lundi 2 mars 2015

"ஆரோக்கிய அமுதம் தண்ணீர்! தண்ணீர்! "

இன்று ஒரு தகவல்

"நீரின்றி அமையாது உலகு" என்றார் வள்ளுவப் பெருந்தகை. அதுபோல, நீரின்றி அமையாது நம் உடம்பு.
நம் உடம்பு பஞ்ச பூதங்களின் கூட்டாகவும், கோளங்களின் பிம்பமாகவும் விளங்குகிறது.

‘ நீர்தான் உயிரினங்களை வாழ வைக்கிறது. தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் உயிரினங்கள் ஏதுமில்லை. ஏன் ? மரம், செடி, கூட இல்லை.

நம் உடம்பில் காணப்படும் உறுதியான - இளக்கமான தோல் சவ்வுகளையும்,  திசுக்களையும்,  அங்கங்களையும் கட்டமைக்கும் பணியைத் தண்ணீர் செவ்வனே செய்து வருகிறது. மனிதனின் ஒவ்வொரு உறுப்பும் தண்ணீரை நம்பியே இருக்கிறது.

நமது உடம்பு 75 சதவீதத் தண்ணீரை உள்ளடக்கியதாக உள்ளது. மூளையில் 80 சதவீதமும்,  இரத்தத்தில் 90 சதவீதமும்,  தோலில் 75 சதவீதமும்,  சிறுநீரகத்தில் 82 சதவீதமும், எலும்பில் 22 சதவீதமும் தண்ணீர் உள்ளது.

உடம்பிலுள்ள சுரப்பிகள் மற்றும் உறுப்புகளில் தேவையான அளவில் நல்ல சுத்தமான தண்ணீர் இல்லையெனில் அவை படிப்படியாகச் சீர்கெடும். சராசரி மனிதன் ஒரு நாளைக்கு இரண்டரை லிட்டர் தண்ணீரை வியர்வையின் மூலமாகவும்,  சீறுநீர் கழிப்பதன் மூலமாகவும்,  கழிவுகளை வெளியேற்றுவதன் மூலமாகவும், ஏன் - மூச்சு விடுவதன் மூலமாகவும்கூட வெளியேற்றுகிறான்.

நம் உடம்புக்குத் தேவையான தண்ணீரின் அளவில் 5 சதவீதம் குறைந்தாலே உடல் சீர்கேட்டிற்கான அறிகுறிகள் தென்படும்.
திடகாத்திரமான மனிதனுக்கு தண்ணீரின் அளவு குறைந்தால் சோர்வும்,  வலுவிழப்பும் ஏற்படும். குழந்தைகளானால் தோல் உலர்ந்து,  கண்களில் மிரட்சி தெரியும். வயதானவர்களுக்குத் தேவைப்படும் தண்ணீரில் 5 சதவீதம் குறைந்தால், உடம்பில் அசாதாரண வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டு உப்புடன் இரசாயன கூட்டுப் பொருள்களைப் பிரிப்பதில் சமநிலைப்பாடு குறைந்து உடம்பில் பாதிப்புகள் ஏற்படும். மாறுபட்ட சூழலுக்கு ஏற்பத் தக அமைத்துக் கொள்ளாமை,  தோலில் சுருக்கம் விழுதல், சோர்ந்து போதல் ஆகியவை முதுமையின் அடையாளமாகும். 


நம் உடம்புக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கப் பெறவில்லையானல்,  அது ரத்த ஓட்டத்திலிருந்து தண்ணீரைப் பெற்று,  இதயம் இயங்குவதற்குக் கடினமான நிலையை ஏற்படுத்தி, தீராத நோய் ஏற்பட எளிதில் வழி வகுக்கும். அதே சமயத்தில் சிறுநீரகம் ரத்த சுத்திகரிப்புப் பணியைச் செய்யாது.


இது தொடர்ந்தால் சிறுநீரகத்தின் பணி கல்லீரலுக்கும் மற்ற அவயங்களுக்கும் தள்ளப்பட்டு அவை மிகுந்த அழுத்தத்துடன் தம் செயலைச் செய்வதால் உடலில் மற்ற நோய்கள் ஏற்படக் காரணமாகும்.


