lundi 10 novembre 2014

"கவிமலர்"

மனித புனிதர் எம்.ஜி.ஆர் விழா 2014வலைப் பூ அன்பர்களுக்கு,
வணக்கம்!

பிரான்ஸ் எம்.ஜி.ஆர் பேரவையின் சார்பில் இம்மாதம் நவம்பர்
8-ந்தேதி (08/11/2014) நடந்தேறிய விழாவில் அதன் தலைவர் திரு முருகு பத்மநாபன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க
"கவிமலர்" நிகழ்ச்சியில்,
நான் (புதுவைவேலு) இயற்றி,
திரையுலக சார்பிலும்,
பத்திரிகையுலக சார்பிலும் கலந்து கொண்டு சிறப்பித்தவர்களின் முன்பு வாசித்தளித்த கவிதை இது!
எந்த விதமான விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் தராமல் எழுதப் பட்ட கவிதையாக மட்டும் இதனை படிக்க வேண்டுகிறேன்.
நன்றி!


பிரான்சு எம்.ஜி.ஆர் பேரவை நடத்தும்

மனித புனிதர் எம்.ஜி.ஆர் விழா 2014


நாள்: 08/11/2014
இடம்: பிரான்சு
                                கவி மலர்

 

 

 

 

 

 


பொன்மனச் செம்மலே
பொங்கு தமிழ் அண்ணலே!
போற்றுகிறேன் -உம் புகழை
பிரான்சு எம்.ஜி.ஆர். பேரவையிலே


ஆன்றோரே! சான்றோரே!
செவி சாய்ப்பீர்
செம்மலின் சிறப்புரைக்கும்
புதுவை வேலுவின்
கவிதை (கவிமலர்) கேளீர்!


தெய்வத் தாய் "சத்திய பாமா"
ஈழத்தில் ஈன்றெடுத்த
ஈகை குணம் படைத்த
ஈசன் (கர்ணன்)


மருதூர் கோபால மேனன்
இராமச் சந்திரன் என்னும்
தமிழ் நேசன்!


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவரே!
வையகம் போற்றிடும் வள்ளலே!
ஏழைகளின் இதயக் கனியே
உமது திருநாமம் போற்றுகிறோம்

இன்று!...
நாங்கள் ஏற்றுகிறோம்
உனது
புகழ் - என்னும்
"ஒளி விளக்கை"
அகிலமெல்லாம்
"ஆனந்த ஜோதியாய்"-அது
எரியட்டும்!


உனது
வரலாற்று காவியத்தில்
"கலங்கரை விளக்கமாய்"-
அதன் ஒளி பரவட்டும்!.
புரட்சி நடிகரே!
"இளமையில் கல்"
என்பார்கள்
ஆன்றோர்கள்.


அது!
உனது வாழ்வில்
இயலாமல் போனதால்தான்
பால்ய பருவத்தில்
"பாய்ஸ் கம்பெனியில்"
பால பாடம் படித்தாயோ?

அவர்கள் நடத்தும்
நாடகத்திலும்...
நன்றாக நடித்தாயோ?

காலத்தை வென்றவரே!
இரட்டை விரல் காட்டி
இரு முறை எமனையே
எச்சரித்தவர் நீங்கள்!

கரை வேட்டிதான்
(கருப்பு சிகப்பு - வெள்ளை)
நீங்கள்! அணீவீர் !
என்றாலும்,
உங்களது கரங்களோ
« உழைக்கும் கரங்கள் ».


எங்கேயும் எப்போதும்
தப்பாது…
« அன்னமிட்ட கை » 
 
அது!
வாள் ஏந்தும் வீரக் கை!
வஞ்சகத்தை வீழ்த்தும் கை!
சூல் ஏந்தும் கொள்கை துலங்கும் கை!
துன்புறுவோர் தோளேந்தும் துயரத்தை
துடைக்கும் கை!
பாரி வள்ளல்
பாரத் எம்.ஜி.ஆர்.
அவர்களது « கை »" நீர் இன்றி அமையாது உலகு »
மக்கள் திலகமே
நீர் (எம்.ஜி.ஆர்) இன்றி
இல்லை!
திரை உலகு.


திரைப் பட துறையில்
நீங்கள் ஒரு
பன்முகப் படைப்பாளி!

