட்டமைக்கும்,
      வாழ்த்தி பாராட்டியமைக்கும் 'தனிமரம்' நன்றி
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. அருமை
    இனிமை
    ரசித்தேன் நண்பரே
    நன்றி
    தம +1

    RépondreSupprimer
    Réponses
    1. நல்ல கருத்தை நலமுடனே நாள்தோறும் அளித்து வரும் கரந்தையாரே
      உள்ளத்தின் உவகையால் உதிர்க்கின்றேன் நன்றினை!
      இசையை, கவிதையை, பாராட்டிய கருத்திற்கு மனமார்ந்த நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. அழகாக, ரசிக்கும்படி உள்ளது பாடல்.

    RépondreSupprimer
    Réponses
    1. முனைவர் அய்யாவின் கருத்து மழை குளுமை! குதுகூலம்!
      நன்றி அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. Réponses
    1. இனிமை இன்பத்தை இல்லை என்றே சொல்லாது
      முக்கனிபோல் அனைவருக்கும் அளிப்பவரே!
      வார்த்தைச் சித்தரே வருகையும், வாக்கும் சிறக்கட்டும்!
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. சுப்பு தாத்தாவின் பாடல் அருமை.இசையை இரசித்தேன்!

    RépondreSupprimer
    Réponses
    1. பாவேந்தர் பாரதி தாசன் அவர்கள் இயற்றிய
      ஓர் இரவு என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற

      துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
      இன்பம் சேர்க்க மாட்டாயா?
      துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ
      இன்பம் சேர்க்க மாட்டாயா? - எமக்
      கின்பம் சேர்க்க மாட்டாயா?
      - இந்த பாடலின் இசையும், சுப்புதாத்தா இசையமைத்த சுப்புவின் சுக ராகம்' ஒன்றுதானோ?

      நன்றி நடனசபாபதி அய்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. சுப்பு தாத்தாவின் பாடல் அருமை.

    RépondreSupprimer
    Réponses
    1. சகோதரி சாரதா அவர்களே!
      பாட்டினை ரசித்தால் மட்டும் போதாது!
      உடனடியாக இனிப்பு வகை ஒன்று செய்து
      பதிவில் இன்று தாருங்கள்!
      சுவைக்க காத்து இருக்கிறோம்.
      சுப்பு தாத்தாவின் சுக ராகம் - போன்று,
      சாரதாவின் சுவைமிகு இனிப்பு ரகம்! அமையட்டும்.
      நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. அருமையான பாடல்.
    த ம 7

    RépondreSupprimer
    Réponses
    1. அருமை நண்பர் செந்தில் குமார் அவர்களது கருத்திற்கும், வலிமைமிகு வாக்கிற்கும் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. வெங்கலக்குரலில் "சுப்பு தாத்தா பாடிய சுக ராகம் " அருமை சகோ! நன்றி !

    RépondreSupprimer
    Réponses
    1. திரு சுப்புதாத்தா பாடிய சுக ராகத்தை கேட்பதற்கு, ஓடோடி குழலின்னிசையை நோக்கி வந்தமைக்கு, வரவேற்பு மலரை மணமுடன் தருகின்றேன் சகோதரி!
      கருத்து களஞ்சியத்தில் நிறையட்டும். நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  12. சுப்பு தாத்தா அவர்களின் பாடிய பாட்டு அருமை.
    வீரியமான எழுத்துக்கு புதுவை வேலு அவர்களுக்கு பாராட்டுகள்.

    வலைச்சர குழுவில் தானும் ஒரு ஆசிரியராக பொறுப்பேற்ற யாதவன் நம்பியாகிய புதுவை வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. திரு சுப்பு தாத்தா அவர்கள் ,' தேஷ்' ராகத்தில் கவிதைக்கு இசையமைத்து,
      அனைவரையும் 'பேஷ் பேஷ்' போட வைத்து விட்டார் பார்த்தீர்களா?
      நண்பர் சத்யா அவர்களே!
      வீரியமான எழுத்துக்கு இசை நடை கற்பித்தவரை நினைவில் கொள்வோம்.
      வலைச்சரம் குழுவில் குழலின்னிசை பங்கெடுத்தமையை பாராட்டிய உங்களுக்கும் எனது நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  13. நன்று! நன்று! மிகவும் இரசித்த ஒன்று!

    RépondreSupprimer
    Réponses
    1. கவிதையை புலவர் அய்யா ரசிக்கும்படி செய்தது
      அந்த பட்ட மரம் அல்லவா?
      மன்னிக்கவும்!
      துளிர்விட்டு மீண்டும் துளிர்த்து தூய இசைக் காற்றாய் உலவும் திரு சுப்பு தாத்தா அல்லவா?
      நன்றி நற்புலவர் அய்யா அவர்களே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. கவிதைக்கு மெருகு சேர்க்கும் இசை.

    RépondreSupprimer
  15. கவிதையின் கண்களாய்
    குழலின்னிசைக்கு ஒளி படைத்த கண்ணனை
    திருசுப்புதாத்தா அவர்களை மகாகவி பாரதியின் பாடலால் வரவேற்போம்
    ஒளி படைத்த கண்ணினாய் வா! வா!
    உறுதி கொண்ட நெஞ்சினாய் வா! வா!
    நன்றி திருசென்னைபித்தன் அவர்களே!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  16. என் பாடல் ஒன்றுக்கும் சுப்புத் தாத்தா பாடியிருக்கும் பேறு பெற்றவன் நான் இருவருக்கும் வாழ்த்துக்கள். ,

    RépondreSupprimer
  17. வாழ்த்திற்கு நன்றி அய்யா!
    சுப்பு தாத்தா பாடிய தங்களது பாடலின் லிங்க் தாருங்கள் அய்யா!
    நன்றி!
    நட்புடன்,
    புதுவைவேலு

    RépondreSupprimer
  18. சுப்பு தாத்தா நகைச்சுவை உணர்வு மிகுந்த பண்பாளர்... இதற்கு அவருடைய வலைதளமே சாட்சி... கிளிக் S .ஜட்ஜ்மென்ட் .

    RépondreSupprimer