mardi 22 septembre 2015

"இணையம் இணைக்கும் இதயம்- பண்பாடு!"

"பா ரதம் வருக! பண்பாடு தருக!"





முகிலோடு விளையாட முழு நிலவு தேவை
முகுந்தனோடு விளையாட கோபியர் தேவை
சகுந்தலை எழுத காளிதாசன் தேவை
முன்னேறிய உலகில் பண்பாடு தேவை!

அழியாத பண்பாட்டின் ஆனி வேர்!
மொழியால் நல்லுணவோடு! இசை சமயத்தால்!
அறிவு ஜோதியால் அதை! தேடு!
உலகின் உன்னத தேவை பண்பாடு!

பைந்தமிழ் சிறப்பை வாழும் நாட்டில்
வள்ளுவம் சொல்லி வளரச் செய்தால்!
வழி வழி வாழும் பண்பாடு!
விழிவழி காண்பாய் கண்கூடு!

அருந்தமிழ் அகரம் பெருமையின் சிகரம்
அருந்தததி மின்னும்  பெருந்தொகை பண்பாடு
திரைகடல் ஓடி திரவியம் தேட...
தேவை  மேல் வர்க்க பண்பாடு!


மனித நேயம் புனிதம் அடைய
தேவை!  பன்முகப் பண்பாடு!
ஏன்? வினாவுக்கு, தேன் விடையளிக்க
தேவை!   எதிர் நிலை பண்பாடு!


சுற்றம் சூழ்ந்து வாழும் மக்கள்
கற்கும் கல்வி  நாட்டுப்புற பண்பாடு!
பசுமடி சுரக்கும் பால்போல் சிறக்கும்
மாசில்லாத கல்வியை ஊட்டும் பண்பாடு!


இணையம் இணைக்கும் இதயம்  நம் பண்பாடு!!!


புதுவை வேலு
                                     













வணக்கத்திற்குரிய தேர்வுக் குழுவினருக்கு,

இப்பதிவு முற்றிலும் வகை-(4) –

 ‘புதுக்கவிதைப் போட்டி


தலைப்பு:     ‘முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை’
 

குறித்த புதுக்கவிதை 25 வரிகளில் - அழகியல் மிளிரும் தலைப்போடு)

புதுக்கவிதைப் போட்டியிற்காக எழுதப்பட்ட எனது சொந்த படைப்பு என்பதை உறுதிப்படுத்துகிறேன்.

இப்பதிவு "வலைப்பதிவர் திருவிழா 2015

மற்றும்,

தமிழ் இணையக் கல்விக் கழகம் நடத்தும்

மின்தமிழ் இலக்கியப் போட்டிகள் - 2015“

இதற்காக எழுதப்பட்டது என்பதையும் உறுதிப்படுத்துகிறேன்.

 எனது இந்த கவிதை படைப்பு இதற்கு முன் வெளியாகவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறேன்.

மேலும்,  போட்டிக்கான எனது இந்த படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியினை அளிக்கிறேன்.

நன்றியுடன்,






33 commentaires:

  1. வணக்கம்!
    வலைப் பதிவர் திருவிழா 2015
    புதுக் கவிதை போட்டிக்கு
    நிர்வாகத்தினர் தந்த தலைப்பு
    ( தலைப்பு:‘முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை’
    குறித்த புதுக்கவிதை 25 வரிகளில் - அழகியல் மிளிரும் தலைப்போடு)
    என்னும் அவர்களது நெறியினை பின்பற்றி அதனோடு தொடர்புடைய பண்பாடு குறித்த எனது கருப்பொருளை கவிதை பொருளாக்கி வடித்துள்ளேன். வருகை தந்து தரும் தங்களது கருத்தினை ஏற்கிறேன். நன்றி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  2. வெற்றிபெற வாழ்த்துக்கள் தோழர்

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் அய்யா!

      "இணையம் இணைக்கும் இதயம்- பண்பாடு!"