ஆம்!
அன்பு, பண்பு, தாய்ப் பாசம்,

வீரம், புரட்சி, நாட்டுப் பற்று,
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு,
தியாகம், தர்மம், சமுதாயத் தொண்டு,

போன்ற
பன்முக பாத்திரங்களை
ஏற்று நடித்த ஆற்றல்மிகு நடிகர்.


அழகை அள்ளி அள்ளிக் கொட்டும்
எழில் வனப்பு
உமது மேனி!

முத்தமிழை சுவைப்பதிலோ
நற்றமிழ் தேனீ!

தங்கத்தையொத்த உமது நிறம்
"எங்கள் தங்கத்தின் மேனி என்பர்!

அறிஞர் அண்ண இருந்த
தி மு க
உனது
தாயின் மடி
"குடியிருந்த கோயில்"
என்பர்!


பாட்டுலகில்
பாட்டாலே புத்தி சொல்லும்


பாவலர்கள் பலர் உண்டு!
அவர் தொண்டு
அறிந்து கொண்டு! வாய்ப்பளிக்க!
திரையுலகில் உனைப் போல்
யாருண்டு?

புரட்சி தலைவரே!
உமது வாழ்க்கை
வெற்றிகளும் சாதனைகளும்
நிறைந்த
வீரம் செறிந்த காவியம்!
புகழ் மணக்கும்
புதிய புறநானூறு!


இறவாப் புகழை
இறந்தும் பெற்ற
இதயவீணை! – இவர்

தாய் மூகாம்பிகையின்
அருளைப் பெற்ற
ஆன்மீகப் புரு-ஷர்! - இவர்

உலகம் சுற்றும் வாலிபனே!
அரசியல் உலகில்...
சூது கவ்வியபோது!
உனது
ரத்தத்தின் ரத்தங்களை
நீதிக்கு தலை வணங்க சொன்னவர்

நீங்கள்!
ஆம்!
நீதிக்கு பின் பாசம் என்று
உணர்த்தியவரும்
நீங்கள்தான்!.

தூய உள்ளம் படைத்த தூயவரே!
தாயை வணங்கும்
"தலைவன்" - நீவீர்!
ஆம்!-அதனால்தான்
தாயைக் காத்த தனயன் ஆனாயோ?

சோசலிசம்
முதலாளித்துவம்
இரண்டும் கலந்து கொள்கையை
வகுத்து
அதிமுக வை உருவாக்கிய
அரும்பெரும் தலவர்!
எம்.ஜி.ஆர்.


சலிப்பும் ஓய்வும்
தற்கொலைக்கு சமம்
என்னும்
பெருந்தகை பெரியாரின்
கோட்பாட்டை
கோட்டையில் பொறித்தவர்
நீங்கள்!

கடமை
கண்ணியம்
கட்டுப் பாடு என்னும்
பேரறிஞர் அண்ணாவின்
தத்துவத்தை
காலத்தால் அழியாது
பாது காத்தவர் நீங்கள்!


 கர்மவீரர் காமராஜரின்
திருவுருவபடத்தை
சட்டமன்றத்தில்
திறந்து வைத்து -அதில்
"உழைப்பே உயர்வு தரும்"
என்னும் வாசகத்தை
கலைஞரிடம் யாசகம் பெற்று
பதிவு செய்த
அரசியல் நாகரிகம் அறிந்த
முன்னோடி எம்.ஜி.ஆர்.

கொடுத்து சிவந்த கரங்களுக்கு
"நம் நாடு"
கொடுத்த பட்டங்கள்
"நவ ரத்தினமாய்"
ஜொலிக்குதப்பா!

புரட்சி நடிகர் - கலைஞர்
பொன்மனச் செம்மல் - வாரியார்
மக்கள் திலகம் - தமிழ் வாணன்

புரட்சி தலைவர் - கே..கிருஷ்ணசாமி

இதயக் கனி பட்டம் = அறிஞர் அண்ணா வழங்கியது
பாரத் ரத்னா விருது= இந்திய அரசின் உயர்ந்த விருது
டாக்டர் பட்டம் = சென்னை பல்கலைக் கழகம் தந்தது

சிலருக்கு
வாழ்க்கையில்
ஏழரை பிடிக்கும் !
(சனிஸ்வரன் அருளால்)
ஆனால் !
உங்களுக்கு ?
(எம்.ஜி.ஆர்)
ஏழு(7)-ஐ பிடிக்கும்
ஏழை மக்களை பிடிக்கும்.

