mercredi 1 avril 2015

" புகழாசை தரும் இகழோசை" (ஆன்மிக கதை )"அந்தரங்கம் அந்தரங்கமாகவே இருக்கட்டும்"

 (ஆன்மிக கதை )"நாலு பேராவது பாராட்டணும்"  என்ற ஆசை எல்லாருக்கும் உண்டு. புகழாசையால் நேர்ந்த விபரீதத்தை,  ராமாயணம் விளக்கும் சம்பவம் இது.

ஒரு சமயம் தசரதர்,  சம்பராசுரனுடன் போர் புரிந்தார். அவருக்கு தேரோட்டியாக கைகேயி (தசரதரின் மூன்றாவது மனைவி) சென்றாள். போரின் போது தேரின் அச்சாணி முறிந்து விட்டது. ஆனால், அது கண்டு கலங்காத கைகேயி,  தன் கையை அச்சாணிக்கு பதிலாக நுழைத்து தேர் கவிழாமல் பாதுகாத்தாள். போர் முடிவில் சம்பராசுரன் தோற்கடிக்கப்பட்டான். வெற்றிக்களிப்பில் இருந்த தசரதர்,  தன்னைப் பாதுகாத்த மனைவிக்கு இரண்டு வரம் தருவதாக வாக்களித்தார்.

தேவையான சமயத்தில்,  வரத்தைப் பெற்றுக் கொள்வதாக அவள் சொல்லி விட்டாள்.  இவர்களுக்கு இடையே நடந்த இந்த சத்தியப்பிரமாணம் வேறு யாருக்கும் தெரியாது.
பின்னாளில்,  கைகேயி கூனியிடம் இதைச் சொல்லி பெருமைப்பட்டாள்.


அதாவது,  தீமைக்கு வித்திட்டாள். காலம் உருண்டது. ராமருக்கு பட்டாபிஷேகம் செய்ய தசரதர் ஏற்பாடு செய்தார். தகவல் அறிந்த கூனி

 "கைகேயி!  சம்பராசுர யுத்தத்தில் இரு வரம் பெற்றதாகச் சொன்னாயே! அதை தசரதரிடம் இப்போது கேள்!''
 என்று தூண்டினாள். கைகேயியும் அப்படியே செய்ய விபரீதம் விளைந்தது. தசரதரை வசப்படுத்தும் நோக்கில்,  தலையில் இருந்த பூவை எடுத்தெறிந்தாள். திலகத்தைக் கலைத்தாள். ஆபரணங்களை கழற்றி வீசினாள். அதன் பின்,  வாழ்வில் அலங்காரமே
செய்ய முடியாத நிலைக்கு ஆளானாள்.


இது கதையல்ல! நமக்கு ஒரு பாடம்.

கணவருக்கும்,  மனைவிக்கும் இடையே நடக்கும் அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்கிறது சாஸ்திரம்.

கைகேயி,  தன் வீரம் குறித்து தனக்குள் மட்டும் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தால் துன்பம் வந்திருக்காது. அது பிறர் கவனத்துக்கு சென்றதால் தான் பிரச்னை வந்தது.

தற்காலத்தில்,  தம்பதியர் இடையே நடக்கும் மகிழ்ச்சியை பிறரிடம் சொல்கிறார்கள்.

இன்டர்நெட்டில்,  "செல்பி"  என்ற பெயரில் வெளியிடுகிறார்கள். நாலுபேருக்குத் தெரிந்தால் பெருமை என்பதில் ஆரம்பிக்கும் விஷயம், நாளடைவில் மற்றவர் தலையீட்டால் வாழ்வு சீரழியக் காரணமாகி விடுகிறது.

இதிகாசம்,  புராணம் எல்லாம் பொழுது போக்கான விஷயமல்ல. எச்சரிக்கை விடுத்து,   நம் ஏற்றத்திற்கு வழிவகுக்கவே எழுதப்பட்டன. இனியேனும்,  கவனமாக இருப்பீர்களா!
 