      போட்டிக் கவிதை என்றும் பாராமல்
      பாராமுகம் கொண்டிராமல் வருகை தந்து வாழ்த்திய
      பண்புக்கு மிக்க நன்றி! அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  3. Réponses
    1. வணக்கம் தோழரே!
      மிக்க மகிழ்ச்சி!
      வருகை தந்ததோடு மட்டுமல்லாது
      வாக்கினையும் தந்த தங்களது தலையான, மேன்மை பண்புக்கு தலை வணங்கி கூறுகிறேன் நன்றியினை தோழரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  4. வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் அய்யா!

      "இணையம் இணைக்கும் இதயம்- பண்பாடு!"

      போட்டிக் கவிதை என்றும் பாராமல்
      பாராமுகம் கொண்டிராமல் வருகை தந்து வாழ்த்திய
      பண்புக்கு மிக்க நன்றி! அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  5. Réponses
    1. வணக்கம் நண்பரே!

      "இணையம் இணைக்கும் இதயம்- பண்பாடு!"

      போட்டிக் கவிதை என்றும் பாராமல்
      பாராமுகம் கொண்டிராமல் வருகை தந்து வாழ்த்திய
      பண்புக்கு மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  6. வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!

      "இணையம் இணைக்கும் இதயம்- பண்பாடு!"

      போட்டிக் கவிதை என்றும் பாராமல்
      பாராமுகம் கொண்டிராமல் வருகை தந்து வாழ்த்திய
      பண்புக்கு மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  7. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் அய்யா!

      "இணையம் இணைக்கும் இதயம்- பண்பாடு!"

      போட்டிக் கவிதை என்றும் பாராமல்
      பாராமுகம் கொண்டிராமல் வருகை தந்து வாழ்த்திய
      பண்புக்கு மிக்க நன்றி! அய்யா!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  8. ஸூப்பர் நண்பா வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் வாழ்த்துகள்.

    RépondreSupprimer
    Réponses
    1. தங்களின் வாழ்த்தும் பண்புக்கு தலை வணங்குகிறேன்.
      நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  9. உலகில் நாம் எங்கு வாழ்ந்தாலும், மனித நேயம் புனிதம் பெற (உண்மையான ஒற்றுமை, நம்பிக்கை, நேர்மை, நட்பு, சகோதரத்துவம், மேலும் பல) பன்முக பண்பாடு அதிகம் தேவை.
    அருமையான வரிகள்.
    போட்டி என்று யோசிக்க வேண்டாம், இதுபோல் நல்ல கவிதைகள்தான் குழல் இன்னிசைக்கு தேவை.
    வெற்றிபெற வாழ்த்துக்கள் புதுவை வேலு அவர்களே.

    sattia vingadassamy

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பரே!
      பண்புநலன்களை பற்றி பாடம் எடுத்துள்ளீர்கள் தங்களின் அழகிய பின்னுட்டத்தின் மூலம் மிக்க நன்றி நண்பரே!
      பண்பின் வகைகளாக நானறிந்தவற்றை கவிதைக்குள் சொல்ல முற்பட்டுள்ளேன்.
      பெருந்தொகை பண்பாடு (POPULAR CULTURE)
      மேல் வர்க்க பண்பாடு! (HIGH CULTURE)
      பன்முகப் பண்பாடு! (MULTI CULTURE)
      எதிர் நிலை பண்பாடு! (COUNTER CULTURE)
      நாட்டுப்புற பண்பாடு! (FOLK CULTURE)
      மேலும், போட்டி என்று யோசிக்கவில்லை நண்பரே! வலைப் பதிவர் திருவிழாவுக்கு
      குழலின்னிசையின் பங்கேற்பாக மட்டும்தான் நான் பார்க்கிறேன்!
      என்னால் போக முடியாமல் போகும் பட்சத்தில்!,
      நல்ல பின்னூட்டம் நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  10. வாழ்த்துக்கள் புதுவையாரே,
    நன்றி.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம் சகோதரி! வருக!
      "இணையம் இணைக்கும் இதயம்- பண்பாடு!"
      போட்டிக் கவிதை என்றும் பாராமல்
      பாராமுகம் கொண்டிராமல் வருகை தந்து வாழ்த்திய
      பண்புக்கு மிக்க நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  11. அருமை! வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  12. மிக்க நன்றி நண்பரே!
    வாழ்த்தும் பண்புக்கு என்றும் குழலின்னிசை தலை வணங்கும்.
    நட்புடன்,
    புதுவை வேலு

    RépondreSupprimer
  13. வணக்கம்
    ஐயா
    நன்றாக உள்ளது கவிதை படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் கவிஞரே!
      கவிதையை படித்து கருத்தினை பதிவு செய்த பண்புக்கு நன்றி
      மேலான தங்களது அன்புக்கு அதைவிட அளவில்லாத நன்றி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  14. வெற்றிக்கு வாழ்த்துக்கள் நண்பரே!

    RépondreSupprimer
    Réponses
    1. வாருங்கள் நண்பரே!
      வாழ்த்தும் பண்பினை போற்றி வரவேற்கிறேன்
      போட்டி இரண்டாம் பட்சம்!
      நட்பு ஒன்றே குழலின்னிசையின் முதல் பட்சம்!
      நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்களது வருகை மகிழ்ச்சியை
      அள்ளித் தருகிறது!
      நன்றி தொடர்க! தொடர்வேன்!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  15. தாமதமாகத்தான் படிக்கமுடிந்தது. நல்ல பொருண்மை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம்
      மிக்க நன்றி முனைவர் அய்யா அவர்களே
      பொருண்மை பொருந்திய கவிதை என்று சொல்லியதே!
      குழலின்னிசையின் இன்னிசை ஒலிக்க புல்லாங்குழல் வாங்கித் தந்தது போன்றதொரு உணர்வினைத் தருகிறது. நாளும் நல்லிசை ஒலித்தே நலம் பெற வாழ்வோம்! நன்றி அய்யா!
      ஒரு சின்ன நெருடல் வழக்கமாக மற்ற எனது பதிவுகளுக்கு வாக்கினை பதிவு செய்யும் நண்பர்கள் இந்த பதிவுக்கு வாக்கு பதிவு செய்யாது வருகை பதிவு செய்திருப்பது ஏன் என்பது புரிய வில்லை?
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  16. வணக்கம் நண்பரே! கவிதை அருமை! வெற்றி பெற நல் வாழ்த்துக்கள் நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் நண்பர் கரூர்பூபகீதன் அவர்களே!
      தங்களை போன்றவர்களின் பாராட்டுதலே குழலின்னிசையின் குன்றாத புகழுக்கு
      வழி வகுக்கும்.
      பண்பாட்டை பாடுவதும் உயர் பண்பாடே!
      மிக்க நன்றி நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  17. கவிதை பண்பாட்டின் சிறப்பை போற்றுது.போட்டியில் வெற்றிக்கொடிகட்ட வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses
    1. வெற்றி பனி விழும் மலர்வனத்தில்
      மங்காப் புகழ் வாழ்த்துரையை வழங்கிய...
      தனி சிறப்புமிக்க "தனிமரத்துக்கு"
      குழலின்னிசையின் நன்றி!

      மிக்க நன்றி! நண்பரே!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer
  18. வழி வழி வாழும் பண்பாடு!
    விழிவழி காண்பாய் கண்கூடு! பண்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தும் கவிதைக்குப் பாராட்டுக்கள் வேலு சார்! போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
    Réponses
    1. வணக்கம் சகோதரி!
      பண்பாடுமிக்க வாழ்த்தினை பெறுவதை
      விழிவழி காணுகிறேன் கண்கூடாய்!
      மொழியின் பண்பாடு வாழ்த்து!
      மிக்க நன்றி சகோதரி!
      நட்புடன்,
      புதுவை வேலு

      Supprimer