இதனால் நம் உடம்பில் மற்ற உடல் உபாதைகளான மலச்சிக்கல், தோல் உலர்ந்து நமைச்சல் ஏற்படுதல்,  முகப்பரு,  மூக்கில் ரத்தம் வழிதல்,  மூக்கில் நீர் சேர்ந்து சீழ் ஏற்படுதல்,  சிறுநீர் செல்லும் பாதையில் நோய்த்தொற்று ஏற்படுதல்,  இருமல், தலைவலி போன்றவை ஏற்படக் காரணமாகும்.


நாம் உண்ணும் உணவுப் பொருள்கள் அனைத்தும்  பால் உட்பட , சத்தினை விட்டுச்செல்வதாக உள்ளன. ஆனால், அருந்தியதும் அற்றுப் போகக் கூடியது நீர் மட்டுமே. உடம்பின் வெளிப்புறத்தைச் சுத்தம் செய்யும் நீரால், உடம்பின் உட்புறத்தையும் சுத்தம் செய்யலாம். 


எனவே,  உங்களுக்குக் குறைந்தபட்ச தண்ணீர் தேவை எவ்வளவு என்பது உங்களது உடல் எடையைப் பொருத்தே அமையும். 


நம் உடம்பின் எடையில் ஒவ்வொரு இரண்டு பவுண்டுக்கும் ஒரு அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது, ஆண்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 3 லிட்டர் தண்ணீரும் (13 கப்புகள்) பெண்கள் 2.2 லிட்டர் தண்ணீரும் (9 கப்புகள்) அருந்த வேண்டும். 


தொடர்ந்து நீர் அருந்திவந்தால் உடல் வெப்பநிலை ஒரே சீராக இருப்பதுடன்,  ஆரோக்கியமாக இருக்கும். தண்ணீர் அதிகம் குடிப்பதால் உடம்பிலிருந்து தேவைக்கதிகமான உப்பு வெளியேறும். இதனால் கண் பார்வை பிரகாசமாகிக் கூர்மையாகும்,  பற்கள் வெண்மையாகும்,  வியர்வை தோன்றாது. துர்நாற்றம் ஏற்படாது. 


நீர் அதிகம் குடிப்பதால் செரிமான உறுப்புகள் துரிதமாகத் தங்கள் வேலையைச் செய்வதால் இரைப்பைக்கு ஓய்வு கிடைக்கிறது. பழைய திசுக்கள் மறைந்து புதிய திசுக்கள் தோன்றுகின்றன. உணவுக் குழாய் தூய்மையடைகிறது. கல்லீரல் போன்ற செரிமான உறுப்புகள், சிறுநீரகங்கள்,  வியர்வை நாளங்கள் புத்துணர்ச்சி அடைகின்றன.


கல்லீரலில் தேங்கியிருக்கும் கார்பன் போன்ற உடம்புக்குக் கெடுதல்தரும் நச்சுப் பொருள்கள் வெளியேறுகின்றன. செரிமானத்துக்காக சுரக்கின்ற அமிலப் பைகள் சுத்தமடைகின்றன. அதன் செயல்திறன் அதிகமாவதால் குடல் சுத்தமாகி உடம்பிலுள்ள கழிவும்,  கொழுப்பும் அகற்றப்படுகிறது. இதனால் ரத்த நாளங்கள் சுத்தமாகின்றன. அவரவர் உடல் எடையில் எவ்வளவு நச்சுப் பொருள்கள் உள்ளனவோ அவை வெளியேறும்போது உடல் எடையும் குறைகிறது.


உடம்பிலுள்ள உள்ளுறுப்புகள் அனைத்தும் தன்னைத் தானே அக சுத்தம் செய்து கொள்கின்றன. இதனால், உடற் பருமன்,  சர்க்கரை நோய்,  வயிற்றுப்புண்,  நரம்பு சம்பந்தமான நோய்கள் நீங்குகின்றன. உடலில் சுறுசுறுப்பும்,  ஆரோக்கியமும்,  இளமையும்,  பொலிவும் வந்தடைகிறது.


காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் - பல் கூட விளக்காமல் சுமார் 1.50 லிட்டர் அல்லது 6 டம்ளர் தண்ணீர் பருகினால் உடம்பு அன்று முழுவதும் புத்துணர்வுடன் இருக்கும். இதை முதலில் செய்வது கடினமாகவே இருக்கும். போகப்போக பழகிவிடும். இந்த முறையைச் செய்யும் முன்பும் பின்பும் ஒரு மணி நேரத்துக்கு எதையும் குடிக்கவோ, சாப்பிடவோ கூடாது. முதலில் 1.50 லிட்டர் குடிக்க முடியாதவர்கள் சிறிய இடைவெளிவிட்டு குடிக்கலாம். 


தண்ணீரை உரிய முறையில் பருகினால் முகம் பொலிவு பெறும், உடலில் கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறையும், உடல் புத்துணர்வு பெறும், ஜீரண சக்தி அதிகரிக்கும்,  நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்,  ரத்த அழுத்த நோய் நீங்கும், சர்க்கரை வியாதி சரியாகும்,  மேலும் பல நன்மைகள் ஏற்படும். ஆதலின், எப்போதும் தண்ணீர் அருந்துவீர்.
 


அழகை தரக்கூடிய சிறப்பான உணவு எது. என்று சொன்னால் அது தண்ணீர்தான். தண்ணீர் பருகுவதால் உடலுக்கு மட்டுமன்றி சருமத்திற்கும் நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அதிலும் தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் நல்ல ஆரோக்கியமாக செயல்படும். இத்தகைய தண்ணீரை தினமும் குடித்து வந்தால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல்
சருமத்தை மிகப் பொலிவாக வைத்துக் கொள்ளலாம். தினமும் போதிய அளவில் தண்ணீர் பருகினால் ஆரோக்கியமான உடல்நிலை, பொலிவான சருமம், மற்றும் பட்டுப் போன்ற கூந்தலையும் பெண்கள் பெற முடியும்.


தண்ணீரில் கிடைக்கும் நன்மை


ஈரப்பதம்: 

தினமும் தண்ணீரை போதுமான அளவில் குடித்து வந்தால், நமது உடலில் வறட்சி ஏற்படுவதை தவிர்க்கலாம். மேலும் சருமமும் வறட்சியின்றி மென்மையாக இருக்கும்.
இளமையிலேயே சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தையும் இது குறைக்கும். நீர்ச்சத்து
உடலில் குறைவாக இருந்தால் கண்கள் பொலிவிழந்து காணப்படும். மேலும் தண்ணீரைக் கொண்டு பொலிவிழந்த கண்களைக் கழுவினால்? கண்களில் உள்ள நச்சுக்கள் வெளியேறி கண்கள் அழகாக இருக்கும்.

இளமையை தக்க வைத்துக்கொள்ள தண்ணீர் ஒரு சிறந்த மருந்து. தண்ணீர் அதிகம் குடித்தால் சாப்பிடும் அளவு குறந்து செறிமான மண்டலம் சீராக இயங்கி உடல் எடை குறைவிற்கு பெரிதும் துணையாக உள்ளது.


குடிக்கும் நீரின் அளவை அதிகரித்தால் உடலின் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம். உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர் வாயிலாக வெளியேறுவதால் அளவுக்கு அதிகமான
வியர்வை வெளியேறுவதை தவிர்க்கலாம்.
தண்ணீரை அதிகமாக குடித்து நம்மை அழகாகவும்ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வோம்.
 தகவல்: புதுவை வேலு

நன்றி: (தினமணி /தினகரன்)


30 commentaires:

 1. மனிதன் உணவின்றி கூட பல நாள் வாழலாம். ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் மரணம் அதி விரைவில் வந்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். நான் பரீட்சை செய்து பார்த்ததில்லை.

  RépondreSupprimer
  Réponses
  1. 'மனிதன் உணவின்றி கூட பல நாள் வாழலாம். ஆனால் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் மரணம் அதி விரைவில் வந்து விடும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
   நான் பரீட்சை செய்து பார்த்ததில்லை'.


   "பரிட்சைக்கு நேரமாச்சி" என்று நான் சொல்லவே மாட்டேன் அய்யா!
   நீங்கள் நீடுழி வாழ்க!
   என்றும் சிரஞ்சீவி மனதுடன்!