இதோ!
எம்.ஜி.ஆர் நடிப்புத் துறையில்
காலடி வைத்த வயது =7
பிறந்த ஆண்டு = 1917
சினிமாவுக்குள் நுழைந்த ஆண்டு =1937
கதாநாயகனாக நடித்த ஆண்டு =1947
தி மு க வில் இணைந்த ஆண்டு = 1957
முதல் முறை எம்.எல்.ஏ ஆன ஆண்டு = 1967
முதல் முறை முதலமைச்சர் ஆன் ஆண்டு = 1977
நடித்த படங்களின் எண்ணிக்கை =137
அவர் பயன்படுத்திய
அம்பாசிடர் கார் எண்=4777 (கூட்டுத் தொகை 7)
மறைந்த ஆண்டு =1987

« எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா »
வரப்போகும் ஆண்டு =2017

சத்துணவு தந்த
சரித்திர நாயகனே!
முத்தமிழ் உள்ளவரை
முழங்கும்
உனது பெருமை!
பாட்டுக்கோர் புலவன் பாரதியின்
நூற்றாண்டு
புகழ்
பரப்ப
மகா கவிக்கு
சிலை எடுத்து சிறப்பித்தாய்
உனது புகழ் - மங்காது
வாழிய! வாழியவே!

நெஞ்சை அள்ளும் தஞ்சையிலே!
தமிழ் பல்கலைக் கழகம் தந்தாய்
தலைநகர் டில்லியிலே
தமிழ்ச் சங்கம் தோன்ற
பேருதவி புரிந்தாய்!வையகம் போற்றும் வண்ணம்
மாட மதுரை மாநகரில்
ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டை
உவகையுடன் செய்திட்டாய்!
மதுரை வீரனே!
உம்-புகழ்வாழ்க!


"இருந்தாலும் மறைந்தாலும்
பேர் சொல்ல வேண்டும்

இவர் போல யாரென்று
ஊர் சொல்ல வேண்டும்

ஊர் மட்டுமல்ல உலகமும்
சொல்லும்படி வாழ்ந்த
திலகம் இவர்!

மக்கள் திலகம் இவர்!

கழகம் துவங்கி
ஐந்து ஆண்டுகளில்
மகுடம் சூடிய
மன்னாதி மன்னன் நீங்கள்!

'தொட்டனை ஊறும் மணற் கேணி
மந்தர்க்கு கற்றனை ஊறும் அறிவு'

தொட்டது துலங்கும்

ஆசியும், ராசியும்
மேலோங்கி வளரும்
இவரது கை பட்டால்?

நடிகர் சிவகுமாரின்
கல்வி அறக்கட்டளை

தழைத்தோங்கி
வளர்வதற்கு காரணம்
இவரது கைராசி !


திரை படங்களில்
சூளுரைக்கும் வசனத்தை
சுருக்கி சொன்னவர் நீவீர்!

தற்போது
தமிழ் படங்களில்
பவனி வரும் "பன்ச்ச்" வசனத்தின்
முன்னோடியும்
நீ(ர்)தான்!


கேள்வி = நிலைத்து நிற்கும் எனது அதிகாரத்தின் ஆழம் தெரிய வில்லையா உமக்கு?

பதில் = உங்களது அதிகாரம் என்ன சிலப்பதிகாரமா?
நிலைத்து நிற்பதற்கு?

கேள்வி = மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
பதில் =சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஒடும்.


கேள்வி = தோல்வியே அறியாதவன் நான்!

பதில் = தோல்வியை எதிரிக்கு பரிசளித்தே பழகியவன் நான்!


ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் 

 அல்லாவா?


 
அறிஞர் அண்ணாவின்
உதய சூரியனுக்கு
சுடராய் நின்றவர்
எம்.ஜி.ஆர்!

சமுதாயத்தின் சக்திகளாக
விளங்கும்
மகளீர்க்கென
தனீ பேருந்து தந்தவர்
எம்.ஜி.ஆர்!

பத்திரிகை துறையிலும்
பாதம் பதித்தவர்

தாய் பத்திரிகையின் நிறுவனர்.

அண்ணா பத்திரிகையின் நிறுவனர்

நேச மணி தமிழ் மாத இதழ் ஆசிரியர்


தீமையை தீண்டாத திலகம் இவர்!
வாய்மையை போற்றும் உலகம் இவர்!
(இவரின்)
அரசியல் வாரிசு செல்வி.ஜெயலலிதா
கலைஉலக வாரிசு கே.பாக்யராஜ்
இரு வாரிசுகளை…
தேர்ந்தெடுத்த தேவன் இவர்.அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.