கதையினை கருத்தில் கொள்வோம்!
வதைக்கும் கொடுமையை வேரொடு சாய்ப்போம்!

பகிர்வு: புதுவை வேலு

(நன்றி: தினமலர்)

38 commentaires:

 1. நல்ல அருமையான விளக்கம்.

  RépondreSupprimer
  Réponses
  1. அருமை பாராட்டிய
   அய்யா அவர்களுக்கு
   அடியேனின் அன்பு நன்றி
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer

 2. "கணவருக்கும், மனைவிக்கும் இடையே நடக்கும் அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்கிறது சாஸ்திரம்." என்பதை வரவேற்கிறேன்.

  சிறந்த பதிவு
  தொடருங்கள்

  RépondreSupprimer
  Réponses
  1. சாஸ்திரத்தின் நன்மையை,
   நற்கருத்தாய் தந்தமைக்கு
   செந்தமிழின்
   செந்தேன் நன்றி அய்யா!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 3. எக்காலத்துக்கும், எந்த சமுதாயத்துக்கும் பொருந்தும் மிக உண்மையான கருத்து !

  கணவன் மனைவி மட்டுமல்ல நண்பர்களாகட்டும், சொந்தமாகட்டும், சுற்றமாகட்டும்.... அந்த இருவருக்கு நடுவே மூன்றாவதாய் ஒருவர், அந்த இருவரில் ஒருவரின் அந்தரங்கம் அறிந்து நுழையும்போதுதான் பிரச்சனை ஆரம்பமாகும் !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  RépondreSupprimer
  Réponses
  1. பிரச்சனையின் பிரளயத்தை
   பீஸ் பீஸாக்கி புரிய வைத்து காட்டி விட்டீர்
   சாமானியரே!
   மூன்றாம் நபரின் மூன்றாந்தர வருகை விளக்கம்
   வரவேற்புக்குரியது
   நண்பரே!
   தொடர்ந்து பதிவுகள் எழுதுங்கள்.
   அப்போதுதான் பின்னுட்டத்தின் பக்கம்
   உங்கள் எழுத்துக்கள்
   ஏணிபோட்டு ஏறி வந்து கருத்துக்களை
   வாரி வழங்கும்!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 4. வணக்கம்
  ஐயா

  இதிகாசங்கள் எப்போதும் நல்வழிப்படுத்தம் என்பதை மிக அழகான கதை மூலம் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 2

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  RépondreSupprimer
  Réponses
  1. வாருங்கள் கவிஞர் ரூபன் அவர்களே!
   மதி போற்றும் வகையில்,
   இதிகாச சிறப்பை
   இனிய வகையில்
   நறுந்தேன் தமிழில் கருத்தாய் வடித்தீர்!
   அருமை அய்யா!

   நாளும் நட்பாய் வருக!
   நற்கருத்தினை வாக்கோடு தருக!
   நன்றி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 5. அருமையான விளக்கம் நண்பரே
  நன்றி
  தம +1

  RépondreSupprimer
  Réponses
  1. வருகை வாக்கோடு இணைந்து இன்புற
   தருவதன்றோ கரந்தையார் சிறப்பு!
   நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 6. நல்ல விளக்கம். வாழ்த்துக்கள்!

  RépondreSupprimer
  Réponses
  1. அங்கி போட்டு அழகோடு வங்கிநிலை
   நிகழ்வுகளை மகிழ்வோடு தரும்
   நடன சபாபதி அய்யாவே!
   ஏற்கின்றேன் ஏற்றம்தரும்
   உம் கருத்தை! நன்றி!
   தொடர்க!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 7. மிக அருமையான தற்காலத்திற்குத் தேவையுள்ள பதிவு. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதைப் போல தாமே ஒரு பிரச்சினையை உண்டாக்கி, அதனால் தாமே தவிர்க்கஇயலா சூழலை எதிர்கொள்வது இப்போது அதிகமாகிவிட்டது.