   வருகைக்கு நன்றி அய்யா!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 2. // காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் - பல் கூட விளக்காமல் சுமார் 1.50 லிட்டர் அல்லது 6 டம்ளர் தண்ணீர் பருகினால் உடம்பு அன்று முழுவதும் புத்துணர்வுடன் இருக்கும்... //

  100% உண்மை...

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம் DD சார்!
   // காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் - பல் கூட விளக்காமல் சுமார் 1.50 லிட்டர் அல்லது 6 டம்ளர் தண்ணீர் பருகினால் உடம்பு அன்று முழுவதும் புத்துணர்வுடன் இருக்கும்... //
   இந்த முக்கிய செய்தி முன்பே தெரிந்திருந்தால் DDயின் அனுபவக் கருத்தாக இது நிச்சயம் பதிவில் இடம் பெற்று இருக்கும்.
   விடுபட்ட செய்தியை விருந்தாக தந்தமைக்கு மிக்க நன்றி!
   குழலின்னிசையின் புது பொலிவிற்கு DDயின் பங்கு மிகவும் போற்றுதலுக்குரியது. மிக்க நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. அருமையான செய்திகள் நண்பரே
  நன்றி
  தம +1

  RépondreSupprimer
  Réponses
  1. பதிவிற்கு பக்க பலமாக நிற்கும்
   கரந்தையாரே! வருக!
   மீண்டும் பல நல்ல கருத்துக்களை தருக!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. வாட்டர் தெரபியைப் பற்றியும் தொட்டுக் காட்டி இருக்கலாமே நம்பி ஜி (நான் நேற்று மொக்கை போட்டது போல் அல்லாமல் :)
  த ம 4

  RépondreSupprimer
  Réponses
  1. வணக்கம் பகவான் ஜீ ,
   தங்களை போன்றவர்களின் வருகையும், வாக்கும்,
   குழலின்னிசையின் ஓசையை உலகறியச் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
   தங்களது கருத்துக்கு குழலின்னிசை நிச்சயம் செவி மடுக்கும்.
   வாருங்கள்! தொடருங்கள்!

   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. தண்ணீரின் முக்கியத்துவத்தை மிகவும் சிறப்பாக விளக்கியுள்ளீர்கள்.

  RépondreSupprimer
  Réponses
  1. இரட்டை மகிழ்ச்சியை இலவச இணைப்பாக தந்து விட்டீர்
   நண்பர் சொக்கன் அவர்களே!
   முதலாவது மீண்டும் சொக்கன் தோன்றியது
   இரண்டாவது தண்ணீர் பதிவில் பின்னூட்டம் தந்தது
   வாழ்த்துகள்! தொடர்க!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. தண்ணீரின் அவசியத்தை சொல்லும் அருமையான பதிவு.
  நன்றி.

  RépondreSupprimer
  Réponses
  1. வாருங்கள் சகோதரி!
   தண்ணீரின் அவசியத்தை ரகசியமாக்கி விட்டுவிடாமல்,
   கருத்தாக புனைந்து பின்னூட்டம் இட்டமை வெகு சிறப்பு!
   தொய்வின்றி சிறக்கட்டும் வருகையும், கருத்து புதுமையும்!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. இன்னும் தண்ணீர் தான் முதல் உயிரின் கர்பப்பை. அருமை.

  RépondreSupprimer
  Réponses
  1. "தண்ணீர் தான் முதல் உயிரின் கர்பப்பை"
   இலக்கிய ரசனைமிகு இன்பம் இயற்றிய
   உண்மை வரிகளைக் கண்டு, வாயடைத்து நின்றேன்.
   அழகிய கருத்து பின்னூட்டம்! அருமை!
   தொடர்க!

   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 8. சிறப்பான செய்திப் பகிர்வு! நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. பகிர்வினை பாராட்டி கருத்து என்னும் தேரோட்டி வந்து,
   வாழ்த்தினை வழங்கிய, நண்பர் தளீர் சுரேஷ் அவர்களுக்கு
   "குழலின்னிசை" தருகிறது
   நன்றி என்னும் மலர்ச்செண்டு!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 9. “நீரின்றி அமையாது உலகு” என்பதை தெளிவாக விளக்கி விட்டீர்கள்.