எல்லோரிடமும் அன்பு பாராட்டிய
அரும்பெரும் தலைவர் எம்.ஜி.ஆர்.

தேசத் தந்தை காந்தியிடம் - நேசம்
மூதறிஞர் ராஜாஜியிடம் - பாசம்
கர்மவீரர் காமராஜரிடம் - எளிமை/பற்று
அறிஞர் அண்ணாவிடம் - தலைமை பண்பு
கலைஞர்/ சிவாஜி இருவரிடம் - நட்பு (பாராட்டிய)
சமத்துவ தலைவர் எம்.ஜி.ஆர்.


"கட்டழகர்களில் கண்டாலே போதுமென!
காந்தப் பார்வை பட்டாலே போதுமென!
பசும்பொன் மேனி தொட்டாலே போதுமென!
பாசத்தோடு
கை கொடுக்க வேண்டும் என எண்ணம், எண்ண

இயற்கையோடு கலந்துவிட்ட
"காஞ்சித் தலைவனை"
நமது நெஞ்சத்தில் வைத்து
அவரின் புகழை
போற்றுவோமே!
இந்நாளில்!


தொடர்ந்து
மூன்று முறை முதல்வராய்
இருந்த
முத்தமிழ் முதல்வருக்கு
இன்னும்
மூன்று ஆண்டுகளில்
நூற்றாண்டு!(1917 – 2017)

வாருங்கள் ரத்தத்தின் ரத்தங்களே!
மங்காத புகழுக்கு

ஊறு விளைவிப்போரை
வேறோடு சாய்ப்போம்!
காலத்தை வென்ற காவிய நாயகனுக்கு
அன்பு என்னும் மாலையை
அவரது அழியாப் புகழுக்கு சூடுவோம் !.


மனித புனிதர் எம்.ஜி.ஆர் புகழ்
இன்று போல் என்றும் வாழ்க!
பல்லாண்டு வாழ்க!
வாழ்க! வளர்க! எம்.ஜி.ஆர் திருநாமம்.


புதுவைவேலு"காஞ்சித் தலைவனுக்கு ஒரு திரைக் கதம்பம் மாலை"

 

 

 

 குறவர் வேஷம் போட்டு

குறவஞ்சி பாடிய
தேடி வந்த மாப்பிள்ளை யாரோ?

படகோட்டி சென்று மீனவ நண்பனை
கண்டது யாரோ?
நாளை நமதே என்று
நம்பிக்கை அளித்தவர் யாரோ?

என் அண்ணன்
என்று சொல்லும்
ஊருக்கு உழைப்பவன் யாரோ?

பணத்தோட்டத்தை தேடிச் சென்ற
மலைக் கள்ளன் யாரோ?
ஓரம் போ! என்று சொல்லும்
ரிக் ஷாக்காரன் யாரோ?

காதல்வாகனம் ஏறி
குமரிக்கோட்டம் சென்றவர் யாரோ?

அடிமைப் பெண்னை
விடிதலை செய்தது யாரோ?
கூண்டுக் கிளியை
பறக்க விட்டது யாரோ?

மந்திரி குமாரியை
மணக்கச் சென்றவர் யாரோ?
ராஜ குமாரியை
கண்டவர்தான் யாரோ?

பெற்றால்தான் பிள்ளையா?
என்று கேட்டவர்தான் யாரோ?
நீரும் நெருப்புடனும்
விளையடியவர்தான் யாரோ?

தாழம் பூவை அழகு என்று
சொன்னவர்தான் யாரோ?
தொழிலாளிக்கு
தோள் கொடுத்த தோழர்தான் யாரோ?

யார் அவர்?
புதுமை பித்தனா?
ராஜா தேசிங்கா?
நாடோடியா?
நாடோடி மன்னனா?
மதுரையை மீட்ட சுந்தர பாண்டியனா?

யார்தான் அவர்?

அவர்தான்........!
எதிர்வரும் 2017-ல்
நூற்றாண்டு விழா காணப் போகும்

புது யுகத்தின் புரட்சி நாயகர்
டாக்டர் எம்.ஜி.ஆர்!