  RépondreSupprimer
  Réponses
  1. முனைவர் அய்யாவின் நினைவில் நிற்கும் கருத்திற்கும், வருகைக்கும் குழலின்னிசையின் இனிய நன்றி! நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 8. பாடம் புகட்டும் விதத்தில் தான் அனைத்து நிகழ்வுகளும் அமைந்துள்ளன. இவற்றை தெரிந்து கொண்டால் வாழ்க்கைக்கு உதவக் கூடிய பல தகவல்களை கற்றுக் கொள்ளலாம். கணவன் மனைவி மட்டும் அல்ல எந்த இருவருக்கும் ஏற்படும் பேச்சு வார்த்தைகள் மூன்றாவது நபருக்கு தெரிந்தால் வீண் பிரச்சினை தான். அருமையான விளக்கம் மேலும் தொடருங்கள் ஆர்வமாக உள்ளேன். இவை போன்ற பயன் உள்ள தகவல்கள் அறிய பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ....!

  RépondreSupprimer
  Réponses
  1. பயன் உள்ள தகவல்கள்
   சகோதரி இனியாவை
   இந்த வலைப் பூ பக்கம்
   தலை சாய்க்க வைக்கும் என்னும்
   மந்திரத்தின் தந்திரத்தை
   அறிந்து கொண்டேன்!
   வருகை தொடர்ந்து வசப் பட வேண்டுகிறேன் சகோதரி!
   நன்றி
   நல் வாக்கிற்கும் நற்றமிழ் கருத்திற்கும்!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 9. அனைவருக்கும் ஒரு பாடம்...

  RépondreSupprimer
  Réponses
  1. "அனைவருக்கும் ஒரு பாடம்"
   பாடத்தை சூப்பராக நடத்தியமைக்கு
   நன்றி நல்லாசிரியரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 10. "அனைவருக்கும் ஒரு பாடம்"
  நல்ல கருத்து வார்த்தைச் சித்தரே!
  பாடத்தை உள்வாங்கி படித்து,
  உயர்ந்த நிலையை அடைய வாழ்துவோம்
  வாருங்கள்!
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 11. சிறப்பான அறிவுரைக் கதை! அருமையான பதிவு! வாழ்த்துக்கள்!

  RépondreSupprimer
  Réponses
  1. அருங்கருத்தை பெருமைபடும் வகையில்
   வழங்கிய தளீர் சுரேஷ் நண்பருக்கு நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 12. "நாலு பேரு என்ன.???. தெரிந்தவர்கள் --எல்லோரும் தன்னை பாராட்ட வேண்டும் என்ற புகழ் ஆசை எல்லாருக்கும் உண்டு...

  RépondreSupprimer
  Réponses
  1. அர்த்தமுள்ள ஆசையை ஓசைபடாமல் தெரிவித்த தோழருக்கு
   வாழ்த்துகள்!
   வருகையும் வாக்கும் வேண்டும் ஆசை எனக்கு தோழரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 13. அன்புள்ள அய்யா,

  புகழாசை தரும் இகழோசை - "நாலு பேராவது பாராட்டணும்" என்ற ஆசை எல்லாருக்கும் உண்டு. புகழாசையால் நேர்ந்த விபரீதத்தை, ராமாயணம் விளக்கும் சம்பவக் கதை கைகேயிக்கு மட்டுமல்ல... காலத்திற்கும் பொருந்தும்... வருந்தும் கதை.

  “வரங்களே சாபங்களானால்-இங்கே
  தவங்கள் எதற்காக...?”
  -என்ற கவிதை வரிகள் நினைவிற்கு வந்தன.

  நன்றி.
  த.ம. 7.

  RépondreSupprimer
  Réponses
  1. “வரங்களே சாபங்களானால்-இங்கே
   தவங்கள் எதற்காக...?”
   என்ற கவிதை வரிகளை கருத்து மழையாய் பொழிந்தீர் அய்யா!
   சிறப்புமிகு கருத்தும் வாக்கும்!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 14. பொருத்தமான கதை பொருந்திய விதமும் அருமை நண்பரே...
  கலர்ஃபுல்லா கலக்குங்க சொன்னபடி நடத்திட்டீங்க வாழ்த்துகள்
  தமிழ் மணம் நவரத்தினமாக ஜொலிக்கட்டும்

  RépondreSupprimer
  Réponses
  1. நண்பா!
   நட்பின் அந்தரங்கத்தை இப்படியா போட்டு உடைப்பது?
   அடுத்த பின்னூட்டத்தை பாருங்கள்!
   அம்பலம்! சம்பளம் கேட்பதை!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 15. # சொன்னபடி நடத்திட்டீங்க வாழ்த்துகள்#
  இது பதிவர்கள் அந்தரங்கமோ :)

  RépondreSupprimer


 16. # சொன்னபடி நடத்திட்டீங்க வாழ்த்துகள்#
  இது பதிவர்கள் அந்தரங்கமோ?
  நட்பின் அந்தரங்கத்தை அறியும் தந்திரத்தை
  மந்திரமாக எங்களுக்கும் சொல்லுங்களேன்!
  நண்பரே!
  பத்து(10) குழலின்னிசைக்கு பகவான்ஜி தந்த சொத்து!
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  RépondreSupprimer
 17. அருமையான விஷயத்தினை சொல்லி இருக்கீங்க... பாராட்டுகள்.

  இப்போது பலரும் கைகேயி செய்ததையே செய்து கொண்டிருக்கிறார்கள். அதன் விபரீதம் புரியாமல்.

  RépondreSupprimer
  Réponses
  1. நறுந்தேன் தமிழில் கருத்தாய் வடித்தீர்!
   அருமை அய்யா!

   நாளும் நட்பாய் வருக!
   நற்கருத்தினை வாக்கோடு தருக!
   நன்றி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 18. ஒரு செய்தியை, பெண்ணிடம் சொல்லும் பலன் மற்றும் இருட்டில் பேசும் ரகசியம் : ஊருக்கு சொல்லும் தகவலாகவே நான் நினைக்கிறேன் புதுவை வேலு அவர்களே.

  sattia vingadassamy

  RépondreSupprimer
  Réponses
  1. ஊருக்கு சொல்லும் தகவலாகவே பட்டதை
   உலகுக்கே சொல்லி விட்டீர்கள் நண்பரே!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 19. புராண கதையில் ஆரம்பித்து செல்பியில் முடித்திருக்கிறீா்கள். இப்பதிவு அருமையான கதையாக மட்டுமில்லாமல்"இதிகாசம், புராணம் எல்லாம் பொழுது போக்கான விஷயமல்ல. எச்சரிக்கை விடுத்து, நம் ஏற்றத்திற்கு வழிவகுக்கவே எழுதப்பட்டன."என நல்ல தகவலையும் தந்துள்ளது. அருமையான விஷயத்தினை தந்த தங்களுக்கு பாராட்டுக்கள்.

  RépondreSupprimer
  Réponses

  1. "இதிகாசம், புராணம் எல்லாம் பொழுது போக்கான விஷயமல்ல. எச்சரிக்கை விடுத்து, நம் ஏற்றத்திற்கு வழிவகுக்கவே எழுதப்பட்டன." என்பதை ஏற்புடைய கருத்தாய் பதிந்தமைக்கு மிக்க நன்றி சகோதரி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer
 20. அருமையான பாடம் எல்லோருக்கும்! நல்லதொரு கருத்து...

  RépondreSupprimer
  Réponses
  1. நறுந்தேன் தமிழில் கருத்தாய் வடித்தீர்!
   அருமை அய்யா!

   நாளும் நட்பாய் வருக!
   நற்கருத்தினை வாக்கோடு தருக!
   நன்றி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Supprimer