  RépondreSupprimer
  Réponses
  1. “நீரின்றி அமையாது உலகு”
   உண்மை சகோதரி!
   காரைக்குடியில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல்
   கிடைக்கின்றதா?
   தங்களை போன்றவர்களின் வருகை சிறக்கட்டும்!
   தங்களின் வலைப் பூ வாசம் வீச வாழ்த்துகள்!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Supprimer
 10. தண்ணீரின் முக்கியத்துவம் பற்றி விரிவாக விளக்கியமைக்கு நன்றி!

  RépondreSupprimer
  Réponses
  1. "தாயை பழித்தாலும்
   தண்ணீரை பழித்தல் ஆகாது" என்பார்கள்.
   தண்ணீர் பதிவுக்கு தவறாது வந்து கருத்து
   புனைந்தமைக்கு மிக்க நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 11. பயனுள்ள பதிவு நண்பரே...
  தமிழ் மணம் வைகை ஆறு.

  RépondreSupprimer
  Réponses

  1. வையக சிறப்பு வைகை ஆறு
   தாவி வந்து கருத்தோடு கலந்த வாக்கினினை, வழங்கியமைக்கு
   குழலின்னிசையின் நன்றி!
   வருக! தொடர்க!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 12. அதனால்தான் தனியார் கம்பெனிகள் எல்லாம் தண்ணீரில் காசு பார்க்க ஆரம்பித்துவிட்டதுகளா நண்பரே......

  RépondreSupprimer
  Réponses
  1. தனியார் கம்பெனிகள் எல்லாம் தண்ணீரில் காசு பார்க்க ஆரம்பிக்கட்டும் பரவாயில்லை!
   ஆனால்! தண்ணீர் மூலம் அவர்களுக்கு கண்டம் வராமல் இருக்க வேண்டுமே! தோழரே!
   சுத்தமான குடி நீரை வழங்குவார்களா?
   வருகைக்கும், வாக்கிற்கும் நன்றி தோழரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 13. தங்கள் அருமையான
  உளநல, உடல் நல வழிகாட்டல் பதிவினை
  எனது தளத்திலும் பகிர்ந்துள்ளேன்!

  கண்ணீரும் தண்ணீரும் கண் கண்ட மருந்து!
  https://mhcd7.wordpress.com/2015/03/03/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D/

  RépondreSupprimer
 14. வணக்கம்!
  யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் அய்யா அவர்களே!
  "ஆரோக்கிய அமுதம் தண்ணீர்! தண்ணீர்!"
  குழலின்னிசையின் இந்த பதிவினை,
  தங்களது பாராட்டுதலுக்கும், போற்றுதலுக்கும் உரிய,
  தங்களது தளத்திலும் (mhcd7.wordpress.com) வெளியிட்டு
  அங்கிகரித்தமைக்கு மிக்க நன்றி!
  நல்ல விடயத்தை நாலு பேருக்காவது அறியத் தந்தால்,
  அளவில்லா மகிழ்ச்சி அடைவேன் அய்யா!
  நன்றி!
  வருகை தொடர்க!

  RépondreSupprimer
 15. அருமையான பதிவு அனைவரும் அறிய வேண்டிய செய்திகள் ! விளக்கமும் விரிவும் நன்று!

  RépondreSupprimer
 16. புலவர் அய்யாவின் கருத்து பின்னூட்டம்
  குழலின்னிசையின் வாசலின் படி என்றால் அது மிகையன்று!
  வணங்குகிறேன் அய்யா! வருகை தொடர்க!
  நன்றியுடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 17. அன்பின் புதுவை வேலு

  28 சக பதிவர்கள் மறுமொழிகள் தந்த பின்னர் நானும் எழுதுவது சரியல்ல. அத்தனையையும் மறுமொழிகிறேன்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  RépondreSupprimer
 18. அன்பின் புதுவை வேலு

  எனக்குப் புரியும் மொழியில் எழுதினால் நலமாக இருக்கும். இனி மேலாவது படிப்பவர்களூக்குப் புரியும் மொழியில் எழுதுக..

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  RépondreSupprimer