புதுவை வேலு

13 commentaires:

 1. கவி அருமை நண்பரே
  எனது நூலான கரந்தை மாமனிதர்கள் நூலினைக் கேட்டிருந்தீர்கள் நண்பரே
  இது தொடர்பாக நான் அனுப்பிய மின் அஞ்சல் தங்களின் பார்வைக்கு வரவில்லை என்றே எண்ணுகின்றேன்
  தங்களின் முகவரியினை அனுப்ப வேண்டுகிறேன் நண்பரே
  நூலினை அனுப்பி வைக்கின்றேன்

  RépondreSupprimer
  Réponses
  1. வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி கரந்தையாரே!
   கரந்தை மாமனிதர்கள் நூலினை பெறுவதற்கு ஆவல்!
   தாங்கள் அனுப்பிய மின் அஞ்சல்
   எனக்கு வரவில்லை! அனுப்பி வைக்கிறேன். நன்றி!
   புதுவை வேலு

   Supprimer
 2. ஆஹா, கவிதை அருமை.
  அதிலும் திரைக் கதம்ப மாலை சூப்பர். வாழ்த்துக்கள்.

  RépondreSupprimer
  Réponses
  1. சொக்கராய் வந்து சொக்கத் தங்கமான வாழ்த்தினை வழங்கிய
   குணம் படைத்தவருக்கு மனங்கனிந்த நன்றி!
   என்றும் அன்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. எம்ஜிஆர் கவி மலரை ரசித்தேன். அவர் நடித்த அத்தனைத் திரைப்பாடல்களும் இடம் பிடித்து விட்டனவோ,.உரிமையுடன் நான் கண்ட குறையென்றால் பாடலில் ஒருமையும் பன்மையும் ஆகசில இடங்களில் வருவதே. வாழ்த்துக்கள்.

  RépondreSupprimer
  Réponses
  1. அழகிய கருத்தினை உணர்த்தி உள்ளீர்கள்.
   ஏற்புடைய கருத்தை ஏற்றுக் கொண்டேன்.
   வருகை தந்து கருத்தினை வழங்கிய
   வள்ளலே நீவிர் வாழிய வாழியவே!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. ஒரு மன்றத்தின் அழைப்புக்கு மரியாதை செய்து, நாயகனுக்கு புகழை சேர்த்து, கவிதைக்கு முக்கியத்துவம் கொடுத்து, நாயகனின் வழிகாடிகள் மரியாதைமிகு பெரிய மனிதர்களின் மனதை அறிந்து, சினிமா கவர்ச்சிக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து எழுதிய கவி வாசிக்க முடிந்தது புதுவை வேலு அவர்களே.

  sattai vingadassamy

  RépondreSupprimer
  Réponses
  1. கவி மலர் கவிதையை வாசித்து வாழ்த்திய நண்பருக்கு
   நேசமிகு நன்றிகள்!
   புதுவை வேலு

   Supprimer
 5. ரசனை இல்லாதவா்களையும் ரசிக்க வைக்கும் அருமையான கவிமலா்.பாராட்ட பட வேண்டியவா் நீங்கள்.ஒவ்வொரு வாிகளும் அருமை! முக்கியமாக எம்.ஜி.ஆர் க்கு பிடித்த ஏழு, எம்.ஜி.ஆரின்"பன்ச்ச்" வசனம், திரைக்கதம்பம் மாலை அனைத்தும் மிக மிக அருமை!
  "கவிமலர்" நிகழ்ச்சியில் பொன்மனச் செம்மலுக்கு "கவிமாலை" சூட்டிய புதுவை வேலு அவா்களுக்கு எங்களின் "புகழ் மாலை"யை சூட்டுகிறோம்.வாழ்த்துக்கள்! நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. புகழ் மாலை சூடிய சகோதரிக்கு,
   வாடாத நன்றி பாமாலை நான் சூடுவேன்
   நற் பண்பு நாயாகியாய்
   பொற்பதம் போற்றி
   இறை மறை நெறியோடு
   வாழிய வாழியவே!

   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. கவிதை அருமை! திரைக்கதம்பமாலை அதைவிட அருமை!

  RépondreSupprimer
 7. எம்.ஜி.ஆருக்கு பாடல் எழுதியவர் அனைவரும் புகழடைந்துள்ளார்கள். நீங்களும் புகழடைய நல்வாழ்த்துக்கள்

  RépondreSupprimer
 8. நன்றி அய்யா!
  தங்களின் வாழ்த்தினை வணங்குகிறேன்!
  காலதாமதமாக பதிவினை கண்டாலும்
  பதிலளித்த பண்பு அரும் பண்பு! அருமை!
  தொடர்ந்து பதிவினை காண்க அய்யா!
  நன்றியுடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer